Tuesday, 30 June 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Introduction

Sri Mantra-Raja-Pada Stotram - Introduction

This Stotra supposed to be composed by Lord Shiva himself is from the Ahirbudhnya Samhita, a Paancharaatra text. It also is called “Manthra Raja Pada stotra”. It is supposed to be the best remedy for aches and mental depression.

ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்
(ஸ்ரீ ருத்ரன் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனைக் குறித்துச் செய்த ஸ்தோத்ரம்)
அற்புதமான இந்த ஸ்லோகம் ஸ்ரீ பரமேஸ்வரனால் ஸ்ரீ பார்வதிக்கு உபதேசம் செய்யப்பட்டது.
அளவற்ற சக்தி வாய்ந்தது.
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் பெருமையை விளக்கும் இந்த ஸ்லோகத்தை காலையில் நீராடிய பின்பு மூன்று தடவைகளும், இரவில் படுக்கப் போகும் முன்பு கை கால்களைக் கழுவிக் கொண்டு ஒரு முறையும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் குணமாகும்.கவலைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். மன நோய்க்கு அரிய மருந்தாகும் இந்த மந்திரராஜபத ஸ்தோத்ரம்.

॥ नृसिंह मन्त्र राजः ॥

उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखम् ।
नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्युं नमाम्यहम् ॥

|| ந்ருʼஸிம்ʼஹ மந்த்ர ராஜ: ||

உக்³ரம்ʼ வீரம்ʼ மஹாவிஷ்ணும்ʼ ஜ்வலந்தம்ʼ ஸர்வதோமுக²ம்|
ந்ருʼஸிம்ʼஹம்ʼ பீ⁴ஷணம்ʼ ப⁴த்³ரம்ʼ ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம்||

॥ NṚSIṂHA MANTRA RĀJAḤ ॥
oṃ
ugraṃ vīraṃ mahāviṣṇuṃ jvalantaṃ sarvatomukham I
nṛsiṃhaṃ bhīṣaṇaṃ bhadraṃ mṛtyumṛtyuṃ namāmyaham II

பொருள் :

உக்கிரமானவரும், வீரம் நிறைந்தவரும், மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும், ஜ்வாலையைப் போன்று ஜ்வலிப்பவரும், எல்லாவிதமான தேவதாரூபங்களிலும் இருப்பவரும்., பயத்தைக் கொடுக்கக் கூடியவரும், மங்கள வடிவினரும், காலனுக்கம் காலனான ந்ருஸிம்ஹரை நான் நமஸ்கரிக்கிறேன்.

Translation :

I bow down to Lord Narasimha who is highly ferocious and brave and the emanation of Lord Maha Vishnu. He is full of effulgence, terrific and auspicious and the death of death.

|| श्री मन्त्र राज पद स्तोत्रम् ||

श्री ईश्वर उवाच -
वृत्तोत्फुल्लविशालाक्षं विपक्षक्षयदीक्षितम् ।
    निनादत्रस्तविश्वाण्डं विष्णुमुग्रं नमाम्यहम् ॥ १॥

सर्वैरवध्यतां प्राप्तं सबलौघं दितेः सुतम् ।
    नखाग्रैः शकलीचक्रे यस्तं वीरं नमाम्यहम् ॥ २॥

पदावष्टब्धपातालं मूर्धाविष्टत्रिविष्टपम् ।
    भुजप्रविष्टाष्टदिशं महाविष्णुं नमाम्यहम् ॥ ३॥

ज्योतींष्यर्केन्दुनक्षत्रज्वलनादीन्यनुक्रमात् ।
    ज्वलन्ति तेजसा यस्य तं ज्वलन्तं नमाम्यहम् ॥ ४॥

सर्वेन्द्रियैरपि विना सर्वं सर्वत्र सर्वदा ।
    यो जानाति नमाम्याद्यं तमहं सर्वतोमुखम् ॥ ५॥

नरवत् सिंहवच्चैव यस्य रूपं महात्मनः ।
    महासटं महादंष्ट्रं तं नृसिंहं नमाम्यहम् ॥ ६॥

यन्नामस्मरणाद् भीताः भूतवेतालराक्षसाः ।
    रोगाद्याश्च प्रणश्यन्ति भीषणं तं नमाम्यहम् ॥ ७॥

सर्वोऽपि यं समाश्रित्य सकलं भद्रमश्नुते ।
    श्रिया च भद्रया जुष्टो यस्तं भद्रं नमाम्यहम् ॥ ८॥

साक्षात् स्वकाले सम्प्राप्तं मृत्युं शत्रुगणान्वितम् ।
    भक्तानां नाशयेद् यस्तु मृत्युमृत्युं नमाम्यहम् ॥ ९॥

नमस्कारात्मकं यस्मै विधायाऽऽत्मनिवेदनम् ।
    त्यक्तदुःखोऽकिलान् कामान् अश्नन्तं तं नमाम्यहम् ॥ १०॥

दासभूताः स्वतः सर्वे ह्यात्मानः परमात्मनः ।
    अतोऽहमपि ते दासः इति मत्वा नमाम्यहम् ॥ ११॥

                  फलश्रुतिः
शङ्करेणादरात् प्रोक्तं पदानां तत्त्वनिर्णयम् ।
    त्रिसन्ध्यं यः पठेत् तस्य श्रीर्विद्याऽऽयुश्च वर्धते ॥

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

ஶ்ரீ ஈஶ்வர உவாச -
வ்ருʼத்தோத்பு²ல்லவிஶாலாக்ஷம்ʼ விபக்ஷக்ஷயதீ³க்ஷிதம் .
    நிநாத³த்ரஸ்தவிஶ்வாண்ட³ம்ʼ விஷ்ணுமுக்³ரம்ʼ நமாம்யஹம் .. 1..

ஸர்வைரவத்⁴யதாம்ʼ ப்ராப்தம்ʼ ஸப³லௌக⁴ம்ʼ தி³தே꞉ ஸுதம் .
    நகா²க்³ரை꞉ ஶகலீசக்ரே யஸ்தம்ʼ வீரம்ʼ நமாம்யஹம் .. 2..

பதா³வஷ்டப்³த⁴பாதாலம்ʼ மூர்தா⁴விஷ்டத்ரிவிஷ்டபம் .
    பு⁴ஜப்ரவிஷ்டாஷ்டதி³ஶம்ʼ மஹாவிஷ்ணும்ʼ நமாம்யஹம் .. 3..

ஜ்யோதீம்ʼஷ்யர்கேந்து³நக்ஷத்ரஜ்வலநாதீ³ன்யனுக்ரமாத் .
    ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம்ʼ ஜ்வலந்தம்ʼ நமாம்யஹம் .. 4..

ஸர்வேந்த்³ரியைரபி வினா ஸர்வம்ʼ ஸர்வத்ர ஸர்வதா³ .
    யோ ஜானாதி நமாம்யாத்³யம்ʼ தமஹம்ʼ ஸர்வதோமுக²ம் .. 5..

நரவத் ஸிம்ʼஹவச்சைவ யஸ்ய ரூபம்ʼ மஹாத்மன꞉ .
    மஹாஸடம்ʼ மஹாத³ம்ʼஷ்ட்ரம்ʼ தம்ʼ ந்ருʼஸிம்ʼஹம்ʼ நமாம்யஹம் .. 6..

யந்நாமஸ்மரணாத்³ பீ⁴தா꞉ பூ⁴தவேதாலராக்ஷஸா꞉ .
    ரோகா³த்³யாஶ்ச ப்ரணஶ்யந்தி பீ⁴ஷணம்ʼ தம்ʼ நமாம்யஹம் .. 7..

ஸர்வோ(அ)பி யம்ʼ ஸமாஶ்ரித்ய ஸகலம்ʼ ப⁴த்³ரமஶ்னுதே .
    ஶ்ரியா ச ப⁴த்³ரயா ஜுஷ்டோ யஸ்தம்ʼ ப⁴த்³ரம்ʼ நமாம்யஹம் .. 8..

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்ʼ ம்ருʼத்யும்ʼ ஶத்ருக³ணான்விதம் .
    ப⁴க்தானாம்ʼ நாஶயேத்³ யஸ்து ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம் .. 9..

நமஸ்காராத்மகம்ʼ யஸ்மை விதா⁴யா(ஆ)த்மநிவேத³னம் .
    த்யக்தது³꞉கோ²(அ)கிலான் காமான் அஶ்னந்தம்ʼ தம்ʼ நமாம்யஹம் .. 10..

தா³ஸபூ⁴தா꞉ ஸ்வத꞉ ஸர்வே ஹ்யாத்மான꞉ பரமாத்மன꞉ .
    அதோ(அ)ஹமபி தே தா³ஸ꞉ இதி மத்வா நமாம்யஹம் .. 11..

                  ப²லஶ்ருதி꞉
ஶங்கரேணாத³ராத் ப்ரோக்தம்ʼ பதா³னாம்ʼ தத்த்வநிர்ணயம் .
    த்ரிஸந்த்⁴யம்ʼ ய꞉ படே²த் தஸ்ய ஶ்ரீர்வித்³யா(ஆ)யுஶ்ச வர்த⁴தே ..

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

śrī īśvara uvāca -
vṛttotphullaviśālākṣaṃ vipakṣakṣayadīkṣitam .
    ninādatrastaviśvāṇḍaṃ viṣṇumugraṃ namāmyaham .. 1..

sarvairavadhyatāṃ prāptaṃ sabalaughaṃ diteḥ sutam .
    nakhāgraiḥ śakalīcakre yastaṃ vīraṃ namāmyaham .. 2..

padāvaṣṭabdhapātālaṃ mūrdhāviṣṭatriviṣṭapam .
    bhujapraviṣṭāṣṭadiśaṃ mahāviṣṇuṃ namāmyaham .. 3..

jyotīṃṣyarkendunakṣatrajvalanādīnyanukramāt .
    jvalanti tejasā yasya taṃ jvalantaṃ namāmyaham .. 4..

sarvendriyairapi vinā sarvaṃ sarvatra sarvadā .
    yo jānāti namāmyādyaṃ tamahaṃ sarvatomukham .. 5..

naravat siṃhavaccaiva yasya rūpaṃ mahātmanaḥ .
    mahāsaṭaṃ mahādaṃṣṭraṃ taṃ nṛsiṃhaṃ namāmyaham .. 6..

yannāmasmaraṇād bhītāḥ bhūtavetālarākṣasāḥ .
    rogādyāśca praṇaśyanti bhīṣaṇaṃ taṃ namāmyaham .. 7..

sarvo'pi yaṃ samāśritya sakalaṃ bhadramaśnute .
    śriyā ca bhadrayā juṣṭo yastaṃ bhadraṃ namāmyaham .. 8..

sākṣāt svakāle samprāptaṃ mṛtyuṃ śatrugaṇānvitam .
    bhaktānāṃ nāśayed yastu mṛtyumṛtyuṃ namāmyaham .. 9..

namaskārātmakaṃ yasmai vidhāyā''tmanivedanam .
    tyaktaduḥkho'kilān kāmān aśnantaṃ taṃ namāmyaham .. 10..

dāsabhūtāḥ svataḥ sarve hyātmānaḥ paramātmanaḥ .
    ato'hamapi te dāsaḥ iti matvā namāmyaham .. 11..

                  phalaśrutiḥ
śaṅkareṇādarāt proktaṃ padānāṃ tattvanirṇayam .
    trisandhyaṃ yaḥ paṭhet tasya śrīrvidyā''yuśca vardhate ..

Monday, 29 June 2020

Narasimha Mantra Raja ( The King of Mantras ) :

Narasimha Mantra Raja ( The King of Mantras ) :

நரசிம்ம மந்த்ர ராஜம் என்பது ஒரு ச்லோகம். நரஸிம்ஹ பூர்வதாபினி உபநிஷத்தில் இந்த ச்லோகமும் இதன் விவரணமும் கிடைக்கின்றன. தேவர்கள் மரணம், பாபம், ஸம்ஸாரம் இவைகளை எண்ணி பயந்து பிரஜாபதியிடம் சென்று கேட்க, அவர் இந்த
மந்த்ர ராஜத்தைக் கூற, அதன் பயனாக அனைத்து பயங்களை வென்றனர்.

இந்த ச்லோகத்தின் ஒவ்வொரு பதத்தையும், பரமேச்வரரே விளக்குவதாக அமைந்த "மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம்" எனும் ஸ்தோத்ரமும் காணக்கிடைக்கிறது.

उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखम् ।
नृसिंहं भीषणं भद्रं मृत्युमृत्युं नमाम्यहम् ॥

உக்³ரம்ʼ வீரம்ʼ மஹாவிஷ்ணும்ʼ ஜ்வலந்தம்ʼ ஸர்வதோமுக²ம்|
ந்ருʼஸிம்ʼஹம்ʼ பீ⁴ஷணம்ʼ ப⁴த்³ரம்ʼ ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம்||

ugraṃ vīraṃ mahāviṣṇuṃ jvalantaṃ sarvatomukham I
nṛsiṃhaṃ bhīṣaṇaṃ bhadraṃ mṛtyumṛtyuṃ namāmyaham II

பொருள் :

உக்கிரமானவரும், வீரம் நிறைந்தவரும்,  மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும், ஜ்வாலையைப் போன்று ஜ்வலிப்பவரும், எல்லாவிதமான தேவதாரூபங்களிலும் இருப்பவரும்., பயத்தைக் கொடுக்கக் கூடியவரும், மங்கள வடிவினரும், காலனுக்கம் காலனான ந்ருஸிம்ஹரை நான் நமஸ்கரிக்கிறேன்.

Tranlation :

I bow down to Lord Narasimha who is highly ferocious and brave and the emanation of Lord Maha Vishnu. He is full of effulgence, terrific and auspicious and the death of death.

Friday, 26 June 2020

ஆலயமும் ஆஸ்பத்திரியும் : ( தெய்வத்தின் குரல் - முதல் பகுதி )

ஆலயமும் ஆஸ்பத்திரியும் :

( தெய்வத்தின் குரல் - முதல் பகுதி )

‘மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும் பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது மனித சேவையே பகவத் சேவை’ என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை தெரிகிறது. அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுவே மற்ற சமூக சேவைகளைவிட மனிதனுக்கு நிரந்தர நலனைத் தருவதுமாகும்.

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை சொஸ்தம் செய்து அனுப்புகிறோம். அப்புறம் அவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அநர்த்தம் செய்து கொள்பவர்களாகவும், அவர்கள் இருந்தால் அவர்களை சொஸ்தப்படுத்தியதன் பயனை நாம் அடைய முடியுமா? புத்திக் கோளாறு உள்ளதாகச் சொல்லப்படும் பலரை என்னிடம் அழைத்து வந்து சொஸ்தப்படுத்த வேண்டும் என்று கேட்கிறபோது நான் இந்த ரீதியில்தான் உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறேன். அதை அப்போது அவர்களிடம் சொன்னால், என்னிடம் ஆறுதல் தேடி வருகிறவர்களுக்கு மனசு கஷ்டப்படும், அதனால் சொல்வதில்லை. இப்போது பொதுவாகச் சொல்கிறேன்: புத்தி பூர்வமாக ஒரு தவற்றை செய்தால்தான் அது பாபமாகிறது. ஆனபடியால் புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலிலும் பாபம் இல்லை. ஏதோ பூர்வ பாபத்துக்காக அவர்கள் இப்படியாகியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குப் பாபமில்லை. நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோல் சித்தப் பிரம்மை பிடித்தவர்கள் பேசுவதில்லை. மனிசில் எது வருகிறதோ அதையே சொல்கிறார்கள். ஏன் இவர்களையும் ‘சொஸ்த’ப் படுத்துவது என்கிற பெயரில் மற்றவர்களைப்போல் ஆக்கி, இவர்களுக்கு பாபம் சேரும்படியாகப் பண்ண வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது. நோயாளிகளது மனஸில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். இவ்வாறேதான் பள்ளிக்கூடம் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம். படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது! பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானதுகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால், சாதூரியமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது. வித்யாசாலையோடும் வைத்யசாலையோடும் மநுஷ்யனின் வாழ்வு முடிந்து விடுகிறதில்லை. அவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, ஸ்கூல் போலவே – ஆஸ்பத்திரியை, ஸ்கூலை விடவும் – அவசியம் இருக்கத்தான் வேண்டும். நாம் நல்லவர் ஆவதற்காக பகவத் தியானம், பூஜை இவைதான் அவசியம் இருக்க வேண்டியவை.

மனிதனின் உடம்புக்கு ஆரோக்கியம் தருவது, புத்திக்குப் படிப்புத் தருவது அவனுடைய தரித்திரத்தை நீக்கிச் செல்வச் சுபிட்சம் தருவது எல்லாவற்றையும்விட அவனை பகவானிடம் சேர்ப்பதே பேருபகாரம். நாமும் பகவானிடம் மனஸைச் செலுத்தி, தியானம், பூஜை இவைகளை அநுஷ்டித்தால்தான் மற்றவர்களை இவற்றில் ஈடுபடுத்த நமக்கு யோக்கியதை உண்டாகும். அப்போதுதான் நாம் செய்கிற பரோபகாரம் சக்தியோடு பலன் தரும்.

மனிதனையே தெய்வமாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது சிலாக்கியம்தான். ஆனால் நாம் அப்படி நினைப்பதோடு நிற்காமல் அவனே உண்மையாகத் தன் தெய்வீகத்தைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள நாம் ஆலயங்களை அவசியம் பேண வேண்டும்.

நல்லவனாவதற்குப் பக்தி தேவையில்லை என்று ஒரு வாதம். ஆனாலும் நடைமுறையில் பலவிதமான சுயநல ஆசைகளால் ஆட்டி வைக்கப்படுகிற ஜீவனைப் பரிசுத்தப்படுத்துவதற்கு பக்தியைப்போன்ற சாதனம் வேறு இல்லவே இல்லை. ‘பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வசக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் பலன் தருகிறான்’ என்கிற பயபக்தி உணர்ச்சிதான் யுக யுகாந்திரமாக மனிதனைத் தர்ம மார்க்கத்தில் நிறுத்துவதற்குப் பெரிய ஊன்று கோலாக இருந்து வந்திருக்கிறது.

பக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்துகொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட அதுவே வேறெந்த உபாயத்தையும்விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை ஞாபகமூட்டுவதைவிட பெரிய சமூக சேவை இல்லை.