Satsangatve Nissangatvam Nissangatve Nirmohatvam Nirmohatve Nisclatattvam Nischalatattve Jeevam Muktihi
Saturday, 26 December 2020
Sri Rama Sloka Pancharatnam - Introduction
Friday, 25 December 2020
வைகுண்ட ஏகாதசியின் மகிமை
Sunday, 25 October 2020
வெற்றியை தரும் விஜயதசமி : ( 26-10-20 )
Thursday, 17 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥
इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।
வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .
vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..
iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .
பொருள் :
தங்களது திருக்கல்யாண குணங்களைத் தொடர்ந்து கூறுவதில் எங்களது வாக்கும், கேட்பதில் காதுகளும், பணிபுரிவதில் கைகளும், திருவடிகளின் நினைவில் மனமும், தாங்கள் குடிகொண்டுள்ள இவ்வுலகை வணங்குவதில் தலையும், தங்கள் திருவுடலாக உலாவுகின்ற நல்லோரைக் காண்பதில் பார்வையும் ஈடுபடட்டும். 10 ( 38 )
இத்துடன் பாகவத புராணத்தில் காணப்படுவதும், குஹ்யகர்களால் இயற்றப்பெற்றதுமான ஶ்ரீகிருஷ்ண ஸ்துதி நிறைவு பெறுகிறது.
Meaning :
Let our speech be employed (hereafter) in recounting Your excellences, our ears in hearing Your stories, our hands in doing Your work, our mind in the thought of Your feet, our head in bowing to the world, Your (own) abode and our sight in beholding saints, Your (very) embodiments. 10 ( 38 )
Thus ends the Sri Krishna Stuti created by Guhyakau and which is found in Bhagavata Purana.
Wednesday, 16 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 9
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 9
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
अनुजानीहि नौ भूमंस्तवानुचरकिङ्करौ ।
दर्शनं नौ भगवत ऋषेरासीदनुग्रहात् ॥ ९॥
அனுஜானீஹி நௌ பூ⁴மம்ʼஸ்தவானுசரகிங்கரௌ .
த³ர்ஶனம்ʼ நௌ ப⁴க³வத ருʼஷேராஸீத³னுக்³ரஹாத் .. 9..
anujānīhi nau bhūmaṃstavānucarakiṅkarau .
darśanaṃ nau bhagavata ṛṣerāsīdanugrahāt .. 9..
பொருள் :
எல்லையற்று எங்கும் நிறைந்தவரே ! தங்களது தொண்டருக்குத் தொண்டர்களான எங்களுக்கு அனுமதி தாருங்கள். ரிஷி நாரதரின் அருளால் தங்கள் தரிசனம், எங்களுக்குக் கிட்டியது. 9 ( 37 )
Meaning :
(Pray) allow us, servants of Your servant ( Lord Shiva ), to depart, O perfect One ! Your (auspicious) sight has been possible for us (only) through the grace of the divine sage (Narada). 9 ( 37 )
Tuesday, 15 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥
நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..
namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..
பொருள் :
மேலான மங்களப் பொருளே ! (தங்களுக்கு) வணக்கம். மங்களப் பொருளுள் மங்களமாக இருப்பவரே ! (தங்களுக்கு) வணக்கம். யாதவர்களின் தலைவரே ! மனவமைதி நல்குபவரே ! வசுதேவரின் மைந்தனே ! (தங்களுக்கு) வணக்கம். 8. ( 36 )
Meaning :
Hail, O most blessed one ! Hail, O most propitious Lord ! Hail to the gentle Son of Vasudeva, the Lord of Yadus. 8 ( 36 )
Monday, 14 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥
ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..
sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..
பொருள் :
அகில உலகின் நன்மைக்கும் மேன்மைக்குமாக, இப்பொழுது தாங்கள் எல்லா பேராற்றல்களும் நிரம்பியவராக, எல்லோர் விருப்பங்களையும் நிறைவுறச் செய்யவே, ஓர் அம்சம் கொண்டு அவதரித்துள்ளீர்கள். 7 ( 35 )
Meaning :
As such You, the Dispenser of (all ) blessings, have come down ( to mortal plane ) this time in Your integral form ( the Source of all part manifestations ) for ( ensuring ) the prosperity and liberation ( lit., freedom from rebirth ) of the entire creation. 7 (35 )
Saturday, 12 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 6
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 6
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
यस्यावतारा ज्ञायन्ते शरीरेष्वशरीरिणः ।
तैस्तैरतुल्यातिशयैर्वीर्यैर्देहिष्वसङ्गतैः ॥ ६॥
யஸ்யாவதாரா ஜ்ஞாயந்தே ஶரீரேஷ்வஶரீரிண꞉ .
தைஸ்தைரதுல்யாதிஶயைர்வீர்யைர்தே³ஹிஷ்வஸங்க³தை꞉ .. 6..
yasyāvatārā jñāyante śarīreṣvaśarīriṇaḥ .
taistairatulyātiśayairvīryairdehiṣvasaṅgataiḥ .. 6..
பொருள் :
தங்களது இந்த உடல் இயற்கையானதல்ல ( தெய்வீகமானது ). ஆனால், உடல் உள்ளவர்களால் செய்ய இயலாத அதிசயமிக்க செயலாற்றலையும், உடல் பெற்றவரிடம் பொருந்தாத பேராற்றலையும் கொண்டு தங்களது அவதாரங்கள் பற்றி அறியமுடிகிறது. 6 ( 34 )
Meaning :
Disembodied as You are, Your descents in corporeal frames are known through the various feats of valour, unsurpassed, nay, unequalled ( by those of anyone ) and not found in those identified with a body. 6 ( 34 )
Friday, 11 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥
தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..
tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..
பொருள் :
அனைத்து சிறப்புகளையும் கொண்டவரும், உலகைப் படைத்தவரும், தன்னால் பிரகாசிக்கின்ற குணங்களால் மறைக்கப் பெற்றவரும், எங்கும் நிறைந்தவரும், வசுதேவரின் மகனுமான ஸ்ரீகிருஷ்ணன் என்னும் பரம்பொருளை வணங்குகிறோம். 5 ( 33 )
Meaning :
Hail to you as such, Lord Vaasudeva (the Detiy preceding over intellect), the Creator (etc., of the universe), the Infinite, whose glory stands veiled by the (three) Gunas, that owe there light to You (alone). 5 ( 33 )
Wednesday, 9 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥
க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..
gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃஆ guṇasaṃvṛtaḥ .. 4..
பொருள் :
செயலறிவால் அறியத்தக்க பிரகிருதியின் குணங்களுக்கும், விகாரங்களான மாறுபட்டிற்கும் அப்பாற்பட்ட தங்களை, ஸ்தூல-சூட்சும வடிவான குணங்களால் மறைக்கப்பட்டவன் எவ்வாறு அறிய முடியும்? ஏனெனில், இவை தோன்றுவதற்கு முன்பிருந்தே தாங்கள் இருக்கிறீர்களே ! 4 ( 32 )
Meaning :
You ( the perceiving subject ) cannot be grasped through the modes of Prakriti, much less through their modifications (in the shape of the intellect, the ego, the Senses etc. ), which are (all) open to perception. And shut up in a psycho-physical organism (a product of the three Gunas ), who ( what JIva) in this world is competent to perceive You, who already existed (even before its birth, as a self-evident truth ). 4 ( 32 )
Monday, 7 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 3
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 3
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
त्वं महान् प्रकृतिः सूक्ष्मा रजःसत्त्वतमोमयी ।
त्वमेव पुरुषोऽध्यक्षः सर्वक्षेत्रविकारवित् ॥ ३॥
த்வம்ʼ மஹான் ப்ரக்ருʼதி꞉ ஸூக்ஷ்மா ரஜ꞉ஸத்த்வதமோமயீ .
த்வமேவ புருஷோ(அ)த்⁴யக்ஷ꞉ ஸர்வக்ஷேத்ரவிகாரவித் .. 3..
tvaṃ mahān prakṛtiḥ sūkṣmā rajaḥsattvatamomayī .
tvameva puruṣo'dhyakṣaḥ sarvakṣetravikāravit .. 3..
பொருள் :
தாங்கள்தான் உலகின் ஆதியான மஹத்-தத்துவமும், சத்துவம்-ரஜஸ்-தமஸ் என்ற முக்குணங்களின் சூட்சும (காணத்தோன்றாத) நிலையான பிரகிருதியும், க்ஷேத்திரமான உடலிலிருந்து கொண்டு, எல்லா ஸ்தூல-சூட்சும (வெளியில் காணத் தோன்றும், தோன்றாத) தத்துவங்களின் மாறுபாடுகளையும் உணர்ந்து, செயலைச் சாட்சியாகக் கண்காணிக்கின்ற ஜீவபுருஷன். 3 ( 31 )
Meaning :
You are the subtle (unmanifest ) Prakriti ( the divine Energy ), consisting of Sattva, Rajas, and Tamas, and You are the Mahat.tattva (the evolute of Prakriti ). You alone are the Puruşa ( Spirit, the propeller of Prakriti ), the Witness (of all ), the Knower of the diseases and morbidities of all psycho-physical organisms. 3 ( 31 )
Sunday, 6 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 2
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 2
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
त्वमेकः सर्वभूतानां देहास्वात्मेन्द्रयेश्वरः ।
त्वमेव कालो भगवान् विष्णुरव्यय ईश्वरः ॥ २॥
த்வமேக꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ தே³ஹாஸ்வாத்மேந்த்³ரயேஶ்வர꞉ .
த்வமேவ காலோ ப⁴க³வான் விஷ்ணுரவ்யய ஈஶ்வர꞉ .. 2..
tvamekaḥ sarvabhūtānāṃ dehāsvātmendrayeśvaraḥ .
tvameva kālo bhagavān viṣṇuravyaya īśvaraḥ .. 2..
பொருள் :
தாங்கள் ஒருவரே, உலகின் அனைத்து ஜீவனது உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் புலன்களுக்கும் தலைவன்; காலமாக நின்று இயக்குபவர்; பகவானான விஷ்ணுவாக எங்கும் பரவியவர்; அழிவற்ற ஈச்வரன். 2 (30)
Meaning :
You are the one (undisputed ) controller of the body, the vital aire, the ego and the Indriyas of all created beings. You alone are the Time-Spirit and the imperishable Lord, the almighty Vishnu. 2 ( 30 )
Saturday, 5 September 2020
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 1
Sri Krishna Stuti by Guhyaka - Sloka 1
|| श्री कृष्ण स्तुतिः ||
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
कृष्ण कृष्ण महायोगिंस्त्वमाद्यः पुरुषः परः ।
व्यक्ताव्यक्तमिदं विश्वं रूपं ते ब्राह्मणा विदुः ॥ १॥
க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ம்ʼஸ்த்வமாத்³ய꞉ புருஷ꞉ பர꞉ .
வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ விஶ்வம்ʼ ரூபம்ʼ தே ப்³ராஹ்மணா விது³꞉ .. 1..
kṛṣṇa kṛṣṇa mahāyogiṃstvamādyaḥ puruṣaḥ paraḥ .
vyaktāvyaktamidaṃ viśvaṃ rūpaṃ te brāhmaṇā viduḥ .. 1..
பொருள் :
கிருஷ்ணா ! கிருஷ்ணா ! மாபெரும் யோகியே ! தாங்களே பிரகிருதியைக் கடந்த புருஷோத்தமர். இவ்வுலகனைத்தும் தங்களின் வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான (ஸ்தூல சூட்சுமமான) வடிவம் என்று பிரும்மநிலை உணர்ந்தவர் கூறுவர். 1 (29)
Meaning :
O Krishna, the Enchanter of all, O great Yogi( the Master of Yoga ), You are the primordial supreme Person. The Brahmins ( who have realized the true import of the Vedas ) know this universe, manifest as well as unmanifest, as a form of Yours. 1 ( 29 )
Thursday, 3 September 2020
Sri Krishna Stuti by Guhyakau - Introduction
Sri Krishna Stuti by Guhyakau - Introduction
இப்போது நாம் பார்க்கவிருக்கின்ற ஸ்துதி ஶ்ரீ கிருஷ்ணரைக் குறித்து குஹ்யகர்களால் இயற்றப்பட்டது.
நிதி ரக்ஷகர்களுக்கு குஹ்யகர்கள் என்று பெயர்.
கு³ஹ்யகௌ - இரு கு³ஹ்யகர்கள்.
குஹ்யகர்கள் என்பவர் யக்ஷர்கள் எனும் வர்க்கத்தினரைப் போல, குபேரனுக்குப் பணிசெய்யும் வர்க்கத்தினர் ஆவர். குபேரனை 'கு³ஹ்யகாதி⁴பதி' என்பவர்.
கண்ணனை, யசோதை உரலில் கட்டிவைத்த லீலை அனைவரும் அறிந்ததே. அந்நிகழ்வின் போது, கண்ணன் உரலுடன் வந்து இரு மருதமரங்களுக்கு நடுவில் புகுந்து அம்மரங்களை வீழ்த்தினார் என்பதும் அதிலிருந்து சாபவிமோசனம் பெற்ற இரு சித்தபுருஷர்கள் தோன்றினர் என்பதும் சரித்திரம். நளகூபரன் மற்றும் மணிக்ரீவன் என்னும் குபேர குமாரர்களே அவ்விருவரும். அவர்கள் கண்ணனைக் கண்டதும் அஞ்சலி செய்து செய்த ஸ்துதியே இந்த ஸ்துதி. இது ஶ்ரீமத் பாகவத புராணத்தில், தசம ஸ்கந்தத்தில், பத்தாம் அத்யாயத்தில் ச்லோகம் எண் 29 - 38 ஆக அமைந்துள்ளது.
நளகூபர - மணிக்ரீவரின் கதை சுருக்கமாக, நாராயணீயத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. தசகம் - 48.
2. குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்கால், உம்மை மறந்து, உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர்.
3. கங்கையில் மது அருந்திவிட்டு அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதைத் தங்கள் பக்தரான நாரதர் பார்த்தார்.
4. நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். உம்மிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். மன அமைதியில்லாமல் சுகம் எப்படி உண்டாகும்?
5. “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், தங்களைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.
6. தாங்கள் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்றீர்கள். மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு சென்றீர்கள். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன.
7. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். தங்களைத் துதித்து நமஸ்கரித்தனர்.
8. இவ்வுலகில், மற்ற தெய்வங்களைப் பூஜிக்கிறவனும், இறுதியில் உம்மையே அடைகிறான். நாரதரின் ஆசியால் தங்களைத் தொழுது, தங்களிடம் பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.
|| श्री कृष्ण स्तुतिः ||
कृष्ण कृष्ण महायोगिंस्त्वमाद्यः पुरुषः परः ।
व्यक्ताव्यक्तमिदं विश्वं रूपं ते ब्राह्मणा विदुः ॥ १॥
त्वमेकः सर्वभूतानां देहास्वात्मेन्द्रयेश्वरः ।
त्वमेव कालो भगवान् विष्णुरव्यय ईश्वरः ॥ २॥
त्वं महान् प्रकृतिः सूक्ष्मा रजःसत्त्वतमोमयी ।
त्वमेव पुरुषोऽध्यक्षः सर्वक्षेत्रविकारवित् ॥ ३॥
गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥
तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥
यस्यावतारा ज्ञायन्ते शरीरेष्वशरीरिणः ।
तैस्तैरतुल्यातिशयैर्वीर्यैर्देहिष्वसङ्गतैः ॥ ६॥
स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥
नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥
अनुजानीहि नौ भूमंस्तवानुचरकिङ्करौ ।
दर्शनं नौ भगवत ऋषेरासीदनुग्रहात् ॥ ९॥
वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥
इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।
|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||
க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ம்ʼஸ்த்வமாத்³ய꞉ புருஷ꞉ பர꞉ .
வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ விஶ்வம்ʼ ரூபம்ʼ தே ப்³ராஹ்மணா விது³꞉ .. 1..
த்வமேக꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ தே³ஹாஸ்வாத்மேந்த்³ரயேஶ்வர꞉ .
த்வமேவ காலோ ப⁴க³வான் விஷ்ணுரவ்யய ஈஶ்வர꞉ .. 2..
த்வம்ʼ மஹான் ப்ரக்ருʼதி꞉ ஸூக்ஷ்மா ரஜ꞉ஸத்த்வதமோமயீ .
த்வமேவ புருஷோ(அ)த்⁴யக்ஷ꞉ ஸர்வக்ஷேத்ரவிகாரவித் .. 3..
க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..
தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..
யஸ்யாவதாரா ஜ்ஞாயந்தே ஶரீரேஷ்வஶரீரிண꞉ .
தைஸ்தைரதுல்யாதிஶயைர்வீர்யைர்தே³ஹிஷ்வஸங்க³தை꞉ .. 6..
ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..
நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..
அனுஜானீஹி நௌ பூ⁴மம்ʼஸ்தவானுசரகிங்கரௌ .
த³ர்ஶனம்ʼ நௌ ப⁴க³வத ருʼஷேராஸீத³னுக்³ரஹாத் .. 9..
வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .
|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||
kṛṣṇa kṛṣṇa mahāyogiṃstvamādyaḥ puruṣaḥ paraḥ .
vyaktāvyaktamidaṃ viśvaṃ rūpaṃ te brāhmaṇā viduḥ .. 1..
tvamekaḥ sarvabhūtānāṃ dehāsvātmendrayeśvaraḥ .
tvameva kālo bhagavān viṣṇuravyaya īśvaraḥ .. 2..
tvaṃ mahān prakṛtiḥ sūkṣmā rajaḥsattvatamomayī .
tvameva puruṣo'dhyakṣaḥ sarvakṣetravikāravit .. 3..
gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃ guṇasaṃvṛtaḥ .. 4..
tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..
yasyāvatārā jñāyante śarīreṣvaśarīriṇaḥ .
taistairatulyātiśayairvīryairdehiṣvasaṅgataiḥ .. 6..
sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..
namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..
anujānīhi nau bhūmaṃstavānucarakiṅkarau .
darśanaṃ nau bhagavata ṛṣerāsīdanugrahāt .. 9..
vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..
iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .
Wednesday, 26 August 2020
மனிதனும் மிருகமும் :
மனிதனும் மிருகமும் :
( தெய்வத்தின் குரல் - முதல் பகுதி )
மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.
ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.
இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.
குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.
மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.
இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.
ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.
உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.
இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.
முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.