Wednesday, 31 March 2021

Shiva Astakam - Sloka 7

Shiva Astakam - Sloka 7


॥ श्री शिवाष्टकम् ॥


|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||


|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


शरच्चन्द्रगात्रं गुणानन्द पात्रं त्रिनेत्रं पवित्रं धनेशस्य मित्रम् ।
अपर्णाकलत्रं चरित्रं विचित्रं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ७॥

ஶரச்சந்த்³ரகா³த்ரம்ʼ கு³ணானந்த³ பாத்ரம்ʼ த்ரிநேத்ரம்ʼ பவித்ரம்ʼ த⁴னேஶஸ்ய மித்ரம் .
அபர்ணாகலத்ரம்ʼ சரித்ரம்ʼ விசித்ரம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 7..

śaraccandragātraṃ guṇānanda pātraṃ trinetraṃ pavitraṃ dhaneśasya mitram .
aparṇākalatraṃ caritraṃ vicitraṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 7..



शरद्-चन्द्र-गात्रं - ஶரத்³-சந்த்³ர-கா³த்ரம்ʼ - சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரை, 

गुण-आनन्द पात्रं - கு³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரை, 

त्रि-नेत्रं - த்ரி-நேத்ரம்ʼ - முக்கண்ணரை, 

पवित्रं - பவித்ரம்ʼ - புனிதமானவரை, 

धन-ईशस्य मित्रं - த⁴ன-ஈஶஸ்ய மித்ரம்ʼ - செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரை, 

अपर्णा-कलत्रं - அபர்ணா-கலத்ரம்ʼ - அபர்ணையை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரை, 

चरित्रं विचित्रं - சரித்ரம்ʼ விசித்ரம்ʼ - வினோதமான நடத்தை (லீலை) உடையவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரும், குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரும், முக்கண்ணரும், புனிதமானவரும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரும், அபர்ணா தேவியை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரும், வினோதமான நடத்தை (லீலை) உடையவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 7
 

Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who has a face like the Winter-moon, Who is the subject of happiness of Gaṇa (tormentor groups), Who has three eyes, Who is pure, Who is the friend of Kubera (controller of wealth), Who is the consort of Aparṇā (Pārvatī), Who has eternal characteristics, and Who is the Lord of everyone. 7


# சரத்ருது என்பது ஐப்பசி, கார்த்திகை என்ற இரண்டு மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கும். இதனை இலையுதிர் காலம் எனவும் கூறுவர்.

# வெம்மை தாளாமல் பகலில் தவிக்கும் ஜீவன்களுக்கு, இரவின் சந்திர ஒளி குளிர்மை தருவது போல , ஸம்ஸார துக்கங்களால் தபித்த ஜீவன்களுக்கு இதமளிக்கும் திவ்யமங்கள விக்ரஹம்.

# சரத்ருதுவில் இலையுதிர் காலத்தில் இலைகள் தானே உதிர்வது போல, பரமேச்வரரது திவ்யமங்கள ரூப தர்ஷனம் ஏற்பட்டதும், பலவித எண்ணங்களால் அலைகளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற மனம், தானே (சிரமமின்றி) அவைகளை விட்டு பகவானிடத்தில் ஆழ்கிறது.

# சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என மூன்று கண்கள்.

 # ‘அபர்ணை’ என்பது மலைமகளின் ஒரு பெயர். சிவனாரை அடையத் தவமியற்றியபொழுது தானாகக் கிடைத்த காய், கனி, சருகுகளைக் கொண்டு உயிர்வாழ்ந்த மலைமகள் பின்னர் அதையும் துறந்தமையால் ‘அபர்ணை’ என்றழைக்கப்பட்டாள். ‘பர்ணம்’ என்றால் இலை ‘அபர்ணம்’ என்றால் அதுவுமற்ற என்று பொருள்.

# இன்னது நடக்கும் என்று கணிக்க இயலாத விநோதமான சரித்திரங்களை நிகழ்த்துபவர்.



பாடபேதம் -

गण-आनन्द पात्रं - க³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - கணங்களுக்கு (தன்னை பின்பற்றுபவர்க்கு) ஆனந்தத்தையே அளிக்கும் இயல்பினர்.

सदा सच्चरित्रं - ஸதா சச்சரித்ரம்ʼ - எப்போதும் தர்மத்தினின்றும் வழுவாதவர்.

Sunday, 28 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 3


Vinaayaka Leelaa Stuti - sloka 3 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


षडक्षरात्मानमनल्पभूषं मुनीश्वरैर्भार्गवपूर्वकैश्च । 
संसेवितं देवमनाथकल्पं रूपं मनोज्ञं शरणं प्रपद्ये ॥ ३॥ 

ஷட³க்ஷராத்மாநமநல்பபூ⁴ஷம் முநீஶ்வரைர்பா⁴ர்க³வபூர்வகைஶ்ச । 
ஸம்ஸேவிதம் தே³வமநாத²கல்பம் ரூபம் மநோஜ்ஞம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 3॥ 

ṣaḍakṣarātmānamanalpabhūṣaṃ munīśvarairbhārgavapūrvakaiśca । 
saṃsevitaṃ devamanāthakalpaṃ rūpaṃ manojñaṃ śaraṇaṃ prapadye ॥ 3॥ 


षड्-अक्षर-आत्मानं - ஷட்³-அக்ஷர-ஆத்மானம்ʼ - ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, 

अनल्प-भूषं - அனல்ப-பூ⁴ஷம்ʼ - எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, 

मुनीश्वरैः भार्गव-पूर्वकैः च संसेवितं - முனீஶ்வரை: பா⁴ர்க³வ-பூர்வகை: ச ஸம்ʼஸேவிதம்ʼ - பார்கவருக்கு மூதாதையான ( பிருகு முதலான ) மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, 

अनाथ-कल्पं देवं - அனாத²-கல்பம்ʼ தே³வம்ʼ - அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, 

मनोज्ञं रूपं - மனோஜ்ஞம்ʼ ரூபம்ʼ - மனதிற்கினிய ரூபம் உடையவரை, 

शरणं प्रपद्ये - ஶரணம்ʼ ப்ரபத்³யே - சரணடைகிறேன். 


பொருள் : 

ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, பிருகு ( பார்கவருக்கு மூதாதையான ) முதலான மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, மனதிற்கினிய ரூபம் உடையவரை ( விநாயகரை ) சரணடைகிறேன். 3 

# ஷடக்ஷரம் - வக்ரதுண்ட மந்த்ரம் என்று குறிப்பு. 

# பார்கவர் - சுக்ராச்சார்ய மஹர்ஷி.

Wednesday, 17 March 2021

Shiva Astakam - Sloka 6

Shiva Astakam - Sloka 6

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


कपालं त्रिशूलं कराभ्यां दधानं पदाम्भोजनम्राय कामं ददानम् ।
बलीवर्दयानं सुराणां प्रधानं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ६॥

கபாலம்ʼ த்ரிஶூலம்ʼ கராப்⁴யாம்ʼ த³தா⁴னம்ʼ பதா³ம்போ⁴ஜனம்ராய காமம்ʼ த³தா³னம் .
ப³லீவர்த³யானம்ʼ ஸுராணாம்ʼ ப்ரதா⁴னம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 6..

kapālaṃ triśūlaṃ karābhyāṃ dadhānaṃ padāmbhojanamrāya kāmaṃ dadānam .
balīvardayānaṃ surāṇāṃ pradhānaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 6..



कपालं त्रिशूलं कराभ्यां दधानं - கபாலம்ʼ த்ரிஶூலம்ʼ கராப்⁴யாம்ʼ த³தா⁴னம்ʼ - மண்டை ஓட்டையும், திரிசூலத்தையும் தனது கைகளில் தாங்குபவரை, 

पद-अम्भोज-नम्राय कामं ददानं - பத³-அம்போ⁴ஜ-நம்ராய காமம்ʼ த³தா³னம்ʼ - திருவடித் தாமரைகளை வணங்குபவருக்கு விரும்பியதைக் கொடுப்பவரை, 

बलीवर्द-यानं - ப³லீவர்த³-யானம்ʼ - காளையை வாகனமாக உடையவரை, 

सुराणां प्रधानं - ஸுராணாம்ʼ ப்ரதா⁴னம்ʼ - தேவர்களில் முதன்மையானவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

மண்டை ஓட்டையும், திரிசூலத்தையும் தனது கைகளில் தாங்குபவரும், திருவடித் தாமரைகளை வணங்குபவருக்கு விரும்பியதைக் கொடுப்பவரும், காளையை வாகனமாக உடையவரும், தேவர்களில் முதன்மையானவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 6


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who holds a skull and a trident in the hands, Who endows the desires of those who are humble to His lotus-feet, Who uses an Ox as a vehicle², Who is supreme and above various demi-gods, and Who is the Lord of everyone. 6

Sunday, 14 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 2

Vinaayaka Leelaa Stuti - sloka 2

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

|| VINĀYAKA LĪLĀ STUTIḤ ||


केयूरिणं हारकिरीटजुष्टं चतुर्भुजं पाशवराभयानि।
सृणिं वहन्तं गणपं त्रिनेत्रं सचामरस्त्रीयुगलेन युक्तम्॥२॥ *

கேயூரிணம்ʼ ஹாரகிரீடஜுஷ்டம்ʼ சதுர்பு⁴ஜம்ʼ பாஶவராப⁴யானி|
ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ க³ணபம்ʼ த்ரினேத்ரம்ʼ ஸசாமரஸ்த்ரீயுக³லேன யுக்தம்|| 2||

keyūriṇaṃ hārakirīṭajuṣṭaṃ caturbhujaṃ pāśavarābhayāni।
sṛṇiṃ vahantaṃ gaṇapaṃ trinetraṃ sacāmarastrīyugalena yuktam॥2॥


केयूरिणं हार-किरीट-जुष्टं - கேயூரிணம்ʼ ஹார-கிரீட-ஜுஷ்டம்ʼ - தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும்,

चतुर्भुजं - சதுர்பு⁴ஜம்ʼ - நான்கு கைகளை உடையவரும்,

पाश-वर-अभयानि सृणिं वहन्तं - பாஶ-வர-அப⁴யானி ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ - (அவைகளில்) பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும்,

त्रिनेत्रं - த்ரிநேத்ரம் - மூன்று கண்களை உடையவரும்,

सचामर-स्त्री-युगलेन युक्तम् - ஸசாமர-ஸ்த்ரீ-யுக³லேன யுக்தம் - இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவரும் ( ஆகிய )

गणपं - க³ணபம்ʼ - கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை )

{ नमामि - நமாமி - வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் )
அல்லது

शरणं प्रपद्ये - ஶரணம் ப்ரபத்³யே - சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). }


பொருள் :

தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும், நான்கு கைகளை உடையவரும், அவைகளில் பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும், இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவருமாகிய கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை ) வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் ) அல்லது சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). 2


* பாட பேதம் -- 
वहन्तं > च हस्तं , வஹந்தம்ʼ > ச ஹஸ்தம்ʼ

Monday, 8 March 2021

Shiva Astakam - Sloka 5

Shiva Astakam - Sloka 5

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


गिरीन्द्रात्मजासङ्गृहीतार्धदेहं गिरौ संस्थितं सर्वदासन्नगेहम् ।
परब्रह्मब्रह्मादिभिर्वन्द्यमानं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ५॥

கி³ரீந்த்³ராத்மஜாஸங்க்³ருʼஹீதார்த⁴தே³ஹம்ʼ கி³ரௌ ஸம்ʼஸ்தி²தம்ʼ ஸர்வதா³ஸன்னகே³ஹம் ।
பரப்³ரஹ்மப்³ரஹ்மாதி³பி⁴ர்வந்த்³யமானம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ ॥ 5॥

girīndrātmajāsaṅgṛhītārdhadehaṃ girau saṃsthitaṃ sarvadāsannageham .
parabrahmabrahmādibhirvandyamānaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 5..



गिरि-इन्द्र-आत्मजा-संगृहीत-अर्ध-देहं - கி³ரி-இந்த்³ர-ஆத்மஜா-ஸங்க்³ருʼஹீத-அர்த⁴-தே³ஹம்ʼ - மலையரசனின் மகளுக்குத் (பார்வதி தேவி) தன்னில் பாதியைத் தந்தவரை, 

गिरौ संस्थितं - கி³ரௌ ஸம்ʼஸ்தி²தம்ʼ - மலையில் உறைபவரை, 

सर्वदा-आसन्न-गेहं - ஸர்வதா³-ஆஸன்ன-கே³ஹம்ʼ - எப்பொழுதும் மயானத்தில் இருப்பவரை, 

परब्रह्म - பரப்³ரஹ்ம - பரப்ரம்ம வடிவினரே ! (என்றவாறு), 

ब्रह्मा-आदिभिः वन्द्यमानं - ப்³ரஹ்மா-ஆதி³பி⁴꞉ வந்த்³யமானம்ʼ - நான்முகன் முதலானவர்களால் வணங்கப் பெறுகிறவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

மலையரசனின் மகளுக்குத் (பார்வதி தேவி) தன்னில் பாதியைத் தந்தவரும், மலையில் உறைபவரும், எப்பொழுதும் மயானத்தில் இருப்பவரும், பரப்ரம்ம வடிவினரே ! (என்றவாறு) நான்முகன் முதலானவர்களால் வணங்கப் பெறுகிறவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 5


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who shares half of His body with the daughter of Himālaya¹, Who is situated in a mountain (Kailāsa), Who is always a resort for the depressed, Who is the Ātman, Who is reverred by (or Who is worthy of reverence by) Brahma and others, and Who is the Lord of everyone. 5


#   ‘ஸர்வதாஸன்ன கேஹம்’ என்னும் சொற்றொடரில் ஆஸன்ன என்னும் சொல் சாகப்போகிறவனைக் குறிக்கிறது; கேஹம் என்றால் வீடு என்று பொருள் ஆகையால் மயானத்தில் இருப்பவர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
 

பாட பேதம் -

संग्रहीतार्धदेहं - ஸங்க்³ரஹீதார்த⁴தே³ஹம்ʼ .

Sunday, 7 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 1

Vinaayaka Leelaa Stuti - sloka 1

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

|| VINĀYAKA LĪLĀ STUTIḤ ||

नमामि देवं सकलार्थदं तं सुवर्णवर्णं भुजगोपवीतम्।
गजाननं भास्करमेकदन्तं लम्बोदरं वारिभवासनं च ॥१॥

நமாமி தே³வம்ʼ ஸகலார்த²த³ம்ʼ தம்ʼ ஸுவர்ணவர்ணம்ʼ பு⁴ஜகோ³பவீதம்|
க³ஜானனம்ʼ பா⁴ஸ்கரமேகத³ந்தம்ʼ லம்போ³த³ரம்ʼ வாரிப⁴வாஸனம்ʼ ச || 1||

namāmi devaṃ sakalārthadaṃ taṃ suvarṇavarṇaṃ bhujagopavītam।
gajānanaṃ bhāskaramekadantaṃ lambodaraṃ vāribhavāsanaṃ ca ॥1॥


सकल-अर्थ-दं - ஸகல-அர்த²-த³ம்ʼ - விரும்பியதனைத்தையும் தருபவரை ,

सुवर्ण-वर्णं - ஸுவர்ண-வர்ணம்ʼ - தங்கநிறம் கொண்டவரை ,

भुजग-उपवीतं - பு⁴ஜக³-உபவீதம்ʼ - பாம்பைப் பூணூலாக்கியவரை ,

गज-आननं - க³ஜ-ஆனனம்ʼ - யானை முகத்தவரை ,

भास्करं - பா⁴ஸ்கரம்ʼ - பேரொளியினரை ,

एक-दन्तं - ஏக-த³ந்தம்ʼ - ஒற்றைத் தந்தம் உடையவரை ,

लम्ब-उदरं - லம்ப³-உத³ரம்ʼ - சரிந்த வயிறுடையவரை ,

वारिभव-आसनं च - வாரிப⁴வ-ஆஸனம்ʼ ச - தாமரை மீதமர்ந்தவருமாகிய

तं देवं - தம்ʼ தே³வம்ʼ - அந்த தேவரை

नमामि - நமாமி - வணங்குகிறேன்.


பொருள் :
விரும்பியதனைத்தையும் தருபவரையும் , தங்கநிறம் கொண்டவரையும் , பாம்பைப் பூணூலாக்கியவரையும் , யானை முகத்தவரையும் , பேரொளியினரையும் , ஒற்றைத் தந்தம் உடையவரையும் , சரிந்த வயிறுடையவரையும் , தாமரை மீதமர்ந்தவருமாகிய அந்த தேவரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 1

Monday, 1 March 2021

Shiva Astakam - Sloka 4

Shiva Astakam - Sloka 4

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


वटाधोनिवासं महाट्टाट्टहासं महापापनाशं सदासुप्रकाशम् ।
गिरीशं गणेशं महेशं सुरेशं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ४॥

வடாதோ⁴நிவாஸம்ʼ மஹாட்டாட்டஹாஸம்ʼ மஹாபாபநாஶம்ʼ ஸதா³ஸுப்ரகாஶம் .
கி³ரீஶம்ʼ க³ணேஶம்ʼ மஹேஶம்ʼ ஸுரேஶம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 4..

vaṭādhonivāsaṃ mahāṭṭāṭṭahāsaṃ mahāpāpanāśaṃ sadāsuprakāśam .
girīśaṃ gaṇeśaṃ maheśaṃ sureśaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 4..


वट-अधो-निवासं - வட-அதோ⁴-நிவாஸம்ʼ - ஆலமரத்தினடியில் வசிப்பவரை, 

महा-अट्ट-अट्टहासं - மஹா-அட்ட-அட்டஹாஸம்ʼ - மிகவும் அச்சுறுத்தும் சிரிப்பை (அட்டஹாஸம்) உடையவரை, 

महापाप-नाशं - மஹாபாப-நாஶம்ʼ - பெரும் பாவங்களை அழிப்பவரை, 

सदा-सुप्रकाशं - ஸதா³-ஸுப்ரகாஶம்ʼ - எப்பொழுதும் நன்கு ஒளிர்பவரை, 

गिरीशं - கி³ரீஶம்ʼ - மலைகளுக்கரசரை, 

गणेशं - க³ணேஶம்ʼ - கணங்களுக்குத் தலைவரை, 

सुरेशं - ஸுரேஶம்ʼ - தேவர்களுக்கு அதிபரை, 

महेशं - மஹேஶம்ʼ - அகில உலகங்களையும் வழிநடத்தும் பெருஞ்தலைவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

ஆலமரத்தினடியில் வசிப்பவரும், மிகவும் அச்சுறுத்தும் சிரிப்பை (அட்டஹாஸம்) உடையவரும், பெரும் பாவங்களை அழிப்பவரும், எப்பொழுதும் நன்கு ஒளிர்பவரும், மலைகளுக்கரசரும், கணங்களுக்குத் தலைவரும், தேவர்களுக்கு அதிபரும், அகில உலகங்களையும் வழிநடத்தும் பெருஞ்தலைவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரைத் (சிவபிரானை) துதிக்கின்றேன். 4


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who resides below a Vaṭa (Banyan) tree, Who possesses an immense laughter, Who destroys the greatest sins, Who is always resplendent, Who is the Lord of Himālaya, various tormentor-groups (Gaṇa) and the demi-gods, Who is the great Lord, and Who is the Lord of everyone. 4

பாடபேதம் -

तट-अधो-निवासं -  
தட-அதோ⁴-நிவாஸம்ʼ - ‘தடம்’ என்னும் சொல்லிற்கு மலைச் சரிவு, ஆகாயம், கரை முதலிய பொருள்கள் உண்டு. சிவனார் கைலாயத்தில் வசிப்பவராதலாலும் கைலாசம் வானளாவி நிற்பதாலும் வானத்தின் முகட்டில் கைலையில் வசிப்பவர் என்று கொள்ளலாம்.