Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 9 & 10 ( Final )
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
मङ्गलम्
त्यागब्रह्मसुगीताय गीतपुष्पार्चिताय च ।
मनोवाक्कायपूर्णाय श्रीकृष्णाय सुमङ्गलम् ॥ ९॥
மங்களம்
த்யாக³ப்³ரஹ்மஸுகீ³தாய கீ³தபுஷ்பார்சிதாய ச ।
மநோவாக்காயபூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய ஸுமங்க³ளம் ॥ 9॥
Maṅgalam
tyāgabrahmasugītāya gītapuṣpārcitāya ca ।
manovākkāyapūrṇāya śrīkṛṣṇāya sumaṅgalam ॥ 9॥
त्याग-ब्रह्म-सुगीताय - த்யாக³-ப்³ரஹ்ம-ஸுகீ³தாய - தியாகபிரம்மத்தால் நன்கு பாடப்பட்டவருக்கு,
गीत-पुष्प-अर्चिताय च - கீ³த-புஷ்ப-அர்சிதாய ச - கீதமாகிய புஷ்பங்களால் அர்ச்சிக்கப் படுபவருக்கு,
मनो-वाक्-काय-पूर्णाय - மனோ-வாக்-காய-பூர்ணாய - மனம், வாக்கு, உடலில் ( எண்ணம், சொல், செயலில் ) நிறைந்தவருக்கு,
श्रीकृष्णाय - ஶ்ரீக்ருʼஷ்ணாய - ஸ்ரீகிருஷ்ணருக்கு
सुमङ्गलम् - ஸுமங்க³லம் - மங்களம் உண்டாகட்டும்.
பொருள் :
மங்களம்
தியாகபிரம்மத்தால் நன்கு பாடப்பட்டவரும், கீதமாகிய புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரும்; மனம், வாக்கு, உடலில் ( எண்ணம், சொல், செயலில் ) நிறைந்தவருமான ஸ்ரீகிருஷ்ணருக்கு மங்களம் உண்டாகட்டும். 9
# மனத்தில் கண்ணனைப் பற்றிய எண்ணங்களே நிலைபெற்றிருப்பது; வாக்கிலும் கண்ணனைப் பற்றியதான நாமங்களே பிரவகிப்பது; உடலாலும் கண்ணனுக்கான சேவைகளையே செய்வது. இப்படியிருப்பவர்களிடம் கிருஷ்ண பக்தியில் நிறைந்திருக்கிறது.
# பகவானுக்கே ஆசிர்வாதம் என்றவாறு அல்ல. பகவானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற ஒரு எண்ணத்தில், பக்தர்கள் 'பகவான் நன்றாக இருக்க வேண்டும். பகவானுக்கு மங்களம் உண்டாகட்டும். ' என்று வேண்டுகிறார்கள். அன்னைக்குப் பிள்ளையிடம் உள்ள வாத்சல்யத்தைப் போன்றது. பக்தர்களுக்கே வெளிச்சம்.
फलश्रुतिः
कृष्णाष्टकमिदं पुण्यं कृष्णप्रेर्यं शुभप्रदम् ।
पुष्पार्चनसुपद्यं च श्रीकृष्णसुकृपावहम् ॥ १०॥
इति सद्गुरुश्रीत्यागराजस्वामिनः शिष्यया भक्तया पुष्पया कृतं
श्रीकृष्णाष्टकं गुरौ समर्पितम् ।
ப²லஶ்ருதி꞉:
க்ருʼஷ்ணாஷ்டகமித³ம் புண்யம் க்ருʼஷ்ணப்ரேர்யம் ஶுப⁴ப்ரத³ம் ।
புஷ்பார்சநஸுபத்³யம் ச ஶ்ரீக்ருʼஷ்ணஸுக்ருʼபாவஹம் ॥ 10॥
இதி ஸத்³கு³ருஶ்ரீத்யாக³ராஜஸ்வாமிந: ஶிஷ்யயா ப⁴க்தயா புஷ்பயா க்ருʼதம்
ஶ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம் கு³ரௌ ஸமர்பிதம் ।
phalaśrutiḥ
kṛṣṇāṣṭakamidaṃ puṇyaṃ kṛṣṇapreryaṃ śubhapradam ।
puṣpārcanasupadyaṃ ca śrīkṛṣṇasukṛpāvaham ॥ 10॥
iti sadguruśrītyāgarājasvāminaḥ śiṣyayā bhaktayā puṣpayā kṛtaṃ
śrīkṛṣṇāṣṭakaṃ gurau samarpitam ।
पुण्यं - புண்யம்ʼ - புண்ணியத்தையும்
शुभ-प्रदं - ஶுப⁴-ப்ரத³ம்ʼ - மங்களத்தையும் தருவதும்
पुष्प-अर्चन-सुपद्यं च - புஷ்ப-அர்சன-ஸுபத்³யம்ʼ ச - மேலும் புஷ்பார்ச்சனைக்கு ஏதுவாக அமைந்த
कृष्ण-अष्टकं इदं - க்ருʼஷ்ண-அஷ்டகம்ʼ இத³ம்ʼ - கிருஷ்ண அஷ்டகமாகிய இது
कृष्ण-प्रेर्यं - க்ருʼஷ்ண-ப்ரேர்யம்ʼ - ஸ்ரீகிருஷ்ணரைப் பிரேரித்து
श्रीकृष्ण-सुकृपावहम् - ஶ்ரீக்ருʼஷ்ண-ஸுக்ருʼபாவஹம் - கிருஷ்ண கிருபையைக் கொண்டு சேர்ப்பது ( படிப்பவர்களுக்கு ).
பொருள் :
பலன் –
புண்ணியத்தையும் மங்களத்தையும் தருவதும், மேலும் புஷ்பார்ச்சனைக்கு ஏதுவாக அமைந்த கிருஷ்ண அஷ்டகமாகிய இது, ஸ்ரீகிருஷ்ணரைப் பிரேரித்து கிருஷ்ண கிருபையைக் கொண்டு சேர்ப்பது. 10
இவ்விதமாக சற்குரு தியாகராஜ ஸ்வாமியின் சிஷ்யையும் பக்தையுமாகிய புஷ்பாவால் இயற்றப்பட்ட ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம் குருவிடம் ஸமர்ப்பிக்கப்படுகிறது.
# இந்த ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு ச்லோகமும் நம: என்று முடிவதால், ஒவ்வொரு ச்லோகம் சொல்லியவுடன் பூக்களை அர்ப்பிக்க ஏதுவாக அமையும். மேலும் இந்த ஸ்தோத்ரம் முழுமையும் பகவந்நாமாக்களின் நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட பதங்களால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு நாமத்தைக் கொண்டும் புஷ்பார்ச்சனை செய்ய இயலும்.
# இதைப் படிப்பதனால் கிருஷ்ணர் மனமுவந்து, அவரது கிருபை நமக்கு வந்து சேரும். கிருஷ்ண கிருபைக்கு மேல் கிடைப்பதற்கு வேறேதேனும் உண்டோ ? !
No comments:
Post a Comment