Wednesday, 7 August 2019

Sri Varadaraja Stotram - Sloka 5

Sri Varadaraja Stotram - Sloka 5

॥  श्री वरदराज स्तोत्रम्  ॥

|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||

||  ŚRĪ VARADARĀJA STOTRAM  ||

विश्वसेतुर्वेगवतीसेतुर्विश्वाधिकोऽनघः ।
यथोक्तकारिनामाढ्यो यज्ञभृद्यज्ञरक्षकः ॥ ५॥

விஶ்வஸேதுர்வேக³வதீஸேதுர்விஶ்வாதி⁴கோঽநக:⁴ ।
யதோ²க்தகாரிநாமாட்⁴யோ யஜ்ஞப்⁴ருʼத்³யஜ்ஞரக்ஷக: ॥ 5॥

viśvaseturvegavatīseturviśvādhiko'naghaḥ ।
yathoktakārināmāḍhyo yajñabhṛdyajñarakṣakaḥ ॥ 5॥

பொருள் :

உலகத்தைக் காப்பவரும், வேகவதி நதிக்குக் கரை போன்றவரும், உலகங்களுக்கெல்லாம் மேற்பட்டவரும், குற்றமற்றவரும், யதோக்தகாரி என்னும் பெயரில் விளங்குபவரும், யக்ஞத்தில் கொடுக்கும் ஹவிசைப் பெற்றுக்கொள்ளுகிறவரும், யாகத்தைக் காப்பவரும் ( காப்பவருமான வரதராஜப் பெருமாள் நம்மைக் காக்கட்டும். )   5

Meaning :

Oh Lord who is a bridge  to the world , who is the bridge to Vega vathi,

Who is greater  than all   the worlds  , Who  is faultless ,

Who  has the name Yadoukthakari*, who receives the offering during Yajna ,

And    who is the  protector  of  Yajna.   5

विश्व-सेतुः   -   விஶ்வ-ஸேது꞉:  -   தன் புஜம் என்னும் அரணால் உலகைக் காப்பவர்,

वेगवती-सेतुः   -   வேக³வதீ-ஸேது꞉:  -   வேகவதி நதிக்குக் கரை போன்று இருப்பவர்,

विश्व-अधिकः   -   விஶ்வ-அதி⁴க꞉:  -   உலகங்களுக்கெல்லாம் மேற்பட்டவர்,

अनघः   -   அனக⁴꞉:   -   குற்றம்/பாபம் அற்றவர்,

'यथा-उक्त-कारि' नाम-आढ्यः    -   'யதா²-உக்த-காரி' நாம-ஆட்⁴ய꞉:  -  ( யதோக்தகாரி ) 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்'  என்னும் பெயர் படைத்தவர்,

यज्ञ-भृत‌्   -   யஜ்ஞ-ப்⁴ருʼத்   -   யக்ஞத்தில் கொடுக்கும் ஹவிசைப் பெற்றுக்கொள்ளுகிறவர்,

यज्ञ-रक्षकः   -   யஜ்ஞ-ரக்ஷக꞉:   -   யாகத்தைக் காப்பவர்.

No comments:

Post a Comment