Saturday, 21 September 2019

Obeisance to Shri Hanuman - 2

Obeisance to Shri Hanuman - 2

॥ श्री हनुमत् नमस्कारः ॥

॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥

॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥

अञ्जना-नन्दनं-वीरं जानकी-शोक-नाशनम् ।
कपीशमक्ष-हन्तारं वन्दे लङ्का-भयङ्करम् ॥ २॥

añjanā-nandanaṃ-vīraṃ jānakī-śoka-nāśanam ।
kapīśamakṣa-hantāraṃ vande laṅkā-bhayaṅkaram ॥ 2॥

அஞ்ஜனா-நந்த³னம்-வீரம் ஜானகீ-ஶோக-நாஶனம் ।
கபீஶமக்ஷ-ஹந்தாரம் வந்தே³ லங்கா-ப⁴யங்கரம் ॥ 2॥

பிரதி பத அர்த்தம்  :

अञ्जना-नन्दनं  -  அஞ்ஜனா-நந்த³னம்  -  அஞ்ஜனா தேவிக்குப் புத்திரனாகி ஆனந்தம் தருபவரை,

वीरं  -  வீரம்  -  பகைவர்களை ( வெளியில்  தெரியும் ராக்ஷஸாதி பகைவர்களையும், காமம், குரோதம் முதலிய உள்ளத்துப் பகைவர்களையும் ) வென்ற வீரரை,

जानकी-शोक-नाशनम्  -  ஜானகீ-ஶோக-நாஶனம்  -  ஜானகீ தேவியின் சோகத்தை போக்கியவரை,

कपीशं  -  கபீஶம்  -  கபிக்களில் ( வானரங்களில் ) மேலானவரை,  அல்லது கபி ( வானர ) ரூபத்தில் உள்ள ஈச்வரரை,

अक्ष-हन्तारं  -  அக்ஷ-ஹந்தாரம்  -  அக்ஷ குமாரனை ( ராவணனின் புதல்வன் ) வதம் செய்தவரை,

लङ्का-भयङ्करम्  -  லங்கா-ப⁴யங்கரம்  -  லங்கைக்கு பயம் காட்டியவரை,

वन्दे  -  வந்தே³   -  வணங்குகிறேன்.

பொருள் :

அஞ்ஜனா தேவிக்கு ( புதல்வனாகி ) ஆனந்தமளித்தவரை, பகைவர்களை வென்ற வீரரை, ( ராம சரிதம் கூறி )  சீதையின் சோகத்தைப் போக்கியவரை, வானரரூபத்தில் இருக்கும் ஈச்வரரை, ( ராவணனின் புதல்வனான ) அக்ஷகுமாரனை வதம் செய்தவரை, லங்கைக்கு பயம்காட்டியவரை  வணங்குகிறேன்.   2

Meaning  :

I make obeisance to the hero who gladdened Anjana (his mother), the destroyer of Sita's sorrow, the lord of the monkeys, the slayer of (Ravana's son) AkSha, and a terror to (the inhabitants of) Lanka.  2

உள்ளத்துப் பகைவர்கள் :

1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் – பேராசை ( எதையும் கொடுக்க மனமில்லாமை )
4) மோஹம் – தெளிவின்மை / மருட்சி
5) மதம் – கர்வம் / இறுமாப்பு
6) மாத்ஸர்யம் – பொறாமை

இந்த ஆறு எதிரிகளை வென்றவர் வீரர்.

No comments:

Post a Comment