Friday, 31 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 7

Śrī Devyaṣṭakam - Sloka 7

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


त्रिनेत्रां शङ्करीं गौरीं भोगमोक्षप्रदां शिवाम् ।
महामायां जगद्बीजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥ ७॥

த்ரிநேத்ராம்ʼ ஶங்கரீம்ʼ கௌ³ரீம்ʼ போ⁴க³மோக்ஷப்ரதா³ம்ʼ ஶிவாம் ।
மஹாமாயாம்ʼ ஜக³த்³பீ³ஜாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜக³தீ³ஶ்வரீம் ॥ 7॥

trinetrāṃ śaṅkarīṃ gaurīṃ bhogamokṣapradāṃ śivām ।
mahāmāyāṃ jagadbījāṃ vande tvāṃ jagadīśvarīm ॥ 7॥



त्रिनेत्रां - த்ரிநேத்ராம்ʼ - மூன்று கண்களை உடையவளை, 

शङ्करीं - ஶங்கரீம்ʼ - பக்தர்களுக்கு ஸுகங்களை அருள்பவளை, 

गौरीं - கௌ³ரீம்ʼ - தங்க வர்ணமாய் இருப்பவளை, 

भोग-मोक्ष-प्रदां - போ⁴க³-மோக்ஷ-ப்ரதா³ம்ʼ - (இஹலோக) போகங்களையும், (பரலோக) மோக்ஷத்தையும் கொடுப்பவளை,  

महामायां - மஹாமாயாம்ʼ - (பிரம்மாதிகளுக்குக்கூட மோஹத்தைத் தரும்) மஹா மாயா ஸ்வரூபிணியாக இருப்பவளை, 

शिवां - ஶிவாம்ʼ - ஜகமானது லயமாகிற இடமாக இருப்பவளை, 

जगद्बीजां - ஜக³த்³பீ³ஜாம்ʼ - ஜகத்திற்குத் தோற்றுவாயாக இருப்பவளை, 

जगदीश्वरीं - ஜக³தீ³ஶ்வரீம்ʼ - ஜகத்தை நிர்வஹிப்பவளை  

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

மூன்று கண்களை உடையவளும், பக்தர்களுக்கு ஸுகங்களை அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும், (இஹலோக) போகங்களையும், (பரலோக) மோக்ஷத்தையும் கொடுப்பவளும், (பிரம்மாதிகளுக்குக்கூட மோஹத்தைத் தரும்) மஹா மாயா ஸ்வரூபிணியாக இருப்பவளும், ஜகமானது லயமாகிற இடமாக இருப்பவளும், ஜகத்திற்குத் தோற்றுவாயாக இருப்பவளும், ஜகத்தை நிர்வஹிப்பவளுமான தங்களை வணங்குகிறேன். 7


Meaning :

Oh three eyed one, Oh Sankari , Oh Gowri Oh Goddess who grants pleasure and salvation , Oh consort of Lord Shiva,
Oh great illusion , Oh seed of the world , I salute you who is the goddess of the world. 7



# அனைத்தும் இவளிடத்தில் லயிக்கிறபடியால் 'சிவா' என்றழைக்கப்படுகிறாள். மேலும் சிவபெருமானுடைய பத்தினி என்றும், மங்களங்களை அருள்பவள் என்றும் பொருள்படும்.

# மஹாமாயாவாக இருப்பதனால் பிரம்மாதிகளையும் மாயைக்கு உட்படுத்தி ஜகத் சிருஷ்டி (ஜகத் பீஸா), நிர்வாஹம் (ஜகதீச்வரீ), ஸம்ஹாரம்/லயம் (சிவா) முதலியவைகளைத் திறம்படச் செய்கிறாள்.

Monday, 27 December 2021

Sri Somasundara Stuti - Sloka 5

Sri Somasundara Stuti - Sloka 5

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||



देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥

தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥

devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥



यं देवदेवं - யம்ʼ தே³வதே³வம்ʼ - எந்த தேவதேவரை

आराध्य - ஆராத்⁴ய - ஆராதித்து

मृकण्डु-तनयः मुनिः  - ம்ருʼகண்டு³-தனய꞉ முனி꞉ - மிருகண்டுவினுடைய புதல்வரான முனிவர் ( மார்க்கண்டேய முனிவர் )

सद्यः नित्यत्वम‌् अगमत् - ஸத்³ய꞉ நித்யத்வம் அக³மத் - உடன் நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, 

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

எந்த தேவதேவரை ஆராதித்து,
மிருகண்டுவினுடைய புதல்வரான மார்க்கண்டேய முனிவர், ஆங்கு அப்பொழுதே நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன்.  5


Meaning :

I adore that Somasundarar, after worshiping Whom, Rishi Markandeya, son of Rishi Mrkandu on the spot attained eternity. 5


#  நிலைப்புத்தன்மை - மூப்படையாமலும், மரணம் ஏற்படாமலும் ஆரோக்கியமாக  இருக்கும் தன்மை.



ரிஷி மார்க்கண்டேயர் :

தவத்தின் மேன்மையை விளங்கச் செய்யும் அநேக தவசீலர்கள் நம் பாரத மண்ணில் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஒருவர் மிருகண்டு முனிவர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் மிருகங்கள் இவரது உடலில் அரிப்பு தீர உரசிக்கொள்ளுமாம். இதனால் மிருகண்டு என்ற பெயர் ஏற்பட்டது. மிருகசிருங்கர் - சுவிருத்தா முனி தம்பதிக்கு பிறந்தவர். மிருகண்டு முனிவர் சிறந்த சிவபக்தர், வேதவிற்பன்னர், தேஜஸ்வி. தக்க காலத்தில் அவருக்கு முத்கல முனிவரின் கன்னிகையான மருத்வதியுடன் விவாஹம் ஏற்பட்டது. இருவரும் ஆசார அனுஷ்டானங்கள் தவறாமல் வாழ்ந்து வந்தனர். புத்திரப்பேறு மட்டும் வாய்க்கவில்லை. 
புத்திரப்பேறு வேண்டி காசிக்குச் சென்று பரமேச்வரரைக் குறித்து தவம் செய்தனர்.
 தவத்திற்கு மெச்சி சிவபெருமான் தோன்றினார். முனி தம்பதியர் சங்கரனாரிடம் புத்திர வரம் வேண்ட, சங்கரனார் குணவானாக அல்லாத நீண்ட ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா அல்லது ஸகலகுணங்களுடன் கூடிய, ஸர்வஞனான பதினாறே ஆண்டுகள் ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா என்று கேட்டார். குறைந்த ஆயுளானாலும் நிறைந்த ஞானமுடைய பிள்ளையே வேண்டுமெனக் கேட்டார் முனிவர். இறைவனும் வரமளித்து மறைந்தார்.

பின் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மிருகண்டுவினுடைய  புத்திரனானதால் மார்க்கண்டேயர் எனப் பெயர் பெற்றது. பதினாறு ஆண்டுகள் நன்றாகக் கழிந்தன. பதினாறாவது ஆண்டு முடியும் தருவாயில், மார்க்கண்டேயரை எண்ணி முனி தம்பதியர் கலக்கமுற்றனர். இதனை கவனித்த மார்க்கண்டேயர் விவரம் கேட்டறிந்தார். பின் தான் சிவக்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வதாகவும், விரதங்களையும். ஸ்தோத்திரங்களையும் அனுஷ்டித்து சிவபெருமான் பிரீதியடையும்படி செய்து வருவதாகவும் கூறிச் சென்றார்.

தன் ஆயுள் முடியும் தருவாயில், புராணங்களின் படி காசி க்ஷேத்திரம் என்றும், தலபுராணத்தின்படி திருக்கடவூர் வந்து சேர்ந்ததாகவும் சொல்வர். 

உயிரை எடுத்துச் செல்ல யம கிங்கரர்கள் வந்த போது மார்க்கண்டேயர் வர மறுத்துவிட்டார். அவரது தேஜஸின் முன் அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் போகவே திரும்பி யமனிடம் சென்று கூறினர். 

யமனும் மார்க்கண்டேயரிடம் வந்தார். அப்போதும் மார்க்கண்டேயர் வர மறுத்து தான் செய்யும் ஸ்தோத்திர படனத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று வேண்டினார். 

இதைக் கேட்ட யமன் சரீரத்தின் நிலையற்ற தன்மையையும் , ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மத்திற்கு அனுசரித்து மரணம் எய்தும் என்பதையும், உரிய காலத்திற்கு முன் ஜீவன் போகாது, காலம் வந்தபோது ஜீவன் நில்லாது என்றும், தானும் ஈச்வர ஆஞ்ஞைப்படியே தன் கடமையை செய்வதாகவும், இவையெல்லாம் நீ அறியாயோ என்று கூறினார்.

மார்க்கண்டேயர் கூறினார், எவ்வாறு குடிமக்களை ஆளுவது அரசனோ, அவ்வாறு சிவபக்தாளை ஆளுவது அந்த பரமேச்வரரே. பக்தர்களிடம் உனது ஆணை செல்லுபடியாகாது. சிவாயநம என்றிருக்கும் பக்தர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பதையெல்லாம் தாங்கள் அறியமாட்டீர்களோ.

இதனால் கோபமுற்ற யமன் தன் பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயரும் சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.

பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் படர, அதை யமன் இழுத்தபோது, பரமேச்வரர் தோன்றி, தன் இடது திருவடியால் யமனை உதைக்க, அவன் தூதரே சென்று விழுந்து மாண்டான். மார்க்கண்டேயருக்கு 'என்றும் பதினாறு' எனும்படி அனுக்கிரகம் செய்தார், பரமேச்வரர்.  

அந்த பரமேச்வரரே மதுரையில் சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.

Sunday, 19 December 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 11

Vinaayaka Leelaa Stuti - sloka 11
॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


विश्वेशमौलिस्थितजह्नुकन्याजलं गृहीत्वा निजपुष्करेण ।
हरं सलीलं पितरं स्वकीयं प्रपूजयन् हस्तिमुखः स पायात् ॥ ११॥

விஶ்வேஶமௌலிஸ்தி²தஜஹ்நுகந்யாஜலம் க்³ருʼஹீத்வா நிஜபுஷ்கரேண ।
ஹரம் ஸலீலம் பிதரம் ஸ்வகீயம் ப்ரபூஜயன் ஹஸ்திமுக:² ஸ பாயாத் ॥ 11॥

viśveśamaulisthitajahnukanyājalaṃ gṛhītvā nijapuṣkareṇa ।
haraṃ salīlaṃ pitaraṃ svakīyaṃ prapūjayan hastimukhaḥ sa pāyāt ॥ 11॥


विश्वेश-मौलि-स्थित - விஶ்வேஶ-மௌலி-ஸ்தி²த - சிவபெருமானின் தலையிலுள்ள ,

जह्नु-कन्या-जलं - ஜஹ்னு-கன்யா-ஜலம்ʼ - கங்கை ( ஜஹ்னுவின் மகள் ) நீரை,

गृहीत्वा - க்³ருʼஹீத்வா - எடுத்து ,

निज-पुष्करेण - நிஜ-புஷ்கரேண - தன் துதிக்கை கொண்டு,

स्वकीयं - ஸ்வகீயம்ʼ - தன்னுடைய ,

पितरं हरं - பிதரம்ʼ ஹரம்ʼ - தந்தையாரான ஹரனை ( சிவபெருமானை ),

सलीलं प्रपूजयन् - ஸலீலம்ʼ ப்ரபூஜயன் - விளையாட்டாக பூஜை / அபிஷேகம் செய்கின்ற ,

सः हस्तिमुखः - ஸ: ஹஸ்திமுக²: - அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),

पायात् - பாயாத் - காக்க.


பொருள் :

சிவபெருமானின் தலையிலுள்ள கங்கை ( ஜஹ்னுவின் மகள் ) நீரை எடுத்துத் தன் துதிக்கை கொண்டு, தன்னுடைய தந்தையாரான ஹரனை ( சிவபெருமானை ) விளையாட்டாக பூஜை / அபிஷேகம் செய்கின்ற அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) காக்க. 11


# புஷ்கரேண - தாமரை கொண்டு என்றும் கொள்ளலாம்.

Friday, 17 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 6


Śrī Devyaṣṭakam - Sloka 6

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


देवदुःखहरामम्बां सदा देवसहायकाम् ।
मुनिदेवैः सदासेव्यां वन्दे त्वां देवपूजिताम् ॥ ६॥

தே³வது³꞉க²ஹராமம்பா³ம்ʼ ஸதா³ தே³வஸஹாயகாம் ।
முனிதே³வை꞉ ஸதா³ஸேவ்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ தே³வபூஜிதாம் ॥ 6॥

devaduḥkhaharāmambāṃ sadā devasahāyakām ।
munidevaiḥ sadāsevyāṃ vande tvāṃ devapūjitām ॥ 6॥


देव-दुःख-हरां - தே³வ-து³꞉க²-ஹராம்ʼ - தேவர்களின் துயரங்களைப் போக்குபவளை, 

सदा देव-सहायकां - ஸதா³ தே³வ-ஸஹாயகாம்ʼ - எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிபவளை, 

मुनिदेवैः सदा-सेव्यां - முனிதே³வை꞉ ஸதா³-ஸேவ்யாம்ʼ - மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கப்படுபவளை, 

देवपूजितां - தே³வபூஜிதாம்ʼ - தேவர்களால் பூஜிக்கப்படுபவளை,

अम्बां - அம்பா³ம்ʼ - லோகமாதாவை,  

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.  


பொருள் :

தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிபவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கப்படுபவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், லோகமாதாவுமாகிய தங்களை வணங்குகிறேன். 6


Meaning :

Oh Mother who puts an end to sorrows of devas, Oh helper of devas,
Oh Goddess always served by sages and devas, I salute you the Mother who is worshipped by devas. 6

Monday, 13 December 2021

Sri Somasundara Stuti - Sloka 4

Sri Somasundara Stuti - Sloka 4

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


यं विदित्वा बुधास्सर्वे कर्मबन्धविवर्जिताः ।
लभन्ते परमां मुक्तिं तं वन्दे सोमसुन्दरम् ॥ ४ ॥

யம்ʼ விதி³த்வா பு³தா⁴ஸ்ஸர்வே கர்மப³ந்த⁴விவர்ஜிதா꞉ ।
லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 4 ॥

yaṃ viditvā budhāssarve karmabandhavivarjitāḥ ।
labhante paramāṃ muktiṃ taṃ vande somasundaram ॥ 4 ॥



यं विदित्वा - யம்ʼ விதி³த்வா - எவரை அறிந்தபின்,

सर्वे बुधाः - ஸர்வே பு³தா⁴꞉ - எல்லா அறிஞர்களும்,

कर्म-बन्ध-विवर्जिताः - கர்ம-ப³ந்த⁴-விவர்ஜிதா꞉ - கர்மத்தளையினின்றும் விடுபட்டவர்களாகி,

लभन्ते परमां मुक्तिं - லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ - மேலான வீடுபேற்றை அடைகின்றார்களோ,

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

எவரை அறிந்தபின், எல்லா அறிஞர்களும், கர்மத்தளையினின்றும் விடுபட்டவர்களாகி, மேலான வீடுபேற்றை அடைகின்றார்களோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 4

Meaning :

I adore that Somasundarar, after knowing whom all the scholars get freed from the bondage of deeds and attains higher liberation. 4

Thursday, 9 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 5

Śrī Devyaṣṭakam - Sloka 5

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


जगत्कर्त्रीं जगद्धात्रीं जगत्संहारकारिणीम् ।
मुनिभिः संस्तुतां भद्रां वन्दे त्वां मोक्षदायिनीम् ॥ ५॥

ஜக³த்கர்த்ரீம்ʼ ஜக³த்³தா⁴த்ரீம்ʼ ஜக³த்ஸம்ʼஹாரகாரிணீம் ।
முனிபி⁴꞉ ஸம்ʼஸ்துதாம்ʼ ப⁴த்³ராம்ʼ வந்தே³ த்வாம்ʼ மோக்ஷதா³யினீம் ॥ 5॥

jagatkartrīṃ jagaddhātrīṃ jagatsaṃhārakāriṇīm ।
munibhiḥ saṃstutāṃ bhadrāṃ vande tvāṃ mokṣadāyinīm ॥ 5॥



जगत् कर्त्रीं - ஜக³த் கர்த்ரீம்ʼ - ஜகத்தை உண்டு பண்ணுகிறவளை, 

जगत् धात्रीं - ஜக³த் தா⁴த்ரீம்ʼ - ஜகத்தை ரக்ஷிப்பவளை, 

जगत् संहार-कारिणीं - ஜக³த் ஸம்ʼஹார-காரிணீம்ʼ - ஜகத்தை சம்ஹரிப்பவளை, 

मुनिभिः संस्तुतां - முனிபி⁴꞉ ஸம்ʼஸ்துதாம்ʼ - மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்படுபவளை, 

भद्रां - ப⁴த்³ராம்ʼ - பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளை, 

मोक्ष-दायिनीं - மோக்ஷ-தா³யினீம்ʼ - மோக்ஷத்தைக் கொடுப்பவளை‍‌,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும், ஜகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும், மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்படுபவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன். 5


Meaning :

Oh cause of the world, Oh mother of the world, Oh destroyer of the world,
Oh Goddess prayed by sages, Oh gentle lady, I salute you who grants salvation. 5

Monday, 6 December 2021

Sri Somasundara Stuti - Sloka 3

Sri Somasundara Stuti - Sloka 3

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः । 
ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥

அஶ்வமேதா⁴தி³யஜ்ஞைஶ்ச யஸ்ஸமாராத்⁴யதே த்³விஜை꞉ । 
த³தா³தி ச ப²லம்ʼ தேஷாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 3 ॥

aśvamedhādiyajñaiśca yassamārādhyate dvijaiḥ । 
dadāti ca phalaṃ teṣāṃ taṃ vande somasundaram ॥ 3 ॥


द्विजैः - த்³விஜை꞉ - ப்ராஹ்மணர்களால்

अश्वमेध-आदि यज्ञैः च - அஶ்வமேத⁴-ஆதி³ யஜ்ஞை꞉ ச - அச்வமேதம் முதலான யஜ்ஞங்களால்

समाराध्यते - ஸமாராத்⁴யதே - ஆராதிக்கப்படுபவர் (எவரோ)

तेषां फलं ददाति च - தேஷாம்ʼ ப²லம்ʼ த³தா³தி ச - அந்த ஆராதனைக்குப் பலன் அளிக்கிறவர் (எவரோ)

यः - ய꞉ - எவரோ

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

பிராம்மணர்களால் அச்வமேதம் முதலான யஜ்ஞங்களின் மூலமாக ஆராதிக்கப்படுகிறவரும், அவ்வாராதனைக்குப் பலனளிக்கிறவரும் 
எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 3


Meaning :

I adore that Somasundarar Who worshiped by Brahmins through Yajnas such as Ashwamedham and Who gives benefits for that worship. 3

Friday, 3 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 4

Śrī Devyaṣṭakam - Sloka 4

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥ ४॥

காலராத்ரிம்ʼ மஹாராத்ரிம்ʼ மோஹராத்ரிம்ʼ ஜனேஶ்வரீம் ।
ஶிவகாந்தாம்ʼ ஶம்பு⁴ஶக்திம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜனனீமுமாம் ॥ 4॥

kālarātriṃ mahārātriṃ moharātriṃ janeśvarīm ।
śivakāntāṃ śambhuśaktiṃ vande tvāṃ jananīmumām ॥ 4॥


कालरात्रिं - காலராத்ரிம்ʼ - பிரளயகால ராத்திரியாகவும்,

महारात्रिं - மஹாராத்ரிம்ʼ - மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), 

मोहरात्रिं - மோஹராத்ரிம்ʼ - மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும்,

जन-ईश्वरीं - ஜன-ஈஶ்வரீம்ʼ - தோன்றிய அனைத்தையும் ஆள்பவளை,

शिवकान्तां - ஶிவகாந்தாம்ʼ - சிவபெருமானை ஈர்ப்பவளை,

शम्भुशक्तिं - ஶம்பு⁴ஶக்திம்ʼ - சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளை, 

जननीं - ஜனனீம்ʼ - ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயை,

उमां - உமாம்ʼ - பிரணவத்தின் பொருளானவளை (உமாதேவியை),

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

பிரளயகால ராத்திரியாகவும், மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், தோன்றிய அனைத்தையும் ஆள்பவளும், சிவபெருமானை ஈர்ப்பவளும், சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளும், ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயும், பிரணவத்தின் பொருளுமான (உமாதேவியாகிய), தங்களை வணங்குகிறேன். 4


Meaning :

Oh Black night, Oh great night, Oh night of passion, Oh goddess of wisdom, Oh Consort of Shiva, Oh power of Shiva, I salute you who is mother Uma. 4


காலராத்ரி - பிரளயத்தின்போது இருக்கும் காரிருள்.

மோஹராத்ரி - தமோகுண பிரதானமான இரவுப்பொழுது. 
ஜீவனானது ஞானமெனும் திவாகரனால் தன்னை அறியும் முன், அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியிருக்கிற நிலை.

Tuesday, 12 October 2021

Sri Lakshmi Dhyanam

॥ श्री लक्ष्मी ध्यानम् ॥

॥ ஶ்ரீ லக்ஷ்மீ த்⁴யானம் ॥


वन्दे पद्मकरां प्रसन्नवदनां सौभाग्यदां भाग्यदां
हस्ताभ्यामभयप्रदां मणिगणैर्नानाविधैर्भूषिताम् ।
भक्ताभीष्टफलप्रदां हरिहरब्रह्मादिभिः सेवितां
पार्श्वे पङ्कजशङ्खपद्मनिधिभिर्युक्तां सदा शक्तिभिः ॥


வந்தே³ பத்³மகராம்ʼ ப்ரஸன்னவத³னாம்ʼ ஸௌபா⁴க்³யதா³ம்ʼ பா⁴க்³யதா³ம்ʼ
ஹஸ்தாப்⁴யாமப⁴யப்ரதா³ம்ʼ மணிக³ணைர்னானாவிதை⁴ர்பூ⁴ஷிதாம் ।
ப⁴க்தாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம்ʼ ஹரிஹரப்³ரஹ்மாதி³பி⁴꞉ ஸேவிதாம்ʼ
பார்ஶ்வே பங்கஜஶங்க²பத்³மநிதி⁴பி⁴ர்யுக்தாம்ʼ ஸதா³ ஶக்திபி⁴꞉ ॥


पद्मकरां - பத்³மகராம்ʼ - தாமரை போன்ற கைகளை உடையவளை அல்லது தாமரையைக் கைகளில் ஏந்தியவளை,

प्रसन्नवदनां - ப்ரஸன்னவத³னாம்ʼ - புன்முறுவல் பூத்த முகத்தினளை,

नानाविधैः मणिगणैः भूषितां - நானாவிதை⁴꞉ மணிக³ணை꞉ பூ⁴ஷிதாம்ʼ - பலவகையான மணிகளையும் ரத்தினங்களையும் அணிந்தவளை,

हरि हर-ब्रह्मादिभिः सेवितां - ஹரி ஹர-ப்³ரஹ்மாதி³பி⁴꞉ ஸேவிதாம்ʼ - ஹரி , ஹரன் , பிரம்மா முதலியோரால் ஸேவிக்கப்படுபவளை,

सौभाग्यदां - ஸௌபா⁴க்³யதா³ம்ʼ - சிறந்த பாக்கியத்தைத் தருபவளை (பெருமாளையே அடைவித்தல்),

पार्श्वे पङ्कज-शङ्ख-पद्म-निधिभिः युक्तां  - பார்ஶ்வே பங்கஜ-ஶங்க²-பத்³ம-நிதி⁴பி⁴꞉ யுக்தாம்ʼ - பக்கத்தில் தாமரை, சங்க நிதி, பத்ம நிதி முதலியவைகளை எப்போதும் கொண்டிருப்பவளை,

भाग्यदां - பா⁴க்³யதா³ம்ʼ - பாக்கியங்களைத் தருபவளை (வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்),

सदा शक्तिभिः (युक्तां) - ஸதா³ ஶக்திபி⁴꞉ (யுக்தாம்ʼ) - எப்போதும் சக்தியுடன் இருப்பவளை,

भक्त-अभीष्ट-फलप्रदां  - ப⁴க்த-அபீ⁴ஷ்ட-ப²லப்ரதா³ம்ʼ - பக்தர்களது இச்சைகளை விரும்பிய பலன்களைத் தருபவளை,

हस्ताभ्याम् अभय-प्रदां - ஹஸ்தாப்⁴யாம் அப⁴ய-ப்ரதா³ம்ʼ - தன் இரு கைகளாலும் அபயம் அளிப்பவளை,

( तां लक्ष्मीं ) - ( தாம்ʼ லக்ஷ்மீம்ʼ ) - ( அந்த லக்ஷ்மி தேவியை )

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

தாமரை போன்ற கைகளை உடையவளும் அல்லது தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், புன்முறுவல் பூத்த முகத்தினளும், பலவகையான மணிகளையும் ரத்தினங்களையும் அணிந்தவளும்; ஹரி , ஹரன் , பிரம்மா முதலியோரால் ஸேவிக்கப்படுபவளும், சிறந்த பாக்கியத்தைத் தருபவளும் (பெருமாளையே அடைவித்தல்), பக்கத்தில் தாமரை, சங்க நிதி, பத்ம நிதி முதலியவைகளை எப்போதும் கொண்டிருப்பவளும், பாக்கியங்களைத் தருபவளும் (வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்), எப்போதும் சக்தியுடன் இருப்பவளும்,
பக்தர்கள் தாம் விரும்பிய பலன்களைத் தருபவளுமான
அந்த லக்ஷ்மி தேவியை
வணங்குகிறேன்.



#  'தாமரை போன்ற' அதாவது மென்மையான, குளிர்ந்த, விசாலமான, நறுமணமுடைய என்று கொள்ளலாம்.

#  நீலம், கோமேதகம், வைரம், வைடூரியம் முதலான பல மணிகளையும், ரத்தினங்களையும் அணிந்திருக்கிறாள். பார்ப்பவர்கள் மனம் குளிர.

#  இவை போக முக்கியமாக அணிந்திருக்கும் ஆபரணம், புன்னகையே. நம் குற்றங்களை நோக்காமல், தன் இயல்பான புன்முறுவலையே உதிர்க்கிறாள். அவளும் பிரசன்னமாக இருக்கிறாள், வரும் பக்தர்களையும் பிரசன்னம் ஆக்குகிறாள்.

#  சிவபெருமான், பிரம்மா, இந்திராதி தேவர்கள் என அனைவராலும் துதிக்கப்படுபவள். இங்கு லட்சுமிக்கு பதியான ஹரியும் ஸேவிக்கிறார். ஆனால் சிவபெருமான் முதலானோர் ஸேவிப்பது, ஜகன்மாதா, தேவதேவி என்கிறபடியாக. பெருமாள் ஸேவிப்பது தன் பிரியை என்கிற பிரேமத்தின்படி.

#  ஸௌபாக்கியம் தருகிறாள். மேற்கூறிய கூற்றின்படி யாரும் இவள் கூற்றை மறுக்கப் போவதில்லை. ஆகவே எல்லோருடைய அனுக்கிரகத்தையும் பெற்றுத் தருகிறாள். மேலும் பக்தர்கள் பெருமாளை அடைந்து விடும்படி செய்கிறாள். இதுவே பாக்கியங்களில் எல்லாம் உயர்ந்த சௌபாக்கியம்.

#  பாக்கியங்களைத் தருகிறாள். பக்தர்களுக்கு இவ்வுலக வாழ்க்கைக்கு தேவைப்படுவதான  செல்வங்களை வழங்குவதற்காக, எப்பொழுதும் தனது அருகில் நிதி கோசத்தை வைத்தேயிருக்கிறாள். ஆகவே செல்வம் ஆயுள், ஆரோக்கியம், மக்கட்பேறு முதலிய எல்லா பாக்கியங்களையும் தருகிறாள்.

#  பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறாள். பக்தர்கள் என்றாலே தனக்காக எதுவும் பெரிதாக கேட்கமாட்டார்கள், தன் சுவாமிக்கும் ஏனைய மக்களுக்காகவுமே கேட்பார்கள். அப்படி கேட்பவற்றை  அனுகிரகித்தும், அதற்குண்டான பலன்களையும் அளிக்கிறாள்.

#  அப்படி அவற்றைச் செய்வதற்கான எல்லா சக்தியையும் எப்போதும் கொண்டிருக்கிறாள்.

#  இரண்டு கைகளாலும் அபயம் அளிக்கிறாள்.
ஒரு கை அஞ்சாதே என்று அபய ஹஸ்தம். மற்றொன்று திருவடி பற்று என்று வரத ஹஸ்தம். ஆக இரண்டு கைகளாலும் அபயம் அளிக்கிறாள். பெருமாள் கருணாமூர்த்தி என்றபோதிலும் லோகநாதன் என்பதால் சிக்ஷை அளிக்கக் கடமைபட்டவர். ஆகவே சன்னிதி சென்றதும் நம் மேல் கருணை வருமா, நம் குற்றங்களை எண்ணி கோபம் வருமா என்கிற தோன்றலாம். அதற்காகவே பிராட்டி தன் திருவடி காட்டி பற்றச் செய்து, பின்னர் அபய ஹஸ்தத்தால் அஞ்சாதே! பெருமாளைக் கண்டு அஞ்சாதே ! அவர் அனுகிரஹிக்கும் படி செய்கிறோம் என்று சொல்லாமல் சொல்லுவதாய் உள்ளது.

Monday, 30 August 2021

Sri Krishna Jeyanti 30-8-2021

तृष्णातुरे चेतसि जृम्भमानं मुष्णन्मुहुर्मोह महान्धकारम्।
पुष्णातु नः पुण्यदयैकसिन्धोः कृष्णस्य कारुण्यकटाक्षकेलिः॥ ३-९

तृष्ण आतुरे चेतसि जृम्भमानम् मुष्णन् मुहुः मोह महा अन्धकारम् ।
पुष्णातु नः पुण्य दय एक सिन्धोः कृष्णस्य कारुण्य कटाक्ष केलिः ॥
3.9

த்ருʼஷ்ண ஆதுரே சேதஸி ஜ்ருʼம்ப⁴மானம் முஷ்ணன் முஹு꞉ மோஹ மஹா அந்த⁴காரம் ।
புஷ்ணாது ந꞉ புண்ய த³ய ஏக ஸிந்தோ⁴꞉ க்ருʼஷ்ணஸ்ய காருண்ய கடாக்ஷ கேலி꞉ ॥


பொருள் :

 (புண்ய-) புண்ணியச் செயல்களுக்கும் (தயா) கருணைக்கும் (ஏக ஸிந்தோ:) ஒரே உறைவிடமான கடல் போன்று விளங்கும் (க்ருஷ்ணஸ்ய) ஸ்ரீ கிருஷ்ணனுடைய (காருண்ய கடாக்ஷ-கேலி:) அன்பு நிறைந்த கடைக்கண் பார்வையின் விலாஸம் (த்ருஷ்ணா-) பேராசையால் (ஆதுரே) பீடிக்கப்பட்ட (சேதஸி) நமது மனதில் (முஹு:) மேன்மேலும் (ஜ்ரும்பமாணம்) வளர்ந்து கொண்டிருக்கும் (மோஹ-மஹாந்தகாரம்) மதிமயக்க மாகிற பேரிருளை (முஷ்ணன்) போக்கி (ந:) நம்மை (புஷ்ணாது) காப்பாற்றியருளட்டும்.

Monday, 31 May 2021

Sri Somasundara Stuti - Sloka 2

Sri Somasundara Stuti - Sloka 2

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् । 
स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥

ஜ்ஞாத்ருʼஜ்ஞானஜ்ஞேயரூபம்ʼ விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம் । 
ஸ்வயம்ʼ ஸர்வைரத்³ருʼஶ்யோ யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 2 ॥ 

jñātṛjñānajñeyarūpaṃ viśvaṃ vyāpya vyavasthitam । 
svayaṃ sarvairadṛśyo yastaṃ vande somasundaram ॥ 2 ॥ 


ज्ञातृ-ज्ञान-ज्ञेयरूपं - ஜ்ஞாத்ருʼ-ஜ்ஞான-ஜ்ஞேயரூபம்ʼ - அறிபவராகவும், அறிவாகவும், அறியப்படுபவராகவும் உள்ளவரை,

विश्वं व्याप्य व्यवस्थितं - விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம்ʼ - உலகெங்கும் வியாபித்து விளங்குபவரை,

स्वयं सर्वैः अदृश्यः - ஸ்வயம்ʼ ஸர்வை꞉ அத்³ருʼஶ்ய꞉ - எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவர்,

यः - ய꞉ - எவரோ

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

அறிபவராகவும், அறிவாகவும், அறியப்படுபவராகவும் உள்ளவரும், உலகெங்கும் வியாபித்து விளங்குபவரும், எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவருமாவனர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 2


Meaning :

I adore that Somasundarar, who is the Knower, the Knowledge, the Known, the One who pervades throughout the world, the One who makes everyone unaware of Himself. 2

Sunday, 30 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 10

Vinaayaka Leelaa Stuti - sloka 10

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


निरन्तरं संस्कृतदानपट्टे लग्नां तु गुञ्जद्भ्रमरावलीं वै ।
तं श्रोत्रतालैरपसारयन्तं भजे गजास्यं निजहृत्सरोजे ॥ १०॥

நிரந்தரம்ʼ ஸம்ʼஸ்க்ருʼததா³னபட்டே லக்³னாம்ʼ து கு³ஞ்ஜத்³ப்⁴ரமராவலீம்ʼ வை |
தம்ʼ ஶ்ரோத்ரதாலைரபஸாரயந்தம்ʼ ப⁴ஜே க³ஜாஸ்யம்ʼ நிஜஹ்ருʼத்ஸரோஜே || 10||

nirantaraṃ saṃskṛtadānapaṭṭe lagnāṃ tu guñjadbhramarāvalīṃ vai ।
taṃ śrotratālairapasārayantaṃ bhaje gajāsyaṃ nijahṛtsaroje ॥ 10॥


संस्कृत-दान-पट्टे लग्नां तु - ஸம்ʼஸ்க்ருʼத-தா³ன-பட்டே லக்³னாம்ʼ து - தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி,

गुञ्जद्-भ्रमर-आवलीं वै - கு³ஞ்ஜத்³-ப்⁴ரமர-ஆவலீம்ʼ வை - மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை,

श्रोत्र-तालैः - ஶ்ரோத்ர-தாலை: - ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில்,

निरन्तरं - நிரந்தரம்ʼ - ஓய்வின்றி,

अपसारयन्तं - அபஸாரயந்தம்ʼ - விரட்டுகின்றவரான,

तं गजास्यं - தம்ʼ க³ஜாஸ்யம்ʼ - அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) ,

निजहृत्-सरोजे - நிஜஹ்ருʼத்-ஸரோஜே - பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅,

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.


பொருள் :

தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை, ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில் ஓய்வின்றி விரட்டுகின்றவரான அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) , பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅ வழிபடுகிறேன். 10


# யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக்கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம், இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ‘ஸ்ட்ரெய்ன்’ பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக்கொண்டே இருப்பது. ‘கஜாஸ்பாலம்’ [கஜ ஆஸ்பாலம்], ‘கஜதாளம்’ என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. தாளம் என்றால் பனை, அதாவது விசிறி. பாட்டுக்கு விரலால் போடுவதும் தாளம். ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது!
யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு ‘பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக் காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையையும் கொடுத்திருக்கிறார்.
விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆசார்யாள் “கபோல தான வாரணம்” என்று [கணேச பஞ்சரத்தினத்தில்] சொல்லியிருக்கிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம்.
பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான்! பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆசார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில்* சொல்லியிருக்கிறார்.
“கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்”
மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்சனமே அவற்றுக்கு அம்ருத பானமாக இருக்குமாதலால் மத ஜலத்தைக் குடிக்க வேண்டுமென்பதில்லை. விளையாடணும், அவர் தங்களுக்கு விசிறி விடணும் என்றேதான் அதுகள் கன்னத்தண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ‘டுர்ர்’ என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோமோல்லியோ? அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணணும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.
ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் “மஹாகணபதி ஸ்தோத்ரம்” என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்த்ர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது!

தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ

‘தான ஆமோதம்’ என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அந்த விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று! ‘லுப்த மதுப’ என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஸ்வாமி நினைக்கிறார். ‘ப்ரோத்ஸாரணம்’ என்றால் விரட்டுவது, விலக்குவது. இந்த நினைப்பிலிருந்து ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது. ‘கேலனம்’ என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு! ‘கர்ணாந்தோலன கேலனம்’, ‘கர்ண ஆந்தோலனம்’ என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.
ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் ‘டோலோத்ஸவம்’ என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷப்படுகிறோம். ‘டோலி’ கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.
காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். ‘விஜயதே’ – அழகாக விளங்குகிறார், வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.
- தெய்வத்தின் குரல்.

Friday, 28 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 3

Śrī Devyaṣṭakam - Sloka 3

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


अन्नपूर्णां सदापूर्णां पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारूढां वन्दे त्वां परमेश्वरीम् ॥ ३॥

அன்னபூர்ணாம்ʼ ஸதா³பூர்ணாம்ʼ பார்வதீம்ʼ பர்வபூஜிதாம் ।
மஹேஶ்வரீம்ʼ வ்ருʼஷாரூடா⁴ம்ʼ வந்தே³ த்வாம்ʼ பரமேஶ்வரீம் ॥ 3॥

annapūrṇāṃ sadāpūrṇāṃ pārvatīṃ parvapūjitām ।
maheśvarīṃ vṛṣārūḍhāṃ vande tvāṃ parameśvarīm ॥ 3॥


अन्नपूर्णां - அன்னபூர்ணாம்ʼ - அன்னபூர்ணா தேவியை (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளை),

सदापूर्णां - ஸதா³பூர்ணாம்ʼ - எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளை,

पार्वतीं - பார்வதீம்ʼ - பார்வதி தேவியை (பர்வதராஜரின் மகளை),

पर्वपूजितां - பர்வபூஜிதாம்ʼ - பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளை,

महेश्वरीं - மஹேஶ்வரீம்ʼ - மஹேச்வரரது மனைவியை,

वृषारूढां - வ்ருʼஷாரூடா⁴ம்ʼ - ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளை,

परमेश्वरीं - பரமேஶ்வரீம்ʼ - அனைத்துக்கும் மேலான ஈச்வரியை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

அன்னபூர்ணா தேவியும் (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளும்), எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளும், பார்வதி தேவியும் (பர்வதராஜரின் மகளும்), பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளும், மஹேச்வரரது மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், அனைத்துக்கும் மேலான ஈச்வரியுமான தங்களை வணங்குகிறேன். 3


Meaning :

Oh Annapurna, Oh Goddess who is always complete , Oh Parvathi , Oh Goddess worshipped during festivals,
Oh Great Goddess , Oh Goddess who rides on a bull , I salute you who is the greatest goddess. 3

Tuesday, 25 May 2021

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

संसारदावदहनाकरभीकरोरु ज्वालावलीभिरतिदग्धतनूरुहस्य । 
त्वत्पादपद्मसरसीं शरणागतस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥ 

ஸம்ʼஸாரதா³வத³ஹனாகரபீ⁴கரோரு ஜ்வாலாவலீபி⁴ரதித³க்³த⁴தனூருஹஸ்ய ।
த்வத்பாத³பத்³மஸரஸீம்ʼ ஶரணாக³தஸ்ய லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥


संसार-दाव-दहन-आकर-भीकर-उरु-ज्वाला-आवलीभिः - ஸம்ʼஸார-தா³வ-த³ஹன-ஆகர-பீ⁴கர-உரு-ஜ்வாலா-ஆவலீபி⁴꞉ - ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், 

अतिदग्ध-तनूरुहस्य - அதித³க்³த⁴-தனூருஹஸ்ய - நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், 

त्वत्-पाद-पद्म-सरसीं - த்வத்-பாத³-பத்³ம-ஸரஸீம்ʼ - தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை

शरणागतस्य - ஶரணாக³தஸ்ய - சரணமாக அடைந்திருக்கிறவனுமான, 

मम - மம - எனக்கு,

करावलम्बं देहि - கராவலம்ப³ம்ʼ தே³ஹி - கைபிடிப்பை தாரும்,

लक्ष्मीनृसिंह - லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ - ஹே ! லக்ஷ்மீ ஸமேதரான நரஸிம்ஹரே !


பொருள் :

ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை சரணமாக அடைந்திருக்கிறவனுமான எனக்கு (தங்கள்) கைபிடிப்பை தாரும், ஹே லக்ஷ்மி ஸமேதரான நரஸிம்ஹரே !


தினம் தினம் வாழ்வில் ஏற்படும் அநேக விதமான கஷ்டங்களால் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், இந்நிலையில் உதவ உற்றார் உறவினராலும் இயலாதபோது, அரசாங்கமோ, நண்பர்களோ, மருத்துவர்களோ என்று யாராலும் உதவமுடியாத நிலையில், அதுவும் இந்நிலை தொடர்கதையாகவே இருக்கும் எனும் நிலையில், ஒரே அடைக்கலம் என்று தன் பகவான் திருவடிகளை நினைத்து உருகி, ஆதரவை பகவானிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய நிலையை எண்ணி சங்கராசார்யர் அவனுக்காக இதை அமைக்கிறார்.

Monday, 24 May 2021

Sri Somasundara Stuti - Sloka 1

Sri Somasundara Stuti - Sloka 1

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


इन्द्र उवाच –

एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् । 
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥


இந்த்³ர உவாச –

ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் । 
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥


indra uvāca –

ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam । 
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥


इन्द्र उवाच - இந்த்³ர உவாச - இந்திரன் கூறினார்.

एकम् - ஏகம் - ஏகன் (ஒன்றானவன்),

ब्रह्म - ப்³ரஹ்ம - ப்ரஹ்மன் (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது),

अद्वितीयम‌् - அத்³விதீயம் - அத்விதீயன் (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது)

परिपूर्ण - பரிபூர்ண - பரிபூர்ணன் (நீக்கமற நிறைந்தது)

परात्परम् - பராத்பரம் - பராத்பரன் (சிறந்ததிலெல்லாம் சிறந்தது)

च इति वेदैः गीयते - ச இதி வேதை³꞉ கீ³யதே - என்றெல்லாம் வேதங்களால் ‌போற்றப்பெறுபவர்,

यः - ய꞉ - எவரோ,

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை,

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

இந்திரன் கூறினார் -

'ஏகன்' (ஒன்றானவன்), 'ப்ரஹ்மன்' (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது), 'அத்விதீயன்' (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது), 'பரிபூர்ணன்' (நீக்கமற நிறைந்தது), 'பராத்பரன்' (சிறந்ததிலெல்லாம் சிறந்தது) - என்றெல்லாம் வேதங்களால் ‌போற்றப்பெறுபவர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 1


Meaning :

Indra said -

I worship Somasundaram (Lord Shiva), who is always praised by the Vedas as 'Eka', 'Brahma', 'Adviteeya', 'Paripoorna', 'Paraatpara'. 1



* ஏகன் - ஒன்றானவன் - தன்னைப் போல் ஸஜாதீயமாகவோ விஜாதீயமாகவோ மற்றொன்று இல்லாதது. இரண்டு மான்கள், நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், மானின் லக்ஷணங்களுடன் கூடிய இன்னொன்று என்றாகிறது. நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், நான்கு கால்கள் உடைய ஆனால் வேறு வேறு லக்ஷணங்களுடன் கூடிய பல பிராணிகள் (மான், பசு, புலி, சிங்கம், யானை, முயல் இத்யாதிகள்) என்று கொள்ளலாம். பிரம்மத்தைப் பொருத்தவரை அதைப் போன்ற இன்னொன்று இல்லை. இரண்டாவது பிரம்மம் என்று இல்லாமல் ஒன்றே ஆனது.


* ப்ரஹ்மன் - எவன் பெரியவனோ, பெரியதாகச் செய்பவனோ அவன். தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது. 

"எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்."

"எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ, 
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ, 
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ, 
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்." - ஆத்மபோதத்திலிருந்து.

* அத்விதீயன் - இரண்டற்றது (ஒன்றானவன்) - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது.

* பரிபூர்ணன் - நீக்கமற நிறைந்தது.

* பராத்பரன் - சிறந்ததிலெல்லாம் சிறந்தது.

Sunday, 23 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 9

Vinaayaka Leelaa Stuti - sloka 9

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


आगत्य चोच्चैर्हरिनाभिपद्मं ददर्श तत्राशु करेण तच्च ।
उद्धर्तुमिच्छन्विधिचाटुवाक्यं श्रुत्वा मुमोचावतु नो गणेशः ॥ ९॥

ஆக³த்ய சோச்சைர்ஹரினாபி⁴பத்³மம்ʼ த³த³ர்ஶ தத்ராஶு கரேண தச்ச | 
உத்³த⁴ர்துமிச்ச²ன்விதி⁴சாடுவாக்யம்ʼ ஶ்ருத்வா முமோசாவது நோ க³ணேஶ: || 9|| 

āgatya coccairharinābhipadmaṃ dadarśa tatrāśu kareṇa tacca ।
uddhartumicchanvidhicāṭuvākyaṃ śrutvā mumocāvatu no gaṇeśaḥ ॥ 9॥


हरि-नाभि-पद्मं - ஹரி-நாபி⁴-பத்³மம்ʼ - ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் , 

ददर्श तत्र आशु - த³த³ர்ஶ தத்ர ஆஶு - பார்த்த உடன் அங்கு ,

उच्चैः आगत्य च - உச்சை: ஆக³த்ய ச - மேலே ஏறியும் வந்து ,

करेण - கரேண - ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் ,

तत् च उद्धर्तुं-इच्छन् - தத் ச உத்³த⁴ர்தும்ʼ-இச்ச²ன் - அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், 

विधि-चाटु-वाक्यं श्रुत्वा - விதி⁴-சாடு-வாக்யம்ʼ ஶ்ருத்வா - ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு,

मुमोच - முமோச - ( பிடுங்காமல் ) விட்டார் ,

गणेशः - க³ணேஶ: - ( அந்த ) கணேசர், 

नः अवतु - ந: அவது - நம்மைக் காக்கட்டும்.


பொருள் :

ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் பார்த்த உடன் அங்கு மேலே ஏறியும் வந்து, ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு ( பிடுங்காமல் ) விட்டார். ( அந்த ) கணேசர் நம்மைக் காக்கட்டும். 9


# विधिः - விதி⁴: - ப்ரஹ்மா.

Friday, 21 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 2

Śrī Devyaṣṭakam - Sloka 2

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


भक्तप्रियां भक्तिगम्यां भक्तानां कीर्तिवर्धिकाम् ।
भवप्रियां सतीं देवीं वन्दे त्वां भक्तवत्सलाम् ॥ २॥

ப⁴க்தப்ரியாம்ʼ ப⁴க்திக³ம்யாம்ʼ ப⁴க்தானாம்ʼ கீர்திவர்தி⁴காம் ।
ப⁴வப்ரியாம்ʼ ஸதீம்ʼ தே³வீம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப⁴க்தவத்ஸலாம் ॥ 2॥

bhaktapriyāṃ bhaktigamyāṃ bhaktānāṃ kīrtivardhikām ।
bhavapriyāṃ satīṃ devīṃ vande tvāṃ bhaktavatsalām ॥ 2॥



भक्त-प्रियां - ப⁴க்த-ப்ரியாம்ʼ - பக்தர்களுக்குத் திருப்தியளிப்பவளை, 

भक्ति-गम्यां - ப⁴க்தி-க³ம்யாம்ʼ - பக்தியால் அடைய தகுந்தவளை, 

भक्तानां कीर्ति-वर्धिकां - ப⁴க்தானாம்ʼ கீர்தி-வர்தி⁴காம்ʼ - பக்தர்களுடைய புகழை வளர்ப்பவளை, 

भव-प्रियां - ப⁴வ-ப்ரியாம்ʼ - பரமசிவனாரது பத்தினியை, 

सतीं देवीं - ஸதீம்ʼ தே³வீம்ʼ - பதிவிரதையாகிய தேவியை, 

भक्त-वत्सलां - ப⁴க்த-வத்ஸலாம்ʼ - பக்தர்களிடம் வாத்ஸல்யம் கொண்டவளை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

பக்தர்களுக்குத் திருப்தியளிப்பவளும், பக்தியால் அடைய தகுந்தவளும், பக்தர்களுடைய புகழை வளர்ப்பவளும், பரமசிவனாரது பத்தினியும், பதிவிரதையாகிய தேவியும், பக்தர்களிடம் வாத்ஸல்யம் கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன். 2


Meaning :

The Goddess, who gratifies her devotees, who can be attained through devotion, who augments the glory of her devotees, the consort of Lord Shiva, the faithful devoted Devi, I salute Thee, who has tender affection to her devotees. 2


* ப⁴க்தப்ரியா - பக்தர்கள் வேண்டுவதைத் தந்து திருப்தி அளிப்பவள்.

* ப⁴க்தவத்ஸலா - பக்தர்கள் தன்னை போற்றினாலும் சிலவேளைகளில் தூற்றினாலும், நினைந்தாலும் சிலவேளைகளில் மறந்தாலும், சாஸ்த்ர வழி நடந்தாலும் நடக்காவிட்டாலும், பெற்ற அன்னையாக மாறாத அன்பினை பக்தர்கள்பால் கொண்டவள்.

Monday, 17 May 2021

Sri Somasundara Stuti - Introduction

Sri Somasundara Stuti - Introduction


மீனாக்ஷி ஸுந்தர ! ஸோம ஸுந்தர ! கடம்ப வன ஸுந்தர ! 

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான், தன் பக்தர்களுக்காக அநேக திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பிரஸித்தம். இவை பற்றி வடமொழியில் ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் எனும் ஸ்கந்த புராணப் பகுதியும், தென்மொழியில் திருவிளையாடற் புராணம் எனும் நூலும் காணக்கிடைக்கின்றன.

இத்திருவிளையாடல்களில் முதலாவது இந்திரன் சாபம் தீர்த்தது. இதைப் பற்றி ஹாலாஸ்ய மாஹாத்ம்யத்தில் கூறும்போது, இந்த்ரன் ஸோமஸுந்தரரைத் துதித்ததாகக் குறிப்பு வருகிறது.

இந்திரனின் பாபம் நீங்கிய வரலாறு :

தேவர்களின் தலைவன் இந்த்ரன் விசுவகர்மாவால் அமைக்கப் பெற்ற ஸுதர்மா என்ற ஸபையில் அமர்ந்து மூவுலகையும் ஆண்டான். ஸபையில் நடனமாடிய திலோத்தமையின் அழகில் மயங்கியவன் தன் குரு பிருஹஸ்பதி ஸபைக்கு வந்ததை அறியாமல் அவரை வரவேற்று உபசரிக்காததால் மனமுடைந்த பிருஹஸ்பதி தேவருலகை விட்டகன்றார். நடனம் முடிந்ததும் மனம் தெளிந்த இந்த்ரன் குருவிடம் தவறாக நடந்து கொண்டதையும் அவர் அகன்றுவிட்டதையும் உணர்ந்தான். இந்தச் செய்தி அறிந்த அஸுரர்கள் குருவை அவமதித்த இந்த்ரனையும் தேவர் படையையும் எளிதில் வென்றனர். தேவர்கள் இந்திரனுடன் பிரும்மாவிடம் சென்று உதவ வேண்டினர்.

த்வஷ்டாவின் புதல்வனும் மூன்று தலைகள் உள்ளவனுமான விசுவரூபனைக் குருவாகக் கொள்ளும்படி பிரும்மா கூறினார். அவரிடம் சென்று அவரைக் குருவாக வரித்து அவரிடமிருந்து சிவகவசம் எனும் வஜ்ரக் கூடு போன்ற மந்த்ரம் பெற்று அதன் வலிமையால் அஸுரர்களைத் தேவர்கள் வென்றனர். விசுவரூபர் தன் ஸகோதரியின் புதல்வர்களான அஸுரர்களிடம் அன்பு பூண்டு மறைமுகமாக அவர்களுக்கு உதவுவதைக் கண்ட இந்த்ரன் விசுவரூபனை வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவரது உடலிலிருந்து பறவைகள் வடிவில் உயிர் அகன்றது. இந்த்ரனுக்கு நேர்ந்த பிரும்ஹ ஹத்தி பாபத்தை அவன் பூமியிடமும், நீரிலும் பெண்களிடத்திலும் மரங்களிடத்திலும் பங்கிட்டுத் தந்தான். வெட்ட வெட்ட நிரம்புகிற ஆற்றலை பூமிக்கும், ப்ரசவிக்கும் வரை புருஷனுடன் உடலுறவு கொள்வதைப் பெண்களுக்கும், பனியாகிக் கெட்டியானாலும் இளகுவதை நீருக்கும், வெட்ட வெட்டத் துளிர்ப்பதை மரங்களுக்கும் ஈடாக இந்த்ரன் தந்தான்.

விசுவரூபரின் தந்தை தன் மகனைக் கொன்ற இந்த்ரனுக்கு எதிரியாக ஒரு புத்திரனை வேண்டி யாகம் புரிந்தார். விருத்திரன் தோன்றினான். தினமும் ஒரு வில்லடி வளர்ந்த அந்த அஸுரனை வெல்ல இந்த்ரனால் இயலவில்லை. வஜ்ராயுதமும் பயனற்றுப் போனது. திருப்பாற் கடலைக் கடைந்தபோது தேவரும், அஸுரரும் தம் தம் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் ததீசி முனிவரிடம் தந்தனர். இந்த்ரனின் மந்த்ரசக்தி மிக்க வஜ்ரமும் அதில் ஒன்று. ததீசி அதனை விழுங்கி முதுகின் நடு எலும்புக் கூட்டில் அவற்றைப் பதித்துக் காப்பாற்றி வந்துள்ளதை விஷ்ணு நினைவு படுத்த, ததீசியிடம் சென்று இந்த்ரன் ஆயுதத்தைத் தரவேண்டினான். ததீசி தன் யோகபலத்தால் சிரமமின்றி உயிரை விட்டார். இந்திரன் அவரது முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் அமைத்து அதனால் விருத்ரனை எதிர்த்தான். 

விருத்ரன் பயந்து கடலில் மூழ்கி மறைந்தான். அகஸ்தியரிடம் வேண்ட, கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தார். விருத்திரன் அங்கு யோக நிலையில் அமர்ந்து சித்த மடங்கி இருந்தான். இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றதும் அவனைப் பிரும்ம-ஹத்தி பாபம் நிழலாகத் தொடர்ந்தது. அதனைக் கண்டு பயந்த இந்திரன் கைலாஸம் சென்று தாமரைத் தண்டினுள் நுழைந்து மறைந்து வாழ்ந்தான். நஹுஷன் இந்திர பதவி பெற்றுத் தேவருலகை ஆண்டான்.

இந்திரன் துயருற்று பிருஹஸ்பதியைத் தியானித்ததும் அவர் நேரில் வந்தார். இந்திரனது குற்றத்தை மன்னித்தார். சிவலிங்க வழிபாடே இதற்குரிய கழுவாய் எனக் கண்ட குரு ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் சென்று நீராடி சிவனை வழிபடக் கூறினார்.

பெரும் பாபம் நீங்குவதற்காக குருவின் வாக்யத்தைக் கேட்ட இந்த்ரன் பயம் நீங்கியவனாக அமராவதி சென்று குருவுடன் உச்சை சிரவஸ் என்ற தன் குதிரைமீதேறி பூமியில் இறங்கிக் கைலாஸம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று புனித நதிகளில் நீராடிச் சிவபெருமானை வழிபட்டான். பிரும்ம ஹத்தி எல்லாவிடத்திலும் அவனைத் துரத்தியது. 

வழியில் வேட்டையாடுவதில் நாட்டத்தால் காடுகளில் சுற்றியவன் ஸோமஸுந்தரர் இருக்குமிடம் வந்தான். வேட்டையில் நாட்டம் குறைந்து தயை அதிகமாவதை உணர்ந்த இந்த்ரன் கடம்புக் காட்டில் நுழையும் போதே பிரும்ம-ஹத்தி தன்னை விட்டகன்று விட்டதை உணர்ந்தான். அங்கு எல்லா உயிரினங்களும் அன்புடன் பழகின. எதிரில் பெரும் தடாகம் தென்பட்டது. அதில் நீராடினான். அதன் வடமேற்கில் ஒரு லிங்கம் இருந்தது. அதனைச் சுற்றி வந்த கிளிகள் " சிவ ! சம்போ மஹாதேவ! சங்கர! " என்று இறைவனைப் பாடின. பிருஹஸ்பதியிடம் தான் செய்ய வேண்டியதைப் பற்றிக் கேட்டான்.

"இந்தத் தடாகத்தின் கரையில் ஒரு ஆலயத்தைக் கட்டி, அதில் இந்த லிங்கத்தை வைத்துப் பூஜிப்பாய்" என்று குரு கூற உடன் விசுவகர்மாவை அழைத்து கோவில் கட்டச் செய்தான். பூக்களால் வழிபட விரும்பி காட்டிலிருந்து பூக்களைக் கொணரத் தன் தேவ கணங்களை ஏவினான். எங்கும் பூ கிடைக்கவில்லை. தன் வெண்குடையை லிங்கத்தின் மீது தாங்கினான். அதற்குள் விசுவகர்மா கோவிலைக் கட்டி முடித்தான். அந்த அழகிய அலங்கரிக்கப் பெற்ற கோவிலில் ஈசனை வைத்து வழிபடத் தொடங்கினான். புஷ்பங்களைக் கொணரச் சென்றவர்கள் பக்கத்திலுள்ள காடுகளில் தேடியும், பூ கிடைக்காமல் திரும்பினர்.

இறைவன் தன் அருளால் தடாகத்தில் தங்கத் தாமரைகளைத் தோற்றுவித்தார். அவற்றை கொண்டு வந்து ஈசனையும், தேவியையும் இந்த்ரன் வழிபட்டான். இந்த்ரன் முன்னே மிகவும் ஸுந்தரனாகத் தேவியுடன் இறைவன் காட்சியளித்தார். அதனைக் கண்டானந்தித்த இந்த்ரன் தேவனைத் துதித்து வணங்க, இறைவன் அதை ஏற்று அருள் புரிந்தார். தினமும் தனது வழிபாட்டை ஏற்க இந்த்ரன் வேண்டியதும், இறைவன் கூறினார், " பிரும்மஹத்தி பாபம் நீங்கியது. உன்னால் அமைக்கப் பெற்ற இந்த விமானம் உன் பெயருடன் விளங்கட்டும். ப்ரளய காலத்திலும் இது அழியாதிருக்கட்டும். ஆண்டு தோறும் வஸந்த ருதுவில் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமியில் தேவர்களுடன் வந்து பொற்றாமரைக் குளத்திலுள்ள பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபடுவாயாக ! " என்றருளி மூலலிங்கத்தினுள் மறைந்தார்.

அதிலிருந்து இந்நாள் வரை சித்திரைத் திருநாளை இந்திரன் தேவர்களுடன் வந்து கண்டுகளித்துச் செல்கிறான். இந்திரனுக்கு அருள் புரிந்ததே மதுரையில் நிகழ்ந்த முதல் லீலை.

பரமேச்வரர் இந்திரனுக்கு ஸோமஸுந்தரராகக் காட்சியளித்த போது, இந்திரனால் செய்யப்பட்ட ஸ்துதியே, இந்த ஸோமஸுந்தர ஸ்துதி.



॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

इन्द्र उवाच –

एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् । 
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥

ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् । 
स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥ 

अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः । 
ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥

यं विदित्वा बुधास्सर्वे कर्मबन्धविबज्जिताः ।
लभन्ते परमां मुक्तिं तं वन्दे सोमसुन्दरम् ॥ ४ ॥

देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥

निजनेत्राम्बुजकृतपूजया परितोष्य यम् । 
श्रीपतिर्लभते चक्रं तं बन्दे सोमसुन्दरम् ॥ ६ ॥

येन सृष्टं जगत्सर्वं रक्षितं संहृतं क्रमात् । 
सत्यं विज्ञानमानन्दं तं वन्दे सोम सुन्दरम् ॥ ७ ॥

यस्मै वेदाश्च चत्वारो नमस्यन्ति वपुर्धराः । 
ईशानं सर्वविद्यानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ८ ॥

यस्मात्परञ्चापरञ्च किञ्चिद्वस्तु न विद्यते ।
ईश्वरं सर्वभूतानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ९ ॥

यस्य प्रणाममात्रेण सन्ति सर्वाश्च सम्पदः । 
सर्वसिद्धिप्रदं शम्भुं तं वन्दे सोमसुन्दरम् ॥ १० ॥

यस्य दर्शनमात्रेण ब्रह्महत्यादिपातकम् ।
अवश्यं नश्यति क्षिप्रं तं वन्दे सोमसुन्दरम् ॥ ११ ॥ 

उत्तमाङ्गञ्च चरणं विधिना विष्णुनाऽपि च । 
न दृश्यते यस्य यत्नात् तं वन्दे सोमसुन्दरम् ॥ १२ ॥

त्वया नीपारण्यनाथ त्वदन्यान् समानाहुर्दैवतान् पापिनस्ते । 
तदा शम्भो त्वत्समं दैवतं स्याद् यदा योगो वाजिनो रासभस्य ॥ १३ ॥

अणोरणुस्त्वं महतो महांस्त्वं सर्वात्मभावात्परिपूर्ण एकः ।
त्वयैव शम्भो महिमा त्वदीयो विज्ञायते वक्तुमिमं क्षमः कः ॥ १४ ॥

फलश्रुतिः –
त्वया कृतमिदं स्तोत्रं पठति श्रद्धया तु यः ।
धर्मादिपुरुषार्थांश्च तस्मै दास्याम्यहं ध्रुवम् ॥

इति श्री सोमसुन्दर स्तुतिः संपूर्णम् ॥


॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

இந்த்³ர உவாச –

ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் । 
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥

ஜ்ஞாத்ருʼஜ்ஞானஜ்ஞேயரூபம்ʼ விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம் । 
ஸ்வயம்ʼ ஸர்வைரத்³ருʼஶ்யோ யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 2 ॥ 

அஶ்வமேதா⁴தி³யஜ்ஞைஶ்ச யஸ்ஸமாராத்⁴யதே த்³விஜை꞉ । 
த³தா³தி ச ப²லம்ʼ தேஷாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 3 ॥

யம்ʼ விதி³த்வா பு³தா⁴ஸ்ஸர்வே கர்மப³ந்த⁴விப³ஜ்ஜிதா꞉ ।
லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 4 ॥

தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥

நிஜநேத்ராம்பு³ஜக்ருʼதபூஜயா பரிதோஷ்ய யம் । 
ஶ்ரீபதிர்லப⁴தே சக்ரம்ʼ தம்ʼ ப³ந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 6 ॥

யேன ஸ்ருʼஷ்டம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ ரக்ஷிதம்ʼ ஸம்ʼஹ்ருʼதம்ʼ க்ரமாத் । 
ஸத்யம்ʼ விஜ்ஞானமானந்த³ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோம ஸுந்த³ரம் ॥ 7 ॥

யஸ்மை வேதா³ஶ்ச சத்வாரோ நமஸ்யந்தி வபுர்த⁴ரா꞉ । 
ஈஶானம்ʼ ஸர்வவித்³யானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 8 ॥

யஸ்மாத்பரஞ்சாபரஞ்ச கிஞ்சித்³வஸ்து ந வித்³யதே ।
ஈஶ்வரம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 9 ॥

யஸ்ய ப்ரணாமமாத்ரேண ஸந்தி ஸர்வாஶ்ச ஸம்பத³꞉ । 
ஸர்வஸித்³தி⁴ப்ரத³ம்ʼ ஶம்பு⁴ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 10 ॥

யஸ்ய த³ர்ஶனமாத்ரேண ப்³ரஹ்மஹத்யாதி³பாதகம் ।
அவஶ்யம்ʼ நஶ்யதி க்ஷிப்ரம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 11 ॥ 

உத்தமாங்க³ஞ்ச சரணம்ʼ விதி⁴னா விஷ்ணுனா(அ)பி ச । 
ந த்³ருʼஶ்யதே யஸ்ய யத்னாத் தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 12 ॥

த்வயா நீபாரண்யநாத² த்வத³ன்யான் ஸமானாஹுர்தை³வதான் பாபினஸ்தே । 
ததா³ ஶம்போ⁴ த்வத்ஸமம்ʼ தை³வதம்ʼ ஸ்யாத்³ யதா³ யோகோ³ வாஜினோ ராஸப⁴ஸ்ய ॥ 13 ॥

அணோரணுஸ்த்வம்ʼ மஹதோ மஹாம்ʼஸ்த்வம்ʼ ஸர்வாத்மபா⁴வாத்பரிபூர்ண ஏக꞉ ।
த்வயைவ ஶம்போ⁴ மஹிமா த்வதீ³யோ விஜ்ஞாயதே வக்துமிமம்ʼ க்ஷம꞉ க꞉ ॥ 14 ॥

ப²லஶ்ருதி꞉ –
த்வயா க்ருʼதமித³ம்ʼ ஸ்தோத்ரம்ʼ பட²தி ஶ்ரத்³த⁴யா து ய꞉ ।
த⁴ர்மாதி³புருஷார்தா²ம்ʼஶ்ச தஸ்மை தா³ஸ்யாம்யஹம்ʼ த்⁴ருவம் ॥

இதி ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ஸம்பூர்ணம் ॥


|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||

indra uvāca –

ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam । 
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥

jñātṛjñānajñeyarūpaṃ viśvaṃ vyāpya vyavasthitam । 
svayaṃ sarvairadṛśyo yastaṃ vande somasundaram ॥ 2 ॥ 

aśvamedhādiyajñaiśca yassamārādhyate dvijaiḥ । 
dadāti ca phalaṃ teṣāṃ taṃ vande somasundaram ॥ 3 ॥

yaṃ viditvā budhāssarve karmabandhavibajjitāḥ ।
labhante paramāṃ muktiṃ taṃ vande somasundaram ॥ 4 ॥

devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥

nijanetrāmbujakṛtapūjayā paritoṣya yam । 
śrīpatirlabhate cakraṃ taṃ bande somasundaram ॥ 6 ॥

yena sṛṣṭaṃ jagatsarvaṃ rakṣitaṃ saṃhṛtaṃ kramāt । 
satyaṃ vijñānamānandaṃ taṃ vande soma sundaram ॥ 7 ॥

yasmai vedāśca catvāro namasyanti vapurdharāḥ । 
īśānaṃ sarvavidyānāṃ taṃ vande somasundaram ॥ 8 ॥

yasmātparañcāparañca kiñcidvastu na vidyate ।
īśvaraṃ sarvabhūtānāṃ taṃ vande somasundaram ॥ 9 ॥

yasya praṇāmamātreṇa santi sarvāśca sampadaḥ । 
sarvasiddhipradaṃ śambhuṃ taṃ vande somasundaram ॥ 10 ॥

yasya darśanamātreṇa brahmahatyādipātakam ।
avaśyaṃ naśyati kṣipraṃ taṃ vande somasundaram ॥ 11 ॥ 

uttamāṅgañca caraṇaṃ vidhinā viṣṇunā'pi ca । 
na dṛśyate yasya yatnāt taṃ vande somasundaram ॥ 12 ॥

tvayā nīpāraṇyanātha tvadanyān samānāhurdaivatān pāpinaste । 
tadā śambho tvatsamaṃ daivataṃ syād yadā yogo vājino rāsabhasya ॥ 13 ॥

aṇoraṇustvaṃ mahato mahāṃstvaṃ sarvātmabhāvātparipūrṇa ekaḥ ।
tvayaiva śambho mahimā tvadīyo vijñāyate vaktumimaṃ kṣamaḥ kaḥ ॥ 14 ॥

phalaśrutiḥ –
tvayā kṛtamidaṃ stotraṃ paṭhati śraddhayā tu yaḥ ।
dharmādipuruṣārthāṃśca tasmai dāsyāmyahaṃ dhruvam ॥

iti śrī somasundara stutiḥ saṃpūrṇam ॥

Sunday, 16 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 8

Vinaayaka Leelaa Stuti - sloka 8

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


लम्बोदरो देवकुमारसङ्घैः क्रीडन् कुमारं जितवान्निजेन ।
करेण चोत्तोल्य ननर्त रम्यं दन्तावलास्यो भयतः स पायात् ॥ ८॥

லம்போ³த³ரோ தே³வகுமாரஸங்கை⁴: க்ரீட³ன் குமாரம்ʼ ஜிதவான்னிஜேன |
கரேண சோத்தோல்ய நனர்த ரம்யம்ʼ த³ந்தாவலாஸ்யோ ப⁴யத: ஸ பாயாத் || 8||

lambodaro devakumārasaṅghaiḥ krīḍan kumāraṃ jitavānnijena ।
kareṇa cottolya nanarta ramyaṃ dantāvalāsyo bhayataḥ sa pāyāt ॥ 8॥


देव-कुमार-सङ्घैः क्रीडन् - தே³வ-குமார-ஸங்கை⁴: க்ரீட³ன் - தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது,

जितवान् निजेन - ஜிதவான் நிஜேன - விசேஷமாக ஜெயித்த ,

लम्बोदरः - லம்போ³த³ர: - லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ),

कुमारं - குமாரம்ʼ - கந்தனை,

करेण च उत्तोल्य - கரேண ச உத்தோல்ய - கைகளால் தூக்கி ,

ननर्त रम्यं - நனர்த ரம்யம்ʼ - ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற,

दन्तावलास्यः - த³ந்தாவலாஸ்ய: - யானை முகத்தவர் ( விநாயகர் ),

भयतः स पायात् - ப⁴யத: ஸ பாயாத் - பயத்திலிருந்து அவர் காப்பாராக.


பொருள் :
தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது, விசேஷமாக ஜெயித்த லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ), கந்தனை கைகளால் தூக்கி , ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற யானை முகத்தவர் ( விநாயகர் ), பயத்திலிருந்து அவர் காப்பாராக. 8


# கரேண - துதிக்கையால் என்றும் கொள்ளலாம்.

Friday, 14 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 1

Śrī Devyaṣṭakam - Sloka 1


॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


महादेवीं महाशक्तिं भवानीं भववल्लभाम् ।
भवार्तिभञ्जनकरीं वन्दे त्वां लोकमातरम् ॥ १॥

மஹாதே³வீம்ʼ மஹாஶக்திம்ʼ ப⁴வானீம்ʼ ப⁴வவல்லபா⁴ம் ।
ப⁴வார்திப⁴ஞ்ஜனகரீம்ʼ வந்தே³ த்வாம்ʼ லோகமாதரம் ॥ 1॥

mahādevīṃ mahāśaktiṃ bhavānīṃ bhavavallabhām ।
bhavārtibhañjanakarīṃ vande tvāṃ lokamātaram ॥ 1॥


महादेवीं - மஹாதே³வீம்ʼ - மஹாதேவரது மனைவியை, 

महाशक्तिं - மஹாஶக்திம்ʼ - சக்திக்கெல்லாம் சக்தியானவளை, 

भवानीं - ப⁴வானீம்ʼ - பவானியை, 

भव-वल्लभां - ப⁴வ-வல்லபா⁴ம்ʼ - பவரது (சிவபெருமானது) மனைவியை, 

भव-अर्ति-भञ्जनकरीं - ப⁴வ-அர்தி-ப⁴ஞ்ஜனகரீம்ʼ - ஸம்ஸார வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்குகிறவளை, 

लोक-मातरं - லோக-மாதரம்ʼ - அகில உலகத்திற்கும் தாயை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

மஹாதேவரது மனைவியும், சக்திக்கெல்லாம் சக்தியானவளும், பவானியும், பவரது (சிவபெருமானது) மனைவியும், ஸம்ஸார வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்குகிறவளும், அகில உலகத்திற்கும் தாயுமான தங்களை வணங்குகிறேன். 1


Meaning :

Oh, the Great Goddess, the Great power, Bhavaani, the consort of Lord Shiva, the Goddess who shatters distress, I salute Thee, the mother of the world. 1


# மஹாதேவீ - மிகப்பெரியதான சரீரத்தை உடையவள்.

# பவானீ - பவரது (சிவபெருமானது) மனைவி.

# பவானீ, பவவல்லபா, பவார்தி-பஞ்ஜனகரீ - ஸம்ஸார ஸாகரத்தினை ஏற்படுத்தி, பரிபாலித்து, முடித்தும் வைப்பவள்.

# பவ-வல்லபா - மஹாதேவர் மக்களை நன்கு பரிபாலிக்கிறாரா என்று மேற்பார்வை செய்பவள்.

Sunday, 2 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 7

Vinaayaka Leelaa Stuti - sloka 7

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


पितुर्जटाजूटतटे सदैव भागीरथीं तत्र कुतूहलेन ।
विहर्तुकामः स महीध्रपुत्र्या निवारितः पातु सदा गजास्यः ॥ ७॥

பிதுர்ஜடாஜூடதடே ஸதை³வ பா⁴கீ³ரதீ²ம்ʼ தத்ர குதூஹலேன |
விஹர்துகாம: ஸ மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: பாது ஸதா³ க³ஜாஸ்ய: || 7||

piturjaṭājūṭataṭe sadaiva bhāgīrathīṃ tatra kutūhalena ।
vihartukāmaḥ sa mahīdhraputryā nivāritaḥ pātu sadā gajāsyaḥ ॥ 7॥


सदा एव - ஸதா³ ஏவ - எப்பொழுதுமே ,

पितुः-जटाजूट-तटे - பிது:-ஜடாஜூட-தடே - தந்தையினுடைய ( சிவபெருமானுடைய ) விரிந்த ஜடையின் சரிவில் ,

भागीरथीं - பா⁴கீ³ரதீ²ம்ʼ - கங்கையைக்

कुतूहलेन - குதூஹலேன - ( கண்ட ) ஆர்வத்தால் ,

तत्र - தத்ர - அதில் ,

विहर्तुकामः - விஹர்துகாம: - விளையாட விரும்பியபோது,

महीध्रपुत्र्या निवारितः - மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: - மலைமகளால் ( பார்வதியால் )
தடுக்கப்பெற்ற,

सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர்

सदा पातु - ஸதா³ பாது - எப்போதும் காப்பாராக.


பொருள் :

எப்பொழுதுமே தந்தையினுடைய சிவபெருமானுடைய விரிந்த ஜடையின் சரிவில் கங்கையைக் ( கண்ட ) ஆர்வத்தால், அதில் விளையாட விரும்பியபோது, மலைமகளால் ( பார்வதியால் ) தடுக்கப்பெற்ற அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்போதும் காப்பாராக. 7


# சிவபெருமானுடைய ஜடையிலிருந்து கங்கை எப்போதும் பிரவஹிக்கிறது. அப்போது மேலிருந்து கீழாக ஜடையின் சரிவில் இறங்கி அருவி போல் ஓடுகிறது. இதில் சறுக்கி விளையாட நினைத்த விநாயகர், ஈசன் தலையில் ஏற முயன்றபோது பார்வதி தேவி வந்து தடுத்து சமாதானம் செய்து வைத்தாள் என்றவாறு பொருள்படுகிறது. விவரமறியாத குழந்தையின் லீலை.

Friday, 30 April 2021

Devyastakam - Introduction

Devyastakam - Introduction


தேவி பரமேச்வரியைக் குறித்ததான ஸ்தோத்ரம். யோகானந்தரால் இயற்றப்பட்டதென்று அறியமுடிகிறது.


॥ श्री देव्यष्टकम् ॥


महादेवीं महाशक्तिं भवानीं भववल्लभाम् ।
भवार्तिभञ्जनकरीं वन्दे त्वां लोकमातरम् ॥ १॥

भक्तप्रियां भक्तिगम्यां भक्तानां कीर्तिवर्धिकाम् ।
भवप्रियां सतीं देवीं वन्दे त्वां भक्तवत्सलाम् ॥ २॥

अन्नपूर्णां सदापूर्णां पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारूढां वन्दे त्वां परमेश्वरीम् ॥ ३॥

कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥ ४॥

जगत्कर्त्रीं जगद्धात्रीं जगत्संहारकारिणीम् ।
मुनिभिः संस्तुतां भद्रां वन्दे त्वां मोक्षदायिनीम् ॥ ५॥

देवदुःखहरामम्बां सदा देवसहायकाम् ।
मुनिदेवैः सदासेव्यां वन्दे त्वां देवपूजिताम् ॥ ६॥

त्रिनेत्रां शङ्करीं गौरीं भोगमोक्षप्रदां शिवाम् ।
महामायां जगद्बीजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥ ७॥

शरणागतजीवानां सर्वदुःखविनाशिनीम् ।
सुखसम्पत्करां नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥ ८॥

शरणागतजीवानां सर्वदुःखविनाशिनीम् ।
सुखसम्पत्करां नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥ ९॥

देव्यष्टकमिदं पुण्यं योगानन्देन निर्मितम् ।
यः पठेद्भक्तिभावेन लभते स परं सुखम् ॥ १०॥

इति योगानन्दविरचितं श्रीदेव्यष्टकं सम्पूर्णम् ॥



॥ ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ॥


மஹாதே³வீம்ʼ மஹாஶக்திம்ʼ ப⁴வானீம்ʼ ப⁴வவல்லபா⁴ம் ।
ப⁴வார்திப⁴ஞ்ஜனகரீம்ʼ வந்தே³ த்வாம்ʼ லோகமாதரம் ॥ 1॥

ப⁴க்தப்ரியாம்ʼ ப⁴க்திக³ம்யாம்ʼ ப⁴க்தானாம்ʼ கீர்திவர்தி⁴காம் ।
ப⁴வப்ரியாம்ʼ ஸதீம்ʼ தே³வீம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப⁴க்தவத்ஸலாம் ॥ 2॥

அன்னபூர்ணாம்ʼ ஸதா³பூர்ணாம்ʼ பார்வதீம்ʼ பர்வபூஜிதாம் ।
மஹேஶ்வரீம்ʼ வ்ருʼஷாரூடா⁴ம்ʼ வந்தே³ த்வாம்ʼ பரமேஶ்வரீம் ॥ 3॥

காலராத்ரிம்ʼ மஹாராத்ரிம்ʼ மோஹராத்ரிம்ʼ ஜனேஶ்வரீம் ।
ஶிவகாந்தாம்ʼ ஶம்பு⁴ஶக்திம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜனனீமுமாம் ॥ 4॥

ஜக³த்கர்த்ரீம்ʼ ஜக³த்³தா⁴த்ரீம்ʼ ஜக³த்ஸம்ʼஹாரகாரிணீம் ।
முனிபி⁴꞉ ஸம்ʼஸ்துதாம்ʼ ப⁴த்³ராம்ʼ வந்தே³ த்வாம்ʼ மோக்ஷதா³யினீம் ॥ 5॥

தே³வது³꞉க²ஹராமம்பா³ம்ʼ ஸதா³ தே³வஸஹாயகாம் ।
முனிதே³வை꞉ ஸதா³ஸேவ்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ தே³வபூஜிதாம் ॥ 6॥

த்ரிநேத்ராம்ʼ ஶங்கரீம்ʼ கௌ³ரீம்ʼ போ⁴க³மோக்ஷப்ரதா³ம்ʼ ஶிவாம் ।
மஹாமாயாம்ʼ ஜக³த்³பீ³ஜாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜக³தீ³ஶ்வரீம் ॥ 7॥

ஶரணாக³தஜீவானாம்ʼ ஸர்வது³꞉க²விநாஶினீம் ।
ஸுக²ஸம்பத்கராம்ʼ நித்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப்ரக்ருʼதிம்ʼ பராம் ॥ 8॥

ஶரணாக³தஜீவானாம்ʼ ஸர்வது³꞉க²விநாஶினீம் ।
ஸுக²ஸம்பத்கராம்ʼ நித்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப்ரக்ருʼதிம்ʼ பராம் ॥ 9॥

தே³வ்யஷ்டகமித³ம்ʼ புண்யம்ʼ யோகா³னந்தே³ன நிர்மிதம் ।
ய꞉ படே²த்³ப⁴க்திபா⁴வேன லப⁴தே ஸ பரம்ʼ ஸுக²ம் ॥ 10॥

இதி யோகா³னந்த³விரசிதம்ʼ ஶ்ரீதே³வ்யஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ॥



॥ ŚRĪ DEVYAṢṬAKAM ॥


mahādevīṃ mahāśaktiṃ bhavānīṃ bhavavallabhām ।
bhavārtibhañjanakarīṃ vande tvāṃ lokamātaram ॥ 1॥

bhaktapriyāṃ bhaktigamyāṃ bhaktānāṃ kīrtivardhikām ।
bhavapriyāṃ satīṃ devīṃ vande tvāṃ bhaktavatsalām ॥ 2॥

annapūrṇāṃ sadāpūrṇāṃ pārvatīṃ parvapūjitām ।
maheśvarīṃ vṛṣārūḍhāṃ vande tvāṃ parameśvarīm ॥ 3॥

kālarātriṃ mahārātriṃ moharātriṃ janeśvarīm ।
śivakāntāṃ śambhuśaktiṃ vande tvāṃ jananīmumām ॥ 4॥

jagatkartrīṃ jagaddhātrīṃ jagatsaṃhārakāriṇīm ।
munibhiḥ saṃstutāṃ bhadrāṃ vande tvāṃ mokṣadāyinīm ॥ 5॥

devaduḥkhaharāmambāṃ sadā devasahāyakām ।
munidevaiḥ sadāsevyāṃ vande tvāṃ devapūjitām ॥ 6॥

trinetrāṃ śaṅkarīṃ gaurīṃ bhogamokṣapradāṃ śivām ।
mahāmāyāṃ jagadbījāṃ vande tvāṃ jagadīśvarīm ॥ 7॥

śaraṇāgatajīvānāṃ sarvaduḥkhavināśinīm ।
sukhasampatkarāṃ nityāṃ vande tvāṃ prakṛtiṃ parām ॥ 8॥

śaraṇāgatajīvānāṃ sarvaduḥkhavināśinīm ।
sukhasampatkarāṃ nityāṃ vande tvāṃ prakṛtiṃ parām ॥ 9॥

devyaṣṭakamidaṃ puṇyaṃ yogānandena nirmitam ।
yaḥ paṭhedbhaktibhāvena labhate sa paraṃ sukham ॥ 10॥

iti yogānandaviracitaṃ śrīdevyaṣṭakaṃ sampūrṇam ॥

Sunday, 18 April 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 6

Vinaayaka Leelaa Stuti - sloka 6 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


शिवस्य मौलाववलोक्य चन्द्रं स्वशुण्डया मुग्धतया स्वकीयम् । * 
भग्नं विषाणं परिभाव्य चित्ते आकृष्टचन्द्रो गणपोऽवतान्नः ॥ ६॥ 

ஶிவஸ்ய மௌலாவவலோக்ய சந்த்³ரம்ʼ ஸ்வஶுண்ட³யா முக்³த⁴தயா ஸ்வகீயம் | 
ப⁴க்³னம்ʼ விஷாணம்ʼ பரிபா⁴வ்ய சித்தே ஆக்ருʼஷ்டசந்த்³ரோ க³ணபோ(அ)வதான்ன: || 6|| 

śivasya maulāvavalokya candraṃ svaśuṇḍayā mugdhatayā svakīyam । 
bhagnaṃ viṣāṇaṃ paribhāvya citte ākṛṣṭacandro gaṇapo'vatānnaḥ ॥ 6॥ 


शिवस्य मौलौ चन्द्रं अवलोक्य - ஶிவஸ்ய மௌலௌ சந்த்³ரம்ʼ அவலோக்ய - சிவபெருமானுடைய தலையில் பிறைச் சந்திரனைக் கண்டு , 

स्वकीयम् - ஸ்வகீயம் - தன்னுடைய , 

भग्नं विषाणं - ப⁴க்³னம்ʼ விஷாணம்ʼ - உடைந்த தந்தத்தை, 

चित्ते परिभाव्य - சித்தே பரிபா⁴வ்ய - மனதில் சிந்தித்து, 

मुग्धतया - முக்³த⁴தயா - பேதைத்தனமாக , 

स्वशुण्डया - ஸ்வஶுண்ட³யா - துதிக்கையால் , 

आकृष्टचन्द्रः - ஆக்ருʼஷ்டசந்த்³ர: - சந்திரனை இழுத்த, 

गणपः - க³ணப: - கணபதி, 

अवतां नः - அவதாம்ʼ ந: - நம்மைக் காக்கட்டும். 


பொருள் :

சிவபெருமானுடைய தலையில் பிறைச் சந்திரனைக் கண்டு தன்னுடைய உடைந்த தந்தத்தை மனதில் சிந்தித்து, பேதைத்தனமாக தன் துதிக்கையால் சந்திரனை இழுத்த கணபதி நம்மைக் காக்கட்டும். 6 

# இது கள்ளம் கபடமற்ற குழந்தையின் லீலை. * 


பாட பேதம் -- 

स्वशुण्डया > सुशुण्डया ; ஸ்வஶுண்ட³யா > ஸுஶுண்ட³யா.

Shiva Astakam - Sloka 9 (Phalaśruti - Final)

Shiva Astakam - Sloka 9 (Phalaśruti - Final)

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||

स्तवं यः प्रभाते नरः शूलपाणे पठेत् सर्वदा भर्गभावानुरक्तः ।
स पुत्रं धनं धान्यमित्रं कलत्रं विचित्रं समासाद्य मोक्षं प्रयाति ॥ ९॥

॥ इति शिवाष्टकम् ॥


ஸ்தவம்ʼ ய꞉ ப்ரபா⁴தே நர꞉ ஶூலபாணே படே²த் ஸர்வதா³ ப⁴ர்க³பா⁴வானுரக்த꞉ .
ஸ புத்ரம்ʼ த⁴னம்ʼ தா⁴ன்யமித்ரம்ʼ கலத்ரம்ʼ விசித்ரம்ʼ ஸமாஸாத்³ய மோக்ஷம்ʼ ப்ரயாதி .. 9..

.. இதி ஶிவாஷ்டகம் ..


stavaṃ yaḥ prabhāte naraḥ śūlapāṇe paṭhet sarvadā bhargabhāvānuraktaḥ .
sa putraṃ dhanaṃ dhānyamitraṃ kalatraṃ vicitraṃ samāsādya mokṣaṃ prayāti .. 9..

.. iti śivāṣṭakam ..



शूलपाणे - ஶூலபாணே - சூலத்தைக் கையில் ஏந்தியவரே !

सर्वदा भर्ग-भाव-अनुरक्तः - ஸர்வதா³ ப⁴ர்க³-பா⁴வ-அனுரக்த꞉ - எப்பொழுதும் பர்கனிடம் (சிவபெருமானிடம்) பற்றுதலுடைய (பக்திபாவமுடைய)

यः नरः - ய꞉ நர꞉ - எந்த ஒரு நரன்

प्रभाते स्तवं पठेत् - ப்ரபா⁴தே ஸ்தவம்ʼ படே²த் - அதிகாலையில் இந்த ஸ்தவத்தைப் படிக்கின்றானோ

सः - ஸ꞉ - அவன் 

कलत्रं पुत्रं धनं धान्यमित्रं विचित्रं - கலத்ரம்ʼ புத்ரம்ʼ த⁴னம்ʼ தா⁴ன்யமித்ரம்ʼ விசித்ரம்ʼ - மனைவி, மக்கள், தனம், தானியங்கள், நண்பர்கள் என பலவற்றை

समासाद्य - ஸமாஸாத்³ய - அடைந்து பின்

मोक्षं प्रयाति - மோக்ஷம்ʼ ப்ரயாதி - மோக்ஷத்தை அடைவான்.


பொருள் :

சூலத்தைக் கையில் ஏந்தியவரே ! எப்பொழுதும் பர்கனிடம் (சிவபெருமானிடம்) பற்றுதலுடைய (பக்திபாவமுடைய) எந்த ஒரு நரன், அதிகாலையில் இந்த ஸ்தவத்தைப் படிக்கின்றானோ அவன், மனைவி, மக்கள், தனம், தானியங்கள், நண்பர்கள் எனப் பலவற்றை அடைந்து பின் மோக்ஷத்தை அடைவான்.  9

இத்துடன் ஶ்ரீ சிவாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

 
#   ‘பர்க்கன்’ என்பது சிவபிரானின் திருப்பெயர்களின் ஒன்று. (தன்னை வழிபடுவோர்களது) பாவங்களை வறுத்தெடுத்து அழிப்பவர் என்பது பொருள்.


Meaning :

Those who study this prayer every morning with effulgence and emotions for Trident-holding Śiva, achieve Mokṣa, after having attained a dutiful son, wealth, friends, wife, and a colorful life. 9

Thus ends Śri Śivāṣṭakam.

Sunday, 11 April 2021

Shiva Astakam - Sloka 8

Shiva Astakam - Sloka 8

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


हरं सर्पहारं चिता भूविहारं भवं वेदसारं सदा निर्विकारम् ।
श्मशाने वसन्तं मनोजं दहन्तं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ८॥

ஹரம்ʼ ஸர்பஹாரம்ʼ சிதா பூ⁴விஹாரம்ʼ ப⁴வம்ʼ வேத³ஸாரம்ʼ ஸதா³ நிர்விகாரம் .
ஶ்மஶானே வஸந்தம்ʼ மனோஜம்ʼ த³ஹந்தம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 8..

haraṃ sarpahāraṃ citā bhūvihāraṃ bhavaṃ vedasāraṃ sadā nirvikāram .
śmaśāne vasantaṃ manojaṃ dahantaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 8..



हरं - ஹரம்ʼ - இன்னல்களைப் போக்குபவரை (முடித்து வைப்பவர்), 

सर्प-हारं - ஸர்ப-ஹாரம்ʼ - அரவத்தை அணிகலனாக உடையவரை, 

चिता भूविहारं - சிதா பூ⁴விஹாரம்ʼ - சிதையினின்று தோன்றியதான சாம்பலை அணிந்தவரை, 

भवं - ப⁴வம்ʼ - வாழ்க்கைச் சுழலைத் தோற்றுவிப்பவரை,

वेद-सारं - வேத³-ஸாரம்ʼ - மறைகளின் ஸாரமானவரை, 

सदा निर्विकारं - ஸதா³ நிர்விகாரம்ʼ - எப்பொழுதும் மாறுதல் எதுவுமற்றவரை, 

श्मशाने वसन्तं - ஶ்மஶானே வஸந்தம்ʼ - மயானத்தில் வசிப்பவரை, 

मनोजं दहन्तं - மனோஜம்ʼ த³ஹந்தம்ʼ - காமனை எரித்தவரை,

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

இன்னல்களைப் போக்குபவரும் (முடித்து வைப்பவர்), அரவத்தை அணிகலனாக உடையவரும், சிதையினின்று தோன்றியதான சாம்பலை அணிந்தவரும், வாழ்க்கைச் சுழலைத் தோற்றுவிப்பவரும், மறைகளின் ஸாரமானவரும், எப்பொழுதும் மாறுதல் எதுவுமற்றவரும், மயானத்தில் வசிப்பவரும், காமனை எரித்தவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன்.  8


 Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who is known as Hara, Who has a garland of snakes, Who roams around the cremation grounds, Who is the universe, Who is the summary of the Veda (or the One discussed by Veda), Who is always dispassionate, Who is living in the cremation grounds, Who is burning desires born in the mind, and Who is the Lord of everyone.  8

Vinaayaka Leelaa Stuti - sloka 5

Vinaayaka Leelaa Stuti - sloka 5 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


भवाख्यदावानलदह्यमानं भक्तं स्वकीयं परिषिञ्चते यः । 
गण्डस्रुताम्भोभिरनन्यतुल्यं वन्दे गणेशं च तमालनीलम् ॥ ५॥ * 

ப⁴வாக்²யதா³வானலத³ஹ்யமானம்ʼ ப⁴க்தம்ʼ ஸ்வகீயம்ʼ பரிஷிஞ்சதே ய: | 
க³ண்ட³ஸ்ருதாம்போ⁴பி⁴ரனன்யதுல்யம்ʼ வந்தே³ க³ணேஶம்ʼ ச தமாலனீலம் || 5|| 

bhavākhyadāvānaladahyamānaṃ bhaktaṃ svakīyaṃ pariṣiñcate yaḥ । 
gaṇḍasrutāmbhobhirananyatulyaṃ vande gaṇeśaṃ ca tamālanīlam ॥ 5॥ 


यः - ய: - யார், 

भवाख्य-दावानल-दह्यमानं - ப⁴வாக்²ய-தா³வானல-த³ஹ்யமானம்ʼ - ஸம்ஸாரமாகிற தீயில் வாடுகின்ற , 

भक्तं - ப⁴க்தம்ʼ - ( தன் ) பக்தனை, 

स्वकीयं - ஸ்வகீயம்ʼ - தன்னுடைய , 

गण्ड-स्रुत-अम्भोभि - க³ண்ட³-ஸ்ருத-அம்போ⁴பி⁴: - கன்னத்திலிருந்து வழியும் மதநீரால், 

परिषिञ्चते - பரிஷிஞ்சதே - நனைத்துக் குளிர வைக்கிறாரோ, 

अनन्यतुल्यं - அனன்யதுல்யம்ʼ - ( இவ்வாறு பக்தரைக் காப்பதில் ) நிகரற்றவரை, 

तमालनीलं च - தமாலனீலம்ʼ ச - பச்சிலை போல் பசுமை நிறத்தவருமாகிய, 

गणेशं - க³ணேஶம்ʼ - ( அந்த ) கணேசரை, 

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன். 


பொருள் : 

யார் ஸம்ஸாரமாகிற தீயில் வாடுகின்ற, ( தன் ) பக்தனை, தன்னுடைய கன்னத்திலிருந்து வழியும் மதநீரால் நனைத்துக் குளிர வைக்கிறாரோ, ( இவ்வாறு பக்தரைக் காப்பதில் ) நிகரற்றவரை, பச்சிலை போல் பசுமை நிறத்தவருமாகிய, ( அந்த ) கணேசரை வணங்குகிறேன். 5 


# பிறப்பு , இறப்பு , மேலும் வாழ்நாளில் பலவிதமான கஷ்டங்களில் உழல்வதாகிய சூழலே பவம் - ஸம்ஸாரம் எனப்படுகிறது . தீயாலும் அதனால் உண்டான வெப்பத்தாலும் தஹித்துக் கொண்டிருக்கின்ற ஒருவன் , இக்கணமே இதிலிருந்து தப்பிவிட மாட்டோமா.. என்று துடிப்பவன் மேல் தண்ணீர் தெளித்து நன்றாகத் தீ அணைக்கப்பட்டால் அவன் எத்தகைய நிம்மதி அடைவானோ, அது போல் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட நினைக்கும் ஜீவனுக்கு தன் மதநீராகிய அமுதத்தை அதாவது ஞானத்தைத் தந்து நிம்மதி அடையச் செய்வதில் நிகரற்றவர் என்று கொள்ளலாம். * 

பாட பேதம் -- 
तमालनीलम् > तमोऽरिनेत्रम् , தமாலனீலம் > தமோ(அ)ரினேத்ரம்.

Sunday, 4 April 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 4

Vinaayaka Leelaa Stuti - sloka 4 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


वेदान्तवेद्यं जगतामधीशं देवादिवन्द्यं सुकृतैकगम्यम् । 
स्तम्बेरमास्यं नवचन्द्रचूडं विनायकं तं शरणं प्रपद्ये ॥ ४॥ * 

வேதா³ந்தவேத்³யம்ʼ ஜக³தாமதீ⁴ஶம்ʼ தே³வாதி³வந்த்³யம்ʼ ஸுக்ருʼதைகக³ம்யம் | ஸ்தம்பே³ரமாஸ்யம்ʼ நவசந்த்³ரசூட³ம்ʼ வினாயகம்ʼ தம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே || 4|| 

vedāntavedyaṃ jagatāmadhīśaṃ devādivandyaṃ sukṛtaikagamyam । stamberamāsyaṃ navacandracūḍaṃ vināyakaṃ taṃ śaraṇaṃ prapadye ॥ 4॥ 


वेद-अन्त-वेद्यं - வேத³-அந்த-வேத்³யம்ʼ - வேதாந்தத்தால் ( உபநிஷத்தால் ) அறியப்படுபவரை, 

जगतां-अधीशं - ஜக³தாம்ʼ-அதீ⁴ஶம்ʼ - உலகையும் நடத்துபவரை, 

देव-आदि-वन्द्यं - தே³வ-ஆதி³-வந்த்³யம்ʼ - தேவர் முதலானோரால் வணங்கப்படுபவரை, 

सुकृत-एक-गम्यम् - ஸுக்ருʼத-ஏக-க³ம்யம் - புண்யத்தால் மட்டும் உணரத்தக்கவரை, 

स्तम्बेरम-आस्यं - ஸ்தம்பே³ரம-ஆஸ்யம்ʼ - யானை முகத்தவரை, 

नव-चन्द्र-चूडं - நவ-சந்த்³ர-சூட³ம்ʼ - புதிய சந்த்ரனைச் சிரசில் அணிந்தவரை, 

तं विनायकं - தம்ʼ வினாயகம்ʼ - அந்த விநாயகரை, 

शरणं प्रपद्ये - ஶரணம்ʼ ப்ரபத்³யே - சரணடைகிறேன். 


பொருள் :

 வேதாந்தத்தால் ( உபநிஷத்தால் ) அறியப்படுபவரை ( ப்ரம்மம் ), ( மாய ) உலகையும் நடத்துபவரை, தேவர் முதலானோரால் வணங்கப்படுபவரை, புண்யத்தால் மட்டும் உணரத்தக்கவரை, யானை முகத்தவரை, புதிய சந்த்ரனைச் சிரசில் அணிந்தவரை, தனக்கு மேல் நாயகனற்ற அந்த ( நாயகரை ) விநாயகரைச் சரணடைகிறேன். 4 


# முதல் பதம் 'வேதா³ந்தவேத்³யம்ʼ ' என்று சொல்லி ப்ரஹ்மம் என்று கூறி விட்டுவிடாமல், அடுத்த பதம் ' ஜக³தாம்ʼ-அதீ⁴ஶம்ʼ ' என்று கூறி தோற்றப்பிழை என்று கருதப்படும் இந்த உலகத்தையும் நடத்துபவர் என்பதையும் விளக்குகிறது. ( ப்³ரஹ்ம ஸத்யம்ʼ ஜக³ன்மித்²யா ). 

# தே³வாதி³ - வந்த்³யம்ʼ - தேவர் முதலிய கந்தவர், கின்னரர், மனிதர், பிராம்மணர், எழுத்தாளர் , அந்தக் கடைக்காரர், இந்தக் கடைக்காரர், நீங்கள் , நாங்கள் என்று பட்டியல் நீளும்.... தே³வ- ஆதி³ வந்த்³யம்ʼ - தேவர்களாலும் எடுத்த எடுப்பில் முதலில் வணங்கப்படுபவர். 

# ஸுக்ருʼத-ஏக-க³ம்யம் - ஒரே ஒரு நற்செயல் செய்துவிட்டாலும் அதனால் அடையப்பட்டக் கூடியவர் என்றும் கொள்ளலாம். ஸுக்ருʼத - நற்செயல் / புண்யம், ஏக - ஒன்று / அதனால் மட்டும் , க³ம்யம் - சென்றடையத் தக்கவர் ( உணரத்தக்கவர் ). 


# நவ-சந்த்³ர: - புதிய சந்திரன் - விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து , சாபம் அடைந்து , பின் தவம் செய்து , அவர் அனுகிரகத்தால் சாபம் தீர்ந்து, இந்நிலையில் இப்பொழுது பணிவுடன் ஒளிவீசும் புதிய சந்திரன். 

* பாட பேதம் -- नव > ननु , நவ > நநு.

Wednesday, 31 March 2021

Shiva Astakam - Sloka 7

Shiva Astakam - Sloka 7


॥ श्री शिवाष्टकम् ॥


|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||


|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


शरच्चन्द्रगात्रं गुणानन्द पात्रं त्रिनेत्रं पवित्रं धनेशस्य मित्रम् ।
अपर्णाकलत्रं चरित्रं विचित्रं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ७॥

ஶரச்சந்த்³ரகா³த்ரம்ʼ கு³ணானந்த³ பாத்ரம்ʼ த்ரிநேத்ரம்ʼ பவித்ரம்ʼ த⁴னேஶஸ்ய மித்ரம் .
அபர்ணாகலத்ரம்ʼ சரித்ரம்ʼ விசித்ரம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 7..

śaraccandragātraṃ guṇānanda pātraṃ trinetraṃ pavitraṃ dhaneśasya mitram .
aparṇākalatraṃ caritraṃ vicitraṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 7..



शरद्-चन्द्र-गात्रं - ஶரத்³-சந்த்³ர-கா³த்ரம்ʼ - சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரை, 

गुण-आनन्द पात्रं - கு³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரை, 

त्रि-नेत्रं - த்ரி-நேத்ரம்ʼ - முக்கண்ணரை, 

पवित्रं - பவித்ரம்ʼ - புனிதமானவரை, 

धन-ईशस्य मित्रं - த⁴ன-ஈஶஸ்ய மித்ரம்ʼ - செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரை, 

अपर्णा-कलत्रं - அபர்ணா-கலத்ரம்ʼ - அபர்ணையை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரை, 

चरित्रं विचित्रं - சரித்ரம்ʼ விசித்ரம்ʼ - வினோதமான நடத்தை (லீலை) உடையவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரும், குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரும், முக்கண்ணரும், புனிதமானவரும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரும், அபர்ணா தேவியை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரும், வினோதமான நடத்தை (லீலை) உடையவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 7
 

Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who has a face like the Winter-moon, Who is the subject of happiness of Gaṇa (tormentor groups), Who has three eyes, Who is pure, Who is the friend of Kubera (controller of wealth), Who is the consort of Aparṇā (Pārvatī), Who has eternal characteristics, and Who is the Lord of everyone. 7


# சரத்ருது என்பது ஐப்பசி, கார்த்திகை என்ற இரண்டு மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கும். இதனை இலையுதிர் காலம் எனவும் கூறுவர்.

# வெம்மை தாளாமல் பகலில் தவிக்கும் ஜீவன்களுக்கு, இரவின் சந்திர ஒளி குளிர்மை தருவது போல , ஸம்ஸார துக்கங்களால் தபித்த ஜீவன்களுக்கு இதமளிக்கும் திவ்யமங்கள விக்ரஹம்.

# சரத்ருதுவில் இலையுதிர் காலத்தில் இலைகள் தானே உதிர்வது போல, பரமேச்வரரது திவ்யமங்கள ரூப தர்ஷனம் ஏற்பட்டதும், பலவித எண்ணங்களால் அலைகளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற மனம், தானே (சிரமமின்றி) அவைகளை விட்டு பகவானிடத்தில் ஆழ்கிறது.

# சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என மூன்று கண்கள்.

 # ‘அபர்ணை’ என்பது மலைமகளின் ஒரு பெயர். சிவனாரை அடையத் தவமியற்றியபொழுது தானாகக் கிடைத்த காய், கனி, சருகுகளைக் கொண்டு உயிர்வாழ்ந்த மலைமகள் பின்னர் அதையும் துறந்தமையால் ‘அபர்ணை’ என்றழைக்கப்பட்டாள். ‘பர்ணம்’ என்றால் இலை ‘அபர்ணம்’ என்றால் அதுவுமற்ற என்று பொருள்.

# இன்னது நடக்கும் என்று கணிக்க இயலாத விநோதமான சரித்திரங்களை நிகழ்த்துபவர்.



பாடபேதம் -

गण-आनन्द पात्रं - க³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - கணங்களுக்கு (தன்னை பின்பற்றுபவர்க்கு) ஆனந்தத்தையே அளிக்கும் இயல்பினர்.

सदा सच्चरित्रं - ஸதா சச்சரித்ரம்ʼ - எப்போதும் தர்மத்தினின்றும் வழுவாதவர்.