Thursday, 16 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka ( Phalasruti )

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka ( Phalasruti )

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

फलश्रुतिः
शङ्करेणादरात् प्रोक्तं पदानां तत्त्वनिर्णयम् ।
    त्रिसन्ध्यं यः पठेत् तस्य श्रीर्विद्याऽऽयुश्च वर्धते ॥

ப²லஶ்ருதி꞉
ஶங்கரேணாத³ராத் ப்ரோக்தம்ʼ பதா³னாம்ʼ தத்த்வநிர்ணயம் .
    த்ரிஸந்த்⁴யம்ʼ ய꞉ படே²த் தஸ்ய ஶ்ரீர்வித்³யா(ஆ)யுஶ்ச வர்த⁴தே ..

phalaśrutiḥ
śaṅkareṇādarāt proktaṃ padānāṃ tattvanirṇayam .
    trisandhyaṃ yaḥ paṭhet tasya śrīrvidyā''yuśca vardhate ..

பொருள்:

இந்த ( மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ) ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினால், மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும். 12
என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.

ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் முற்றும்.

Meaning :

The meaning of the words had been explained by Lord Siva out of affection.
Whosoever reads this hymn with faith, thrice a day (at Sunrise, mid-day and evening) would have a great increase in prosperity (shree) knowledge (vidya) longevity (Ayush). 12

Thus ends the Mantra Raja Pada Stotram.

Wednesday, 15 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 11

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 11

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

11. अहम् - அஹம் - aham :-

दासभूताः स्वतः सर्वे ह्यात्मानः परमात्मनः ।
    अतोऽहमपि ते दासः इति मत्वा नमाम्यहम् ॥ ११॥

தா³ஸபூ⁴தா꞉ ஸ்வத꞉ ஸர்வே ஹ்யாத்மான꞉ பரமாத்மன꞉ .
    அதோ(அ)ஹமபி தே தா³ஸ꞉ இதி மத்வா நமாம்யஹம் .. 11..

dāsabhūtāḥ svataḥ sarve hyātmānaḥ paramātmanaḥ .
    ato'hamapi te dāsaḥ iti matvā namāmyaham .. 11..

பொருள்:

இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன். 11

Meaning :

All the living beings are, by nature, servants of the Supreme Being, I am prostrating to You, with the awareness that I am also for the same reason, Your servant. 11

Tuesday, 14 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 10

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 10

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

10. नमामि - namāmi - நமாமி :-

नमस्कारात्मकं यस्मै विधायाऽऽत्मनिवेदनम् ।
    त्यक्तदुःखोऽकिलान् कामान् अश्नन्तं तं नमाम्यहम् ॥ १०॥

நமஸ்காராத்மகம்ʼ யஸ்மை விதா⁴யா(ஆ)த்மநிவேத³னம் .
    த்யக்தது³꞉கோ²(அ)கிலான் காமான் அஶ்னந்தம்ʼ தம்ʼ நமாம்யஹம் .. 10..

namaskārātmakaṃ yasmai vidhāyā''tmanivedanam .
    tyaktaduḥkho'kilān kāmān aśnantaṃ taṃ namāmyaham .. 10..

பொருள்:

எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து திருவடிகளில் நம: என்று கூறி சரணாகதி செய்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன். 10

Meaning :

I bow down to the One by offering obeisance to whom in the form of One’s own self, people get rid of all miseries and obtain their desired objects. 10

Sunday, 12 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 9

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 9

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

9. मृत्युमृत्युं  -  ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ  -  mṛtyumṛtyuṃ  :-

साक्षात् स्वकाले सम्प्राप्तं मृत्युं शत्रुगणान्वितम् ।
    भक्तानां नाशयेद् यस्तु मृत्युमृत्युं नमाम्यहम् ॥ ९॥

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்ʼ ம்ருʼத்யும்ʼ ஶத்ருக³ணான்விதம் .
    ப⁴க்தானாம்ʼ நாஶயேத்³ யஸ்து ம்ருʼத்யும்ருʼத்யும்ʼ நமாம்யஹம் .. 9..

sākṣāt svakāle samprāptaṃ mṛtyuṃ śatrugaṇānvitam .
    bhaktānāṃ nāśayed yastu mṛtyumṛtyuṃ namāmyaham .. 9..

பொருள்:

மரண காலத்தில் எமதூதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.  9

Translation :

He who is "Death to Death" and He who destroys death and hosts of enemies of the devotees by arriving at the right moment, to Him I offer my salutations. (9)

Friday, 10 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 8

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 8

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

8. भद्रं - ப⁴த்³ரம்ʼ - bhadraṃ :-

सर्वोऽपि यं समाश्रित्य सकलं भद्रमश्नुते ।
    श्रिया च भद्रया जुष्टो यस्तं भद्रं नमाम्यहम् ॥ ८॥

ஸர்வோ(அ)பி யம்ʼ ஸமாஶ்ரித்ய ஸகலம்ʼ ப⁴த்³ரமஶ்னுதே .
    ஶ்ரியா ச ப⁴த்³ரயா ஜுஷ்டோ யஸ்தம்ʼ ப⁴த்³ரம்ʼ நமாம்யஹம் .. 8..

sarvo'pi yaṃ samāśritya sakalaṃ bhadramaśnute .
    śriyā ca bhadrayā juṣṭo yastaṃ bhadraṃ namāmyaham .. 8..

பொருள்:

எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன். 8

Meaning :

I offer my salutations to the Lord, the repository of good things, worshipping whom all the people are able to obtain auspicious things. 8

Thursday, 9 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 7

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 7

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

7. भीषणं - பீ⁴ஷணம்ʼ - bhīṣaṇaṃ :-

यन्नामस्मरणाद् भीताः भूतवेतालराक्षसाः ।
    रोगाद्याश्च प्रणश्यन्ति भीषणं तं नमाम्यहम् ॥ ७॥

யந்நாமஸ்மரணாத்³ பீ⁴தா꞉ பூ⁴தவேதாலராக்ஷஸா꞉ .
    ரோகா³த்³யாஶ்ச ப்ரணஶ்யந்தி பீ⁴ஷணம்ʼ தம்ʼ நமாம்யஹம் .. 7..

yannāmasmaraṇād bhītāḥ bhūtavetālarākṣasāḥ .
    rogādyāśca praṇaśyanti bhīṣaṇaṃ taṃ namāmyaham .. 7..

பொருள்:

உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 7

Meaning :

By the mere thought of whose name, devils, demons, asuras get frightened, acute diseases get cured, to such a frightening One, I offer my salutations. 7

Wednesday, 8 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 6

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 6

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

6. नृसिंहं - nṛsiṃhaṃ - ந்ருʼஸிம்ʼஹம்ʼ :-

नरवत् सिंहवच्चैव यस्य रूपं महात्मनः ।
    महासटं महादंष्ट्रं तं नृसिंहं नमाम्यहम् ॥ ६॥

நரவத் ஸிம்ʼஹவச்சைவ யஸ்ய ரூபம்ʼ மஹாத்மன꞉ .
    மஹாஸடம்ʼ மஹாத³ம்ʼஷ்ட்ரம்ʼ தம்ʼ ந்ருʼஸிம்ʼஹம்ʼ நமாம்யஹம் .. 6..

naravat siṃhavaccaiva yasya rūpaṃ mahātmanaḥ .
    mahāsaṭaṃ mahādaṃṣṭraṃ taṃ nṛsiṃhaṃ namāmyaham .. 6..

பொருள்:

பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன். 6

Meaning :

To that Form of the Lord, which is half man and half lion, complete with the mane, the canine teeth, to such a divine Lord Nrsimha, I offer my salutations. 6

Tuesday, 7 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 5

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 5

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

5. सर्वतोमुखम् - ஸர்வதோமுக²ம் - sarvatomukham :-

सर्वेन्द्रियैरपि विना सर्वं सर्वत्र सर्वदा ।
    यो जानाति नमाम्याद्यं तमहं सर्वतोमुखम् ॥ ५॥

ஸர்வேந்த்³ரியைரபி வினா ஸர்வம்ʼ ஸர்வத்ர ஸர்வதா³ .
    யோ ஜானாதி நமாம்யாத்³யம்ʼ தமஹம்ʼ ஸர்வதோமுக²ம் .. 5..

sarvendriyairapi vinā sarvaṃ sarvatra sarvadā .
    yo jānāti namāmyādyaṃ tamahaṃ sarvatomukham .. 5..

பொருள்:

சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 5

Translation :

He who knows everything, all the time, and at all places, without the help of the senses, to such primal person who has faces in all directions, I offer my salutations. 5

Monday, 6 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 4

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 4

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

4. ज्वलन्तं - ஜ்வலந்தம்ʼ - jvalantaṃ :-

ज्योतींष्यर्केन्दुनक्षत्रज्वलनादीन्यनुक्रमात् ।
    ज्वलन्ति तेजसा यस्य तं ज्वलन्तं नमाम्यहम् ॥ ४॥

ஜ்யோதீம்ʼஷ்யர்கேந்து³நக்ஷத்ரஜ்வலநாதீ³ன்யனுக்ரமாத் .
    ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம்ʼ ஜ்வலந்தம்ʼ நமாம்யஹம் .. 4..

jyotīṃṣyarkendunakṣatrajvalanādīnyanukramāt .
    jvalanti tejasā yasya taṃ jvalantaṃ namāmyaham .. 4..

பொருள்:

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 4

Meaning :

He after whose luster the luminary bodies, the Sun, the Moon, the Stars and Fire are effulgent and are shining, to that resplendent One I offer my salutations. 4

Sunday, 5 July 2020

பாப புண்ணியங்கள் :

பாப புண்ணியங்கள் :

(தெய்வத்தின் குரல் - முதல் பகுதி)

இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.

“பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ பாபத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே, அது என்ன?” என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.

“அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது” என்று பகவான் பதில் சொன்னார்.

ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால்—தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஓர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.

சரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா? அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.

அப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது? நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.

‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தான் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவிவிடுகிறது.

ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா? இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆசைகளுக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன; பாபம் குறைகிறது; புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசையில்லாமல் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.

நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாவம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.

வாயால் பகவந் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். ‘சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது; இதற்கு அவகாசம் இல்லையே’ என்பீர்கள். சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது? அதையெல்லாம் பகவந்நாமஸ்மரணையில் செலவிடலாமே! இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்துக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவந் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே! ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே! மறு உலகத்தில் செலாவணி பகவந் நாமா ஒன்றுதானே?

மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிஷங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.

பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.

பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது; அதோடு நில்லாமல் நாளைக்கு பொடி போடுவும் தூண்டுகிறது. இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும்.

வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்—நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூட—பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!

“என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்—ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: —பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

அதனால் நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.

மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். ‘பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்’ என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்.

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 3

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 3

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

3. महाविष्णुं - மஹாவிஷ்ணும் - mahāviṣṇuṃ :-

पदावष्टब्धपातालं मूर्धाविष्टत्रिविष्टपम् ।
    भुजप्रविष्टाष्टदिशं महाविष्णुं नमाम्यहम् ॥ ३॥

பதா³வஷ்டப்³த⁴பாதாலம்ʼ மூர்தா⁴விஷ்டத்ரிவிஷ்டபம் .
    பு⁴ஜப்ரவிஷ்டாஷ்டதி³ஶம்ʼ மஹாவிஷ்ணும்ʼ நமாம்யஹம் .. 3..

padāvaṣṭabdhapātālaṃ mūrdhāviṣṭatriviṣṭapam .
    bhujapraviṣṭāṣṭadiśaṃ mahāviṣṇuṃ namāmyaham .. 3..

பொருள் :

விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.  3

Translation :

I offer my salutations to Maha Vishnu, whose feet touch the nether lands, whose forehead touches the heaven and whose hands spread in all directions. (3)

Friday, 3 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 2

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 2

|| श्री मन्त्रराज पद स्तोत्रम् ||

|| ŚRĪ MANTRARĀJA PADA STOTRAM ||

|| ஶ்ரீ மந்த்ரராஜ பத³ ஸ்தோத்ரம் ||

2. वीरं - vīraṃ - வீரம் :-

सर्वैरवध्यतां प्राप्तं सबलौघं दितेः सुतम् ।
    नखाग्रैः शकलीचक्रे यस्तं वीरं नमाम्यहम् ॥ २॥

ஸர்வைரவத்⁴யதாம்ʼ ப்ராப்தம்ʼ ஸப³லௌக⁴ம்ʼ தி³தே꞉ ஸுதம் .
    நகா²க்³ரை꞉ ஶகலீசக்ரே யஸ்தம்ʼ வீரம்ʼ நமாம்யஹம் .. 2..

sarvairavadhyatāṃ prāptaṃ sabalaughaṃ diteḥ sutam .
    nakhāgraiḥ śakalīcakre yastaṃ vīraṃ namāmyaham .. 2..

பொருள் :

திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன். 2

Translation :

He who with His sharp nails tore to pieces the asura, the son of Diti who could not be killed by anyone along with His large armies. To such a valorous person, I offer my salutations. (2)

Thursday, 2 July 2020

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 1

Sri Mantra-Raja-Pada Stotram - Sloka 1

1. उग्रं - உக்³ரம்ʼ - ugraṃ :-

श्री ईश्वर उवाच -
वृत्तोत्फुल्लविशालाक्षं विपक्षक्षयदीक्षितम् ।
    निनादत्रस्तविश्वाण्डं विष्णुमुग्रं नमाम्यहम् ॥ १॥

ஶ்ரீ ஈஶ்வர உவாச -
வ்ருʼத்தோத்பு²ல்லவிஶாலாக்ஷம்ʼ விபக்ஷக்ஷயதீ³க்ஷிதம் .
    நிநாத³த்ரஸ்தவிஶ்வாண்ட³ம்ʼ விஷ்ணுமுக்³ரம்ʼ நமாம்யஹம் .. 1..

śrī īśvara uvāca -
vṛttotphullaviśālākṣaṃ vipakṣakṣayadīkṣitam .
    ninādatrastaviśvāṇḍaṃ viṣṇumugraṃ namāmyaham .. 1..

பொருள் :

ஸ்ரீ ஈச்வரர் கூறினார் -

பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 1

Meaning :

Sri Ishwara Said:
He who is having big and round eyes, He who has taken a vow to kill the enemies, He who by His fierce roars is shaking the entire world, to such a ferocious Lord, I offer my salutations. 1