Saturday, 30 January 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 5

Sri Rama Sloka Pancharatnam - Sloka 5

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


नमो नमस्तेऽखिलपूजिताय नमो नमश्चन्द्रनिभाननाय ।
नमो नमस्ते रघुवंशजाय नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ५॥

நமோ நமஸ்தே(அ)கி²லபூஜிதாய நமோ நமஶ்சந்த்³ரனிபா⁴னனாய .
நமோ நமஸ்தே ரகு⁴வம்ʼஶஜாய நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 5..

namo namaste'khilapūjitāya namo namaścandranibhānanāya .
namo namaste raghuvaṃśajāya namo'stu rāmāya salakṣmaṇāya .. 5..



नमो नमस्ते अखिल-पूजिताय - நமோ நமஸ்தே அகி²ல-பூஜிதாய - எல்லோராலும் பூஜிக்கப்பெறுகிறவருக்கு வந்தனம் வந்தனம்;  

नमो नमः चन्द्र-निभ-आननाय - நமோ நம꞉ 
சந்த்³ர-நிப⁴-ஆனனாய - சந்திரனைப் போன்ற முகமுடையவருக்கு வந்தனம் வந்தனம்; 

नमो नमस्ते रघुवंशजाय - நமோ நமஸ்தே ரகு⁴வம்ʼஶஜாய - ரகுவம்சத்தில் தோன்றியவருக்கு வந்தனம் வந்தனம்;

सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,

नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.


பொருள் :

எல்லோராலும் பூஜிக்கப்பெறுகிறவருக்கு வந்தனம் வந்தனம்; சந்திரனைப் போன்ற முகமுடையவருக்கு வந்தனம் வந்தனம்; ரகுவம்சத்தில் தோன்றியவருக்கு வந்தனம் வந்தனம்; லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம்.  5


Meaning :

Salutations to the one who is worshipped by all, salutations to the one who has a face like the moon, salutations to the one who is the descendant of raghuvamsha, salutations to Lord Rama who is along with Lakshmana. 5


பாடபேதம் - 
नमो नमः च इन्दु-निभ-आननाय - நமோ நம꞉ ச இந்து³-நிப⁴-ஆனனாய - சந்திரனைப் போன்ற முகமுடையவருக்கு வந்தனம் வந்தனம்.

Monday, 25 January 2021

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 3

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 3

॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥


वलारिप्रमुखैर्वन्द्य वल्लीन्द्राणीसुतापते ।
वरदाश्रितलोकानां देहि मे विपुलां श्रियम् ॥ ५॥

வலாரிப்ரமுகை²ர்வந்த்³ய வல்லீந்த்³ராணீஸுதாபதே ।
வரதா³ஶ்ரிதலோகாநாம் தே³ஹி மே விபுலாம் ஶ்ரியம் ॥ 5॥

valāripramukhairvandya vallīndrāṇīsutāpate ।
varadāśritalokānāṃ dehi me vipulāṃ śriyam ॥ 5॥


பொருள் :
இந்திரன் முதலிய தேவர்களால் நமஸ்கரிக்கத் தகுந்தவரும், வள்ளி தேவஸேனை இவர்களுடைய பதியும், தன்னை அண்டியவர்களுக்கு வரங்களை அளிப்பவருமான ஹே முருகா ! எனக்கு அளவற்ற ஐச்வர்யத்தை அளிக்க வேண்டும். 5


Meaning : 
Hey Muruga! You, who is entitled to be revered by Indradi devas, the consort of Valli & Devasena, accord boons to His dependants, endow me with immeasurable prosperity. 5

Saturday, 23 January 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 4

Sri Rama Sloka Pancharatnam - Sloka 4

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


पीताम्बरालङ्कृतमध्यकाय पितामहेन्द्रामरवन्दिताय ।
पित्रे स्वभक्तस्य जनस्य मात्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ४॥

பீதாம்ப³ராலங்க்ருʼதமத்⁴யகாய பிதாமஹேந்த்³ராமரவந்தி³தாய .
பித்ரே ஸ்வப⁴க்தஸ்ய ஜனஸ்ய மாத்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 4..

pītāmbarālaṅkṛtamadhyakāya pitāmahendrāmaravanditāya .
pitre svabhaktasya janasya mātre namo'stu rāmāya salakṣmaṇāya .. 4..


पीत-अम्बर-अलङ्कृत-मध्यकाय - பீத-அம்ப³ர-அலங்க்ருʼத-மத்⁴யகாய - பீதாம்பரத்தை (மஞ்சள் பட்டாடை) இடுப்பில் அணிந்தவரை, 

पितामह-इन्द्र-अमर वन्दिताय - பிதாமஹ-இந்த்³ர-அமர வந்தி³தாய - பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் வணங்கப் பெற்றவரை, 

स्वभक्तस्य जनस्य पित्रे मात्रे - ஸ்வப⁴க்தஸ்ய ஜனஸ்ய பித்ரே மாத்ரே - தன் பக்தஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஆனவரை

सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,

नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.


பொருள் :

பீதாம்பரத்தை (மஞ்சள் பட்டாடை) இடுப்பில் அணிந்தவரும், பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் வணங்கப் பெற்றவரும்,, தன் பக்தஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஆனவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம்.  4


Meaning :

He who wore the Pitambara around his waist and was worshipped by the Gods Brahma, Indra, etc., who became the mother and father of his devotees, Salutations to Lord Rama who is accompanied by Lakshmana. 4

Monday, 18 January 2021

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 2

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 2

॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥


राजराजसखोद्भूत राजीवायतलोचन ।
रतीशकोटिसौन्दर्य देहि मे विपुलां श्रियम् ॥ ४॥

ராஜராஜஸகோ²த்³பூ⁴த ராஜீவாயதலோசந ।
ரதீஶகோடிஸௌந்த³ர்ய தே³ஹி மே விபுலாம் ஶ்ரியம் ॥ 4॥

rājarājasakhodbhūta rājīvāyatalocana ।
ratīśakoṭisaundarya dehi me vipulāṃ śriyam ॥ 4॥


பொருள் :
குபேரனுக்கு தோழனான பரமசிவனிடமிருந்து உண்டானவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகராய் அழகுள்ள முருகனான தாங்கள், எனக்கு அளவற்ற ஐச்வர்யத்தை அளிக்க வேண்டும். 4


Meaning :
You Muruga, who is born from Paramasiva, the friend of Kubera; having long eyes like lotus petal; possessing beauty equal to koti Manmatha; do bestow me with immeasurable prosperity. 4

Saturday, 16 January 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 3

Sri Rama Sloka Pancharatnam - Sloka 3

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


संसक्तदिव्यायुधकार्मुकाय समुद्रगर्वापहरायुधाय ।
सुग्रीवमित्राय सुरारिहन्त्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ३॥

ஸம்ʼஸக்ததி³வ்யாயுத⁴கார்முகாய ஸமுத்³ரக³ர்வாபஹராயுதா⁴ய .
ஸுக்³ரீவமித்ராய ஸுராரிஹந்த்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 3..

saṃsaktadivyāyudhakārmukāya samudragarvāpaharāyudhāya .
sugrīvamitrāya surārihantre namo'stu rāmāya salakṣmaṇāya .. 3..


संसक्त-दिव्य-आयुध-कार्मुकाय - ஸம்ʼஸக்த-தி³வ்ய-ஆயுத⁴-கார்முகாய - திவ்யாயுதங்களைத் திறம்படக் கையாளக்கூடியவரை, 

समुद्र-गर्व-अपहर-आयुधाय - ஸமுத்³ர-க³ர்வ-அபஹர-ஆயுதா⁴ய - சமுத்திரத்தின் கர்வத்தை அடக்கவல்ல ஆயுதத்தைக் கொண்டவரை, 

सुग्रीव-मित्राय - ஸுக்³ரீவ-மித்ராய - ஸுக்ரீவனுடைய நண்பரை, 

सुर-अरि-हन्त्रे - ஸுர-அரி-ஹந்த்ரே - தேவர்களுடைய எதிரியை (அஸுரரை) அழித்தவரை,

सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,

नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.


பொருள் :

திவ்யாயுதங்களைத் திறம்படக் கையாளக்கூடியவரும், சமுத்திரத்தின் கர்வத்தை அடக்கவல்ல ஆயுதத்தைக் கொண்டவரும், ஸுக்ரீவனுடைய நண்பரும், அஸுரரை அழித்தவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம்.  3


Meaning :

The one who is fit to handle celestial weapons, The one who has the weapon to suppress pride of Samudra Deva, The one who is friend of Sugreeva, The one who destroyed the enemies of Deva (Asura), Salutations to Him, Lord Rama with Lakshmana. 3

Wednesday, 13 January 2021

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.


பொங்கல் திருநாளில் பகலவனுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

अरुणाय शरण्याय करुणारससिन्धवे ।
असमानबलायाऽर्तरक्षकाय नमो नमः ॥

आदित्यायाऽदिभूताय अखिलागमवेदिने ।
अच्युतायाऽखिलज्ञाय अनन्ताय नमो नमः ॥

அருணாய ஶரண்யாய கருணாரஸஸிந்த⁴வே ।
அஸமானப³லாயா(அ)ர்தரக்ஷகாய நமோ நம꞉ ॥

ஆதி³த்யாயா(அ)தி³பூ⁴தாய அகி²லாக³மவேதி³னே ।
அச்யுதாயா(அ)கி²லஜ்ஞாய அனந்தாய நமோ நம꞉ ॥

aruṇāya śaraṇyāya karuṇārasasindhave ।
asamānabalāyā'rtarakṣakāya namo namaḥ ॥

ādityāyā'dibhūtāya akhilāgamavedine ।
acyutāyā'khilajñāya anantāya namo namaḥ ॥


अरुणाय - அருணாய - இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பவருக்கு,

शरण्याय - ஶரண்யாய - (சரணடைந்தோர்க்கு) அடைக்கலமளிப்பவருக்கு,

करुणा-रस-सिन्धवे - கருணா-ரஸ-ஸிந்த⁴வே - கருணைக் கடல் போன்றவருக்கு,

असमान-बलाय - அஸமான-ப³லாய - நிகரற்ற பலமுடையவருக்கு,

आर्त-रक्षकाय - ஆர்த-ரக்ஷகாய - கஷ்டங்களிலிருந்து காப்பவருக்கு,

आदि-भूताय - ஆதி³-பூ⁴தாய - முழுமுதற் பொருளானவருக்கு,

अखिल-आगम-वेदिने - அகி²ல-ஆக³ம-வேதி³னே - (மீதமின்றி) அனைத்து சாஸ்த்ரங்களையும் அறிந்தவருக்கு,

अच्युताया - அச்யுதாயா - நெறியினின்றும் வழுவாதவருக்கு,

अखिलज्ञाय - அகி²லஜ்ஞாய - அனைத்தும் அறிந்தவருக்கு,

अनन्ताय - அனந்தாய - எல்லயற்றவருக்கு,

आदित्याय - ஆதி³த்யாய - ஆதித்யருக்கு (சூர்ய பகவானுக்கு)

नमो नमः - நமோ நம꞉ - நமஸ்காரம்

नमो नमः - நமோ நம꞉ - நமஸ்காரம்.


பொருள் :

இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பவரும், (சரணடைந்தோர்க்கு) அடைக்கலமளிப்பவரும், கருணைக் கடல் போன்றவரும், நிகரற்ற பலமுடையவரும்,
கஷ்டங்களிலிருந்து காப்பவரும், முழுமுதற் பொருளானவரும், (மீதமின்றி) அனைத்து சாஸ்த்ரங்களையும் அறிந்தவரும், நெறியினின்றும் வழுவாதவரும், அனைத்தும் அறிந்தவரும்,
எல்லயற்றவருமான, ஆதித்யருக்கு (சூர்ய பகவானுக்கு) மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.


Meaning :

Salutations again and again to The Sun whose complexion is Reddish Brown, The One Who Provides Refuge, The Ocean of the Sentiment of Compassion, The One of Unequalled Strength, The Protector from Suffering, The First Being, The Knower of All Scriptures, The Imperishable - The Steady One, The Knower of Everything, The Unbounded One.

Tuesday, 12 January 2021

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 1

Sri Subrahmanya Moola Mantra Stavam - Sloka 1

॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥


शरारण्योद्भवं स्कन्दं शरणागतपालकम् ।
शरणं त्वां प्रपन्नस्य देहि मे विपुलां श्रियम् ॥ ३॥

ஶராரண்யோத்³ப⁴வம் ஸ்கந்த³ம் ஶரணாக³தபாலகம் ।
ஶரணம் த்வாம் ப்ரபந்நஸ்ய தே³ஹி மே விபுலாம் ஶ்ரியம் ॥ 3॥

śarāraṇyodbhavaṃ skandaṃ śaraṇāgatapālakam ।
śaraṇaṃ tvāṃ prapannasya dehi me vipulāṃ śriyam ॥ 3॥


பொருள் :
சர வனத்தில் ( நாணல் புற்கள் அடர்ந்த காடு ) உண்டானவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான தங்களை சரணமடைந்த எனக்கு அளவற்ற ஐச்வர்யத்தை அளிக்க வேண்டும். 3
( இங்கு அளவற்ற ஐச்வர்யம் - செல்வம் என்றால் " கந்தன் கருணை " அல்லது ஸ்வயம் " கந்தன் " என்று கொள்வது உசிதம்.)


Meaning :
You, He who has been emanated from Sara forest, the Skanda, one who protects those who surrender themselves unto him, endow me with immeasurable prosperity. 3

( Here 'immeasurable prosperity' indicates the mercy of Kandan or Kandan himself.)

அனுமன் ஜெயந்தி : 12-1-21

அனுமன் ஜெயந்தி : 12-1-21


ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.

बुद्धिर्बलं यशो धैर्यं निर्भयत्वमरोगता ।
अजाड्यं वाक्पटुत्वं च हनूमत्स्मरणाद्भवेत् ॥

பு³த்³தி⁴ர்ப³லம்ʼ யஶோ தை⁴ர்யம்ʼ நிர்ப⁴யத்வமரோக³தா | 
அஜாட்³யம்ʼ வாக்படுத்வம்ʼ ச ஹனூமத்ஸ்மரணாத்³ப⁴வேத் ||

ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையும் தருகிறார் அவர்.

சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான்.

பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சநேயர்.

இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் சுபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்சநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார்.

மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாசனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக்கொள்வார்கள்.

ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி சனகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக்கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர்.

பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அனுபவிக்கிறார்.

பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம் (ideal).

ஞானத்தில் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில் உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்குச் சேவை செய்தே நிறைந்துவிட்டார்.

அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்' என்போம். கன்னடச் சீமையில் அவரே 'ஹநுமந்தையா'. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்' என்றே சொல்வார்கள்.

ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.

‘ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.

இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக்கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரசாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.

அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்ம ராஜ்யம் ஏற்பட்டது.

பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக சமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம சம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||

(தெய்வத்தின் குரலிலிருந்து)

Saturday, 9 January 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 2

Sri Rama Sloka Pancharatnam - Sloka 2

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


विद्युन्निभाम्भोदसुविग्रहाय विद्याधरैः संस्तुतसद्गुणाय ।
वीरावताराय विराधहन्त्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ २॥

வித்³யுன்னிபா⁴ம்போ⁴த³ஸுவிக்³ரஹாய வித்³யாத⁴ரை꞉ ஸம்ʼஸ்துதஸத்³கு³ணாய .
வீராவதாராய விராத⁴ஹந்த்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 2..

vidyunnibhāmbhodasuvigrahāya vidyādharaiḥ saṃstutasadguṇāya .
vīrāvatārāya virādhahantre namo'stu rāmāya salakṣmaṇāya .. 2..


विद्युत् निभ अम्भोद सुविग्रहाय - வித்³யுத் நிப⁴ அம்போ⁴த³ ஸுவிக்³ரஹாய - மின்னல் கோடிட்ட மேகம் போன்ற அழகிய மேனி உடையவருக்கு,

विद्याधरैः संस्तुत सद्गुणाय - வித்³யாத⁴ரை꞉ ஸம்ʼஸ்துத ஸத்³கு³ணாய - வித்யாதரர்களால் நற்குணங்களுக்காகப் பாராட்டப்பெற்றவருக்கு,

वीर-अवताराय - வீர-அவதாராய - வீரனாக தோன்றியவருக்கு,

विराध हन्त्रे - விராத⁴ ஹந்த்ரே - விராதனைக் கொன்றவருக்கு,

सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - அந்த லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,

नमः अस्तु - நம꞉ அஸ்து - வந்தனம் உரித்தாகுக.


பொருள் :

மின்னல் கோடிட்ட மேகம் போன்ற அழகிய மேனி உடையவரும், வித்யாதரர்களால் நற்குணங்களுக்காகப் பாராட்டப்பெற்றவரும், வீரனாகத் தோன்றியவரும், விராதனைக் கொன்றவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வந்தனம். 2


Meaning :

The one with the beautiful complexion like lightning striped cloud, Appreciated for virtues by scholars, Who appeared to be a warrior, The one who killed Viraadha, Salutations to Him, Lord Rama with Lakshmana. 2

Tuesday, 5 January 2021

Sri Subrahmanya Moola Mantra Stavam - Introduction

Sri Subrahmanya Moola Mantra Stavam - Introduction

॥ श्री सुब्रह्मण्य मूलमन्त्र स्तवः ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய மூலமந்த்ர ஸ்தவ: ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA MŪLAMANTRA STAVAḤ ॥

ஆறுமுகனது அருளை அள்ளித் தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது.
இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் தாரித்ரியம் விலகி அஷ்ட ஐச்வர்யங்களும் கிடைக்கும். செவ்வாய் முதலிய கிரஹங்களின் தோஷமும் , சத்ரு பயமும், ரோகமும் விலகும்.

अथातः सम्प्रवक्ष्यामि मूलमन्त्रस्तवं शिवम् ।
जपतां शृण्वतां नॄणां भक्तिमुक्तिप्रदायकम् ॥ १॥
सर्वशत्रुक्षयकरं सर्वरोगनिवारणम् ।
अष्टैश्वर्यप्रदं नित्यं सर्वलोकैकपावनम् ॥ २॥

அதா²த: ஸம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ரஸ்தவம் ஶிவம் ।
ஜபதாம் ஶ்ருʼண்வதாம் ந்ரூʼணாம் ப⁴க்திமுக்திப்ரதா³யகம் ॥ 1॥
ஸர்வஶத்ருக்ஷயகரம் ஸர்வரோக³நிவாரணம் ।
அஷ்டைஶ்வர்யப்ரத³ம் நித்யம் ஸர்வலோகைகபாவநம் ॥ 2॥

athātaḥ sampravakṣyāmi mūlamantrastavaṃ śivam ।
japatāṃ śṛṇvatāṃ nṝṇāṃ bhaktimuktipradāyakam ॥ 1॥
sarvaśatrukṣayakaraṃ sarvaroganivāraṇam ।
aṣṭaiśvaryapradaṃ nityaṃ sarvalokaikapāvanam ॥ 2॥


பொருள் :

பிறகு இதிலிருந்து ஸ்ரீ முருகனுடைய மூலமந்திர ஸ்தோத்திரத்தை உபதேசிக்கப் போகிறேன் . மங்களகரமான இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும். 1

எல்லா சத்ருக்களையும் நாசம் செய்யும். எல்லா ரோகங்களையும் போக்கும். அஷ்ட ஐச்வர்யத்தையும் அளிக்கும். எல்லா உலகங்களிலும் மிகப்பரிசுத்தமாய் விளங்குவதுமாகும். 2


Meaning :

Hereinafter, I exhort the moolamantra stotra of Sri Murugan. The auspicious mantra furnishes enjoyment and liberation to those who chant and listen to it. 1

This pious mantra wards off diseases, awards eight sources of wealth and pervades all worlds. 2

Saturday, 2 January 2021

Sri Rama Sloka Pancharatnam - Sloka 1

Sri Rama Sloka Pancharatnam - Sloka 1

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||

|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


कञ्जातपत्रायतलोचनाय कर्णावतंसोज्ज्वलकुण्डलाय ।
कारुण्यपात्राय सुवंशजाय नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ १॥

கஞ்ஜாதபத்ராயதலோசனாய கர்ணாவதம்ʼஸோஜ்ஜ்வலகுண்ட³லாய .
காருண்யபாத்ராய ஸுவம்ʼஶஜாய நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 1..

kañjātapatrāyatalocanāya karṇāvataṃsojjvalakuṇḍalāya .

kāruṇyapātrāya suvaṃśajāya namo'stu rāmāya salakṣmaṇāya .. 1..



कञ्जात-पत्र-आयत लोचनाय - கஞ்ஜாத-பத்ர-ஆயத லோசனாய - தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவருக்கு,

कर्ण-अवतंस-उज्ज्वल कुण्डलाय - கர்ண-அவதம்ʼஸ-உஜ்ஜ்வல குண்ட³லாய - காதில் செருகிய பூவும் குண்டலமும் அணிந்தவருக்கு,

कारुण्य-पात्राय - காருண்ய-பாத்ராய - கருணையின் இருப்பிடமானவருக்கு,

सु-वंशजाय - ஸு-வம்ʼஶஜாய - நல்ல வம்சத்தில் உதித்தவருக்கு,

सलक्ष्मणाय रामाय - ஸலக்ஷ்மணாய ராமாய - லக்ஷ்மணனுடன் கூடிய ராமருக்கு,

नमः अस्तु - நம꞉ அஸ்து - நமஸ்காரம் உரித்தாகுக.


பொருள் :

தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், காதில் செருகிய பூவும் குண்டலமும் அணிந்தவரும், கருணையின் இருப்பிடமானவரும், நல்ல வம்சத்தில் உதித்தவரும், லக்ஷ்மணனுடன் கூடியவருமான ராமருக்கு வணக்கங்கள் உரித்தாகுக. 1


Meaning :

To the One with long eyes like a petal of lotus, the one with a flower and kundala on his ears, the abode of mercy, born in a good vamsha, Salutations to Lord Rama accompanied by Lakshmana.  1