Thursday, 17 October 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 9

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 9

निर्गुणं निर्मलं शान्तं जंगमं स्थिरमेव च ।
व्याप्तं येन जगत्सर्वं तस्मै श्रीगुरवे नमः ॥ ६५॥

நிர்கு³ணம் நிர்மலம் ஶாந்தம் ஜங்க³மம் ஸ்தி²ரமேவ ச ।
வ்யாப்தம் யேந ஜக³த்ஸர்வம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 65॥

nirguṇaṃ nirmalaṃ śāntaṃ jaṃgamaṃ sthirameva ca ।
vyāptaṃ yena jagatsarvaṃ tasmai śrīgurave namaḥ ॥ 65॥

निर्गुणं  -  நிர்கு³ணம்ʼ  -  குணமற்றவராயும்,

निर्मलं  -  நிர்மலம்ʼ  -  மாசற்றவராயும்,

शान्तं एव च  -  ஶாந்தம்ʼ ஏவ ச  -  சாந்தராயும் உள்ள,

येन  -  யேன  -  எவரால்,

जङ्गमं स्थिरं  -  ஜங்க³மம்ʼ ஸ்தி²ரம்ʼ  -  அசைவதும் அசையாததுமான,

जगत्-सर्वं  -  ஜக³த்-ஸர்வம்ʼ  -  இவ்வுலகனைத்தும்,

व्याप्तं  -  வ்யாப்தம்ʼ  -  வியாபிக்கப்பட்டுள்ளதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

9.  குணமற்றவராயும் மாசற்றவராயும் சாந்தராயும் உள்ள எவரால், அசைவதும் அசையாததுமான இவ்வுலகனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ, அந்த ( அத்தகைய - பரம்பொருள் வடிவாகிய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   65

No comments:

Post a Comment