Monday, 30 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 9

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 9

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

भासि देवि यथा पद्मा नारायणपरिग्रहः ।
स्वरूपं ब्रह्मचर्यं च विशदं तव खेचरि ।। 9 ।।

பா⁴ஸி தே³வி யதா² பத்³மா நாராயணபரிக்³ரஹ꞉: ।
ஸ்வரூபம்ʼ ப்³ரஹ்மசர்யம்ʼ ச விஶத³ம்ʼ தவ கே²சரி ॥ 9 ॥

bhāsi devi yathā padmā nārāyaṇaparigrahaḥ ।
svarūpaṃ brahmacaryaṃ ca viśadaṃ tava khecari ।। 9 ।।

பொருள் :

ஓ! தேவி {துர்க்கையம்மனே}, நாராயணனின் மனைவியான பத்மாவைப் {மகாலட்சுமியைப்} போலப் பிரகாசிப்பவள் நீயே. ஓ! தெய்வீக உலகங்களில், உன் உண்மை வடிவத்திலும், உன் பரிசுத்தமான பிரம்மச்சரியத்துடனும் அதிகாரம் செய்பவள் நீயே, ஓ! ஆகாசத்தில் சஞ்சரிப்பவளே !   9

Meaning :

Thou shinest, O Goddess, as Padma, the consort of Narayana. O thou that rangest the etherial regions, thy true form and thy Brahmacharya are both of the purest kind.   9

Sunday, 29 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 8

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 8

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

चतुर्भुजे चतुर्वक्रे पीनश्रोणिपयोधरे।
मयूरपिच्छवलये केयूराङ्गदधारिणि ।। 8 ।।

சதுர்பு⁴ஜே சதுர்வக்ரே பீனஶ்ரோணிபயோத⁴ரே।
மயூரபிச்ச²வலயே கேயூராங்க³த³தா⁴ரிணி ॥ 8 ॥

caturbhuje caturvakre pīnaśroṇipayodhare।
mayūrapicchavalaye keyūrāṅgadadhāriṇi ।। 8 ।।

பொருள் :

ஓ! நான்கு கரங்களும், நான்கு முகங்களும் கொண்டவளே, ஓ! உருண்ட அழகிய இடைகளும், பருத்த தனங்களும் கொண்டவளே, ஓ! மரகதங்கள் மற்றும் நீலமணிக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவளே, ஓ! மேல் புஜத்தில் சிறந்த கடகங்களை அணிந்தவளே.   8

Meaning :

Salutations to thee, O thou of four hands and four faces, O thou of fair round hips and deep bosom, O thou that wearest bangles made of emeralds and sapphires, O thou that bearest excellent bracelets on thy upper arm.   8

Saturday, 28 September 2019

Obeisance to Shri Hanuman - 3

Obeisance to Shri Hanuman - 3

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

उल्लङ्घ्य सिन्धोः सलिलं सलीलं
      यः शोक-वह्निं जनकात्मजायाः ।
आदाय तेनैव ददाह लङ्कां
      नमामि तं प्राञ्जलिराञ्जनेयम् ॥ ३॥

ullaṅghya sindhoḥ salilaṃ salīlaṃ
       yaḥ śoka-vahniṃ janakātmajāyāḥ ।
ādāya tenaiva dadāha laṅkāṃ
       namāmi taṃ prāñjalirāñjaneyam ॥ 3॥

உல்லங்க்⁴ய ஸிந்தோ:⁴ ஸலிலம் ஸலீலம்
       ய: ஶோக-வஹ்னிம் ஜனகாத்மஜாயா: ।
ஆதா³ய தேனைவ த³தா³ஹ லங்காம்
       நமாமி தம் ப்ராஞ்ஜலிராஞ்ஜனேயம் ॥ 3॥

பிரதி பத அர்த்தம்  :

यः  -  ய:  -  எவர்

सिन्धोः  -  ஸிந்தோ:⁴  -  கடலினுடைய

सलिलं  -  ஸலிலம்  -  ஜலத்தை

सलीलं  -  ஸலீலம்  -  லீலையாக ( விளையாட்டாக )

उल्लङ्घ्य  -  உல்லங்க்⁴ய  -  தாண்டி

जनकात्मजायाः  -  ஜனகாத்மஜாயா:    -   ஜனகபுத்ரியினுடைய

शोक-वह्निं  -  ஶோக-வஹ்னிம்   -  சோகாக்னியை

आदाय  -  ஆதா³ய  -  கிரஹித்துக்கொண்டு

तेनैव  -  தேனைவ  -  அதனாலேயே

लङ्कां  -  லங்காம்  -  இலங்கையை

ददाह  -  த³தா³ஹ  -  எரித்தனரோ

तम् आञ्जनेयम्  -  தம் ஆஞ்ஜனேயம்
  -  அந்த ஹனுமானை

प्राञ्जलिः  -  ப்ராஞ்ஜலி​:  -   கைகூப்பிக்கொண்டவனாய்

नमामि  -  நமாமி  -  வணங்குகிறேன்.

பொருள் :

எவர் கடலினுடைய ஜலத்தை லீலையாக ( விளையாட்டாக )  தாண்டி ஜனகபுத்ரியினுடைய ( சீதையினுடைய ) சோகாக்னியை கிரஹித்துக்கொண்டு அதனாலேயே இலங்கையை எரித்தனரோ , அந்த ஹனுமானை கைகூப்பிக்கொண்டவனாய் வணங்குகிறேன்.   3

Meaning  :

I bow with folded hands to Anjaneya who, having crossed the water of the ocean as if in play, took away the fire of grief consuming Sita and with that fire itself burnt down Lanka.   3

Friday, 27 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 7

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 7

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

नमोस्तु वरदे कृष्णे कुमारि ब्रह्मचारिणि ।
बालार्कसदृशाकारे पूर्णचन्द्रनिभानने ।। 7 ।।

நமோஸ்து வரதே³ க்ருʼஷ்ணே குமாரி ப்³ரஹ்மசாரிணி ।
பா³லார்கஸத்³ருʼஶாகாரே பூர்ணசந்த்³ரனிபா⁴னனே ॥ 7 ॥

namostu varade kṛṣṇe kumāri brahmacāriṇi ।
bālārkasadṛśākāre pūrṇacandranibhānane ।। 7 ।।

பொருள் :

“ஓ! வரங்களை அளிப்பவளே {துர்க்கையம்மனே}, உன்னை வணங்குகிறேன். ஓ! கிருஷ்ணனைப் போன்றவளே ( கரிய நிறத்தவளே ), ஓ! கன்னிகையே, ஓ! பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளே, ஓ! புதிதாக உதித்த சூரியனைப் போன்ற பிரகாசமான உடல் கொண்டவளே, ஓ! முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே, ( உமக்கு நமஸ்காரம் ).  7

Meaning :

'Salutations to thee, O giver of boons. O thou that art identical with Krishna, O maiden, O thou that hast observed the vow of Brahmacharya, O thou of body bright as the newly-risen Sun, O thou efface beautiful as the full moon.   7

இந்த ஸ்லோகத்திலிருந்து துர்கை அம்மன் ஸ்துதி ஆரம்பிக்கிறது.

Thursday, 26 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 7

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 7

निमिषान्निमिषार्धाद्वा यद्वाक्याद्वै विमुच्यते ।
स्वात्मानं शिवमालोक्य तस्मै श्रीगुरवे नमः ॥ ६३॥

நிமிஷான்னிமிஷார்தா⁴த்³வா யத்³வாக்யாத்³வை விமுச்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஶிவமாலோக்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ ॥ 63॥

nimiṣānnimiṣārdhādvā yadvākyādvai vimucyate ।
svātmānaṃ śivamālokya tasmai śrīgurave namaḥ ॥ 63॥

यद् वाक्याद्  -  யத்³ வாக்யாத்³  -  எவரது வாக்கியத்தினால்,

निमिषात‌् निमिष-अर्धाद् वा  -  நிமிஷாத் நிமிஷ-அர்தா⁴த்³ வா  -  நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ),

वै  -  வை  -  நிச்சயமாக,

स्व-आत्मानं शिवं  -  ஸ்வ-ஆத்மானம்ʼ ஶிவம்ʼ  -  தன் ஸ்வரூபமாகிய சிவத்தை,

आलोक्य  -  ஆலோக்ய  -  அறிந்து,

विमुच्यते  -  விமுச்யதே  -  ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

7. எவரது வாக்கியத்தினால், நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ) நிச்சயமாகத் தன் ஸ்வரூபமாகிய சிவத்தை அறிந்து ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   63

#  வாக்கியத்தினால் என்றால் வாக்கியங்களால் மொழியப்படுகின்ற போதனைகளால் என்று கொள்க.

#  நிமிஷப்பொழுது என்றால் கண் இமைக்கும் நேரம்.

#  சிவத்தை என்பது பரம்பொருளைக் குறிக்கிறது.

கண்கண்ணாடியைக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுள்ள ஒருவன், அதை மறந்து தேடிக்கொண்டிருக்கும் போது , இதோ இருக்கிறதே என்று சுட்டிக்காட்டியவுடன், அதேகணத்தில் கண்கண்ணாடி இருப்பதை எப்படி அறிகிறானோ அப்படி.

பாடபேதம் :-

निमिषार्धार्धपादाद्वा यद्वाक्याद्वै विलोक्यते ।
स्वात्मानं स्थिरमाधत्ते तस्मै श्रीगुरवे नमः ॥

நிமிஷார்தா⁴ர்த⁴பாதா³த்³வா யத்³வாக்யாத்³வை விலோக்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஸ்தி²ரமாத⁴த்தே தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥

பொருள் -  எவருடைய வாக்கியத்தால்‌ அரை நிமிஷமோ, அதில்‌ பாதியோ கால்பங்கோ தனது ஆத்மாவானது காணப்பட்டு, அது ஸ்திரமான அனுபவமாகிறதோ அந்த குருவிற்கு நமஸ்காரம்‌.

Saturday, 21 September 2019

Obeisance to Shri Hanuman - 2

Obeisance to Shri Hanuman - 2

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

अञ्जना-नन्दनं-वीरं जानकी-शोक-नाशनम् ।
कपीशमक्ष-हन्तारं वन्दे लङ्का-भयङ्करम् ॥ २॥

añjanā-nandanaṃ-vīraṃ jānakī-śoka-nāśanam ।
kapīśamakṣa-hantāraṃ vande laṅkā-bhayaṅkaram ॥ 2॥

அஞ்ஜனா-நந்த³னம்-வீரம் ஜானகீ-ஶோக-நாஶனம் ।
கபீஶமக்ஷ-ஹந்தாரம் வந்தே³ லங்கா-ப⁴யங்கரம் ॥ 2॥

பிரதி பத அர்த்தம்  :

अञ्जना-नन्दनं  -  அஞ்ஜனா-நந்த³னம்  -  அஞ்ஜனா தேவிக்குப் புத்திரனாகி ஆனந்தம் தருபவரை,

वीरं  -  வீரம்  -  பகைவர்களை ( வெளியில்  தெரியும் ராக்ஷஸாதி பகைவர்களையும், காமம், குரோதம் முதலிய உள்ளத்துப் பகைவர்களையும் ) வென்ற வீரரை,

जानकी-शोक-नाशनम्  -  ஜானகீ-ஶோக-நாஶனம்  -  ஜானகீ தேவியின் சோகத்தை போக்கியவரை,

कपीशं  -  கபீஶம்  -  கபிக்களில் ( வானரங்களில் ) மேலானவரை,  அல்லது கபி ( வானர ) ரூபத்தில் உள்ள ஈச்வரரை,

अक्ष-हन्तारं  -  அக்ஷ-ஹந்தாரம்  -  அக்ஷ குமாரனை ( ராவணனின் புதல்வன் ) வதம் செய்தவரை,

लङ्का-भयङ्करम्  -  லங்கா-ப⁴யங்கரம்  -  லங்கைக்கு பயம் காட்டியவரை,

वन्दे  -  வந்தே³   -  வணங்குகிறேன்.

பொருள் :

அஞ்ஜனா தேவிக்கு ( புதல்வனாகி ) ஆனந்தமளித்தவரை, பகைவர்களை வென்ற வீரரை, ( ராம சரிதம் கூறி )  சீதையின் சோகத்தைப் போக்கியவரை, வானரரூபத்தில் இருக்கும் ஈச்வரரை, ( ராவணனின் புதல்வனான ) அக்ஷகுமாரனை வதம் செய்தவரை, லங்கைக்கு பயம்காட்டியவரை  வணங்குகிறேன்.   2

Meaning  :

I make obeisance to the hero who gladdened Anjana (his mother), the destroyer of Sita's sorrow, the lord of the monkeys, the slayer of (Ravana's son) AkSha, and a terror to (the inhabitants of) Lanka.  2

உள்ளத்துப் பகைவர்கள் :

1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை ( எதையும் கொடுக்க மனமில்லாமை )
4) மோஹம் – தெளிவின்மை / மருட்சி
5) மதம் – கர்வம் / இறுமாப்பு
6) மாத்ஸர்யம் – பொறாமை

இந்த ஆறு எதிரிகளை வென்றவர் வீரர்.

Friday, 20 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 6

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 6

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

स्तोतुं प्रचक्रमे भूयो विविधैः स्तोत्रसंभवैः ।
आमन्त्र्य दर्शनाकाङ्क्षी राजा देवीं सहानुजः ।। 6 ।।

ஸ்தோதும்ʼ ப்ரசக்ரமே பூ⁴யோ விவிதை⁴꞉: ஸ்தோத்ரஸம்ப⁴வை꞉: ।
ஆமந்த்ர்ய த³ர்ஶனாகாங்க்ஷீ ராஜா தே³வீம்ʼ ஸஹானுஜ꞉: ॥ 6 ॥

stotuṃ pracakrame bhūyo vividhaiḥ stotrasaṃbhavaiḥ ।
āmantrya darśanākāṅñkṣī rājā devīṃ sahānujaḥ ।। 6 ।।

பொருள் :

அந்தத் தேவியின் {துர்க்கையின்} காட்சியைப் பெற, தனது தம்பிகளுடன் விரும்பிய மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளை அழைக்க (அங்கீகரிக்கப்பட்ட) பாடல்களில் இருந்து பெறப்பட்ட, அவளது பல்வேறு பெயர்களைச் சொல்லித் {துர்க்கையம்மனைத்} துதித்தான்.   6

Meaning :

And the king, desirous with his brothers of obtaining a sight of the Goddess, invoked her and began to praise her by reciting various names derived from (approved) hymns.   6

Thursday, 19 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 6

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 6

चिन्मयं व्यापितं सर्वं त्रैलोक्यं सचराचरम् ।
असित्वं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६२॥

சிந்மயம் வ்யாபிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் ।
அஸித்வம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 62॥

cinmayaṃ vyāpitaṃ sarvaṃ trailokyaṃ sacarācaram ।
asitvaṃ darśitaṃ yena tasmai
śrīgurave namaḥ ॥ 62॥

त्रैलोक्यं सचराचरं  -  த்ரைலோக்யம்ʼ ஸசராசரம்ʼ   -  சராசரத்தோடுகூடிய  மூன்றுலகமும்,

सर्वं  -  ஸர்வம்ʼ  -  யாவும் ,

चित‌्-मयं  -  சித்-மயம்ʼ  -  ( எந்த ) சின்மயத்தினால்,

व्यापितं  -  வ்யாபிதம்ʼ  -  வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,

असि-त्वं  -  அஸி-த்வம்ʼ  -  அந்த அஸித்துவம், 

येन दर्शितं  -  யேன த³ர்ஶிதம்ʼ  -  எவரால் காட்டப்பட்டதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

6. சராசரத்தோடுகூடிய மூன்றுலகமும் யாவும் சின்மயத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கின்றது. அஸித்துவம் எவராற் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   62

Saturday, 14 September 2019

Obeisance to Shri Hanuman - 1

Obeisance to Shri Hanuman - 1

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

गोष्पदी-कृत-वारीशं मशकी-कृत-राक्षसम् ।
रामायण-महामाला-रत्नं वन्देऽनिलात्मजम् ॥ १॥

கோ³ஷ்பதீ³-க்ருʼத-வாரீஶம் மஶகீ-க்ருʼத-ராக்ஷஸம் ।
ராமாயண-மஹாமாலா-ரத்னம் வந்தே³ऽனிலாத்மஜம் ॥ 1॥

goṣpadī-kṛta-vārīśaṃ maśakī-kṛta-rākṣasam ।
rāmāyaṇa-mahāmālā-ratnaṃ vande'nilātmajam ॥ 1॥

பிரதி பத அர்த்தம்  :

गोष्पदी  -  கோ³ஷ்பதீ³  -  பசுவின் கால் குளம்பின் அடியில் (மிதிபட்ட மண்ணாக),

कृत  -  க்ருʼத  -  செய்த,

वारीशं  -  வாரீஶம்   -  நீர்நிலைகளின் தலைவனை (கடலை),

मशकी  -  மஶகீ  -  (எளிதில் நசுக்கிவிடக்கூடிய) கொசுவாக

कृत  -  க்ருʼத  -  செய்த,

राक्षसम्  -  ராக்ஷஸம்  -  ராக்ஷஸர்களை,

रामायण-महामाला  -  ராமாயண-மஹாமாலா  -  ராமாயணம் என்கிற சிறந்த மாலையில் (கோர்க்ப்பட்டுள்ள),

रत्नं  -  ரத்னம்  -  (உயரிய) ரத்னமாகிய (ஹனுமானை),

अनिलात्मजम्  -  அனிலாத்மஜம்  -  வாயு புத்திரனை ,

वन्दे  -  வந்தே³  -  வணங்குகிறேன்.

பொருள் :

கடலைக் ( பசுவின் கால் ) குளம்படி போல் செய்தவனும், அரக்கர்களைக் கொசுவைப் போல் செய்தவனும், ' ராமாயணம் ' என்னும் சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவனுமாகிய வாயு புத்ரனை ( ஹனுமானை ) வணங்குகிறேன்.   1

Meaning  :

I make obeisance to the son of Vayu (the Wind God), who tamed the vast ocean into a hoof-print (in the mud), turned the demons into mosquitoes, and is the gem in the great garland ' The Ramayana '.   1

ராமாயணம் என்னும் சிறந்த மாலை சிறந்த வஸ்துக்களைத் தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்ட மாலையிலும் , சிறந்த ரத்னமாக ஹனுமான் கூறப்படுகிறார். ஏனெனில் அவர் யாரும் செய்ய இயலாத பல அருஞ்செயல்களைச் செய்துள்ளார் .

நூறு யோஜனை நீளமுள்ள கடலையும், அதைக் கடக்கும்போது உண்டான தடைகளையும்  தாண்டினார். அங்கு இருந்த ராக்ஷஸர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து , லங்கையை எரித்து  , சீதையின் சூடாமணியை எடுத்து வந்து ராமனிடம் சேர்த்தது., இன்னும் இதுபோல பட்டியல் நீண்டுகொண்டே போகும். எனவே ஹனுமானை ரத்னம் என்பது மிகையாகாது.

This Itihasam itself is a Ratnam, but the pArAyaNa slOkAs talk about another, much more precious stone, which forms the centerpiece of the beautiful garland that is Srimad Ramayana. It is none other than Sri Maruti, who is extolled as a Ratnam par excellence.

And why should Sri Hanuman be equated to a Ratnam?

Perhaps because he performed feats that were considered impossible. One such is his crossing the long, broad, tumultuous and treacherous ocean that lay across his path to Lanka, in the quest for Sri Janaki.

And he exhibits more of his bravery in the service of Sri Rama, whenever and wherever the occasion demands, especially in the annihilation of the Rakshasas who meet their end at his hands, like so many mosquitoes.
For him, it is almost a sport. No wonder then that he is termed a Ratnam, adorning the garland that is Ramayana.

Friday, 13 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 5

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 5

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

भारावतरणे पुण्ये ये स्मरन्ति सदा शिवाम् ।
तान्वै तारयते पापात्पङ्के गामिव दुर्बलाम् ।। 5 ।।

பா⁴ராவதரணே புண்யே யே ஸ்மரந்தி ஸதா³ ஶிவாம் ।
தான்வை தாரயதே பாபாத்பங்கே கா³மிவ து³ர்ப³லாம் ॥ 5 ॥

bhārāvataraṇe puṇye ye smaranti sadā śivām ।
tānvai tārayate pāpātpaṅñke gāmiva durbalām ।। 5 ।।

பொருள் :

துன்பம் நிறைந்த நேரங்களில், புதைகுழியில் உள்ள மாட்டைப் {மாடு} போல, பாவத்தில் மூழ்கிய வழிபாட்டினர், தங்கள் {பாவச்} சுமைகளை அகற்றும் பொருட்டு, நித்திய அருள் வழங்கும் தன்னை {பரமேஸ்வரியான அவளை} அழைக்கும்போது எப்போதும் காப்பவளுமான அந்தத் தேவியை;   5 

Meaning :

( saluted the Goddess who ) always rescues the worshipper sunk in sin, like a cow in the mire, who in the hours of distress calls upon that eternal giver of blessings for relieving him of their burdens.,   5

Thursday, 12 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 5

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 5

स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित्सचराचरम् ।
त्वंपदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६१॥

ஸ்தா²வரம் ஜங்க³மம் வ்யாப்தம் யத்கிஞ்சித்ஸசராசரம் ।
த்வம்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 61॥

sthāvaraṃ jaṅgamaṃ vyāptaṃ yatkiñcitsacarācaram ।
tvaṃpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 61॥

स्थावरं जङ्गमं  -  ஸ்தா²வரம்ʼ ஜங்க³மம்ʼ  -  ஸ்தாவரம் ( அசையாத ), ஜங்கமம் ( அசைகின்ற ) என்று இருக்கின்ற 

सचराचरं  -  ஸசராசரம்ʼ  -  இச்சராசரம்

यत‌्-किञ्चित् व्याप्तं  -  யத்-கிஞ்சித் வ்யாப்தம்ʼ  -  யாதொன்றும் (எதனால்)  வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,

त्वं-पदं  -  த்வம்ʼ-பத³ம்ʼ  -  அந்தத் 'த்வம்' பதம்,

येन दर्शितं  -  யேன த³ர்ஶிதம்ʼ  -  எவரால் காட்டப்பட்டதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

5.  ஸ்தாவர ஜங்கமமான இச்சராசரம் எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தத் த்வம்பதம் எவராற் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   61

Saturday, 7 September 2019

Obeisance to Shri Hanuman - Introduction

Obeisance to Shri Hanuman - Introduction

ஹனுமானைப் பற்றிய சில நமஸ்கார சுலோகங்கள் இவை. ராமாயண தியான சுலோகங்களுடன் பாராயணம் செய்யப்படுகின்றன.

॥ श्री हनुमत् नमस्कारः ॥

गोष्पदी-कृत-वारीशं मशकी-कृत-राक्षसम् ।
रामायण-महामाला-रत्नं वन्देऽनिलात्मजम् ॥ १॥

अञ्जना-नन्दनं-वीरं जानकी-शोक-नाशनम् ।
कपीशमक्ष-हन्तारं वन्दे लङ्का-भयङ्करम् ॥ २॥

उल्लङ्घ्य सिन्धोः सलिलं सलीलं
      यः शोक-वह्निं जनकात्मजायाः ।
आदाय तेनैव ददाह लङ्कां
      नमामि तं प्राञ्जलिराञ्जनेयम् ॥ ३॥

मनोजवं मारुत-तुल्य-वेगं
     जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठम् ।
वातात्मजं वानर-यूथ-मुख्यं
     श्रीराम-दूतं शिरसा नमामि ॥ ४॥

आञ्जनेयमतिपाटलाननं
       काञ्चनाद्रि-कमनीय-विग्रहम् ।
पारिजात-तरु-मूल-वासिनं
       भावयामि पवमान-नन्दनम् ॥ ५॥

यत्र यत्र रघुनाथ-कीर्तनं
      तत्र तत्र कृत-मस्तकाञ्जलिम् ।
बाष्प-वारि-परिपूर्ण-लोचनं
      मारुतिं नमत राक्षसान्तकम् ॥ ६॥

|| ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ||

கோ³ஷ்பதீ³-க்ருʼத-வாரீஶம்ʼ மஶகீ-க்ருʼத-ராக்ஷஸம் ।
ராமாயண-மஹாமாலா-ரத்னம்ʼ வந்தே³(அ)னிலாத்மஜம் ॥ 1॥

அஞ்ஜனா-நந்த³னம்ʼ-வீரம்ʼ ஜானகீ-ஶோக-நாஶனம் ।
கபீஶமக்ஷ-ஹந்தாரம்ʼ வந்தே³ லங்கா-ப⁴யங்கரம் ॥ 2॥

உல்லங்க்⁴ய ஸிந்தோ⁴꞉ ஸலிலம்ʼ ஸலீலம்ʼ
ய꞉ ஶோக-வஹ்னிம்ʼ ஜனகாத்மஜாயா꞉ ।
ஆதா³ய தேனைவ த³தா³ஹ லங்காம்ʼ
நமாமி தம்ʼ ப்ராஞ்ஜலிராஞ்ஜனேயம் ॥ 3॥

மனோஜவம்ʼ மாருத-துல்ய-வேக³ம்ʼ
ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம் ।
வாதாத்மஜம்ʼ வானர-யூத²-முக்²யம்ʼ
ஶ்ரீராம-தூ³தம்ʼ ஶிரஸா நமாமி ॥ 4॥

ஆஞ்ஜனேயமதிபாடலானநம்ʼ
காஞ்சனாத்³ரி-கமனீய-விக்³ரஹம் ।
பாரிஜாத-தரு-மூல-வாஸினம்ʼ
பா⁴வயாமி பவமான-நந்த³னம் ॥ 5॥

யத்ர யத்ர ரகு⁴னாத²-கீர்தனம்ʼ
தத்ர தத்ர க்ருʼத-மஸ்தகாஞ்ஜலிம் ।
பா³ஷ்ப-வாரி-பரிபூர்ண-லோசனம்ʼ
மாருதிம்ʼ நமத ராக்ஷஸாந்தகம் ॥ 6॥

|| ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ||

goṣpadī-kṛta-vārīśaṃ maśakī-kṛta-rākṣasam ।
rāmāyaṇa-mahāmālā-ratnaṃ vande'nilātmajam ॥ 1॥

añjanā-nandanaṃ-vīraṃ jānakī-śoka-nāśanam ।
kapīśamakṣa-hantāraṃ vande laṅkā-bhayaṅkaram ॥ 2॥

ullaṅghya sindhoḥ salilaṃ salīlaṃ
      yaḥ śoka-vahniṃ janakātmajāyāḥ ।
ādāya tenaiva dadāha laṅkāṃ
      namāmi taṃ prāñjalirāñjaneyam ॥ 3॥

manojavaṃ māruta-tulya-vegaṃ
     jitendriyaṃ buddhimatāṃ variṣṭham ।
vātātmajaṃ vānara-yūtha-mukhyaṃ
     śrīrāma-dūtaṃ śirasā namāmi ॥ 4॥

āñjaneyamatipāṭalānanaṃ
       kāñcanādri-kamanīya-vigraham ।
pārijāta-taru-mūla-vāsinaṃ
       bhāvayāmi pavamāna-nandanam ॥ 5॥

yatra yatra raghunātha-kīrtanaṃ
      tatra tatra kṛta-mastakāñjalim ।
bāṣpa-vāri-paripūrṇa-locanaṃ
      mārutiṃ namata rākṣasāntakam ॥ 6॥

Friday, 6 September 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 4

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 4

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

वासुदेवस्य भगिनीं दिव्यमाल्यविभूषिताम्।
दिव्याम्बरधरां देवीं खङ्गखेटकधारिणीम् ।। 4 ।।

வாஸுதே³வஸ்ய ப⁴கி³னீம்ʼ தி³வ்யமால்யவிபூ⁴ஷிதாம்।
தி³வ்யாம்ப³ரத⁴ராம்ʼ தே³வீம்ʼ க²ங்க³கே²டகதா⁴ரிணீம் ॥ 4 ॥

vāsudevasya bhaginīṃ divyamālyavibhūṣitām।
divyāmbaradharāṃ devīṃ khaṅgakheṭakadhāriṇīm ।। 4 ।।

பொருள் :

வாசுதேவனின் {கிருஷ்ணனின்}தங்கையும்; தெய்வீக மாலைகள் அணிந்திருப்பவளும்; தெய்வீக ஆடைகள் தரித்திருப்பவளும்; கத்தி, கேடயம் ஆகியவற்றைத் தாங்கியவளும்;    4

Meaning :

who is the sister of Vasudeva, one who is always decked in celestial garlands and attired in celestial robes,--who is armed with scimitar and shield,.  4

Thursday, 5 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 4

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 4

अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६०॥

அக²ண்ட³மண்ட³லாகாரம் வ்யாப்தம் யேந சராசரம் ।
தத்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 60॥

akhaṇḍamaṇḍalākāraṃ vyāptaṃ yena carācaram ।
tatpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 60॥

अखण्ड-मण्डल-आकारं   -  அக²ண்ட³-மண்ட³ல-ஆகாரம்ʼ  -  அகண்டமண்டலாகாரமான,

चराचरं  -  சராசரம்ʼ  -  சராசரம்,

येन व्याप्तं  -  யேன வ்யாப்தம்ʼ  -  எதனால்  வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,

तत् पदं  -  தத் பத³ம்ʼ  -  அந்த " தத் " பதம்,

येन दर्शितं  -  யேன த³ர்ஶிதம்ʼ  -  எவரால் காட்டப்பட்டதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

4. அகண்டமண்டலாகாரமான சராசரம் எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்த "தத்" பதம் எவரால் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   60

#  அத்விதீயமான ( தன்னைத் தவிர வேறொன்றல்லாத ); ஆதியும் அந்தமும் இல்லாததான; அசைகின்ற, அசையாதவைகளையும் கொண்டுள்ள இந்த சராசரம் முழுமையும் வியாபித்தும் இருக்கின்றதான எதுவோ ( தத் -  'தத் த்வமஸி' எனும் மஹாவாக்யத்திலுள்ள தத். )

#  அந்த தத் யினுடைய தன்னிலையை எவர் அடையாளம் காட்டி நாம் அறியும்படி செய்கிறாரோ, அந்த குருவை வணங்குகிறேன்.