Friday, 30 August 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 3

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 3

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

कंसविद्रावणकरीमसुराणां क्षयंकरीम्।
शिलातटविनिक्षिप्तामाकाशं प्रति गामिनीम् ।। 3 ।।

கம்ʼஸவித்³ராவணகரீமஸுராணாம்ʼ க்ஷயங்கரீம்।
ஶிலாதடவினிக்ஷிப்தாமாகாஶம்ʼ ப்ரதி கா³மினீம் ॥ 3 ॥

kaṃsavidrāvaṇakarīmasurāṇāṃ kṣayaṃkarīm।
śilātaṭavinikṣiptāmākāśaṃ prati gāminīm ।। 3 ।।

பொருள் :

கம்சனுக்கு அச்சமூட்டியவளும்; அசுரர்களை அழித்தவளும்; கல்மேடையில் (கம்சனால்) தூக்கி வீசப்பட்டபோது வானத்தில் உயர்ந்து எழுந்தவளும்;   3

Meaning :

the terrifier of Kansa, and the destroyer of Asuras, ( and saluted the Goddess ) her who ascended the skies when dashed (by Kansa) on a stony platform,   3

Thursday, 29 August 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 3

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 3

अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ।
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ५९॥

அஜ்ஞாநதிமிராந்த⁴ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா ।
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 59॥

ajñānatimirāndhasya jñānāñjanaśalākayā ।
cakṣurunmīlitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 59॥

अज्ञान  -  அஜ்ஞான  -  அஞ்ஞானம் எனும்,

तिमिर-अन्धस्य  -  திமிர-அந்த⁴ஸ்ய  -  திமிரம் எனும் கண்நோயினால் குருடாகியுள்ளவனது,

चक्षुः  -  சக்ஷு꞉:  -   கண்,

ज्ञान  -  ஜ்ஞான  -  ஞானம் எனும்,

अञ्जन-शलाकया  -  அஞ்ஜன-ஶலாகயா  -  அஞ்சன சலாகையினால் ( கண் மை இடும் குச்சியினால் ),

येन  -  யேன  -  யாரால்,

उन्मीलितं  -  உன்மீலிதம்ʼ  -  திறக்கப்பட்டதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

3. அஞ்ஞானமென்னும் திமிரத்தால் குருடாயுள்ளவனது கண், ஞானமென்னும் அஞ்சனசலாகையினால் எவரால் திறக்கப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு  நமஸ்காரம் ( வணக்கம் ).   59

Wednesday, 28 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 9 & 10 ( Final )

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 9 & 10 ( Final )

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

मङ्गलम्

त्यागब्रह्मसुगीताय गीतपुष्पार्चिताय च ।
मनोवाक्कायपूर्णाय श्रीकृष्णाय सुमङ्गलम् ॥ ९॥

மங்களம்

த்யாக³ப்³ரஹ்மஸுகீ³தாய கீ³தபுஷ்பார்சிதாய ச ।
மநோவாக்காயபூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய ஸுமங்க³ளம் ॥ 9॥

Maṅgalam

tyāgabrahmasugītāya gītapuṣpārcitāya ca ।
manovākkāyapūrṇāya śrīkṛṣṇāya sumaṅgalam ॥ 9॥

त्याग-ब्रह्म-सुगीताय  -  த்யாக³-ப்³ரஹ்ம-ஸுகீ³தாய  -  தியாகபிரம்மத்தால் நன்கு பாடப்பட்டவருக்கு,

गीत-पुष्प-अर्चिताय च  -  கீ³த-புஷ்ப-அர்சிதாய ச  -  கீதமாகிய புஷ்பங்களால் அர்ச்சிக்கப் படுபவருக்கு,

मनो-वाक्-काय-पूर्णाय  -  மனோ-வாக்-காய-பூர்ணாய  -  மனம், வாக்கு, உடலில் ( எண்ணம், சொல், செயலில் ) நிறைந்தவருக்கு,

श्रीकृष्णाय  -  ஶ்ரீக்ருʼஷ்ணாய  -  ஸ்ரீகிருஷ்ணருக்கு

सुमङ्गलम्  -  ஸுமங்க³லம்  -  மங்களம் உண்டாகட்டும்.

பொருள் :

மங்களம்

தியாகபிரம்மத்தால் நன்கு பாடப்பட்டவரும், கீதமாகிய புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரும்; மனம், வாக்கு, உடலில் ( எண்ணம், சொல், செயலில் ) நிறைந்தவருமான ஸ்ரீகிருஷ்ணருக்கு மங்களம் உண்டாகட்டும்.   9

#  மனத்தில் கண்ணனைப் பற்றிய எண்ணங்களே நிலைபெற்றிருப்பது; வாக்கிலும் கண்ணனைப் பற்றியதான நாமங்களே பிரவகிப்பது; உடலாலும் கண்ணனுக்கான சேவைகளையே செய்வது. இப்படியிருப்பவர்களிடம் கிருஷ்ண பக்தியில் நிறைந்திருக்கிறது.

#  பகவானுக்கே ஆசிர்வாதம் என்றவாறு அல்ல. பகவானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற ஒரு எண்ணத்தில், பக்தர்கள் 'பகவான் நன்றாக இருக்க வேண்டும். பகவானுக்கு மங்களம் உண்டாகட்டும். ' என்று வேண்டுகிறார்கள். அன்னைக்குப் பிள்ளையிடம் உள்ள வாத்சல்யத்தைப் போன்றது. பக்தர்களுக்கே வெளிச்சம்.

फलश्रुतिः

कृष्णाष्टकमिदं पुण्यं कृष्णप्रेर्यं शुभप्रदम् ।
पुष्पार्चनसुपद्यं च श्रीकृष्णसुकृपावहम् ॥ १०॥

इति सद्गुरुश्रीत्यागराजस्वामिनः शिष्यया भक्तया पुष्पया कृतं
श्रीकृष्णाष्टकं गुरौ समर्पितम् ।

ப²லஶ்ருதி꞉:

க்ருʼஷ்ணாஷ்டகமித³ம் புண்யம் க்ருʼஷ்ணப்ரேர்யம் ஶுப⁴ப்ரத³ம் ।
புஷ்பார்சநஸுபத்³யம் ச ஶ்ரீக்ருʼஷ்ணஸுக்ருʼபாவஹம் ॥ 10॥

இதி ஸத்³கு³ருஶ்ரீத்யாக³ராஜஸ்வாமிந: ஶிஷ்யயா ப⁴க்தயா புஷ்பயா க்ருʼதம்
ஶ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம் கு³ரௌ ஸமர்பிதம் ।

phalaśrutiḥ

kṛṣṇāṣṭakamidaṃ puṇyaṃ kṛṣṇapreryaṃ śubhapradam ।
puṣpārcanasupadyaṃ ca śrīkṛṣṇasukṛpāvaham ॥ 10॥

iti sadguruśrītyāgarājasvāminaḥ śiṣyayā bhaktayā puṣpayā kṛtaṃ
śrīkṛṣṇāṣṭakaṃ gurau samarpitam ।

पुण्यं  -  புண்யம்ʼ  -  புண்ணியத்தையும்

शुभ-प्रदं  -  ஶுப⁴-ப்ரத³ம்ʼ  -  மங்களத்தையும் தருவதும்

पुष्प-अर्चन-सुपद्यं च   -  புஷ்ப-அர்சன-ஸுபத்³யம்ʼ ச  -  மேலும் புஷ்பார்ச்சனைக்கு ஏதுவாக அமைந்த

कृष्ण-अष्टकं इदं  -  க்ருʼஷ்ண-அஷ்டகம்ʼ இத³ம்ʼ  -  கிருஷ்ண அஷ்டகமாகிய இது

कृष्ण-प्रेर्यं  -  க்ருʼஷ்ண-ப்ரேர்யம்ʼ  -  ஸ்ரீகிருஷ்ணரைப் பிரேரித்து

श्रीकृष्ण-सुकृपावहम्   -  ஶ்ரீக்ருʼஷ்ண-ஸுக்ருʼபாவஹம்  -  கிருஷ்ண கிருபையைக் கொண்டு சேர்ப்பது ( படிப்பவர்களுக்கு ).

பொருள் :

பலன் –

புண்ணியத்தையும் மங்களத்தையும் தருவதும், மேலும் புஷ்பார்ச்சனைக்கு ஏதுவாக அமைந்த கிருஷ்ண அஷ்டகமாகிய இது, ஸ்ரீகிருஷ்ணரைப் பிரேரித்து கிருஷ்ண கிருபையைக் கொண்டு சேர்ப்பது.   10

இவ்விதமாக சற்குரு தியாகராஜ ஸ்வாமியின் சிஷ்யையும் பக்தையுமாகிய புஷ்பாவால் இயற்றப்பட்ட ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம்  குருவிடம் ஸமர்ப்பிக்கப்படுகிறது.

#  இந்த ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு ச்லோகமும் நம: என்று முடிவதால், ஒவ்வொரு ச்லோகம் சொல்லியவுடன் பூக்களை அர்ப்பிக்க ஏதுவாக அமையும். மேலும் இந்த ஸ்தோத்ரம் முழுமையும் பகவந்நாமாக்களின் நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட பதங்களால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு நாமத்தைக் கொண்டும் புஷ்பார்ச்சனை செய்ய இயலும்.

#  இதைப் படிப்பதனால் கிருஷ்ணர்  மனமுவந்து, அவரது கிருபை நமக்கு வந்து சேரும். கிருஷ்ண கிருபைக்கு மேல் கிடைப்பதற்கு வேறேதேனும் உண்டோ ? !

Tuesday, 27 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 8

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 8

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

सदासक्तसुरक्षाय सदामानसवासिने ।
सदात्मानन्दपूर्णाय श्रीकृष्णाय नमो नमः ॥ ८॥

ஸதா³ஸக்தஸுரக்ஷாய ஸதா³மாநஸவாஸிநே ।
ஸதா³த்மாநந்த³பூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 8॥

sadāsaktasurakṣāya sadāmānasavāsine ।
sadātmānandapūrṇāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 8॥

सद्-आसक्त-सुरक्षाय   -  ஸத்³-ஆஸக்த-ஸுரக்ஷாய  -  ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவருக்கு,

सदा-मानस-वासिने  -  ஸதா³-மானஸ-வாஸினே  -  எப்பொழுதும் மனதில் வஸிப்பவருக்கு,

सदा-आत्म-आनन्द-पूर्णाय  -  ஸதா³-ஆத்ம-ஆனந்த³-பூர்ணாய  -  எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருக்கு,

श्रीकृष्णाय नमः नमः  -  ஶ்ரீக்ருʼஷ்ணாய நம: நம:  -  ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

பொருள் :

ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவரும், எப்பொழுதும் மனதில் வஸிப்பவரும், எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருமான, ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.   8

Monday, 26 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 7

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 7

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गीतोपदेशबोधाय विश्वरूपप्रकाशिने ।
वेदान्तसारसत्याय वेदनादाय ते नमः ॥ ७॥

கீ³தோபதே³ஶபோ³தா⁴ய விஶ்வரூபப்ரகாஶிநே ।
வேதா³ந்தஸாரஸத்யாய வேத³நாதா³ய தே நம: ॥ 7॥

gītopadeśabodhāya viśvarūpaprakāśine ।
vedāntasārasatyāya vedanādāya te namaḥ ॥ 7॥

गीत-उपदेश-बोधाय  -  கீ³த-உபதே³ஶ-போ³தா⁴ய  -  கீதோபதேசத்தை போதித்தவருக்கு,

विश्व-रूप-प्रकाशिने  -  விஶ்வ-ரூப-ப்ரகாஶினே  -. விச்வரூபமாக பிரகாசித்தவருக்கு,

वेदान्त-सार-सत्याय  -  வேதா³ந்த-ஸார-ஸத்யாய  -. வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக இருப்பவருக்கு,

वेद-नादाय  -  வேத³-நாதா³ய  -. வேத நாதமானவருக்கு,

ते नमः  -  தே நம:  -  உமக்கு நமஸ்காரம்.

பொருள் :

கீதோபதேசத்தை போதித்தவரும், விச்வரூபமாக பிரகாசித்தவரும், வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக  இருப்பவரும், வேத நாதமானவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   7

#  விச்வ ரூபம் என்பது பெரிய்ய்ய்ய்ய்ய ரூபமாக இருக்க வேண்டும் என்பதல்ல. நாம் எதையெல்லாம் விச்வம் ( உலகம் ) என்பதாகக் காண்கிறோமோ,  சிறியது முதல் பெரியது வரை அனைத்தினுள்ளும் இறைவனின் இருப்பை உணர்வது.

Sunday, 25 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 6

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 6

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

पाण्डवप्रियमित्राय पाञ्चालीमानरक्षिणे ।
पार्थानुग्रहकाराय पार्थसारथये नमः ॥ ६॥

பாண்ட³வப்ரியமித்ராய பாஞ்சாலீமாநரக்ஷிணே ।
பார்தா²நுக்³ரஹகாராய பார்த²ஸாரத²யே நம: ॥ 6॥

pāṇḍavapriyamitrāya pāñcālīmānarakṣiṇe ।
pārthānugrahakārāya pārthasārathaye namaḥ ॥ 6॥

पाण्डव-प्रिय-मित्राय  -  பாண்ட³வ-ப்ரிய-மித்ராய  -  பாண்டவர்களுக்குப் பிரியமான தோழருக்கு,

पाञ्चाली-मान-रक्षिणे  -  பாஞ்சாலீ-மான-ரக்ஷிணே  -  பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவருக்கு,

पार्थ-अनुग्रहकाराय  -  பார்த²-அனுக்³ரஹகாராய  -  பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவருக்கு,

पार्थ-सारथये  -  பார்த²-ஸாரத²யே  -  பார்த்தஸாரதிக்கு,

नमः  -  நம:  -  நமஸ்காரம்.

பொருள் :

பாண்டவர்களுக்குப் பிரியமான தோழரும், பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவரும், பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவரும், பார்த்தஸாரதியுமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம்.   6

#  பார்த்தன் - அர்ஜுனன். நாராயண சேனையை துர்யோதனனுக்குத் தந்துவிட்டு, தன்னையே பார்த்தனுக்குத் தந்து  அனுகிரஹம் செய்தார். பார்த்தஸாரதி ஆனார்.

Saturday, 24 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 5

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 5

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

रुक्मिणीप्रियनाथाय रुग्मपीताम्बराय च ।
सत्यभामासमेताय सत्कामाय नमो नमः ॥ ५॥

ருக்மிணீப்ரியநாதா²ய ருக்³மபீதாம்ப³ராய ச ।
ஸத்யபா⁴மாஸமேதாய ஸத்காமாய நமோ நம: ॥ 5॥

rukmiṇīpriyanāthāya rugmapītāmbarāya ca ।
satyabhāmāsametāya satkāmāya namo namaḥ ॥ 5॥

रुक्मिणी-प्रियनाथाय   -  ருக்மிணீ-ப்ரியனாதா²ய  -  ருக்மிணிக்கு பிரிமான தலைவனுக்கு ( பதி ),

रुग्म-पीत-अम्बराय च   -  ருக்³ம-பீத-அம்ப³ராய ச  -  தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவருக்கு,

सत्यभामा-समेताय   -  ஸத்யபா⁴மா-ஸமேதாய  -  ஸத்யபாமா உடன் உறைபவருக்கு,

सत्-कामाय  -  ஸத்-காமாய  -  நன்மையை விரும்புபவருக்கு,

नमः नमः  -  நம: நம:  -  நமஸ்காரம், நமஸ்காரம்.

பொருள் :

ருக்மிணிக்கு பிரிமான தலைவனும் ( பதி ), தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸத்யபாமா உடன் உறைபவரும், நன்மையை விரும்புபவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம், நமஸ்காரம்.   5

#  உலகில் நன்மைகள் நடந்திட வேண்டுமென்று விரும்புபவர்;  நற்குணங்கள் கொண்டவரை விரும்புபவர்; பக்தர்களை விரும்புபவர்.

Friday, 23 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 4

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 4

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गोविन्दाय मुकुन्दाय कंसादिरिपुदारिणे ।
मातापितृसुनन्दाय द्वारकापतये नमः ॥ ४॥

கோ³விந்தா³ய முகுந்தா³ய கம்ஸாதி³ரிபுதா³ரிணே ।
மாதாபித்ருʼஸுநந்தா³ய த்³வாரகாபதயே நம: ॥ 4॥

govindāya mukundāya kaṃsādiripudāriṇe ।
mātāpitṛsunandāya dvārakāpataye namaḥ ॥ 4॥

गोविन्दाय  -  கோ³விந்தா³ய  -  பசுக்களைக் காப்பவருக்கு,

मुकुन्दाय  -  முகுந்தா³ய  -  முக்தியை அளிப்பவருக்கு,

कंसादि-रिपु-दारिणे   -  கம்ʼஸாதி³-ரிபு-தா³ரிணே  -  கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவருக்கு,

माता-पितृ-सुनन्दाय   -  மாதா-பித்ருʼ-ஸுனந்தா³ய  -  அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவருக்கு,

द्वारकापतये  -  த்³வாரகாபதயே  -  துவாரகையின் தலைவருக்கு,

नमः  -  நம:  -  நமஸ்காரம்.

பொருள் :

பசுக்களைக் காப்பவரும், முக்தியை அளிப்பவரும், கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவரும்; அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவரும், துவாரகையின் தலைவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   4

#  கோவிந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. பசுக்களைக் காப்பவன், பூமியை மீட்டவன், வேதங்களால் அறியப்படுபவன்.

#  கண்ணபிரான் கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டும், வெண்ணெய் திருடிக்கொண்டும் மேலும் பலலீலைகளைச் செய்தவண்ணம் இருந்தார்.

#  தன்னுடைய இந்த லீலைகளால் கோகுலத்தில் இருந்த அனைத்து ஜீவன்களுக்கும், மற்ற விஷய ஸ்மரனையிலிருந்து முக்தியளித்து தன்னையே ஸ்மரிக்கும்படி அருளினான்.

#  அதைப் பொறுக்காத அரக்கர்கள், தாங்களும் முக்தியடைந்திட, பூதனை முதலாக வரிசையாக வந்தனர். கண்ணனும் யாரையும் ஏமாற்றாமல் மீதமின்றி வந்த அனைவருக்கும் முக்தியளித்தான்.

#  கம்சனுக்கு முக்தியளித்த பின், தன்னைப் பெற்ற அன்னை தேவகியையும், தந்தை வஸுதேவரையும் சிறையிலிந்து விடுவித்து  ஆனந்தமளித்தான்.

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 2

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 2

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

यशोदागर्भसंभूतां नारायणवरप्रियाम् ।
नन्दगोपकुले जातां मङ्गल्यां कुलवर्धनीम् ।। 2 ।।

யஶோதா³க³ர்ப⁴ஸம்பூ⁴தாம்ʼ நாராயணவரப்ரியாம் ।
நந்த³கோ³பகுலே ஜாதாம்ʼ மங்க³ல்யாம்ʼ குலவர்த⁴னீம் ॥ 2 ॥

yaśodāgarbhasaṃbhūtāṃ nārāyaṇavarapriyām ।
nandagopakule jātāṃ maṅgalyāṃ kulavardhanīm ।। 2 ।।

பொருள் :

யசோதையின் கருவறையில் பிறந்தவளும்; நாராயணனால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை ஏற்று, இடையர் நந்தரின் {நந்தகோபரின்} குலத்தில் உதித்தவளும்; செழிப்பையும், (வழிபடுபவர்) குடும்பத்தையும் (குடும்பப் புகழையும்) மேம்படுத்துபவளும்;   2

Meaning :

( Goddess Durga who ) born on the womb of Yasoda, and fond of the boons bestowed on her by Narayana, sprung from the race of cowherd Nanda, and the giver of prosperity, the enhancer (of the glory) of (the worshipper's) family,    2

Thursday, 22 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 3

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 3

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गोपिकानन्दलीलाय नवनीतप्रियाय च ।
वेणुगानाभिलोलाय राधाकृष्णाय ते नमः ॥ ३॥

கோ³பிகாநந்த³லீலாய நவநீதப்ரியாய ச ।
வேணுகா³நாபி⁴லோலாய ராதா⁴க்ருʼஷ்ணாய தே நம: ॥ 3॥

gopikānandalīlāya navanītapriyāya ca ।
veṇugānābhilolāya rādhākṛṣṇāya te namaḥ ॥ 3॥

गोपिका-नन्द-लीलाय   -  கோ³பிகா-நந்த³-லீலாய  -  கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவருக்கு,

नवनीत-प्रियाय च  -  நவனீத-ப்ரியாய ச  -  வெண்ணெயின் மீது நாட்டம் உடையவருக்கு,

वेणु-गान-अभि-लोलाय  -  வேணு-கா³ன-அபி⁴-லோலாய  -  வேணுகானம் செய்தவாறு  ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவருக்கு,

राधाकृष्णाय  -  ராதா⁴க்ருʼஷ்ணாய  -  ராதையினுடைய கிருஷ்ணனுக்கு,

ते नमः  -  தே நம:  -  உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணனுக்கு )  நமஸ்காரம்.

பொருள் :

கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவரும்,
வெண்ணெயின் மீது நாட்டம் உடையவரும், வேணுகானம் செய்தவாறு  ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவரும், ராதையினுடைய கிருஷ்ணனுமான உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணருக்கு )  நமஸ்காரம்.   3

#  கோபிகைகள் போல் மற்ற விஷய ஸ்மரனை நீங்கி, பகவத் ஸ்மரனை ஏற்படட்டும்.

#  தூய்மையான, ஸாத்வீகமான, கருணையினால் நெகிழும் தன்மையதான, கண்ணனை ஸ்மரித்தவுடன் உருகுவதான மனங்கள் கண்ணனால்  வெண்ணெயென திருடப்படட்டும்.

#  வெற்றிடமாக உள்ள புல்லாங்குழல் போல தனக்கென்று ஸங்கல்பங்கள் ஏதுமில்லாதவர்கள் கண்ணனால் கருவிகளாக இயக்கப்படட்டும்.

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 2

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 2

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ ५८॥

கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணுர்கு³ருர்தே³வோ மஹேஶ்வர: ।
கு³ருரேவ பரம் ப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 58॥

gururbrahmā gururviṣṇurgururdevo maheśvaraḥ ।
gurureva paraṃ brahma tasmai śrīgurave namaḥ ॥ 58॥

गुरुः ब्रह्मा  -  கு³ரு꞉: ப்³ரஹ்மா  -  குருவே பிரம்மா,

गुरुः विष्णुः  -  கு³ரு꞉: விஷ்ணு꞉:  -  குருவே விஷ்ணு,

गुरुः देवः महेश्वरः  -  கு³ரு꞉: தே³வ꞉: மஹேஶ்வர꞉:  -  குருவே மஹேச்வரராகிய தேவர்,

गुरुः एव परंब्रह्मः  -  கு³ரு꞉: ஏவ பரம்ʼப்³ரஹ்ம:  -  குருவே ஏகமாகிய பரப்பிரம்மம்,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

2.  குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மஹேச்வரராகிய தேவர், குருவே ஏகமாகிய பரப்பிரம்மம், அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   58

#  பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ஆகிய மூர்த்தி பேதங்களாகவும் குரு இருக்கிறார். மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தக்க குரு இருந்துகொண்டுதான் இருக்கிறார். இத்தனை ரூபங்களாக இருக்கிறவரான குரு உண்மையில் ஒரே ஒருவர் தான். அதாவது குரு தத்வம் ஒன்றே. அது நமக்கேற்ப ஏற்கும் நாமரூபங்கள் பல.

Wednesday, 21 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 2

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 2

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

देवकीप्रियपुत्राय यशोदालालिताय च ।
वासुदेवाय देवाय नन्दनन्दाय ते नमः ॥ २॥

தே³வகீப்ரியபுத்ராய யஶோதா³லாலிதாய ச ।
வாஸுதே³வாய தே³வாய நந்த³நந்தா³ய தே நம: ॥ 2॥

devakīpriyaputrāya yaśodālālitāya ca ।
vāsudevāya devāya nandanandāya te namaḥ ॥ 2॥

देवकी-प्रिय-पुत्राय  -  தே³வகீ-ப்ரிய-புத்ராய  -   தேவகிக்குப் பிரியமான புத்திரருக்கு,

यशोदा-लालिताय च  -  யஶோதா³-லாலிதாய ச  -  யசோதையால் லாலனை செய்யப்பட்டவருக்கு,

वासुदेवाय  -  வாஸுதே³வாய  -  வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவருக்கு,

नन्द-नन्दाय  -  நந்த³-நந்தா³ய  -  நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவருக்கு,

देवाय  -  தே³வாய  -  லீலைகள் செய்பவருக்கு,

ते नमः  -  தே நம꞉  -  உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.

பொருள் :

தேவகிக்குப் பிரியமான புத்திரரும், யசோதையால் லாலனை செய்யப்பட்டவரும், வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவரும், நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவரும், லீலைகள் செய்பவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   2

#  லாலனை -  அன்பைக் கொட்டி கொட்டி வளர்த்தல்.

Tuesday, 20 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 1

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 1

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪKṚṢṆĀṢṬAKAM  ||

परमात्मस्वरूपाय नारायणाय विष्णवे ।
परिपूर्णावताराय श्रीकृष्णाय नमो नमः ॥ १॥

பரமாத்மஸ்வரூபாய நாராயணாய விஷ்ணவே ।
பரிபூர்ணாவதாராய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 1॥

paramātmasvarūpāya nārāyaṇāya viṣṇave ।
paripūrṇāvatārāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 1॥

परमात्म-स्वरूपाय  -  பரமாத்ம-ஸ்வரூபாய  -  பரமாத்மா ஆனவருக்கு,

नारायणाय  -  நாராயணாய  -  நாராயணருக்கு - உண்டானவைகளுக்கெல்லாம் இருப்பிடமானவருக்கு,

विष्णवे  -  விஷ்ணவே  -  விஷ்ணுவிற்கு - எங்கும் வியாபித்திருப்பவருக்கு,

परिपूर्ण-अवताराय  -  பரிபூர்ண-அவதாராய  -  பரிபூரண அவதாரமானவருக்கு,

श्रीकृष्णाय  -  ஶ்ரீக்ருʼஷ்ணாய  -  ஶ்ரீகிருஷ்ணருக்கு - கரிய நிறத்தவருக்கு,

नमो नमः  -  நமோ நம:  -  நமஸ்காரம், நமஸ்காரம்.

பொருள் :

பரமாத்மா ஆனவரும், உண்டானவைகளுக்கெல்லாம் இருப்பிடமானவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், பரிபூரண அவதாரமுமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.  1

#  பரிபூரண அவதாரம் –  எல்லா அவதாரங்களிலும் பகவான் ஸகல கல்யாண குணங்களுடனேயே அவதரிக்கிறார்.

இருந்தாலும் ராம கிருஷ்ண அவதாரங்களே பரிபூர்ண அவதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வவதாரங்களிலேயே பகவானுடைய சகல கல்யாண குணங்களும் வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளன. அவதார காலத்தில் அநேக காலங்களுக்கு வாழ்ந்து, அநேக லீலைகளை நிகழ்த்தி, அநேக பக்தர்களுக்கு தரிசனமும் மோக்ஷமும் அழித்து இப்படிப்பட்ட அநேக சரிதங்களை காதாரக் கேட்கும்படி அமைந்த அவதாரங்கள் இவையே.

மத்ஸ்ய, வராஹ, கூர்ம, நரஸிம்ஹாதி அவதாரங்கள் மேற்கூறியவாறு அமைந்ததாகக் காணக்கிடைக்கவில்லை. அதாவது வெளிப்படையாக அமையவில்லை.

Monday, 19 August 2019

Sri Krishna Ashtakam By Pushpa Srivatsan  -  Introduction

Sri Krishna Ashtakam By Pushpa Srivatsan  -  Introduction

புஷ்பா ஸ்ரீவத்ஸன் என்பவர் 1767 லிருந்து 1847 வரை வாழ்ந்த மஹான். இவர் திருவையாறில் பிறந்தவர். ராமபக்தரான தியாகபிரம்மம் அவர்களை சத்குருவாக ஏற்று, அவரது பக்தை என்றே சொல்லும்படியாக வாழ்ந்தவர். இவர் சத்குருவின் மீதும், பல தேவதைகளின் மீதும் அநேக ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். இவர் வீணை மீட்டுவதில் வல்லவர். ஆனால் அதை ஜனரஞ்சகத்திற்காக உபயோகிக்காமல் குருபக்திக்கே அர்பணித்துவிட்டார். இவரால் இயற்றப்பட்டதே இந்த கிருஷ்ணாஷ்டகம்.

श्रीकृष्णाष्टकम्
                 ॐ
           श्रीरामजयम् ।
ॐ सद्गुरुश्रीत्यागराजस्वामिने नमो नमः ।

ॐ गीताचार्याय विद्महे । भक्तमित्राय धीमहि ।
तन्नः कृष्णः प्रचोदयात् ॥

परमात्मस्वरूपाय नारायणाय विष्णवे ।
परिपूर्णावताराय श्रीकृष्णाय नमो नमः ॥ १॥

देवकीप्रियपुत्राय यशोदालालिताय च ।
वासुदेवाय देवाय नन्दनन्दाय ते नमः ॥ २॥

गोपिकानन्दलीलाय नवनीतप्रियाय च ।
वेणुगानाभिलोलाय राधाकृष्णाय ते नमः ॥ ३॥

गोविन्दाय मुकुन्दाय कंसादिरिपुदारिणे ।
मातापितृसुनन्दाय द्वारकापतये नमः ॥ ४॥

रुक्मिणीप्रियनाथाय रुग्मपीताम्बराय च ।
सत्यभामासमेताय सत्कामाय नमो नमः ॥ ५॥

पाण्डवप्रियमित्राय पाञ्चालीमानरक्षिणे ।
पार्थानुग्रहकाराय पार्थसारथये नमः ॥ ६॥

गीतोपदेशबोधाय विश्वरूपप्रकाशिने ।
वेदान्तसारसत्याय वेदनादाय ते नमः ॥ ७॥

सदासक्तसुरक्षाय सदामानसवासिने ।
सदात्मानन्दपूर्णाय श्रीकृष्णाय नमो नमः ॥ ८॥

त्यागब्रह्मसुगीताय गीतपुष्पार्चिताय च ।
मनोवाक्कायपूर्णाय श्रीकृष्णाय सुमङ्गलम् ॥ ९॥

कृष्णाष्टकमिदं पुण्यं कृष्णप्रेर्यं शुभप्रदम् ।
पुष्पार्चनसुपद्यं च श्रीकृष्णसुकृपावहम् ॥ १०॥

इति सद्गुरुश्रीत्यागराजस्वामिनः शिष्यया भक्तया पुष्पया कृतं
श्रीकृष्णाष्टकं गुरौ समर्पितम् ।
ॐ शुभमस्तु ।

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||
                 ௐ
           ஶ்ரீராமஜயம் ।
ௐ ஸத்³கு³ருஶ்ரீத்யாக³ராஜஸ்வாமிநே நமோ நம: ।

ௐ கீ³தாசார்யாய வித்³மஹே । ப⁴க்தமித்ராய தீ⁴மஹி ।
தந்ந: க்ருʼஷ்ண: ப்ரசோத³யாத் ॥

பரமாத்மஸ்வரூபாய நாராயணாய விஷ்ணவே ।
பரிபூர்ணாவதாராய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 1॥

தே³வகீப்ரியபுத்ராய யஶோதா³லாலிதாய ச ।
வாஸுதே³வாய தே³வாய நந்த³நந்தா³ய தே நம: ॥ 2॥

கோ³பிகாநந்த³லீலாய நவநீதப்ரியாய ச ।
வேணுகா³நாபி⁴லோலாய ராதா⁴க்ருʼஷ்ணாய தே நம: ॥ 3॥

கோ³விந்தா³ய முகுந்தா³ய கம்ஸாதி³ரிபுதா³ரிணே ।
மாதாபித்ருʼஸுநந்தா³ய த்³வாரகாபதயே நம: ॥ 4॥

ருக்மிணீப்ரியநாதா²ய ருக்³மபீதாம்ப³ராய ச ।
ஸத்யபா⁴மாஸமேதாய ஸத்காமாய நமோ நம: ॥ 5॥

பாண்ட³வப்ரியமித்ராய பாஞ்சாலீமாநரக்ஷிணே ।
பார்தா²நுக்³ரஹகாராய பார்த²ஸாரத²யே நம: ॥ 6॥

கீ³தோபதே³ஶபோ³தா⁴ய விஶ்வரூபப்ரகாஶிநே ।
வேதா³ந்தஸாரஸத்யாய வேத³நாதா³ய தே நம: ॥ 7॥

ஸதா³ஸக்தஸுரக்ஷாய ஸதா³மாநஸவாஸிநே ।
ஸதா³த்மாநந்த³பூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 8॥

த்யாக³ப்³ரஹ்மஸுகீ³தாய கீ³தபுஷ்பார்சிதாய ச ।
மநோவாக்காயபூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய ஸுமங்க³ளம் ॥ 9॥

க்ருʼஷ்ணாஷ்டகமித³ம் புண்யம் க்ருʼஷ்ணப்ரேர்யம் ஶுப⁴ப்ரத³ம் ।
புஷ்பார்சநஸுபத்³யம் ச ஶ்ரீக்ருʼஷ்ணஸுக்ருʼபாவஹம் ॥ 10॥

இதி ஸத்³கு³ருஶ்ரீத்யாக³ராஜஸ்வாமிந: ஶிஷ்யயா ப⁴க்தயா புஷ்பயா க்ருʼதம்
ஶ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம் கு³ரௌ ஸமர்பிதம் ।
ௐ ஶுப⁴மஸ்து ।

||  ŚRĪKṚṢṆĀṢṬAKAM  ||
                 Om̃
           śrīrāmajayam ।
Om̃ sadguruśrītyāgarājasvāmine namo namaḥ ।

Om̃ gītācāryāya vidmahe । bhaktamitrāya dhīmahi ।
tannaḥ kṛṣṇaḥ pracodayāt ॥

paramātmasvarūpāya nārāyaṇāya viṣṇave ।
paripūrṇāvatārāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 1॥

devakīpriyaputrāya yaśodālālitāya ca ।
vāsudevāya devāya nandanandāya te namaḥ ॥ 2॥

gopikānandalīlāya navanītapriyāya ca ।
veṇugānābhilolāya rādhākṛṣṇāya te namaḥ ॥ 3॥

govindāya mukundāya kaṃsādiripudāriṇe ।
mātāpitṛsunandāya dvārakāpataye namaḥ ॥ 4॥

rukmiṇīpriyanāthāya rugmapītāmbarāya ca ।
satyabhāmāsametāya satkāmāya namo namaḥ ॥ 5॥

pāṇḍavapriyamitrāya pāñcālīmānarakṣiṇe ।
pārthānugrahakārāya pārthasārathaye namaḥ ॥ 6॥

gītopadeśabodhāya viśvarūpaprakāśine ।
vedāntasārasatyāya vedanādāya te namaḥ ॥ 7॥

sadāsaktasurakṣāya sadāmānasavāsine ।
sadātmānandapūrṇāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 8॥

tyāgabrahmasugītāya gītapuṣpārcitāya ca ।
manovākkāyapūrṇāya śrīkṛṣṇāya sumaṅgalam ॥ 9॥

kṛṣṇāṣṭakamidaṃ puṇyaṃ kṛṣṇapreryaṃ śubhapradam ।
puṣpārcanasupadyaṃ ca śrīkṛṣṇasukṛpāvaham ॥ 10॥

iti sadguruśrītyāgarājasvāminaḥ śiṣyayā bhaktayā puṣpayā kṛtaṃ
śrīkṛṣṇāṣṭakaṃ gurau samarpitam ।
Om̃ śubhamastu ।