Sunday, 30 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 3

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 3

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

भक्तःप्रियाय त्रिपुरान्तकाय पिनाकिने दुष्टहराय नित्यम् ।
प्रत्यक्षलीलाय मनुष्यलोके श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ३॥

ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 3॥

bhaktaḥpriyāya tripurāntakāya pinākine duṣṭaharāya nityam ।
pratyakṣalīlāya manuṣyaloke śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 3॥

भक्तःप्रियाय  -  ப⁴க்த꞉:ப்ரியாய  -  பக்தர்களிடம் பிரியமாக இருப்பவருக்கு,

त्रि-पुर-अन्तकाय  -  த்ரி-புர-அந்தகாய  -  முப்புரங்களை அழித்தவருக்கு,

पिनाकिने  -  பினாகினே  -  பினாகம் என்னும் வில்லினை உடையவருக்கு,

नित्यं दुष्ट-हराय   -  நித்யம் து³ஷ்ட-ஹராய   -  எல்லாக் காலங்களிலும் தீயோரை  அழிப்பவருக்கு,

मनुष्य-लोके  -  மனுஷ்ய-லோகே  -  மனிதர்களின் பார்வையில்

प्रत्यक्ष-लीलाय  -  ப்ரத்யக்ஷ-லீலாய  -  நேரடியாக தெரியும்படி லீலைகள் செய்பவருக்கு

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

பக்தர்களிடம் பிரியமாக இருப்பவரும், முப்புரங்களை அழித்தவரும், பினாகம் என்னும் வில்லினை உடையவரும், ( அதைக்கொண்டு ) எல்லாக் காலங்களிலும் தீயோரை  அழிப்பவரும், மனிதர்களின் பார்வையில் நேரடியாக தெரியும்படி லீலைகள் செய்பவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.   3

# வெவ்வேறு பதங்களுடன் नित्यं -  நித்யம் என்னும் பதத்தை சேர்த்தால்

नित्यं भक्तःप्रियाय  -  நித்யம் ப⁴க்த꞉:ப்ரியாய  - பக்தர்கள் தன்மீது அன்பைக் காட்டும்போதும், சிலசமயம் கல்லை எரிந்தாலும், வில்லால் அடித்தாலும், காரி உமிழ்ந்தாலும் கூட மாறாத அன்பைக் காட்டுபவருக்கு என்றும் கொள்ளலாம்.

मनुष्य-लोके नित्यं प्रत्यक्ष-लीलाय  -    மனுஷ்ய-லோகே நித்யம் ப்ரத்யக்ஷ-லீலாய  -  அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மட்டும் மானிட உலகில் செய்தார் என்று இல்லாமல், எப்பொழுதும், எந்த லோகத்திலானாலும், பக்தர்களுக்காக, அவர்கள் காணும்படி, அறியும்படி எண்ணற்ற  திருவிளையாடல்களை  செய்துகொண்டே இருப்பவருக்கு என்று கொள்ளலாம்.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who is the lover his devotees,
Who has destroyed the three cities,
Who holds the bow called Pinaka,
Who destroys bad people daily,
And who plays in the world of humans.   3

No comments:

Post a Comment