Thursday, 31 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 11

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 11

यत्सत्त्वेन जगत्सत्यं यत्प्रकाशेन भात्येतत् ।
यदानन्देन नन्दन्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ६७॥

யத்ஸத்த்வேந ஜக³த்ஸத்யம் யத்ப்ரகாஶேந பா⁴த்யேதத் ।
யதா³நந்தே³ந நந்த³ந்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 67॥

yatsattvena jagatsatyaṃ yatprakāśena bhātyetat ।
yadānandena nandanti tasmai śrīgurave namaḥ ॥ 67॥

यत्-सत्त्वेन  -  யத்-ஸத்த்வேன  -  எதன் இருப்பினால்,

जगत् सत्यं  -  ஜக³த் ஸத்யம்ʼ  -  ஜகத் (உலகம்) உளதாகின்றதோ,

यत्-प्रकाशेन  -  யத்-ப்ரகாஶேன  -  எதன் விளக்கத்தால்,

भाति एतत्  -  பா⁴தி ஏதத்  -  இது விளங்குகின்றதோ,

यत‌्-आनन्देन  -  யத்-ஆனந்தே³ன  -  எதன் ஆனந்தத்தால்,

नन्दन्ति  -  நந்த³ந்தி  -  எல்லாம் ஆனந்திக்கின்றனவோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

11.  எதன் இருப்பினால் ஜகத் (உலகம்) உளதாகின்றதோ, எதன் விளக்கத்தால் இது விளங்குகின்றதோ, எதன் ஆனந்தத்தால் எல்லாம் ஆனந்திக்கின்றனவோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   67

Wednesday, 30 October 2019

ராம மந்திரம் - Rama Mandiram - Introduction

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Introduction

பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாகிய பகவான் எல்லா இடங்களிலும் வசிக்கின்றார். இறைவன் வசிப்பதற்கு உகந்த இடங்கள் எவை/யார் என்பதைப்பற்றி இந்த ஸ்தோத்திரம் இயம்புகிறது. இது வால்மீகி முனிவர், இராமருக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. வேத வியாசர் இயற்றியதான அத்யாத்ம ராமாயணத்தில், அயோத்யா காண்டத்தில், ஆறாவது சர்க்கமாக அமையப் பெற்றுள்ளது.

மந்திரம் என்பது வஸிப்பிடம் என்று பொருளாகிறது.
இராமபிரான் காட்டிற்கு ஏகியபோது பரத்வாஜ முனிவரைக் கண்டு, பின் சித்ரகூடம் செல்லும்  வழியில் அடர்ந்த வ்ருக்ஷங்கள்
நிறைந்ததும், பலவித புஷ்பச்செடிகளால் ரம்யமாகக் காணப்படுவதும், ரிஷிகணங்களால் சூழப்பட்டதுமான வால்மீகி முனிவருடைய ஆசிரமத்தை கண்டார். அங்கு அமர்ந்திருந்த தேஜஸ்வியான வால்மீகி முனிவரைக் கண்டு ராமனும், சீதையும், லக்ஷ்மணரும் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்.

மன்மதனைப் போன்ற ஸுந்தர வடிவத்துடன் கமலக் கண்களில் கனிவு பொங்க ஜடா மகுடதாரியாக எதிரே வந்து சீதா சமேதராக நிற்கின்ற ராமனைப், பார்த்து வால்மீகி முனிவர், ஆச்சர்யத்தில் திகைத்தவராகக் கண்ணிமைக்காமல் பார்த்தார். பிறகு சட்டென்று எழுந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, பரமானந்தத்துடன் ராமனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஜக பூஜ்யராகிய பகவான் ஸ்ரீ ராமசந்திர ப்ரபுவை அர்க்யம், பாத்யம், முதலானவைகளால் முறைப்படி பூஜித்து, மதுரமான பழங்களைச் சாப்பிட செய்து, பக்தியுடன் லாலனம் செய்து மகிழ்ந்தார்.

அப்போது ராமன் மிக்க வினையத்துடன் கைகூப்பியபடியே வால்மீகி முனிவரைப் பார்த்துக் கூறினார். "பகவன் நாங்கள், பிதாவினுடைய ஆக்ஞையின் படியே தண்டாகாரண்யம் வந்திருக்கின்றோம். தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள். நாங்கள் கூற வேண்டிய அவசியமே இல்லையல்லாவா? இங்கே
வஸிப்பதற்கு ஸுகமான ஸ்தானம் எது என்பதை எங்களுக்குக்
கூறியருள வேண்டும். தாங்கள் கூறுகின்ற இடத்திலே, நான்
சீதையுடன் கூடச் சில காலம் தங்கி இருக்கலாமென நினைக்கின்றேன் '  என்ற ஸ்ரீ ராமனுடைய பணிவான சொற்களைக்கேட்டு, வால்மீகி முனிவர் தனக்குத்தானே மெதுவாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறலானார்.

ஹே! ரகுவீர  !ஸர்வலோகங்களுக்கும், தாங்களே உத்தமவாஸஸ்தலமாக இருக்கின்றீர். மேலும் ஸகல ஜீவராசிகளும், தங்களுக்கு வஸிக்கும் இல்லமாக இருக்கின்றன. இவைகள் மிகவும் சாதாரணமானவைகளே. ஆனால் ஸீதாதேவியுடன் ஸுகமாக வஸிப்பதற்கு ச்ரேஷ்டமான ஸ்தானம் வேண்டுமென்று கேட்டீர்களல்லவா? முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டுள்ள அந்த இருப்பிடத்தை இப்போது கூறுகின்றேன் கேளுங்கள்.

இதன் பின்னர் ஸ்தோத்திரம் தொடங்குகிறது.

॥ राम मन्दिरम् ॥

शान्तानां समदृष्टीनामद्वेष्टॄणां च जन्तुषु ।
त्वामेव भजतां नित्यं हृदयं तेऽधिमन्दिरम् ॥ ५४॥

धर्माधर्मान् परित्यज्य त्वामेव भजतोऽनिशम् ।
सीतया सह ते राम तस्य हृत्सुखमन्दिरम् ॥ ५५॥

त्वन्मन्त्रजापको यस्तु त्वामेव शरणं गतः ।
निर्द्वन्द्वो निःस्पृहस्तस्य हृदयं ते सुमन्दिरम् ॥ ५६॥

निरहङ्कारिणः शान्ता ये रागद्वेषवर्जिताः ।
समलोष्टाश्मकनकास्तेषां ते हृदयं गृहम् ॥ ५७॥

त्वयि दत्तमनोबुद्धिर्यः सन्तुष्टः सदा भवेत् ।
त्वयि सन्त्यक्तकर्मा यस्तन्मनस्ते शुभं गृहम् ॥ ५८॥

यो न द्वेष्ट्यप्रियं प्राप्य प्रियं प्राप्य न हृष्यति ।
सर्वं मायेति निश्चित्य त्वां भजेत्तन्मनो गृहम् ॥ ५९॥

षड्भावादिविकारान् यो देहे पश्यति नात्मनि ।
क्षुत्तृट् सुखं भयं दुःखं प्राणबुद्ध्योर्निरीक्षते ॥ ६०॥

संसारधर्मैर्निर्मुक्तस्तस्य ते मानसं गृहम् ॥ ६१॥

पश्यन्ति ये सर्वगुहाशयस्थं
त्वां चिद्घनं सत्यमनन्तमेकम् ।
अलेपकं सर्वगतं वरेण्यं
तेषां हृदब्जे सह सीतया वस ॥ ६२॥

निरन्तराभ्यासदृढीकृतात्मनां
त्वत्पादसेवापरिनिष्ठितानाम् ।
त्वन्नामकीर्त्या हतकल्मषाणां
सीतासमेतस्य गृहं हृदब्जे ॥ ६३॥

॥ ராம மந்தி³ரம் ॥

ஶாந்தாநாம் ஸமத்³ருʼஷ்டீநாமத்³வேஷ்ட்ரூʼணாம் ச ஜந்துஷு ।
த்வாமேவ ப⁴ஜதாம் நித்யம் ஹ்ருʼத³யம் தேঽதி⁴மந்தி³ரம் ॥ 54॥

த⁴ர்மாத⁴ர்மாந் பரித்யஜ்ய த்வாமேவ ப⁴ஜதோঽநிஶம் ।
ஸீதயா ஸஹ தே ராம தஸ்ய ஹ்ருʼத்ஸுக²மந்தி³ரம் ॥ 55॥

த்வந்மந்த்ரஜாபகோ யஸ்து த்வாமேவ ஶரணம் க³த: ।
நிர்த்³வந்த்³வோ நி:ஸ்ப்ருʼஹஸ்தஸ்ய ஹ்ருʼத³யம் தே ஸுமந்தி³ரம் ॥ 56॥

நிரஹங்காரிண: ஶாந்தா யே ராக³த்³வேஷவர்ஜிதா: ।
ஸமலோஷ்டாஶ்மகநகாஸ்தேஷாம் தே ஹ்ருʼத³யம் க்³ருʼஹம் ॥ 57॥

த்வயி த³த்தமநோபு³த்³தி⁴ர்ய: ஸந்துஷ்ட: ஸதா³ ப⁴வேத் ।
த்வயி ஸந்த்யக்தகர்மா யஸ்தந்மநஸ்தே ஶுப⁴ம் க்³ருʼஹம் ॥ 58॥

யோ ந த்³வேஷ்ட்யப்ரியம் ப்ராப்ய ப்ரியம் ப்ராப்ய ந ஹ்ருʼஷ்யதி ।
ஸர்வம் மாயேதி நிஶ்சித்ய த்வாம் ப⁴ஜேத்தந்மநோ க்³ருʼஹம் ॥ 59॥

ஷட்³பா⁴வாதி³விகாராந் யோ தே³ஹே பஶ்யதி நாத்மநி ।
க்ஷுத்த்ருʼட் ஸுக²ம் ப⁴யம் து:³க²ம் ப்ராணபு³த்³த்⁴யோர்நிரீக்ஷதே ॥ 60॥

ஸம்ஸாரத⁴ர்மைர்நிர்முக்தஸ்தஸ்ய தே மாநஸம் க்³ருʼஹம் ॥ 61॥

பஶ்யந்தி யே ஸர்வகு³ஹாஶயஸ்த²ம்
த்வாம் சித்³க⁴நம் ஸத்யமநந்தமேகம் ।
அலேபகம் ஸர்வக³தம் வரேண்யம்
தேஷாம் ஹ்ருʼத³ப்³ஜே ஸஹ ஸீதயா வஸ ॥ 62॥

நிரந்தராப்⁴யாஸத்³ருʼடீ⁴க்ருʼதாத்மநாம்

த்வத்பாத³ஸேவாபரிநிஷ்டி²தாநாம் ।
த்வந்நாமகீர்த்யா ஹதகல்மஷாணாம்

ஸீதாஸமேதஸ்ய க்³ருʼஹம் ஹ்ருʼத³ப்³ஜே ॥ 63॥

॥ RĀMA MANDIRAM ॥

śāntānāṃ samadṛṣṭīnāmadveṣṭṝṇāṃ ca jantuṣu ।
tvāmeva bhajatāṃ nityaṃ hṛdayaṃ te'dhimandiram ॥ 54॥

dharmādharmān parityajya tvāmeva bhajato'niśam ।
sītayā saha te rāma tasya hṛtsukhamandiram ॥ 55॥

tvanmantrajāpako yastu tvāmeva śaraṇaṃ gataḥ ।
nirdvandvo niḥspṛhastasya hṛdayaṃ te sumandiram ॥ 56॥

nirahaṅkāriṇaḥ śāntā ye rāgadveṣavarjitāḥ ।
samaloṣṭāśmakanakāsteṣāṃ te hṛdayaṃ gṛham ॥ 57॥

tvayi dattamanobuddhiryaḥ santuṣṭaḥ sadā bhavet ।
tvayi santyaktakarmā yastanmanaste śubhaṃ gṛham ॥ 58॥

yo na dveṣṭyapriyaṃ prāpya priyaṃ prāpya na hṛṣyati ।
sarvaṃ māyeti niścitya tvāṃ bhajettanmano gṛham ॥ 59॥

ṣaḍbhāvādivikārān yo dehe paśyati nātmani ।
kṣuttṛṭ sukhaṃ bhayaṃ duḥkhaṃ prāṇabuddhyornirīkṣate ॥ 60॥

saṃsāradharmairnirmuktastasya te mānasaṃ gṛham ॥ 61॥

paśyanti ye sarvaguhāśayasthaṃ
tvāṃ cidghanaṃ satyamanantamekam ।
alepakaṃ sarvagataṃ vareṇyaṃ
teṣāṃ hṛdabje saha sītayā vasa ॥ 62॥

nirantarābhyāsadṛḍhīkṛtātmanāṃ
tvatpādasevāpariniṣṭhitānām ।
tvannāmakīrtyā hatakalmaṣāṇāṃ
sītāsametasya gṛhaṃ hṛdabje ॥ 63॥

Saturday, 26 October 2019

Obeisance to Shri Hanuman - 6 ( Final )

Obeisance to Shri Hanuman - 6 ( Final )

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

यत्र यत्र रघुनाथ-कीर्तनं
      तत्र तत्र कृत-मस्तकाञ्जलिम् ।
बाष्प-वारि-परिपूर्ण-लोचनं
      मारुतिं नमत राक्षसान्तकम् ॥ ६॥

யத்ர யத்ர ரகு⁴நாத²-கீர்தனம்ʼ
    தத்ர தத்ர க்ருʼத-மஸ்தகாஞ்ஜலிம் |
பா³ஷ்ப-வாரி-பரிபூர்ண-லோசனம்ʼ
    மாருதிம்ʼ நமத ராக்ஷஸாந்தகம் ||  6||

yatra yatra raghunātha-kīrtanaṃ
      tatra tatra kṛta-mastakāñjalim ।
bāṣpa-vāri-paripūrṇa-locanaṃ
      mārutiṃ namata rākṣasāntakam ॥ 6॥

பிரதி பத அர்த்தம்  :

यत्र यत्र  -  யத்ர யத்ர  -   எங்கெங்கே ,

रघुनाथ-कीर्तनं  -  ரகு⁴நாத²-கீர்தனம்ʼ  -   ஸ்ரீராகவன் ஸ்துதியோ,

तत्र तत्र  -  தத்ர தத்ர  -   அங்கங்கே,

कृत-मस्तक अञ्जलिम्  -  க்ருʼத-மஸ்தக அஞ்ஜலிம்  -   தலைமேல் கைகூப்பி வணங்கியநிலையில் இருப்பவரும்,

बाष्प-वारि-परिपूर्ण-लोचनं  -  பா³ஷ்ப-வாரி-பரிபூர்ண-லோசனம்ʼ   -   ஆனந்தக் கண்ணீரால் நிறைந்த கண்களையுடையவரும்,

राक्षस अन्तकम्  -  ராக்ஷஸ அந்தகம்   -   அரக்கருக்குக் காலனுமான,

मारुतिं  -  மாருதிம்ʼ   -    வாயுபுத்திரரை,

नमत  -  நமத   -   வணங்குங்கள்.

பொருள் :

எங்கெங்கு பரமபுருஷனான ஸ்ரீராகவனுடைய ஸ்தோத்ரம் நடக்கின்றதோ, அங்கங்கு ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராய் சிரஸில் கைகூப்பிப் பணிகின்றவரும், இராக்ஷஸருக்கு அந்தகனாயும் இருக்கின்ற வாயுகுமாரரை ( ஹநுமானை ) வணங்குங்கள்.   6

Meaning  :

Bow to Hanuman, the slayer of the demons, who is present with folded hands raised to his head, his eyes brimming with tears of joy, whenever the name of Shri Rama is uttered with devotion.   6

Friday, 25 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 20

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 20

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

प्रणमन्ति च ये त्वां हि प्रभाते तु नरा भुवि ।
न तेषां दुर्लभं किंचित्पुत्रतो धनतोपि वा ।। 20 ।।

ப்ரணமந்தி ச யே த்வாம்ʼ ஹி ப்ரபா⁴தே து நரா பு⁴வி ।
ந தேஷாம்ʼ து³ர்லப⁴ம்ʼ கிஞ்சித்புத்ரதோ த⁴னதோபி வா ॥ 20 ॥

praṇamanti ca ye tvāṃ hi prabhāte tu narā bhuvi ।
na teṣāṃ durlabhaṃ kiṃcitputrato dhanatopi vā ।। 20 ।।

பொருள் :

பூமியில் நாள் உதிக்கும்போது {அதிகாலையில்} உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை. {துயர் களையும் பொருட்டு உன்னை நினைப்பவர்களுக்கும், விடியற்காலையில் உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகளும் செல்வமும் கிடைப்பது அரிதன்று}.   20

Meaning :

By them that call upon thee for the relief of their burdens at daybreak on Earth, there is nothing that cannot be attained in respect either of offspring or wealth.   20

Thursday, 24 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 10

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 10

स पिता स च मे माता स बन्धुः स च देवता ।
संसारमोहनाशाय तस्मै श्रीगुरवे नमः ॥ ६६॥

ஸ பிதா ஸ ச மே மாதா ஸ ப³ந்து:⁴ ஸ ச தே³வதா ।
ஸம்ஸாரமோஹநாஶாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 66॥

sa pitā sa ca me mātā sa bandhuḥ sa ca devatā ।
saṃsāramohanāśāya tasmai śrīgurave namaḥ ॥ 66॥

स पिता  -  ஸ பிதா  -  பிதா அவர்,

स च मे माता  -  ஸ ச மே மாதா  -  என் மாதா அவர்,

स बन्धुः  -  ஸ ப³ந்து:⁴  -  பந்து (உறவினர்) அவர்,स च देवता  -  ஸ ச தே³வதா  -  தெய்வமும் அவரே,

संसार-मोह-नाशाय  -  ஸம்ஸார-மோஹ-நாஶாய  -  ஸம்ஸார மோஹத்தினைக் கெடுக்கும்,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

10.  பிதா அவர்; என் மாதா அவர்; பந்து அவர்; தெய்வமும் அவரே; ஸம்ஸார மோஹத்தினைக் கெடுக்கும் அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   66

பாடபேதம் :-

त्वं पिता त्वं च मे माता त्वं बन्धुस्त्वं च देवता ।
संसारभीतिभङ्गाय तस्मै श्रीगुरवे नमः ॥

த்வம்ʼ பிதா த்வம்ʼ ச மே மாதா த்வம்ʼ ப³ந்து⁴ஸ்த்வம்ʼ ச தே³வதா ।
ஸம்ʼஸாரபீ⁴திப⁴ங்கா³ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ ॥

பொருள் :

நீரே என் தந்தை, நீரே என் தாய், நீரே உறவு, நீரே தெய்வம், பிறவியின் பயத்தைப் போக்கும் அப்படிப்பட்ட குருவாகிய உமக்கு நமஸ்காரம்.

Saturday, 19 October 2019

Obeisance to Shri Hanuman - 5

Obeisance to Shri Hanuman - 5

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

आञ्जनेयमतिपाटलाननं
       काञ्चनाद्रि-कमनीय-विग्रहम् ।
पारिजात-तरु-मूल-वासिनं
       भावयामि पवमान-नन्दनम् ॥ ५॥

ஆஞ்ஜனேயமதிபாடலானனம்ʼ
     காஞ்சனாத்³ரி-கமனீய-விக்³ரஹம் |
பாரிஜாத-தரு-மூல-வாஸினம்ʼ
     பா⁴வயாமி பவமான-நந்த³னம் ||  5||

āñjaneyamatipāṭalānanaṃ
       kāñcanādri-kamanīya-vigraham ।
pārijāta-taru-mūla-vāsinaṃ
       bhāvayāmi pavamāna-nandanam ॥ 5॥

பிரதி பத அர்த்தம்  :

अति-पाटल-आननं  -  அதி-பாடல-ஆனனம்ʼ  -  மிகச்-சிவந்த- முகமுடையவரும் ;

काञ्चन-अद्रि-कमनीय-विग्रहम्  -  காஞ்சன-அத்³ரி-கமனீய-விக்³ரஹம்  -  ஸ்வர்ணம் போன்ற அழகானதும், மலை  போன்ற பெரிய உறுதியான சரீரம் உடையவரும் ;

पारिजात-तरु-मूल-वासिनं  -  பாரிஜாத-தரு-மூல-வாஸினம்ʼ  -  கற்பக விருக்ஷத்தின் அடியில் வஸிப்பவரும் ;

आञ्जनेयं  -  ஆஞ்ஜனேயம்ʼ  -  அஞ்ஜனையிடத்தினின்று உண்டானவரும் ;

पवमान-नन्दनम्  -  பவமான-நந்த³னம்  -  வாயுபுத்ரருமான ( ஹநுமானை ) ;

भावयामि  -  பா⁴வயாமி  -  மனதால் த்யானிக்கிறேன்.

பொருள் :

மிகச்சிவந்த முகமுடையவரும், ஸ்வர்ணம் போன்ற அழகானதும், மலை  போன்ற பெரிய உறுதியான சரீரம் உடையவரும், கற்பக விருக்ஷத்தின் அடியில் வஸிப்பவரும்,  அஞ்ஜனையிடத்தினின்று உண்டானவரும்,  வாயுபுத்ரருமான ( ஹநுமானை ), மனதால் த்யானிக்கிறேன்.   5

Meaning  :

I meditate on the beloved son of Vayu, Anjaneya, with bright-red countenance and body attractive as a golden mountain, who lives under the Parijata tree.   5

Friday, 18 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 19

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 19

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

कृतानुयात्रा भूतैस्त्वं वरदा कामचारिणी।
भारावतारे ये च त्वां संस्मरिष्यन्ति मानवाः ।। 19 ।।

க்ருʼதானுயாத்ரா பூ⁴தைஸ்த்வம்ʼ வரதா³ காமசாரிணீ।
பா⁴ராவதாரே யே ச த்வாம்ʼ ஸம்ʼஸ்மரிஷ்யந்தி மானவா꞉: ॥ 19 ॥

kṛtānuyātrā bhūtaistvaṃ varadā kāmacāriṇī।
bhārāvatāre ye ca tvāṃ saṃsmariṣyanti mānavāḥ ।। 19 ।।

பொருள் :

விரும்பிய இடம் செல்லும் திறன் கொண்டு, வழிபாட்டினருக்கு வரங்கள் அளிப்பவளான உனது பயணங்களில், பிரம்மனும் பிற தேவர்களும் எப்போதும் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். பாரங்களை அகற்றுபவள் என உன்னை அழைப்பவர்களுக்கும், (வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை.)   19

Meaning :

Capable of going everywhere at will, and bestowing boons on thy devotees, thou art ever followed in thy journeys by Brahma and the other gods. By them that call upon thee for the relief of their burdens, there is nothing that cannot be attained in respect either of offspring or wealth.   19

Thursday, 17 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 9

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 9

निर्गुणं निर्मलं शान्तं जंगमं स्थिरमेव च ।
व्याप्तं येन जगत्सर्वं तस्मै श्रीगुरवे नमः ॥ ६५॥

நிர்கு³ணம் நிர்மலம் ஶாந்தம் ஜங்க³மம் ஸ்தி²ரமேவ ச ।
வ்யாப்தம் யேந ஜக³த்ஸர்வம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 65॥

nirguṇaṃ nirmalaṃ śāntaṃ jaṃgamaṃ sthirameva ca ।
vyāptaṃ yena jagatsarvaṃ tasmai śrīgurave namaḥ ॥ 65॥

निर्गुणं  -  நிர்கு³ணம்ʼ  -  குணமற்றவராயும்,

निर्मलं  -  நிர்மலம்ʼ  -  மாசற்றவராயும்,

शान्तं एव च  -  ஶாந்தம்ʼ ஏவ ச  -  சாந்தராயும் உள்ள,

येन  -  யேன  -  எவரால்,

जङ्गमं स्थिरं  -  ஜங்க³மம்ʼ ஸ்தி²ரம்ʼ  -  அசைவதும் அசையாததுமான,

जगत्-सर्वं  -  ஜக³த்-ஸர்வம்ʼ  -  இவ்வுலகனைத்தும்,

व्याप्तं  -  வ்யாப்தம்ʼ  -  வியாபிக்கப்பட்டுள்ளதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

9.  குணமற்றவராயும் மாசற்றவராயும் சாந்தராயும் உள்ள எவரால், அசைவதும் அசையாததுமான இவ்வுலகனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ, அந்த ( அத்தகைய - பரம்பொருள் வடிவாகிய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   65

Saturday, 12 October 2019

Obeisance to Shri Hanuman - 4

Obeisance to Shri Hanuman - 4

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

मनोजवं मारुत-तुल्य-वेगं
     जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठम् ।
वातात्मजं वानर-यूथ-मुख्यं
     श्रीराम-दूतं शिरसा नमामि ॥ ४॥

மனோஜவம்ʼ மாருத-துல்ய-வேக³ம்ʼ
   ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம் |
வாதாத்மஜம்ʼ வானர-யூத²-முக்²யம்ʼ
   ஶ்ரீராம-தூ³தம்ʼ ஶிரஸா நமாமி ||  4||

manojavaṃ māruta-tulya-vegaṃ
     jitendriyaṃ buddhimatāṃ variṣṭham ।
vātātmajaṃ vānara-yūtha-mukhyaṃ
     śrīrāma-dūtaṃ śirasā namāmi ॥ 4॥

பிரதி பத அர்த்தம்  :

मनोजवं   -   மனோஜவம்ʼ   -  மனதின் வேகம் போன்ற வேகமுடையவரும்,

मारुत-तुल्य-वेगं   -   மாருத-துல்ய-வேக³ம்ʼ   -   வாயுவுக்கு நிகரான வேகமுடையவரும்,

जितेन्द्रियं   -   ஜிதேந்த்³ரியம்ʼ   -   ஜயிக்கப்பட்ட இந்த்ரியங்களை உடையவரும்,

बुद्धिमतां   -   பு³த்³தி⁴மதாம்ʼ   -   மதியுடையோருக்குள்

वरिष्ठम्   -   வரிஷ்ட²ம்   -   சிறந்தவரும்,

वातात्मजं   -   வாதாத்மஜம்ʼ   -   வாயு புத்திரரும்,

वानर-यूथ-मुख्यं   -   வானர-யூத²-முக்²யம்ʼ   -   வாநரத் தலைவருக்குள் முக்யரும்,

श्रीराम-दूतं   -   ஶ்ரீராம-தூ³தம்ʼ   -    ஸ்ரீ ராகவதூதருமான  ( ஹநுமானை ),

शिरसा   -   ஶிரஸா   -   தலையால் ,

नमामि   -   நமாமி   -    வணங்குகிறேன்.

பொருள் :

மனதின் வேகம் போன்ற வேகமுடையவரும், வாயுவுக்கு நிகரான வேகமுடையவரும், ஜயிக்கப்பட்ட இந்த்ரியங்களை உடையவரும், மதியுடையோருக்குள் சிறந்தவரும், வாயு புத்திரரும், வாநரத் தலைவருக்குள் முக்யரும், ஸ்ரீ ராகவதூதருமான  ( ஹநுமானை ) தலையால் வணங்குகிறேன்.   4

Meaning  :

I bow with bent head to him who is quick of mind, fast as the wind, the conqueror of the sense organs, the best among the wise, the son of Vayu, chief of the monkey hordes, and the messenger of Shri Rama.   4

Friday, 11 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 18

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 18

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

विन्ध्ये चैव नगश्रेष्ठे तव स्थानं हि शाश्वतम्।
कालि कालि महाकालि शीधुमांसपशुप्रिये ।। 18 ।।

விந்த்⁴யே சைவ நக³ஶ்ரேஷ்டே² தவ ஸ்தா²னம்ʼ ஹி ஶாஶ்வதம்।
காலி காலி மஹாகாலி ஶீது⁴மாம்ʼஸபஶுப்ரியே ॥ 18 ॥

vindhye caiva nagaśreṣṭhe tava sthānaṃ hi śāśvatam।
kāli kāli mahākāli śīdhumāṃsapaśupriye ।। 18 ।।

பொருள் :

மலைகளில் முதன்மையான விந்தியமே உனது நித்திய வசிப்பிடமாகும். ஓ! காளி, ஓ காளி, மது, ஊண் {இறைச்சி}, {ஆடு, கோழி முதலிய} விலங்கு பலிகள் ஆகியவற்றில் மகிழும் பெரும் காளி {மஹாகாளி} நீயே.   18

Meaning :

Thy eternal abode is on Vindhya--that foremost of mountains. O Kali, O Kali, thou art the great Kali, ever fond of wine and meat and animal sacrifice.   18

Thursday, 10 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 8

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 8

चैतन्यं शाश्वतं शांतं व्योमातीतं निरञ्जनम् ।
नादबिन्दुकलातीतं तस्मै श्रीगुरवे नमः ॥ ६४॥

சைதந்யம் ஶாஶ்வதம் ஶாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம் ।
நாத³பி³ந்து³கலாதீதம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 64॥

caitanyaṃ śāśvataṃ śāṃtaṃ vyomātītaṃ nirañjanam ।
nādabindukalātītaṃ tasmai śrīgurave namaḥ ॥ 64॥

चैतन्यं  -  சைதன்யம்ʼ  -  உயிர்ப்பொருளாயும்,

शाश्वतं  -  ஶாஶ்வதம்ʼ  -  அழிவற்றதாயும்,

शांतं  -  ஶாந்தம்ʼ  -  அமைதியாயும்,

व्योम-अतीतं  -  வ்யோம-அதீதம்ʼ  -  ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும்,

निरञ्जनं  -  நிரஞ்ஜனம்ʼ  -  மாசற்றதாயும்,

नाद-बिन्दु-कला-अतीतं   -  நாத³-பி³ந்து³-கலா-அதீதம்ʼ  -  நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயும் உள்ள,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

8. சைதன்யமாயும் (உயிர்ப்பொருளாயும்) , சாசுவதமாயும் ( அழிவற்றதாயும் ), சாந்தமாயும் (அமைதியாயும்), ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும்,  மாசற்றதாயும்; நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயுமுள்ள அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   64

Tuesday, 8 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 17

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 17

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

जया त्वं विजया चैव संग्रामे च जयप्रदा।
ममापि विजयं देहि वरदा त्वं च सांप्रतम् ।। 17 ।।

ஜயா த்வம்ʼ விஜயா சைவ ஸங்க்³ராமே ச ஜயப்ரதா³।
மமாபி விஜயம்ʼ தே³ஹி வரதா³ த்வம்ʼ ச ஸாம்ப்ரதம் ॥ 17 ॥

jayā tvaṃ vijayā caiva saṃgrāme ca jayapradā।
mamāpi vijayaṃ dehi varadā tvaṃ ca sāṃpratam ।। 17 ।।

பொருள் :

ஜெயமும், விஜயமும் நீயே. போர்க்களத்தில் வெற்றியை அளிப்பவள் நீயே. ஓ! தேவி, எனக்கு வெற்றியைக் {ஜெயத்தைக்} கொடுப்பாயாக. துயரமிக்க இந்த நேரத்தில் எனக்கு வரங்களையும் {விஜயத்தையும்} கொடுப்பாயாக.   17

Meaning :

Thou art Jaya and Vijaya, and it is thou that givest victory in battle. Grant me victory, O Goddess, and give me boons also at this hour of distress. . 17

Monday, 7 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 16

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 16

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

त्रैलोक्यरक्षणार्थाय महिषासुरनाशिनि ।
प्रसन्ना मे सुरश्रेष्ठे दयां कुरु शिवा भव ।। 16 ।।

த்ரைலோக்யரக்ஷணார்தா²ய மஹிஷாஸுரனாஶினி ।
ப்ரஸன்னா மே ஸுரஶ்ரேஷ்டே² த³யாம்ʼ குரு ஶிவா ப⁴வ ॥ 16 ॥

trailokyarakṣaṇārthāya mahiṣāsuranāśini ।
prasannā me suraśreṣṭhe dayāṃ kuru śivā bhava ।। 16 ।।

பொருள் :

ஓ! மஹிஷாசுரனைக் [1] கொன்றவளே,  மூவுலகங்களின் பாதுகாப்புக்காகத் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே. ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவளே, எனக்கு உனது அருளைத் தருவாயாக, என்னிடம் கருணை காட்டுவாயாக, நான் பெறும் மங்கலங்கள் அனைத்துக்கும் நீயே ஊற்றுக்கண்ணாவாயாக.   16

Meaning :

O thou that hast slain the Mahishasura, that thou art praised and worshipped by the gods for the protection of the three worlds. O thou foremost of all deities, extend to me thy grace, show me thy mercy, and be thou the source of blessings to me.  16

Sunday, 6 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 15

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 15

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

कौमारं व्रतमास्थाय त्रिदिवं पावितं त्वया।
तेन त्वं स्तूयसे देवि त्रिदशैः पूज्यसेऽपि च ।। 15 ।।

கௌமாரம்ʼ வ்ரதமாஸ்தா²ய த்ரிதி³வம்ʼ பாவிதம்ʼ த்வயா।
தேன த்வம்ʼ ஸ்தூயஸே தே³வி த்ரித³ஶை꞉: பூஜ்யஸே(அ)பி ச ॥ 15 ॥

kaumāraṃ vratamāsthāya tridivaṃ pāvitaṃ tvayā।
tena tvaṃ stūyase devi tridaśaiḥ pūjyase'pi ca ।। 15 ।।

பொருள் :

நித்திய கன்னியாக நோன்பு நோற்று {கௌமார விரதம் இருந்து}, தேவலோகங்களைப் பரிசுத்தமாக்கியவள் நீயே. ஆதலால் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே.   15

Meaning :

thou hast sanctified the celestial regions by adopting the vow of perpetual maiden-hood. It is for this, that thou art praised and worshipped by the gods,.  15

Saturday, 5 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 14

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 14

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

विभ्राजसे चाऽऽबद्धेन भोगेनेवेह मन्दरः।
ध्वजेन शिखिपिच्छानामुच्छ्रितेन विराजसे ।। 14 ।।

விப்⁴ராஜஸே சா(ஆ)ப³த்³தே⁴ன போ⁴கே³னேவேஹ மந்த³ர꞉:।
த்⁴வஜேன ஶிகி²பிச்சா²னாமுச்ச்²ரிதேன விராஜஸே ॥ 14 ॥

vibhrājase cā''baddhena bhogeneveha mandaraḥ।
dhvajena śikhipicchānāmucchritena virājase ।। 14 ।।

பொருள் :

பாம்புகளால் சூழப்பட்ட மந்தர மலை போல விளங்குபவள் நீயே. தலையில் நிமிர்ந்து நிற்கும் மயில் தோகைகளால் அதிகமாகப் பிரகாசிப்பவள் நீயே.  14

Meaning :

thou shinest like the Mandara mountain encircled with snakes. Thou shinest also with peacock-plumes standing erect on thy head,   14

Friday, 4 October 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 13

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 13

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

मुकुटेन विचित्रेण केशबन्धेन शोभिना।
भुजङ्गाभोगवासेन श्रोणिसूत्रेण राजता ।। 13 ।।

முகுடேன விசித்ரேண கேஶப³ந்தே⁴ன ஶோபி⁴னா।
பு⁴ஜங்கா³போ⁴க³வாஸேன ஶ்ரோணிஸூத்ரேண ராஜதா ॥ 13 ॥

mukuṭena vicitreṇa keśabandhena śobhinā।
bhujaṅgābhogavāsena śroṇisūtreṇa rājatā ।। 13 ।।

பொருள் :

சிறந்த கிரீடமும், பாம்பு உடல்களால் செய்யப்பட்ட உடையுடன் கூடிய அழகிய பின்னலும், உருண்டு வளைந்த பிரகாசமான இடைகளும் கொண்டவள் நீயே.   13

Meaning :

With an excellent diadem and beautiful braid with robes made of the bodies of snakes, and with also the brilliant girdle round thy hips,   13