Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 1
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪKṚṢṆĀṢṬAKAM ||
परमात्मस्वरूपाय नारायणाय विष्णवे ।
परिपूर्णावताराय श्रीकृष्णाय नमो नमः ॥ १॥
பரமாத்மஸ்வரூபாய நாராயணாய விஷ்ணவே ।
பரிபூர்ணாவதாராய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 1॥
paramātmasvarūpāya nārāyaṇāya viṣṇave ।
paripūrṇāvatārāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 1॥
परमात्म-स्वरूपाय - பரமாத்ம-ஸ்வரூபாய - பரமாத்மா ஆனவருக்கு,
नारायणाय - நாராயணாய - நாராயணருக்கு - உண்டானவைகளுக்கெல்லாம் இருப்பிடமானவருக்கு,
विष्णवे - விஷ்ணவே - விஷ்ணுவிற்கு - எங்கும் வியாபித்திருப்பவருக்கு,
परिपूर्ण-अवताराय - பரிபூர்ண-அவதாராய - பரிபூரண அவதாரமானவருக்கு,
श्रीकृष्णाय - ஶ்ரீக்ருʼஷ்ணாய - ஶ்ரீகிருஷ்ணருக்கு - கரிய நிறத்தவருக்கு,
नमो नमः - நமோ நம: - நமஸ்காரம், நமஸ்காரம்.
பொருள் :
பரமாத்மா ஆனவரும், உண்டானவைகளுக்கெல்லாம் இருப்பிடமானவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், பரிபூரண அவதாரமுமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம். 1
# பரிபூரண அவதாரம் – எல்லா அவதாரங்களிலும் பகவான் ஸகல கல்யாண குணங்களுடனேயே அவதரிக்கிறார்.
இருந்தாலும் ராம கிருஷ்ண அவதாரங்களே பரிபூர்ண அவதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வவதாரங்களிலேயே பகவானுடைய சகல கல்யாண குணங்களும் வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளன. அவதார காலத்தில் அநேக காலங்களுக்கு வாழ்ந்து, அநேக லீலைகளை நிகழ்த்தி, அநேக பக்தர்களுக்கு தரிசனமும் மோக்ஷமும் அழித்து இப்படிப்பட்ட அநேக சரிதங்களை காதாரக் கேட்கும்படி அமைந்த அவதாரங்கள் இவையே.
மத்ஸ்ய, வராஹ, கூர்ம, நரஸிம்ஹாதி அவதாரங்கள் மேற்கூறியவாறு அமைந்ததாகக் காணக்கிடைக்கவில்லை. அதாவது வெளிப்படையாக அமையவில்லை.
No comments:
Post a Comment