Sunday, 16 January 2022

Vinaayaka Leelaa Stuti - sloka 14

Vinaayaka Leelaa Stuti - sloka 14

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


तं वामनाङ्गं शिशुभावमाप्तं केनापि सत्कारणतो धरित्र्याम् ।
वक्तारमाद्यं निगमादिकानां लोकैकवन्द्यं प्रणमामि विघ्नम् ॥ १४॥

தம்ʼ வாமனாங்க³ம்ʼ ஶிஶுபா⁴வமாப்தம்ʼ கேனாபி ஸத்காரணதோ த⁴ரித்ர்யாம் |
வக்தாரமாத்³யம்ʼ நிக³மாதி³கானாம்ʼ லோகைகவந்த்³யம்ʼ ப்ரணமாமி விக்⁴னம் || 14||

taṃ vāmanāṅgaṃ śiśubhāvamāptaṃ kenāpi satkāraṇato dharitryām ।
vaktāramādyaṃ nigamādikānāṃ lokaikavandyaṃ praṇamāmi vighnam ॥ 14॥


वामनाङ्गं - வாமனாங்க³ம்ʼ - குள்ள வடிவினரை,

केन-अपि सत्-कारणतः - கேன-அபி ஸத்-காரணத: - ஏதோ நற்காரணம் கொண்டு ,

धरित्र्यां - த⁴ரித்ர்யாம்ʼ - பூமியில் ,

शिशु-भावं-आप्तं - ஶிஶு-பா⁴வம்ʼ-ஆப்தம்ʼ - பாலனாகத் தோன்றியவரை,

वक्तारं-आद्यं निगम-आदिकानां - வக்தாரம்ʼ-ஆத்³யம்ʼ நிக³ம-ஆதி³கானாம்ʼ - வேதம் முதலானவற்றை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவரை,

लोक-एक-वन्द्यं - லோக-ஏக-வந்த்³யம்ʼ - உலகனைத்தாலும் வணங்கப்படுபவரை,

तं विघ्नम् - தம்ʼ விக்⁴னம் - அந்த விக்நேசரை ,

प्रणमामि - ப்ரணமாமி - வணங்குகிறேன்.


பொருள் :
குள்ள வடிவினரை, ஏதோ நற்காரணம் கொண்டு பூமியில் பாலனாகத் தோன்றியவரை, வேதம் முதலானவற்றை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவரை, உலகனைத்தாலும் வணங்கப்படுபவரை, அந்த விக்நேசரை வணங்குகிறேன். 14


# வக்தாரம்ʼ-ஆத்³யம்ʼ நிக³ம-ஆதி³கானாம்ʼ - வேதம், புராணம், இதிஹாஸம் முதலானவைகளில் ஆத்யமாக - முழுமுதற்பொருளாக கூறப்படுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

# विघ्नः - விக்⁴ன: - தடை.
இது ஆயிரம் நாமாக்களில் ஒன்று. விக்ன ரூபமானவர் என்று கொள்ளலாம். நாம் தீமையில் முடியும் கார்யங்களைத் துவங்கும் போது தடையாக ஏற்பட்டு, பின் நன்மை பயக்கும் வழியில் திருப்புபவர். தடையே இல்லாமல் வாழ்வில் வளர்ந்தவர்களுக்கு, திடீரென்று சிறு தடை வந்தாலும் துவண்டுவிடுவர். ஆகவே சிற்சில தடைகளும் கர்மானுதீனமாக ஏற்படலாம். அவை பாடம் சொல்ல வந்தவை என்று அறிந்து , பகவத் சரணம் பற்றி வாழ வேண்டியது.

Sunday, 2 January 2022

Vinaayaka Leelaa Stuti - sloka 12

Vinaayaka Leelaa Stuti - sloka 12

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


स्तम्बेरमास्यं घुसृणाङ्गरागं सिन्दूरपूरारुणकान्तकुम्भम् ।
कुचन्दनालिप्तकरं गणेशं ध्यायामि चित्ते सकलेष्टदं तम् ॥ १२॥

ஸ்தம்பே³ரமாஸ்யம்ʼ கு⁴ஸ்ருʼணாங்க³ராக³ம்ʼ ஸிந்தூ³ரபூராருணகாந்தகும்ப⁴ம் | 
குசந்த³னாலிப்தகரம்ʼ க³ணேஶம்ʼ த்⁴யாயாமி சித்தே ஸகலேஷ்டத³ம்ʼ தம் || 12|| 

stamberamāsyaṃ ghusṛṇāṅgarāgaṃ sindūrapūrāruṇakāntakumbham ।
kucandanāliptakaraṃ gaṇeśaṃ dhyāyāmi citte sakaleṣṭadaṃ tam ॥ 12॥


स्तम्बेरम-आस्यं - ஸ்தம்பே³ரம-ஆஸ்யம்ʼ - யானை முகமுள்ளவரை,

घुसृण-अङ्ग-रागं - கு⁴ஸ்ருʼண-அங்க³-ராக³ம்ʼ - குங்குமப்பூ போல சிவந்த மேனியவரை,

सिन्दूरपूर-अरुणकान्त-कुम्भम् - ஸிந்தூ³ரபூர-அருணகாந்த-கும்ப⁴ம் - செந்தூரத்தால் சிவந்த மத்தகமுள்ளவரை, 

कुचन्दन-आलिप्त-करं - குசந்த³ன-ஆலிப்த-கரம்ʼ - கைகளில் சிவந்த சந்தனப் பூச்சுள்ளவரை,

सकल-इष्टदं - ஸகல-இஷ்டத³ம்ʼ - விரும்பியது எல்லாம் அருள்பவரை,

तं गणेशं - தம்ʼ க³ணேஶம்ʼ - அந்த கணேசரை,

चित्ते ध्यायामि - சித்தே த்⁴யாயாமி - உள்ளத்தில் தியானிக்கிறேன்.


பொருள் :
யானை முகமுள்ளவரை, குங்குமப்பூ போல சிவந்த மேனியவரை, செந்தூரத்தால் சிவந்த மத்தகமுள்ளவரை, கைகளில் சிவந்த சந்தனப் பூச்சுள்ளவரை, விரும்பியது எல்லாம் அருள்பவரை, அந்த கணேசரை உள்ளத்தில் தியானிக்கிறேன். 12


# கரம்ʼ - துதிக்கையில் என்றும் கொள்ளலாம்.

Vinaayaka Leelaa Stuti - sloka 13

Vinaayaka Leelaa Stuti - sloka 13

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


स भीष्ममातुर्निजपुष्करेण जलं समादाय कुचौ स्वमातुः ।
प्रक्षालयामास षडास्यपीतौ स्वार्थं मुदेऽसौ कलभाननोऽस्तु ॥ १३॥

ஸ பீ⁴ஷ்மமாதுர்நிஜபுஷ்கரேண ஜலம் ஸமாதா³ய குசௌ ஸ்வமாது: ।
ப்ரக்ஷாலயாமாஸ ஷடா³ஸ்யபீதௌ ஸ்வார்த²ம் முதே³ঽஸௌ கலபா⁴நநோঽஸ்து ॥ 13॥

sa bhīṣmamāturnijapuṣkareṇa jalaṃ samādāya kucau svamātuḥ ।
prakṣālayāmāsa ṣaḍāsyapītau svārthaṃ mude'sau kalabhānano'stu ॥ 13॥


भीष्म-मातुः-निजपुष्करेण - பீ⁴ஷ்ம-மாது:-நிஜபுஷ்கரேண - பீஷ்மரது அன்னையினுடைய ( கங்கையினுடைய ) ( நீர் தேங்கியுள்ள ) குளத்திலிருந்து,

जलं समादाय - ஜலம்ʼ ஸமாதா³ய - நீரை எடுத்து வந்து,

षडास्य-पीतौ - ஷடா³ஸ்ய-பீதௌ - ஆறுமுகனால் ( முருகனால் ) அருந்தப்பட்ட ,

स्वमातुः कुचौ - ஸ்வமாது: குசௌ - தன் தாயின் ஸ்தனங்களை,

स्वार्थं - ஸ்வார்த²ம்ʼ - தான் குடிப்பதற்கென,

प्रक्षालयामास - ப்ரக்ஷாலயாமாஸ - கழுவியவரான,

सः कलभ-आननः - ஸ: கலப⁴-ஆனன: - அந்த யானை முகத்தவர் ( குழந்தை கணேசர் ),

असौ मुदे अस्तु - அஸௌ முதே³ அஸ்து - நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.


பொருள் :

பீஷ்மரது அன்னையினுடைய ( கங்கையினுடைய நீர் தேங்கியுள்ள ) குளத்திலிருந்து நீரை எடுத்து வந்து ஆறுமுகனால் ( முருகனால் ) அருந்தப்பட்ட, தன் தாயின் ஸ்தனங்களைத் தான் குடிப்பதற்கென கழுவியவரான அந்த ( யானை முகத்தவர் ) குழந்தை கணேசர் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கட்டும். 13


# कलभः - கலப⁴: - குட்டி யானை.

# இதுவும் ஒரு சிறு குழந்தையின் லீலை.