Sunday, 30 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 3

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 3

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

भक्तःप्रियाय त्रिपुरान्तकाय पिनाकिने दुष्टहराय नित्यम् ।
प्रत्यक्षलीलाय मनुष्यलोके श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ३॥

ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 3॥

bhaktaḥpriyāya tripurāntakāya pinākine duṣṭaharāya nityam ।
pratyakṣalīlāya manuṣyaloke śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 3॥

भक्तःप्रियाय  -  ப⁴க்த꞉:ப்ரியாய  -  பக்தர்களிடம் பிரியமாக இருப்பவருக்கு,

त्रि-पुर-अन्तकाय  -  த்ரி-புர-அந்தகாய  -  முப்புரங்களை அழித்தவருக்கு,

पिनाकिने  -  பினாகினே  -  பினாகம் என்னும் வில்லினை உடையவருக்கு,

नित्यं दुष्ट-हराय   -  நித்யம் து³ஷ்ட-ஹராய   -  எல்லாக் காலங்களிலும் தீயோரை  அழிப்பவருக்கு,

मनुष्य-लोके  -  மனுஷ்ய-லோகே  -  மனிதர்களின் பார்வையில்

प्रत्यक्ष-लीलाय  -  ப்ரத்யக்ஷ-லீலாய  -  நேரடியாக தெரியும்படி லீலைகள் செய்பவருக்கு

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

பக்தர்களிடம் பிரியமாக இருப்பவரும், முப்புரங்களை அழித்தவரும், பினாகம் என்னும் வில்லினை உடையவரும், ( அதைக்கொண்டு ) எல்லாக் காலங்களிலும் தீயோரை  அழிப்பவரும், மனிதர்களின் பார்வையில் நேரடியாக தெரியும்படி லீலைகள் செய்பவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.   3

# வெவ்வேறு பதங்களுடன் नित्यं -  நித்யம் என்னும் பதத்தை சேர்த்தால்

नित्यं भक्तःप्रियाय  -  நித்யம் ப⁴க்த꞉:ப்ரியாய  - பக்தர்கள் தன்மீது அன்பைக் காட்டும்போதும், சிலசமயம் கல்லை எரிந்தாலும், வில்லால் அடித்தாலும், காரி உமிழ்ந்தாலும் கூட மாறாத அன்பைக் காட்டுபவருக்கு என்றும் கொள்ளலாம்.

मनुष्य-लोके नित्यं प्रत्यक्ष-लीलाय  -    மனுஷ்ய-லோகே நித்யம் ப்ரத்யக்ஷ-லீலாய  -  அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மட்டும் மானிட உலகில் செய்தார் என்று இல்லாமல், எப்பொழுதும், எந்த லோகத்திலானாலும், பக்தர்களுக்காக, அவர்கள் காணும்படி, அறியும்படி எண்ணற்ற  திருவிளையாடல்களை  செய்துகொண்டே இருப்பவருக்கு என்று கொள்ளலாம்.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who is the lover his devotees,
Who has destroyed the three cities,
Who holds the bow called Pinaka,
Who destroys bad people daily,
And who plays in the world of humans.   3

Sri Mahaganesha Pancharatna Stotram - Introduction

Sri Mahaganesha Pancharatna Stotram - Introduction

ஸ்ரீ சங்கரபகவத்பாதர்‌ அருளிய ஸ்ரீ மஹாகணேச பஞ்சரத்னம்‌ :

ஸ்ரீ சங்கரபகவத்பாதர்‌ அருளிய மஹா பஞ்சரத்னம்‌ என்னும்‌ இந்த ஸ்தோத்திரம்‌ ஐந்து சுலோகங்கள்‌ கொண்டது. ஆறாவது சுலோகத்தில்‌ இதைப்படிப்பதால்‌ ஏற்படும்‌ பலன்களைக்‌ காட்டுகிறார்‌. விநாயகருடைய பெருமைகளை விளக்கும்‌ இந்த ஸ்தோத்திரம்‌ அழகிய விருத்தத்தில்‌ அமைந்திருப்பதால்‌ யாவருக்கும்‌ படிப்பதில்‌ உத்ஸாஹத்தைத்‌ தரக்கூடியது.

" एकं सत् विप्रा बहुधा वदन्ति  -  ஏகம்ʼ ஸத் விப்ரா ப³ஹுதா⁴ வத³ந்தி ". ஒரே ப்ரஹ்மதத்வம்‌ பல தேவதாமூர்த்திகளாக விளங்குகிறது. பெயரும்‌ உருவமும்‌ வெவ்வேறாக இருந்தாலும்‌ தத்வம்‌ ஒன்றுதான்‌. இதுதான்‌ உபநிஷத்தில்‌ கூறப்பட்ட அத்வைத ஸித்‌தாந்தம்‌ இதை அனுஸரித்து ஸ்ரீபகவத்பாதர்‌ தம்முடைய ஒவ்வொரு ஸ்தோத்திரத்திலும்‌ அந்தந்த தேவதா மூர்த்தியை ஸகல ஜகத்காரணமான பரமாத்ம ஸ்வரூபமாகவே வர்ணிக்கிறார்‌.

Shankaracharyar composed this stotra--hymn, on GaNesha in a metre called pancha-chAmaram, which has four quarters of sixteen syllables each, and has a scheme of short-long-short-long syllables (laghu-guru-laghu-guru in prosody parlance), with an usual internal alliteration or rhyme. This 'tadhIm-tadhIm' movement endows the lyric with a brisk, marching gait, as that of an elephant, for example.

In accordance with the RgVedic statement 'ekam sad viprA bahudhA vadanti', which states that it is the same 'brahma tatvam' that is manifest as several mUrtis--images, Shankara, in each of his stotras, describes the devatA-mUrti he adores, as the paramAtma svarUpam -- Brahman in nature, which is the jagatkAraNam -- cause behind this universe.


॥ श्री महागणेश पञ्चरत्नम् ॥

मुदाकरात्तमोदकं सदाविमुक्तिसाधकम्
कलाधरावतंसकं विलासिलोकरक्षकम्।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकम्
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम्॥१॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरम्
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम्।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरम्
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम्॥२॥

समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरम्
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम्।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करम्
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम्॥३॥

अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनम्
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम्॥४॥

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजम्
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम्।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनाम्
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम्॥५॥

महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहम्
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम्।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रताम्
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात्॥

॥इति श्रीमच्छङ्कराचार्यविरचितं श्रीमहागणेशपञ्चरत्नं सम्पूर्णम्॥

॥ ஶ்ரீ மஹாக³ணேஶ பஞ்சரத்னம் ॥

முதா³கராத்தமோத³கம்ʼ ஸதா³விமுக்திஸாத⁴கம்
கலாத⁴ராவதம்ʼஸகம்ʼ விலாஸிலோகரக்ஷகம்।
அனாயகைகனாயகம்ʼ வினாஶிதேப⁴தை³த்யகம்
நதாஶுபா⁴ஶுனாஶகம்ʼ நமாமி தம்ʼ வினாயகம்॥1॥

நதேதராதிபீ⁴கரம்ʼ நவோதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரினிர்ஜரம்ʼ நதாதி⁴காபது³த்³த⁴ரம்।
ஸுரேஶ்வரம்ʼ நிதீ⁴ஶ்வரம்ʼ க³ஜேஶ்வரம்ʼ க³ணேஶ்வரம்
மஹேஶ்வரம்ʼ தமாஶ்ரயே பராத்பரம்ʼ நிரந்தரம்॥2॥

ஸமஸ்தலோகஶங்கரம்ʼ நிரஸ்ததை³த்யகுஞ்ஜரம்
த³ரேதரோத³ரம்ʼ வரம்ʼ வரேப⁴வக்த்ரமக்ஷரம்।
க்ருʼபாகரம்ʼ க்ஷமாகரம்ʼ முதா³கரம்ʼ யஶஸ்கரம்
மனஸ்கரம்ʼ நமஸ்க்ருʼதாம்ʼ நமஸ்கரோமி பா⁴ஸ்வரம்॥3॥

அகிஞ்சனார்திமார்ஜனம்ʼ சிரந்தனோக்திபா⁴ஜனம்
புராரிபூர்வனந்த³னம்ʼ ஸுராரிக³ர்வசர்வணம்।
ப்ரபஞ்சனாஶபீ⁴ஷணம்ʼ த⁴னஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³னவாரணம்ʼ ப⁴ஜே புராணவாரணம்॥4॥

நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீனமந்தராயக்ருʼந்தனம்।
ஹ்ருʼத³ந்தரே நிரந்தரம்ʼ வஸந்தமேவ யோகி³னாம்
தமேகத³ந்தமேவ தம்ʼ விசிந்தயாமி ஸந்ததம்॥5॥

மஹாக³ணேஶபஞ்சரத்னமாத³ரேண யோ(அ)ன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபா⁴தகே ஹ்ருʼதி³ ஸ்மரன் க³ணேஶ்வரம்।
அரோக³தாமதோ³ஷதாம்ʼ ஸுஸாஹிதீம்ʼ ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூ⁴திமப்⁴யுபைதி ஸோ(அ)சிராத்॥

॥இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யவிரசிதம்ʼ ஶ்ரீமஹாக³ணேஶபஞ்சரத்னம்ʼ ஸம்பூர்ணம்॥

॥ ŚRĪ MAHĀGAṆEŚA PAÑCARATNAM ॥

mudākarāttamodakaṃ sadāvimuktisādhakam
kalādharāvataṃsakaṃ vilāsilokarakṣakam।
anāyakaikanāyakaṃ vināśitebhadaityakam
natāśubhāśunāśakaṃ namāmi taṃ vināyakam॥1॥

natetarātibhīkaraṃ navoditārkabhāsvaram
namatsurārinirjaraṃ natādhikāpaduddharam।
sureśvaraṃ nidhīśvaraṃ gajeśvaraṃ gaṇeśvaram
maheśvaraṃ tamāśraye parātparaṃ nirantaram॥2॥

samastalokaśaṅkaraṃ nirastadaityakuñjaram
daretarodaraṃ varaṃ varebhavaktramakṣaram।
kṛpākaraṃ kṣamākaraṃ mudākaraṃ yaśaskaram
manaskaraṃ namaskṛtāṃ namaskaromi bhāsvaram॥3॥

akiñcanārtimārjanaṃ cirantanoktibhājanam
purāripūrvanandanaṃ surārigarvacarvaṇam।
prapañcanāśabhīṣaṇaṃ dhanañjayādibhūṣaṇam
kapoladānavāraṇaṃ bhaje purāṇavāraṇam॥4॥

nitāntakāntadantakāntimantakāntakātmajam
acintyarūpamantahīnamantarāyakṛntanam।
hṛdantare nirantaraṃ vasantameva yoginām
tamekadantameva taṃ vicintayāmi santatam॥5॥

mahāgaṇeśapañcaratnamādareṇa yo'nvaham
prajalpati prabhātake hṛdi smaran gaṇeśvaram।
arogatāmadoṣatāṃ susāhitīṃ suputratām
samāhitāyuraṣṭabhūtimabhyupaiti so'cirāt॥

॥iti śrīmacchaṅkarācāryaviracitaṃ śrīmahāgaṇeśapañcaratnaṃ sampūrṇam॥

Friday, 28 June 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 7 ( Final )

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 7 ( Final )

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।
त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव ॥ ७॥

इति गर्गसंहितायां द्वारकाखण्डे द्वादशाध्यायान्तर्गता
त्रितमुनिशिष्येन कक्षीवता कृता विष्णुस्तुतिः ॥

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ ப³ந்து⁴ஶ்ச ஸகா² த்வமேவ ।
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ ॥ 7॥

இதி க³ர்க³ஸம்ஹிதாயாம் த்³வாரகாக²ண்டே³ த்³வாத³ஶாத்⁴யாயாந்தர்க³தா
த்ரிதமுநிஶிஷ்யேந கக்ஷீவதா க்ருʼதா விஷ்ணுஸ்துதி: ॥

tvameva mātā ca pitā tvameva tvameva bandhuśca sakhā tvameva ।
tvameva vidyā draviṇaṃ tvameva tvameva sarvaṃ mama devadeva ॥ 7॥

iti gargasaṃhitāyāṃ dvārakākhaṇḍe dvādaśādhyāyāntargatā
tritamuniśiṣyena kakṣīvatā kṛtā viṣṇustutiḥ ॥

பொருள் :

தேவதேவா ! தாங்களே என் தந்தை, தாய், பந்து, தாங்களே தோழன், தாங்களே வித்தை, தாங்களே தனம், தாங்களே எனக்கு எல்லாமாவீர் !   7

இத்துடன் கர்க ஸம்ஹிதையின் துவாரகா காண்டத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் த்ரித முனிவரின் சிஷ்யரான கக்ஷீவானால் இயற்றப்பட்ட இந்த ஸ்துதி நிறைவு பெறுகிறது.

Meaning :

You are my mother. You are my father, You are my relative. You are my friend. You are my wisdom. You are my wealth. O Lord of Lord, You are my all.   7

Thus ends the stotram presented by Kaksheevaan, the disciple of Trita muni,  which was found in twelfth chapter of Dwaraka kanda of Garga Samhita.

Thursday, 27 June 2019

Gita

கீதைச் சங்கிலி

என்னிடமிருந்து அறிந்துகொள்.

53. தெளிந்த அறிவுடன் கூடியவனாகவும், எளிய – சாத்விக-அளவான உணவு அருந்துபவனாகவும், ஒலி முதலிய புலன்நுகர்ப் பொருட்களைத் துறந்து, தூய்மையான இடத்தில் தனித்திருந்து, சாத்விகமான உறுதியோடு உள்ளத்தையும் புலன்களையும் அடக்கி, மனம்-வாக்கு-உடல் ஆகியவற்றைத் தன்வசத்தில் நிறுத்தி, விருப்பு-வெறுப்புகளை முற்றிலும் அழித்து, திடமான வைராக்கியத்தை அடைந்தவனாகவும், அகங்காரத்தையும் வலிமையையும் கர்வத்தையும் காமத்தையும் கோபத்தையும் சொத்து சேர்த்தலையும் நீக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் நிலைத்திருந்து, மமகாரமற்று, சாந்தியோடு கூடியவனாகவும் உள்ளவன், ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்குத் தகுதி பெறுகிறான்.

ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிய மனத்தெளிவுடைய யோகி எதற்கும் வருந்தவதில்லை. அனைத்துப் பிராணிகளிடமும் சமபாவனையோடு இருந்துகொண்டு, என்னுடைய உயர்ந்த பராபக்தியைப் பெறுகிறான்.

அந்த பராபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும், எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே தத்துவரீதியாக அறிந்து, அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்.

Monday, 24 June 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 4

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 4

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

क्रौञ्चासुरेन्द्रपरिखण्डन शक्तिशूल-
    चापादिशस्त्रपरिमण्डितदिव्यपाणे । 
श्रीकुण्डलीशधरतुण्डशिखीन्द्रवाह 
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ४॥

க்ரௌஞ்சாஸுரேந்த்³ரபரிக²ண்ட³ன ஶக்திஶூல-
சாபாதி³ஶஸ்த்ரபரிமண்டி³ததி³வ்யபாணே । 
ஶ்ரீகுண்ட³லீஶத⁴ரதுண்ட³ஶிகீ²ந்த்³ரவாஹ
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 4॥

krauñcāsurendraparikhaṇḍana śaktiśūla-
    cāpādiśastraparimaṇḍitadivyapāṇe । 
śrīkuṇḍalīśadharatuṇḍaśikhīndravāha 
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 4॥

பொருள் :

இந்திரனையும் வென்று இறுமாப்புடன் திரிந்த க்ரௌஞ்ச மலையின் செருக்கை சக்தி வேலால் தகர்த்தவரே! பாசம் முதலிய திவ்ய பாணங்களை தரித்து பாரினைக் காத்திட பரிதிபோல் உலா வருபவரே! வள்ளி நாயகரே! எனக்கு உதவும் உமது கரத்தினால் ஆறுதல் அளியுங்கள்!   4

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who is the Lord of mountains, who holds,
Shakthi, Soola, bow and arrows in his holy hands,
Who wears ear rings and who rides the fast moving peacock.   4

Sunday, 23 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 2

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 2

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

गङ्गाप्रवाहेन्दु जटाधराय त्रिलोचनाय स्मर कालहन्त्रे ।
समस्त देवैरभिपूजिताय श्रीवैद्यनाथाय  नमः शिवाय ॥ २॥

க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய ஶ்ரீவைத்³யநாதா²ய  நம: ஶிவாய ॥ 2॥

gaṅgāpravāhendu jaṭādharāya trilocanāya smara kālahantre ।
samasta devairabhipūjitāya śrīvaidyanāthāya  namaḥ śivāya ॥ 2॥

गङ्गा-प्रवाह-इन्दु जटा-धराय   -   க³ங்கா³-ப்ரவாஹ-இந்து³ ஜடா-த⁴ராய   -   பொங்கிவரும் கங்கை, சந்திரன் இவைகளைத் தன் ஜடையில் தரித்தவருக்கு,

त्रि-लोचनाय   -   த்ரி-லோசனாய   -   மூன்று கண்களையடையவருக்கு,

स्मर-काल हन्त्रे   -  ஸ்மர-கால ஹந்த்ரே  -   மன்மதன், காலன் (யமன்) இவர்களை (ஒரு கட்டத்தில்) அழித்தவருக்கு,

समस्त देवैः अभि-पूजिताय   -   ஸமஸ்த தே³வை꞉ அபி⁴-பூஜிதாய   -   அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுபவரும்,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

பொங்கிவரும் கங்கை, சந்திரன் இவைகளைத் தன் ஜடையில் தரித்தவரும், மூன்று கண்களையடையவரும், மன்மதன், காலன் (யமன்) இவர்களை (ஒரு கட்டத்தில்) அழித்தவரும், அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுபவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.   2

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who wears the flow of Ganges and the moon,
On his head,
Who has three eyes,
Who had killed the God of love and death,
And who is worshipped by all devas.   2

Saturday, 22 June 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 6

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 6

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

वासुदेवाय कृष्णाय नमः सङ्कर्षणाय च ।
प्रद्युम्नायानिरुद्धाय चतुर्व्यूहाय ते नमः ॥ ६॥

வாஸுதே³வாய க்ருʼஷ்ணாய நம: ஸங்கர்ஷணாய ச ।
ப்ரத்³யும்நாயாநிருத்³தா⁴ய சதுர்வ்யூஹாய தே நம: ॥ 6॥

vāsudevāya kṛṣṇāya namaḥ saṅkarṣaṇāya ca ।
pradyumnāyāniruddhāya caturvyūhāya te namaḥ ॥ 6॥

பொருள் :

வாசுதேவ கிருஷ்ணனான தங்களை வணங்குகிறேன். சங்கர்ஷன, பிரத்யும்ன, அனிருத்தருக்கு என் வணக்கம்.   6

Meaning :

To You, who are the Supreme Personality of Godhead, Lord Krishna, I offer my respectful obeisances. To You, who are the Catur-vyuha: Lord Vasudeva, Lord Sankarshana, Lord Pradyumna, and Lord Aniruddha, I offer my respectful obeisances.   6

Tuesday, 18 June 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 3

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 3

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

नित्यान्नदाननिरताखिलरोगहारिन्
    भाग्यप्रदानपरिपूरितभक्तकाम ।
शृत्यागमप्रणववाच्यनिजस्वरूप
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ३॥

நித்யான்னதா³னனிரதாகி²லரோக³ஹாரின்
பா⁴க்³யப்ரதா³னபரிபூரிதப⁴க்தகாம ।
ஶ்ருʼத்யாக³மப்ரணவவாச்யனிஜஸ்வரூப
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 3॥

nityānnadānaniratākhilarogahārin
    bhāgyapradānaparipūritabhaktakāma ।
śṛtyāgamapraṇavavācyanijasvarūpa
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 3॥

பொருள் :

உலக உயிர்களின்மீது அன்பு கொண்டு சகல உயிர்களும் பசியாறிட உணவளிப்பவரும், வணங்கிடும் பக்தர்களின் பிறவிப் பிணிகளை நீக்கும் மருத்துவராக அருள்பாலிப்பவரும், பக்தர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டவரும், ஸ்ருதி, ஆகமம், பிரணவம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்பவரும், வள்ளி நாயகனுமான சுப்ரமண்யரே! எனக்கு அபயக்கரம் நீட்டி அருளுங்கள்!   3

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who gives food daily in charity, who cures all prevalent diseases,
Who bestows luck, who fulfills all wishes of devotees,
And whose real form is the pranava given in Vedas.   3

Monday, 17 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 1

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 1

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

श्रीरामसौमित्रिजटायुवेद षडाननादित्य कुजार्चिताय ।
श्रीनीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमःशिवाय ॥ १॥

ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத³ ஷடா³நநாதி³த்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டா²ய த³யாமயாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம:ஶிவாய ॥ 1॥

śrīrāmasaumitrijaṭāyuveda ṣaḍānanāditya kujārcitāya ।
śrīnīlakaṇṭhāya dayāmayāya śrīvaidyanāthāya namaḥśivāya ॥ 1॥

श्री राम-सौमित्रि-जटायु-वेद-षडानन-आदित्य-कुज-अर्चिताय   -  ஶ்ரீ ராம-ஸௌமித்ரி-ஜடாயு-வேத³-ஷடா³னன-ஆதி³த்ய-குஜ-அர்சிதாய   -  ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், ஜடாயு, வேதங்கள், ஷண்முகர், சூரியர், அங்காரகன் ( செவ்வாய் கிரகம் ) ஆகியோரால் பூஜிக்கப் பெற்றவரும்,

श्री नील-कण्ठाय   -  ஶ்ரீ நீல-கண்டா²ய   -  ( விஷத்தைக் கழுத்தில் தேக்கியதால் ) நீலநிறமான கழுத்தை உடையவரும்,

दया-मयाय   -  த³யா-மயாய    -  கருணையே வடிவானவரும்,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், ஜடாயு, வேதங்கள், ஷண்முகர், சூரியர், அங்காரகன் ( செவ்வாய் கிரகம் ) ஆகியோரால் பூஜிக்கப் பெற்றவரும், ( விஷத்தைக் கழுத்தில் தேக்கியதால் ) நீலநிறமான கழுத்தை உடையவரும், கருணையே வடிவானவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who is worshipped by Rama and Lakshmana,
Who is woshipped by Jatayu,
Who is worshipped by the Vedas,
Who is worshipped by Lord Subrahmanya,
Who is worshipped by the Sun God,
Who is worshipped by the Mars God,
Who is having a blue neck,
And who is the personification of mercy.   1

Friday, 14 June 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 5

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 5

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

जरासन्धनिरोधार्तनृपाणां मोक्षकारिणे ।
नृगस्योद्धारिणे साक्षात्सुदाम्नो दैन्यहारिणे ॥ ५॥

ஜராஸந்த⁴நிரோதா⁴ர்தந்ருʼபாணாம் மோக்ஷகாரிணே ।
ந்ருʼக³ஸ்யோத்³தா⁴ரிணே ஸாக்ஷாத்ஸுதா³ம்நோ தை³ந்யஹாரிணே ॥ 5॥

jarāsandhanirodhārtanṛpāṇāṃ mokṣakāriṇe ।
nṛgasyoddhāriṇe sākṣātsudāmno dainyahāriṇe ॥ 5॥

பொருள் :

ஜராசந்தனிடம் கைதியாக இருந்த மன்னர்களை விடுவித்தவரும், ந்ருக மன்னனை உத்தாரம் செய்தவரும், சுதாமாவின் தீனநிலையைத் தவிர்த்தவருமான, சாக்ஷாத் பரமேச்வரரான தங்களை  வணங்குகிறேன்.   5

Meaning :

To You, who rescued the kings suffering in Jarasandha's prison, delivered King Nriga, and ended Sudama's poverty, I offer my respectful obeisances.   5

Tuesday, 11 June 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 2

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 2

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

देवाधिदेवसुत देवगणाधिनाथ
    देवेन्द्रवन्द्यमृदुपङ्कजमञ्जुपाद ।
देवर्षिनारदमुनीन्द्रसुगीतकीर्ते
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ २॥

தே³வாதி⁴தே³வஸுத தே³வக³ணாதி⁴னாத²
தே³வேந்த்³ரவந்த்³யம்ருʼது³பங்கஜமஞ்ஜுபாத³ ।
தே³வர்ஷினாரத³முனீந்த்³ரஸுகீ³தகீர்தே
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 2॥

devādhidevasuta devagaṇādhinātha
    devendravandyamṛdupaṅkajamañjupāda ।
devarṣināradamunīndrasugītakīrte
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 2॥

பொருள் :

தேவர்கள் யாவரையும்விட உயர்வானவரே ! தேவ கணங்களின் தலைவரே ! தேவேந்திரன் உள்ளிட்டவர்களால் வணங்கப்படும் மென்மையான பாதங்களை உடையவரே ! நாரதர் உள்ளிட்ட தேவரிஷிகளினால் போற்றப்படும் புகழையுடையவரே ! வள்ளிமணாளரே ! எனக்கு அருளிட உமது அபயக்கரத்தினை நீட்டுங்கள் !   2

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who is the son of God of gods, who is the chief of all gods,
Whose soft lotus like feet is worshipped by Devendra,
And whose fame is sung by deva sage Narada and others.   2

Monday, 10 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Introduction

Sri Vaidyanaatha Ashtakam -  Introduction

வேதங்களில் "பிஷக்" (வைத்தியன்) என்ற பதம் அதிகமாக சிவபெருமானையே குறிக்கிறது. அவரையே வைத்தியர்களுக்கெல்லாம் நாதர் வைத்தியநாதர் என்று உலகம் போற்றுகிறது.

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்திலேயே இராமர் தனக்குதவிய ஜடாயுவிற்கு ( கழுகு ) அந்திமக்கிரியையை செய்தார் என்றும், அங்காரகனுக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகம் நிவர்த்தி ஆன தலம் என்றும், குமரனாகிய முருகப்பெருமான் போருக்கு முன் தன் அன்னையிடம் வேலாயுதம் பெற்ற தலம் என்றும் அறியப்படுகிறது.

பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் வைத்தியநாதர் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

நோய் தீர்க்கும் திருச்சாந்து: 

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர்.

சடாயுகுண்டம்: 

இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது.

அங்காரகனுக்கு ( செவ்வாய் கிரகம் ) வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.

இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

வைத்தியநாதரைப் போற்றும்விதமாக இவ்வைத்யநாத அஷ்டகம் விளங்குகிறது. இதன் இறுதியில் உள்ள சுலோகம் பா(வா)லாம்பாகேசா ! வைத்யேசா ! பவரோகஹரா ! இந்த மூன்று நாமங்களை தினமும் சொல்பவர்க்கு மஹாரோகம்  நிவரத்தி ஆகும் என்று அறுதியிடுகிறது.

Lord Shiva is considered as the king among physicians. He is worshipped in this form in Purlee Vaijyanath. He is also worshipped in this form at a great temple in Tamil Nadu known as Vaitheeswaran Koil(Temple of the lord of physicians). It is believed that Lord Rama performed the cremation of the bird Jatayu in this spot. It is also believed that Lord Angaraka(planet Mars) who was afflicted by leprosy got cured in this place. It is also believed that Lord Subramanya got his trident(vel) after worshipping in this temple. There is a temple tank called Siddha Amrutha Theertha(the all curing nectar water) in this temple. Bathing in this tank is supposed to cure all diseases. Tiru Chandu pills distributed in this temple are considerd as a cure of all diseases. This is purported to be the medicine, which Vaidyanatha gave to Angaraka to cure his illness.

॥ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத³ ஷடா³நநாதி³த்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டா²ய த³யாமயாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம:ஶிவாய ॥ 1॥

ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥

க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய ஶ்ரீவைத்³யநாதா²ய  நம: ஶிவாய ॥ 2॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 3॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³ ப்ரநாஶகர்த்ரே முநிவந்தி³தாய ।
ப்ரபா⁴கரேந்த்³வக்³நி விலோசநாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 4॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்⁴ரிஸுக²ப்ரதா³ய ।
குஷ்டா²தி³ஸர்வோந்நதரோக³ஹந்த்ரே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 5॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வேதா³ந்தவேத்³யாய ஜக³ந்மயாய யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 6॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ஸ்வதீர்த²ம்ருʼத்³ப⁴ஸ்மப்⁴ருʼதாங்க³பா⁴ஜாம் பிஶாசது:³கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம் ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 7॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ஶ்ரீநீலகண்டா²ய வ்ருʼஷத்⁴வஜாய ஸ்ரக்க³ந்த⁴ ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 8॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வாலாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோக³நிவாரணம் ॥ 9॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

   ॥ இதி ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ vaidyanāthāṣṭakam ॥

śrīrāmasaumitrijaṭāyuveda ṣaḍānanāditya kujārcitāya ।
śrīnīlakaṇṭhāya dayāmayāya śrīvaidyanāthāya namaḥśivāya ॥ 1॥

śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva ।
śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva ॥

gaṅgāpravāhendu jaṭādharāya trilocanāya smara kālahantre ।
samasta devairabhipūjitāya śrīvaidyanāthāya  namaḥ śivāya ॥ 2॥

śaṃbho mahādeva ....

bhaktaḥpriyāya tripurāntakāya pinākine duṣṭaharāya nityam ।
pratyakṣalīlāya manuṣyaloke śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 3॥

śaṃbho mahādeva ....

prabhūtavātādi samastaroga pranāśakartre munivanditāya ।
prabhākarendvagni vilocanāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 4॥

śaṃbho mahādeva ....

vāk śrotra netrāṅghri vihīnajantoḥ vākśrotranetrāṃghrisukhapradāya ।
kuṣṭhādisarvonnatarogahantre śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 5॥

śaṃbho mahādeva ....

vedāntavedyāya jaganmayāya yogīśvaradyeya padāmbujāya ।
trimūrtirūpāya sahasranāmne śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 6॥

śaṃbho mahādeva ....

svatīrthamṛdbhasmabhṛtāṅgabhājāṃ piśācaduḥkhārtibhayāpahāya ।
ātmasvarūpāya śarīrabhājāṃ śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 7॥

śaṃbho mahādeva ....

śrīnīlakaṇṭhāya vṛṣadhvajāya srakgandha bhasmādyabhiśobhitāya ।
suputradārādi subhāgyadāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 8॥

śaṃbho mahādeva ....

vālāmbikeśa vaidyeśa bhavarogahareti ca ।
japennāmatrayaṃ nityaṃ mahāroganivāraṇam ॥ 9॥

śaṃbho mahādeva ....

   ॥ iti śrī vaidyanāthāṣṭakam ॥