ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 7
निमिषान्निमिषार्धाद्वा यद्वाक्याद्वै विमुच्यते ।
स्वात्मानं शिवमालोक्य तस्मै श्रीगुरवे नमः ॥ ६३॥
நிமிஷான்னிமிஷார்தா⁴த்³வா யத்³வாக்யாத்³வை விமுச்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஶிவமாலோக்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ ॥ 63॥
nimiṣānnimiṣārdhādvā yadvākyādvai vimucyate ।
svātmānaṃ śivamālokya tasmai śrīgurave namaḥ ॥ 63॥
यद् वाक्याद् - யத்³ வாக்யாத்³ - எவரது வாக்கியத்தினால்,
निमिषात् निमिष-अर्धाद् वा - நிமிஷாத் நிமிஷ-அர்தா⁴த்³ வா - நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ),
वै - வை - நிச்சயமாக,
स्व-आत्मानं शिवं - ஸ்வ-ஆத்மானம்ʼ ஶிவம்ʼ - தன் ஸ்வரூபமாகிய சிவத்தை,
आलोक्य - ஆலோக்ய - அறிந்து,
विमुच्यते - விமுச்யதே - ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
7. எவரது வாக்கியத்தினால், நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ) நிச்சயமாகத் தன் ஸ்வரூபமாகிய சிவத்தை அறிந்து ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 63
# வாக்கியத்தினால் என்றால் வாக்கியங்களால் மொழியப்படுகின்ற போதனைகளால் என்று கொள்க.
# நிமிஷப்பொழுது என்றால் கண் இமைக்கும் நேரம்.
# சிவத்தை என்பது பரம்பொருளைக் குறிக்கிறது.
கண்கண்ணாடியைக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுள்ள ஒருவன், அதை மறந்து தேடிக்கொண்டிருக்கும் போது , இதோ இருக்கிறதே என்று சுட்டிக்காட்டியவுடன், அதேகணத்தில் கண்கண்ணாடி இருப்பதை எப்படி அறிகிறானோ அப்படி.
பாடபேதம் :-
निमिषार्धार्धपादाद्वा यद्वाक्याद्वै विलोक्यते ।
स्वात्मानं स्थिरमाधत्ते तस्मै श्रीगुरवे नमः ॥
நிமிஷார்தா⁴ர்த⁴பாதா³த்³வா யத்³வாக்யாத்³வை விலோக்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஸ்தி²ரமாத⁴த்தே தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥
பொருள் - எவருடைய வாக்கியத்தால் அரை நிமிஷமோ, அதில் பாதியோ கால்பங்கோ தனது ஆத்மாவானது காணப்பட்டு, அது ஸ்திரமான அனுபவமாகிறதோ அந்த குருவிற்கு நமஸ்காரம்.
No comments:
Post a Comment