Friday, 12 February 2016

Sri Vishnu Shodasha Nama Stotram

Sri Vishnu Shodasha Nama Stotram :

( in Sanskrit, English transliteration & meaning, Tamil transliteration & meaning )



॥ श्रीविष्णोः षोडशनामस्तोत्रम् ॥


औषधे चिन्तयेद्विष्णुं भोजने च जनार्दनम् ।

शयने पद्मनाभं च विवाहे च प्रजापतिम् ॥ १॥

युद्धे चक्रधरं देवं प्रवासे च त्रिविक्रमम् ।

नारायणं तनुत्यागे श्रीधरं प्रियसङ्गमे ॥ २॥

दुःस्वप्ने स्मर गोविन्दं सङ्कटे मधुसूदनम् ।

कानने नारसिंहं च पावके जलशायिनम् ॥ ३॥

जलमध्ये वराहं च पर्वते रघुनन्दनम् ।

गमने वामनं चैव सर्वकार्येषु माधवम् ॥ ४॥

षोडशैतानि नामानि प्रातरूत्थाय यः पठेत् ।

सर्वपापविर्निमुक्तो विष्णुलोके महीयते ॥ ५॥

। इति श्रीविष्णोः षोडशनामस्तोत्रं सम्पूर्णम् ।


shrIviShNoH ShoDashanAmastotram


auShadhe chintayedviShNuM bhojane cha janArdanam |
shayane padmanAbhaM cha vivAhe cha prajApatim || 1||
yuddhe chakradharaM devaM pravAse cha trivikramam |
nArAyaNaM tanutyAge shrIdharaM priyasa.ngame || 2||
duHsvapne smara govi.ndaM sa.nkaTe madhusUdanam |
kAnane nArasi.nhaM cha pAvake jalashAyinam || 3||
jalamadhye varAhaM cha parvate raghunandanam |
gamane vAmanaM chaiva sarvakAryeShu mAdhavam || 4||
ShoDashaitAni nAmAni prAtarUtthAya yaH paThet |
sarvapApavirnimukto viShNuloke mahIyate || 5||

| iti shrIviShNoH ShoDashanAmastotraM sampUrNam |

English meaning :

Sree Vishnu Shodasa Nama Stotram :
Think him as Vishnu while taking medicine,
  1. As Janardhana while eating food,
  2. As Padmanabha while in bed,
  3. As Prajapathi at time of marriage,
  4. As Chakra dhara while engaged in war,
  5. As Trivikrama while on travel,
  6. As Narayana on death bed,
  7. As Sreedhara while meeting with the beloved,
  8. As Govinda while tossing with bad dreams,
  9. As Madhu Sudhana while in trouble,
  10. As Narasimha while in the forest,
  11. As Jala Sayina while fire is ravaging,
  12. As Varaha while struggling in water,
  13. As Raghu nandana while lost in a mountain,
  14. As Vamana while on the move,
  15. And as Madhava while doing everything.

soon as one wakes up in the morn,
If these sixteen names are read,
He would be bereft of all sins,
And reach the world of Vishnu at the end.


॥ ஶ்ரீவிஷ்ணோ: ஷோட³ஶநாமஸ்தோத்ரம் ॥

ஔஷதே⁴ சிந்தயேத்³விஷ்ணும் போ⁴ஜனே ச ஜனார்த³னம் ।
ஶயனே பத்³மனாப⁴ம் ச விவாஹே ச ப்ரஜாபதிம் ॥ 1॥

யுத்³தே⁴ சக்ரத⁴ரம் தே³வம் ப்ரவாஸே ச த்ரிவிக்ரமம் ।
நாராயணம் தனுத்யாகே³ ஶ்ரீத⁴ரம் ப்ரியஸங்க³மே ॥ 2॥

து:³ஸ்வப்னே ஸ்மர கோ³விந்த³ம் ஸங்கடே மது⁴ஸூத³னம் ।
கானனே நாரஸிம்ஹம் ச பாவகே ஜலஶாயினம் ॥ 3॥

ஜலமத்⁴யே வராஹம் ச பர்வதே ரகு⁴னந்த³னம் ।
க³மனே வாமனம் சைவ ஸர்வகார்யேஷு மாத⁴வம் ॥ 4॥

ஷோட³ஶைதானி நாமானி ப்ராதரூத்தா²ய ய: படே²த் ।
ஸர்வபாபவிர்னிமுக்தோ விஷ்ணுலோகே மஹீயதே ॥ 5॥

। இதி ஶ்ரீவிஷ்ணோ: ஷோட³ஶநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

Tamil meaning :

  1. மருந்து சாப்பிடும் போது விஷ்ணுவையும்,
  2. உணவு உட்கொள்ளும் போது ஜனார்தனனையும்,
  3. படுக்கையில் பத்மநாபனையும்,
  4. கல்யாண காலத்தில் பிரஜாபதியையும்,
  5. யுத்த சமயத்தில் சக்ரதாரியான தேவரையும்,
  6. வெளியூர் செல்லும்போது த்ரிவிக்ரமனையும்,
  7. அந்திய காலத்தில் நாராயணனையும்,
  8. நண்பர்களை சந்திக்கும் போது ஸ்ரீதரனையும்,
  9. கெட்ட ஸ்வப்னம் ஏற்பட்ட போது கோவிந்தனையும்,
  10. கஷ்ட காலத்தில் மதுசூதனரையும்,
  11. காட்டில் செல்லும் போது நரஸிம்மனையும்,
  12. நெருப்பினால் உபாதை ஏற்பட்ட போது ஜலத்தில் படுத்திருக்கும் ஸ்ரீ விஷ்ணுவையும்,
  13. நடுஜலத்தில் அகப்பட்டுக்கொண்டபோது வராஹமூர்த்தியான விஷ்ணுவையும்,
  14. மலையிலேறும் போது ரகுகுலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமனையும்,
  15. நடக்கும்போது வாமனையும்,
  16. எல்லாக் காலங்களிலும் மாதவனையும் நினைக்க வேண்டும்.

இந்த பதினாறு நாமங்களையும் காலையில் யார் படிக்கிறானோ அவன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணுலோகத்தில் விளங்குகிறான்.
ஓம் ஸ்ரீ மாதவாய நம: ||


in facebook

Monday, 1 February 2016

திருநீலகண்ட நாயனார் 



திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகைஎன்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி. 

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த அமைந்தார். அவரிடம் ஓர் பலவீனமும் இருந்தது இளமை தூர்ந்த அவர் இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்ததற் பொருட்டு அருகணைத்து வேண்டும் இரப்புரைகளைக் கூறித் தீண்டுவதற்குச் சென்றார். உடனே "எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்" என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி எம்மை எனச் சொன்னமையால் "எம் மாதரையும் தீண்டேன்" உறுதி கொண்டார்.
இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினார். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினார்.
இவர் தம் செயற்கருஞ்செயலை உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு நாயனரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி முறைபப்டி பூசனை செய்து "அடியேன் செய்யும் பணி யாது?" என இரந்து நின்றார். சிவயோக்கியார் தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து "இத்திருவோடு ஒப்பற்றது இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக" எனக் கூறிச் சென்றார்.
 பல நாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டுச் சிவயோகியார் மீண்டும் வந்தார்.
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் 
      என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
      சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
      நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை  
      ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்
 
             - 379,380 திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

Him he received duly and adored, and said: 
 “That you have in grace thought of us 
 Marks the fruition of our tapas.” 
 “Give me back the luminous bowl, I entrusted 
 To your keeping, in the past.” Thus spake He 
 Who can all things grant and recall.

When thus He spake peremptorily, he moved in 
 To get the bowl of the tapaswi rare; 
 Lo, it wasn’t there; he was nonplussed; 
 He in vain questioned them that stood nearby; 
 He continued this search, all in vain; he stood mute 
 Unable to account for the gramarye of its disappearance.


 வந்த சிவயோகியாரை வரவேற்று பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம் "யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக" எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும் எங்கும் தேடியும் காணதவராய் யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார் "நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்" என அழைத்தும்; அருகே வந்து கைதொழுது "சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஒட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று பிழை பொறுத்தருளுங்கள்" என இரந்து நின்றார். சிவயோகியார் "யான் தந்த மண்னோடன்றி பொன்னோடு தந்தாலும் கொள்ளேன் தந்ததையே கொண்டுவா" எனக் கூறினார். திருநீலகண்டர் "பெரியோய் தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை" எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோயார் "யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்" என்றார். அதற்குச் “சுவாமி! தேவரீரது ஒட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித்தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்க்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்துதரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார்.
தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார் “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள் திருநீலகண்டரை நோக்கி “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்க்சிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிபடுத்த முடியாதவராய். “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக" என வற்புறுத்தினார். 



அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி 'புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக" என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்.


தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப் பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்  மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
         அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் 
     முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை  
     இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்  
     துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார்

   கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்  
          அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
          விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத் 
     தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்
          - 397 - 400 , திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

When, holding the staff, they stepped into the tank, 
 The Brahmin – the wearer of the white triple stripes 
 Of the holy ash, addressed him thus: 
 “Hold your wife by hand and do the immersion.” 
 Then to the hearing of all, expressing his inability, 
 He, the one flawless, narrated all the past happenings 
 And then into the water immersed.

As the couple emerged after their immersion 
 And moved to the bank, lo, they stood transformed; 
 Gone was their old age; they looked lovely and young; 
 Celestials and munis rained on them the flowers 
 Of Karpaka and it looked as though they were having 
 A second immersion, this time, into flowers.

As in that wondrous state they eyed the couple, 
 They beheld not Him -- the Author of the Vedas --, 
 That stood erewhile before them. “What may this be?” 
 They marveled and were struck with mystery. 
 Then they beheld Him and His Consort 
 In the skyey expanse, on their Mount, the Bull.

They beheld Him and with folded hands adored Him; 
 The celestials too that witnessed the glory of the couple, 
 Hailed them in love; with his wife the devotee 
 Praised and adored Him who was enthroned on the Bull 
 In the splendorous expanse of ether,