Saturday, 11 August 2018

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 6 ( Phalasruti )

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 6 ( Phalasruti )

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

फलश्रुतिः --

गणाधिपस्य पञ्चकं नृणामभीष्टदायकं
प्रणामपूर्वकं जनाः पठन्ति ये मुदायुताः ।
भवन्ति ते विदां पुरः प्रगीतवैभवाजवात्
चिरायुषोऽधिकः श्रियस्सुसूनवो न संशयः ॥ ६ ॥

॥ इति दक्षिणाम्नाय श्रिङ्गेरी श्रीशारदापीठाधिपति
शङ्कराचार्य जगद्गुरुवर्यो श्री सच्चिदानन्द
शिवाभिनव नृसिंहभारती महास्वामिभिः विरचितम्
श्री गणाधिपति पञ्चरत्न स्तोत्रम् सम्पूर्णम् ॥

ப²லஶ்ருதி​: --

க³ணாதி⁴பஸ்ய பஞ்சகம்ʼ ந்ருʼணாமபீ⁴ஷ்டதா³யகம்ʼ
ப்ரணாமபூர்வகம்ʼ ஜனா​: பட²ந்தி யே முதா³யுதா​: |
ப⁴வந்தி தே விதா³ம்ʼ புர​: ப்ரகீ³தவைப⁴வாஜவாத்
சிராயுஷோ(அ)தி⁴க​: ஶ்ரியஸ்ஸுஸூனவோ ந ஸம்ʼஶய​: ||  6 ||

||  இதி த³க்ஷிணாம்னாய ஶ்ரிங்கே³ரீ ஶ்ரீஶாரதா³பீடா²தி⁴பதி
ஶங்கராசார்ய ஜக³த்³கு³ருவர்யோ ஶ்ரீ ஸச்சிதா³னந்த³
ஶிவாபி⁴னவ ந்ருʼஸிம்ʼஹபா⁴ரதீ மஹாஸ்வாமிபி⁴​: விரசிதம்
ஶ்ரீ க³ணாதி⁴பதி பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

phalaśrutiḥ --

gaṇādhipasya pañcakaṃ nṛṇāmabhīṣṭadāyakaṃ
praṇāmapūrvakaṃ janāḥ paṭhanti ye mudāyutāḥ ।
bhavanti te vidāṃ puraḥ pragītavaibhavājavāt
cirāyuṣo'dhikaḥ śriyassusūnavo na saṃśayaḥ ॥ 6 ॥

॥ iti dakṣiṇāmnāya śriṅgerī śrīśāradāpīṭhādhipati
śaṅkarācārya jagadguruvaryo śrī saccidānanda
śivābhinava nṛsiṃhabhāratī mahāsvāmibhiḥ viracitam
śrī gaṇādhipati pañcaratna stotram sampūrṇam ॥

ये जनाः मुदायुताः प्रणामपूर्वकं  -  யே ஜனா​: முதா³யுதா​: ப்ரணாமபூர்வகம்ʼ  -  எந்த ஜனங்கள் மகிழ்ச்சியுடனும், வணக்கத்துடனும்,

नृणां-अभीष्ट-दायकं  -  ந்ருʼணாம்ʼ-அபீ⁴ஷ்ட-தா³யகம்ʼ  -  மனிதர்கள் வேண்டுவனவற்றை அளிக்கும்,

गणाधिपस्य पञ्चकं  -  க³ணாதி⁴பஸ்ய பஞ்சகம்ʼ  -   கணாதிப பஞ்சகத்தை ( இந்த ஐந்து ச்லோகங்களை ),

पठन्ति  -  பட²ந்தி  -  படிக்கிறார்களோ,

ते  -  தே  -  அவர்கள்,

विदां पुरः प्रगीत-वैभव-अजवात्  -  விதா³ம்ʼ புர​: ப்ரகீ³த-வைப⁴வ-அஜவாத்  -  வித்வான்களால் நெடுநாள் போற்றப்படுவர்,

चिर-आयुषः-अधिकः  -  சிர-ஆயுஷ​:-அதி⁴க​:  -  அதிக நீண்ட ஆயுள்,

श्रियः  -  ஶ்ரிய​:  -  நிறைந்த செல்வம்,

सुसूनवः  -  ஸுஸூனவ​:  -  நன்மக்கள்,

भवन्ति  -  ப⁴வந்தி  -  ( இவைகளைப் ) பெறுவர்,

न संशयः  -  ந ஸம்ʼஶய​:  -  ( என்பதில் ) சந்தேகமே இல்லை.

பொருள் :

பலன் :-

எந்த ஜனங்கள் மகிழ்ச்சியுடனும், வணக்கத்துடனும், மனிதர்கள் வேண்டுவனவற்றை அளிக்கும் கணாதிப பஞ்சகத்தை ( இந்த ஐந்து ச்லோகங்களை ) படிக்கிறார்களோ, அவர்கள் வித்வான்களால் நெடுநாள் போற்றப்படுவர், அதிக நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நன்மக்கள் ( இவைகளைப் ) பெறுவர் ( என்பதில் ) சந்தேகமே இல்லை.   6

இத்துடன் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஶ்ரீசாரதாபீடாதிபதி
ஜகத்குரு ஶ்ரீ ஸச்சிதானந்த
சிவாபினவ ந்ருஸிம்ஹபாரதி மஹாஸ்வாமிகளால் இயற்றப்பட்ட  ஶ்ரீ கணாதிப பஞ்சரத்ன ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

Meaning :

Those who, after worshipping the lord Ganadhipa, read these verses that could fulfil their wishes, would soon be hailed in the assembly of scholars. They would live long, become wealthy and would beget good sons. This is undoubtfut.   6

Thus ends the Ganadhipa pancharatna stotram composed by Dakshinamnaya Srungeri Sri Sarada peetaadipati Sri Shivabhinava nrusimhabharati swamin.

Friday, 10 August 2018

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 5

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 5

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

श्रमापनोदनक्षमं समाहितान्तरात्मनां
सुमादिभिः सदार्चितं क्षमानिधिं गणाधिपम् ।
रमाधवादिपूजितं यमान्तकात्मसम्भवं
शमादिषड्गुणप्रदं नमामि तं विभूतये ॥ ५॥

ஶ்ரமாபநோத³நக்ஷமம் ஸமாஹிதாந்தராத்மநாம்
ஸுமாதி³பி:⁴ ஸதா³ர்சிதம் க்ஷமாநிதி⁴ம் க³ணாதி⁴பம் ।
ரமாத⁴வாதி³பூஜிதம் யமாந்தகாத்மஸம்ப⁴வம்
ஶமாதி³ஷட்³கு³ணப்ரத³ம் நமாமி தம் விபூ⁴தயே ॥ 5॥

śramāpanodanakṣamaṃ samāhitāntarātmanāṃ
sumādibhiḥ sadārcitaṃ kṣamānidhiṃ gaṇādhipam ।
ramādhavādipūjitaṃ yamāntakātmasambhavaṃ
śamādiṣaḍguṇapradaṃ namāmi taṃ vibhūtaye ॥ 5॥

समाहित-अन्तरात्मनां श्रम-अपनोदन-क्षमं  -  ஸமாஹித-அந்தராத்மனாம்ʼ  ஶ்ரம-அபனோத³ன-க்ஷமம்ʼ  -  ஆத்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களின் தளர்வினை நீக்குபவரை, 

सुम-आदिभिः सदा-अर्चितं  -  ஸும-ஆதி³பி⁴​: ஸதா³-அர்சிதம்ʼ   -  சந்திரன் முதலானோரால் ( அல்லது ) பூ முதலியவற்றால் வழிபடப் பெறுபவரை,

क्षमानिधिं  -  க்ஷமானிதி⁴ம்ʼ  -  பொறுமைக்கு இருப்பிடமானவரை,

रमाधव-आदि पूजितं  -  ரமாத⁴வ-ஆதி³ பூஜிதம்ʼ   -  நாராயணன் முதலானோரால் போற்றப் பெறுபவரை,

यमान्तक-आत्म-सम्भवं  -  யமாந்தக-ஆத்ம-ஸம்ப⁴வம்ʼ  -  யமனையும் அழித்த சிவபெருமானின் புதல்வரை,

शम-आदि षड्गुण-प्रदं  -  ஶம-ஆதி³ ஷட்³கு³ண-ப்ரத³ம்ʼ   -  அடக்கம் முதலிய ஆறு குணங்களை அருள்பவரை,

तं गणाधिपं  -  தம்ʼ க³ணாதி⁴பம்ʼ  -  இந்த கணாதிபரை ( கணங்களின் தலைவர் )

विभूतये  -  விபூ⁴தயே  -  சிறப்பு பெற

नमामि  -  நமாமி  -  வணங்குகிறேன்.

பொருள் :

ஆத்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களின் தளர்வு நீக்குபவரும், சந்திரன் முதலானோரால் ( அல்லது ) பூ முதலியவற்றால் வழிபடப் பெறுபவரும், பொறுமைக்கு இருப்பிடமானவரும், நாராயணன் முதலானோரால் போற்றப் பெறுபவரும், யமனையும் அழித்த சிவபெருமானின் புதல்வரும், அடக்கம் முதலிய ஆறு குணங்களை அருள்பவருமான  இந்த கணாதிபரை ( கணங்களின் தலைவர் ) சிறப்பு பெற வணங்குகிறேன்.   5

Meaning :

I worship the lord Ganadhipa, who removes the hardship of the people who constantly meditate upon the Supreme Self, who is worshipped always with fragrant flowers, who is the abode of tolerance, who is worshipped by the spouse of goddess Lakshmi and others, who is the son of Siva, who is the destroyer of evan Yama and who helps us inculcate the virtues like Sama (control of mind) Dama (control of senses) Uparama, (renunciation) Titiksa (the capacity to withstand the hardships) Sraddha (faith in the Vedanta and in the words of the preceptor) and Samadhana (fixing the mind in abstract contemplation on the true nature of the spirit).   5

Thursday, 9 August 2018

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 4

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 4

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

नराधिपत्वदायकं स्वरादिलोकनायकं
ज्वरादिरोगवारकं निराकृतासुरव्रजम् ।
कराम्बुजोल्लसत्सृणिं विकारशून्यमानसैः
हृदासदाविभावितं मुदा नमामि विघ्नपम् ॥ ४॥

நராதி⁴பத்வதா³யகம் ஸ்வராதி³லோகநாயகம்
ஜ்வராதி³ரோக³வாரகம் நிராக்ருʼதாஸுரவ்ரஜம் ।
கராம்பு³ஜோல்லஸத்ஸ்ருʼணிம் விகாரஶூந்யமாநஸை:
ஹ்ருʼதா³ஸதா³விபா⁴விதம் முதா³ நமாமி விக்⁴நபம் ॥ 4॥

narādhipatvadāyakaṃ svarādilokanāyakaṃ
jvarādirogavārakaṃ nirākṛtāsuravrajam ।
karāmbujollasatsṛṇiṃ vikāraśūnyamānasaiḥ
hṛdāsadāvibhāvitaṃ mudā namāmi vighnapam ॥ 4॥

नर-अधिपत्व-दायकं   -  நர-அதி⁴பத்வ-தா³யகம்ʼ  -  பேரரசை அருள்பவரை,

स्वः-आदि-लोक-नायकं  -  ஸ்வ​:-ஆதி³-லோக-நாயகம்ʼ  -  ஸ்வர்கம் முதலிய உலகங்களின் நாயகரை,

ज्वर-आदि-रोग-वारकं  -  ஜ்வர-ஆதி³-ரோக³-வாரகம்ʼ  -  ஜ்வரம் முதலிய நோய் தீர்ப்பவரை,

निराकृत-असुर-व्रजं  -  நிராக்ருʼத-அஸுர-வ்ரஜம்ʼ  -  அஸுரக் கூட்டத்தை விரட்டியவரை,

कर-अम्बुज-उल्लसत्-सृणिं   -  கர-அம்பு³ஜ-உல்லஸத்-ஸ்ருʼணிம்ʼ   -  தாமரை போன்ற கையில் துறட்டி ஏந்தியவரை,

विकार-शून्य-मानसैः  -  விகார-ஶூன்ய-மானஸை​:  -  கெட்ட எண்ணமற்ற மனத்தினரால்

हृदा-सदा-विभावितं मुदा   -  ஹ்ருʼதா³-ஸதா³-விபா⁴விதம்ʼ முதா³  -  இதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் போற்றப்படுபவரை, 

विघ्नपं  -  விக்⁴னபம்ʼ  -  விக்னபரை ( விநாயகரை )

नमामि  -  நமாமி  -  வணங்குகிறேன்.

பொருள் :

பேரரசை அருள்பவரும், ஸ்வர்கம் முதலிய உலகங்களின் நாயகரும், ஜ்வரம் முதலிய நோய் தீர்ப்பவரும், அஸுரக் கூட்டத்தை விரட்டியவரும், தாமரை போன்ற கையில் துறட்டி ஏந்தியவரும், கெட்ட எண்ணமற்ற மனத்தினரால் இதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் போற்றப்படுபவருமான,  விக்னபரை ( விநாயகரை ) வணங்குகிறேன்.   4

Meaning :

My reverential regards are due to the lord Vinayaka, who bestows kingship upon the devotees, who is the master of all the worlds starting from the heaven, who cures the diseases like fever, who destroys the demons, who wields the goad in His lotus – like hand and who is always meditated upon by the pure – hearted people.   4

Wednesday, 8 August 2018

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 3

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 3

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

शुकादिमौनिवन्दितं गकारवाच्यमक्षरं
प्रकाममिष्टदायिनं सकामनम्रपङ्क्तये ।
चकासतं चतुर्भुजैः विकासिपद्मपूजितं
प्रकाशितात्मतत्वकं नमाम्यहं गणाधिपम् ॥ ३॥

ஶுகாதி³மௌநிவந்தி³தம் க³காரவாச்யமக்ஷரம்
ப்ரகாமமிஷ்டதா³யிநம் ஸகாமநம்ரபங்க்தயே ।
சகாஸதம் சதுர்பு⁴ஜை: விகாஸிபத்³மபூஜிதம்
ப்ரகாஶிதாத்மதத்வகம் நமாம்யஹம் க³ணாதி⁴பம் ॥ 3॥

śukādimaunivanditaṃ gakāravācyamakṣaraṃ
prakāmamiṣṭadāyinaṃ sakāmanamrapaṅktaye ।
cakāsataṃ caturbhujaiḥ vikāsipadmapūjitaṃ
prakāśitātmatatvakaṃ namāmyahaṃ gaṇādhipam ॥ 3॥

शुक-आदि-मौनि-वन्दितं   -  ஶுக-ஆதி³-மௌனி-வந்தி³தம்ʼ  -   சுகர் முதலான முனிவரால் வழிபடப் பெற்றவரை,

गकार-वाच्यं  -  க³கார-வாச்யம்ʼ  -   க என்னும் எழுத்தின் உட்பொருளானவரை,

अक्षरं  -  அக்ஷரம்ʼ  -  குறைவற்றவரை,

प्रकामं-इष्ट-दायिनं सकाम-नम्र-पङ्क्तये    -  ப்ரகாமம்ʼ-இஷ்ட-தா³யினம்ʼ ஸகாம-நம்ர-பங்க்தயே  -   பக்தியுடன் வணங்குபவர்க்கு வேண்டியவற்றை விட அதிகமாகவே அருள்பவரை, 

चकासतं चतुर्भुजैः  -  சகாஸதம்ʼ சதுர்பு⁴ஜை​:  -   நான்கு கைகளுடன் விளங்குபவரை,

विकासि-पद्म-पूजितं  -  விகாஸி-பத்³ம-பூஜிதம்ʼ   -   மலர்ந்த தாமரை மீதமர்ந்தவராக வழிபடப் பெறுபவரை,

प्रकाशित-आत्म-तत्वकं  -  ப்ரகாஶித-ஆத்ம-தத்வகம்ʼ  -   ஆத்ம தத்வத்தை உணரச் செய்பவரை,

गणाधिपं  -  க³ணாதி⁴பம்ʼ   -   கணாதிபரை ( விநாயகரை )

अहं नमामि  -  அஹம்ʼ நமாமி   -   நான் வணங்குகின்றேன்.

பொருள் :

சுகர் முதலான முனிவரால் வழிபடப் பெற்றவரும், க என்னும் எழுத்தின் உட்பொருளானவரும், குறைவற்றவரும், பக்தியுடன் வணங்குபவர்க்கு வேண்டியவற்றை விட அதிகமாகவே அருள்பவரும், நான்கு கைகளுடன் விளங்குபவரும், மலர்ந்த தாமரை மீதமர்ந்தவராக வழிபடப் பெறுபவரும், ஆத்ம தத்வத்தை உணரச் செய்பவருமான  கணாதிபரை ( விநாயகரை ) நான் வணங்குகின்றேன்.   3

Meaning :

I pay homage to the lord Ganadhipa. who is worshipped by the seers like Suka, who is represented by the letter ‘ga’, who grants more than needed to those who worship with devotion, who is unblemished, who shines with four hands, who is worshipped with the fully bloomed lotus – flowers and who reveals the real nature of the Self.   3

Tuesday, 7 August 2018

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 2

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 2

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

गिरीन्द्रजामुखाम्बुज प्रमोददान भास्करं
करीन्द्रवक्त्रमानताघसङ्घवारणोद्यतम् ।
सरीसृपेश बद्धकुक्षिमाश्रयामि सन्ततं
शरीरकान्ति निर्जिताब्जबन्धुबालसन्ततिम् ॥ २॥

கி³ரீந்த்³ரஜாமுகா²ம்பு³ஜ ப்ரமோத³தா³ந பா⁴ஸ்கரம்
கரீந்த்³ரவக்த்ரமாநதாக⁴ஸங்க⁴வாரணோத்³யதம் ।
ஸரீஸ்ருʼபேஶ ப³த்³த⁴குக்ஷிமாஶ்ரயாமி ஸந்ததம்
ஶரீரகாந்தி நிர்ஜிதாப்³ஜப³ந்து⁴பா³லஸந்ததிம் ॥ 2॥

girīndrajāmukhāmbuja pramodadāna bhāskaraṃ
karīndravaktramānatāghasaṅghavāraṇodyatam ।
sarīsṛpeśa baddhakukṣimāśrayāmi santataṃ
śarīrakānti nirjitābjabandhubālasantatim ॥ 2॥

गिरि-इन्द्रजा मुख-अम्बुज प्रमोददान भास्करं  -  கி³ரி-இந்த்³ரஜா முக²-அம்பு³ஜ ப்ரமோத³தா³ன பா⁴ஸ்கரம்ʼ  -  மலைமகளின் முகத்தாமரையை மலரச் செய்கிற சூரியனை,

आनत-अघ-सङ्घ वारण-उद्यतं  -  ஆனத-அக⁴-ஸங்க⁴ வாரண-உத்³யதம்ʼ  -  ( தன்னை ) வணங்கியவரின் பாபங்களை அகற்றுபவரை,

सरीसृप-ईश बद्ध-कुक्षिं  -  ஸரீஸ்ருʼப-ஈஶ ப³த்³த⁴-குக்ஷிம்ʼ  -  வயிற்றில் பாம்பரசனை இடுப்பணியாக அணிந்தவரை,

शरीरकान्ति निर्जित अब्ज-बन्धु-बाल-सन्ततिं  -  ஶரீரகாந்தி நிர்ஜித அப்³ஜ-ப³ந்து⁴-பா³ல-ஸந்ததிம்ʼ  -  தன் ஒளியால் இளஞ்சூர்யர்களை மங்கச் செய்பவரை,

करि-इन्द्र-वक्त्रं  -  கரி-இந்த்³ர-வக்த்ரம்ʼ  -  யானை முகத்தவரை,

सन्ततं आश्रयामि  -  ஸந்ததம்ʼ ஆஶ்ரயாமி  -  எப்பொழுதும் சரணடைகிறேன்.

பொருள் :

மலைமகளின் முகத்தாமரையை மலரச் செய்கிற சூரியன் போன்றவரும், தன்னை வணங்கியவரின் பாபங்களை அகற்றுபவரும், வயிற்றில் பாம்பரசனை இடுப்பணியாக அணிந்தவரும், தன் ஒளியால் இளஞ்சூர்யர்களை மங்கச் செய்பவரும், ( அந்த ) யானை முகத்தவரை ( விநாயகரை ) எப்பொழுதும் சரணடைகிறேன்.   2

Meaning :

I always adore Him, who is the Sun, which pleases the lotus-like face of the daughter of the Himalaya (goddess of Parvati), who is elephant, faced, who wipes off all the sins committed by His devotees, who has the lord of serpents viz., Adisesa tied, around His waist and the lustre of whose body excels that of enumerous morning Suns.   2

Monday, 6 August 2018

ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM - Introduction

ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM - Introduction

இந்த கணாதிப ஸ்தோத்ரம், தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடம், 33வது குரு ஶ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளால் , ஶ்ரீ ஆதிசங்கரரின் மஹாகணேச பஞ்சரத்ந ஸ்தோத்ரத்தை ஒத்து, சிருங்கேரியில் நடந்த மஹாகணபதி வாக்யார்த்த ஸபையில் கடவுள் வாழ்த்தாக பாடுவதற்காக இயற்றப்பட்டது.

The following Gaṇādhipa​-pañcaratna was written by the 33rd Jagadguru of the Dakshinamnaya Sringeri Sharada Peetham, Sri Sacchidananda Shivabhinava Nrisimha Bharati Mahaswami , in imitation of Sri Adi Shankara’s famous Gaṇeśa-pañcaratna to be read as a prayer before the Mahāgaṇapati Vakyārtha Sabha commenced at Sringeri.

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

सरागिलोकदुर्लभं विरागिलोकपूजितं
सुरासुरैर्नमस्कृतं जरापमृत्युनाशकम् ।
गिरा गुरुं श्रिया हरिं जयन्ति यत्पदार्चकाः
नमामि तं गणाधिपं कृपापयः पयोनिधिम् ॥ १॥

गिरीन्द्रजामुखाम्बुज प्रमोददान भास्करं
करीन्द्रवक्त्रमानताघसङ्घवारणोद्यतम् ।
सरीसृपेश बद्धकुक्षिमाश्रयामि सन्ततं
शरीरकान्ति निर्जिताब्जबन्धुबालसन्ततिम् ॥ २॥

शुकादिमौनिवन्दितं गकारवाच्यमक्षरं
प्रकाममिष्टदायिनं सकामनम्रपङ्क्तये ।
चकासतं चतुर्भुजैः विकासिपद्मपूजितं
प्रकाशितात्मतत्वकं नमाम्यहं गणाधिपम् ॥ ३॥

नराधिपत्वदायकं स्वरादिलोकनायकं
ज्वरादिरोगवारकं निराकृतासुरव्रजम् ।
कराम्बुजोल्लसत्सृणिं विकारशून्यमानसैः
हृदासदाविभावितं मुदा नमामि विघ्नपम् ॥ ४॥

श्रमापनोदनक्षमं समाहितान्तरात्मनां
सुमादिभिः सदार्चितं क्षमानिधिं गणाधिपम् ।
रमाधवादिपूजितं यमान्तकात्मसम्भवं
शमादिषड्गुणप्रदं नमामि तं विभूतये ॥ ५॥

गणाधिपस्य पञ्चकं नृणामभीष्टदायकं
प्रणामपूर्वकं जनाः पठन्ति ये मुदायुताः ।
भवन्ति ते विदां पुरः प्रगीतवैभवाजवात्
चिरायुषोऽधिकः श्रियस्सुसूनवो न संशयः ॥ ॐ ॥

॥ इति दक्षिणाम्नाय श्रिङ्गेरी श्रीशारदापीठाधिपति
शङ्कराचार्य जगद्गुरुवर्यो श्री सच्चिदानन्द
शिवाभिनव नृसिंहभारती महास्वामिभिः विरचितम्
श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् सम्पूर्णम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

ஸராகி³லோகது³ர்லப⁴ம் விராகி³லோகபூஜிதம்
ஸுராஸுரைர்நமஸ்க்ருʼதம் ஜராபம்ருʼத்யுநாஶகம் ।
கி³ரா கு³ரும் ஶ்ரியா ஹரிம் ஜயந்தி யத்பதா³ர்சகா:
நமாமி தம் க³ணாதி⁴பம் க்ருʼபாபய: பயோநிதி⁴ம் ॥ 1॥

கி³ரீந்த்³ரஜாமுகா²ம்பு³ஜ ப்ரமோத³தா³ந பா⁴ஸ்கரம்
கரீந்த்³ரவக்த்ரமாநதாக⁴ஸங்க⁴வாரணோத்³யதம் ।
ஸரீஸ்ருʼபேஶ ப³த்³த⁴குக்ஷிமாஶ்ரயாமி ஸந்ததம்
ஶரீரகாந்தி நிர்ஜிதாப்³ஜப³ந்து⁴பா³லஸந்ததிம் ॥ 2॥

ஶுகாதி³மௌநிவந்தி³தம் க³காரவாச்யமக்ஷரம்
ப்ரகாமமிஷ்டதா³யிநம் ஸகாமநம்ரபங்க்தயே ।
சகாஸதம் சதுர்பு⁴ஜை: விகாஸிபத்³மபூஜிதம்
ப்ரகாஶிதாத்மதத்வகம் நமாம்யஹம் க³ணாதி⁴பம் ॥ 3॥

நராதி⁴பத்வதா³யகம் ஸ்வராதி³லோகநாயகம்
ஜ்வராதி³ரோக³வாரகம் நிராக்ருʼதாஸுரவ்ரஜம் ।
கராம்பு³ஜோல்லஸத்ஸ்ருʼணிம் விகாரஶூந்யமாநஸை:
ஹ்ருʼதா³ஸதா³விபா⁴விதம் முதா³ நமாமி விக்⁴நபம் ॥ 4॥

ஶ்ரமாபநோத³நக்ஷமம் ஸமாஹிதாந்தராத்மநாம்
ஸுமாதி³பி:⁴ ஸதா³ர்சிதம் க்ஷமாநிதி⁴ம் க³ணாதி⁴பம் ।
ரமாத⁴வாதி³பூஜிதம் யமாந்தகாத்மஸம்ப⁴வம்
ஶமாதி³ஷட்³கு³ணப்ரத³ம் நமாமி தம் விபூ⁴தயே ॥ 5॥

க³ணாதி⁴பஸ்ய பஞ்சகம் ந்ருʼணாமபீ⁴ஷ்டதா³யகம்
ப்ரணாமபூர்வகம் ஜநா: பட²ந்தி யே முதா³யுதா: ।
ப⁴வந்தி தே விதா³ம் புர: ப்ரகீ³தவைப⁴வாஜவாத்
சிராயுஷோঽதி⁴க: ஶ்ரியஸ்ஸுஸூநவோ ந ஸம்ஶய: ॥ ௐ ॥

॥ இதி த³க்ஷிணாம்நாய ஶ்ரிங்கே³ரீ ஶ்ரீஶாரதா³பீடா²தி⁴பதி
ஶங்கராசார்ய ஜக³த்³கு³ருவர்யோ ஶ்ரீ ஸச்சிதா³நந்த³
ஶிவாபி⁴நவ ந்ருʼஸிம்ஹபா⁴ரதீ மஹாஸ்வாமிபி:⁴ விரசிதம்
ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

sarāgilokadurlabhaṃ virāgilokapūjitaṃ
surāsurairnamaskṛtaṃ jarāpamṛtyunāśakam ।
girā guruṃ śriyā hariṃ jayanti yatpadārcakāḥ
namāmi taṃ gaṇādhipaṃ kṛpāpayaḥ payonidhim ॥ 1॥

girīndrajāmukhāmbuja pramodadāna bhāskaraṃ
karīndravaktramānatāghasaṅghavāraṇodyatam ।
sarīsṛpeśa baddhakukṣimāśrayāmi santataṃ
śarīrakānti nirjitābjabandhubālasantatim ॥ 2॥

śukādimaunivanditaṃ gakāravācyamakṣaraṃ
prakāmamiṣṭadāyinaṃ sakāmanamrapaṅktaye ।
cakāsataṃ caturbhujaiḥ vikāsipadmapūjitaṃ
prakāśitātmatatvakaṃ namāmyahaṃ gaṇādhipam ॥ 3॥

narādhipatvadāyakaṃ svarādilokanāyakaṃ
jvarādirogavārakaṃ nirākṛtāsuravrajam ।
karāmbujollasatsṛṇiṃ vikāraśūnyamānasaiḥ
hṛdāsadāvibhāvitaṃ mudā namāmi vighnapam ॥ 4॥

śramāpanodanakṣamaṃ samāhitāntarātmanāṃ
sumādibhiḥ sadārcitaṃ kṣamānidhiṃ gaṇādhipam ।
ramādhavādipūjitaṃ yamāntakātmasambhavaṃ
śamādiṣaḍguṇapradaṃ namāmi taṃ vibhūtaye ॥ 5॥

gaṇādhipasya pañcakaṃ nṛṇāmabhīṣṭadāyakaṃ
praṇāmapūrvakaṃ janāḥ paṭhanti ye mudāyutāḥ ।
bhavanti te vidāṃ puraḥ pragītavaibhavājavāt
cirāyuṣo'dhikaḥ śriyassusūnavo na saṃśayaḥ ॥ Om̃ ॥

॥ iti dakṣiṇāmnāya śriṅgerī śrīśāradāpīṭhādhipati
śaṅkarācārya jagadguruvaryo śrī saccidānanda
śivābhinava nṛsiṃhabhāratī mahāsvāmibhiḥ viracitam
śrī gaṇādhipa pañcaratna stotram sampūrṇam ॥

Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 1

Sri Ganadhipa Pancharatna Stotram  -  Sloka 1

॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥

सरागिलोकदुर्लभं विरागिलोकपूजितं
सुरासुरैर्नमस्कृतं जरापमृत्युनाशकम् ।
गिरा गुरुं श्रिया हरिं जयन्ति यत्पदार्चकाः
नमामि तं गणाधिपं कृपापयः पयोनिधिम् ॥ १॥

ஸராகி³லோகது³ர்லப⁴ம் விராகி³லோகபூஜிதம்
ஸுராஸுரைர்நமஸ்க்ருʼதம் ஜராபம்ருʼத்யுநாஶகம் ।
கி³ரா கு³ரும் ஶ்ரியா ஹரிம் ஜயந்தி யத்பதா³ர்சகா:
நமாமி தம் க³ணாதி⁴பம் க்ருʼபாபய: பயோநிதி⁴ம் ॥ 1॥

sarāgilokadurlabhaṃ virāgilokapūjitaṃ
surāsurairnamaskṛtaṃ jarāpamṛtyunāśakam ।
girā guruṃ śriyā hariṃ jayanti yatpadārcakāḥ
namāmi taṃ gaṇādhipaṃ kṛpāpayaḥ payonidhim ॥ 1॥

सरागिलोक-दुर्लभं   -  ஸராகி³லோக-து³ர்லப⁴ம்ʼ  -  ( உலக விஷயங்களில் ) பற்று மிக்கவர்க்கு அரியவரை,

विरागिलोक-पूजितं  -  விராகி³லோக-பூஜிதம்ʼ  -   ( உலக விஷயங்களில் ) பற்றற்றவரால் வழிபடப் பெறுபவரை,

सुर-असुरैः नमस्कृतं  -  ஸுர-அஸுரை: நமஸ்க்ருʼதம்ʼ  -   தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் பெறுபவரை,

जर-अपमृत्यु-नाशकं  -  ஜர-அபம்ருʼத்யு-நாஶகம்ʼ  -   மூப்பையும் அகால மரணத்தையும் அகற்றுபவரை,

गिरा गुरुं श्रिया हरिं जयन्ति यत्-पद-अर्चकाः  -  கி³ரா கு³ரும்ʼ ஶ்ரியா ஹரிம்ʼ ஜயந்தி யத்-பத³-அர்சகா​:  -  திருவடி தொழுபவரைப் பேச்சால் ப்ருஹஸ்பதியையும், செல்வத்தால் ஹரியையும் வெல்லச் செய்பவரை,

कृपापयः पयोनिधिं  -  க்ருʼபாபய: பயோனிதி⁴ம்ʼ  -   கருணைக்கடலானவருமான

तं गणाधिपं  -  தம்ʼ க³ணாதி⁴பம்ʼ  -   அந்த கணாதிபரை ( விநாயகரை )

नमामि  -  நமாமி  -   வணங்குகிறேன்.

பொருள் :

( உலக விஷயங்களில் ) பற்று மிக்கவர்க்கு அரியவரும், ( உலக விஷயங்களில் ) பற்றற்றவரால் வழிபடப் பெறுபவரும், தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் பெறுபவரும், மூப்பையும் அகால மரணத்தையும் அகற்றுபவரும், திருவடி தொழுபவரைப் பேச்சால் ப்ருஹஸ்பதியையும், செல்வத்தால் ஹரியையும் வெல்லச் செய்பவரும், கருணைக்கடலானவருமான அந்த கணாதிபரை ( விநாயகரை ) வணங்குகிறேன்.   1

Meaning :

I worship the lord Ganadhipa (Vinayaka), who is the ocean of sympathy, who is difficult to be approached by the men of worldly desires, who is praised by the men who had renounced the material pleasures, who is worshipped by both the gods and the demons and by singing in praise of whom the devotees excel their preceptor in oratory and the lord Hari in wealth.  1

Sunday, 5 August 2018

ஸ்ரீ ஹரி மகிழ்ச்சியடைய

॥ अध्यात्म दीप‌‌म‌् ॥

||  அத்⁴யாத்ம தீ³ப‌‌ம் ||

॥ ADHYĀTMA DĪPA‌‌M ॥

Srimad Bhagavatam 1.2.13

अतः पुम्भिः द्विजश्रेष्ठा वर्णाश्रमविभागशः ।
स्वनुष्ठितस्य धर्मस्य संसिद्धिः हरितोषणम् ॥ १३ ॥

அத​: பும்பி⁴​: த்³விஜஶ்ரேஷ்டா² வர்ணாஶ்ரமவிபா⁴க³ஶ​: |
ஸ்வனுஷ்டி²தஸ்ய த⁴ர்மஸ்ய ஸம்ʼஸித்³தி⁴​: ஹரிதோஷணம் ||  13 ||

ataḥ pumbhiḥ dvijaśreṣṭhā varṇāśramavibhāgaśaḥ ।
svanuṣṭhitasya dharmasya saṃsiddhiḥ haritoṣaṇam ॥ 13 ॥

ஆகையால் அந்தண சிரேஷ்டர்களே ! மாந்தர்கள் தத்தம் குலம், வர்ணாச்ரமம் இவற்றிற்குத் தக்கவாறு, ( தங்களுக்கென்று வகுக்கப்பட்ட கடமைகளைச் சிறிதும் பிறழாது ) சரிவரச் செய்து வருவானாகில், அந்த தர்மமே பகவானை ஸ்ரீ ஹரியை மகிழ்ச்சியடையச் செய்துவிடும். ( நாம் நமது கடமையைச் சரிவரச் செய்து வருவதன் நோக்கம், பகவானை மகிழ்ச்சியடையச் செய்வதேயன்றி, வேறு பயன் கருதியன்று. )

O best among the twice-born, it is therefore concluded that the highest perfection one can achieve by discharging the duties prescribed for one’s own occupation according to caste divisions and orders of life is to please the Personality of Godhead.

Friday, 3 August 2018

Sri Ganesha Bhujangam - Sloka 9 ( Phalasruti )

Sri Ganesha Bhujangam - Sloka 9 ( Phalasruti )

॥ श्री गणेश भुजङ्गम् ॥

||  ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் || 

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

इमं सुस्तवं प्रातरुत्थाय भक्त्या पठेद्यस्तु मर्त्यो लभेत्सर्वकामान् ।
गणेशप्रसादेन सिध्यन्ति वाचो गणेशे विभौ दुर्लभं किं प्रसन्ने ॥ ९॥

इति श्रीमच्छङ्कराचार्यकृतं गणेशभुजङ्गप्रयातस्तोत्रं सम्पूर्णम् ॥

இமம்ʼ ஸுஸ்தவம்ʼ ப்ராதருத்தா²ய ப⁴க்த்யா படே²த்³யஸ்து மர்த்யோ லபே⁴த்ஸர்வகாமான் | 
க³ணேஶப்ரஸாதே³ன ஸித்⁴யந்தி வாசோ க³ணேஶே விபௌ⁴ து³ர்லப⁴ம்ʼ கிம்ʼ ப்ரஸன்னே ||  9|| 

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ க³ணேஶபு⁴ஜங்க³ப்ரயாதஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

imaṃ sustavaṃ prātarutthāya bhaktyā paṭhedyastu martyo labhetsarvakāmān ।
gaṇeśaprasādena sidhyanti vāco gaṇeśe vibhau durlabhaṃ kiṃ prasanne ॥ 9॥

iti śrīmacchaṅkarācāryakṛtaṃ gaṇeśabhujaṅgaprayātastotraṃ sampūrṇam ॥

इमं सुस्तवं   -   இமம்ʼ ஸுஸ்தவம்ʼ  -   இந்த நல்ல ஸ்தோத்திரத்தை,

प्रातः-उत्थाय   -   ப்ராத​:-உத்தா²ய   -   காலையில் எழுந்து,

भक्त्या   -   ப⁴க்த்யா  -   பக்தியுடன்,

यः मर्त्यः तु   -   ய​: மர்த்ய​: து   -   எந்த மனிதன்,

पठेत्   -   படே²த்   -   படிப்பானோ ( அவன் )

सर्व-कामान्   -   ஸர்வ-காமான்  -   எல்லா விருப்பங்களையும்,

लभेत्   -   லபே⁴த்   -   அடைவான்.,

गणेश-प्रसादेन   -   க³ணேஶ-ப்ரஸாதே³ன   -   கணேசருடைய அருளால்,

वाचः   -   வாச​:   -   ( அவனது ) வாக்குகள்,

सिध्यन्ति   -   ஸித்⁴யந்தி   -   பலிக்கின்றன.,

विभौ   -   விபௌ⁴   -   நீக்கமற நிறைந்தவரும், ஸர்வ வல்லமையுள்ளவருமான,

गणेशे प्रसन्ने   -   க³ணேஶே ப்ரஸன்னே   -   கணேசர் அருள்புரியும் பொழுது,

दुर्लभं किं   -   து³ர்லப⁴ம்ʼ கிம்ʼ   -  
கிடைப்பதற்கரியது எது?

பொருள் :

பலன் -

இந்த நல்ல ஸ்தோத்திரத்தை காலையில் எழுந்து பக்தியுடன் எந்த மனிதன் படிப்பானோ ( அவன் ) எல்லா விருப்பங்களையும் அடைவான். கணேசருடைய அருளால் ( அவனது ) வாக்குகள் பலிக்கின்றன. நீக்கமற நிறைந்தவரும், ஸர்வ வல்லமையுள்ளவருமான கணேசர் அருள்புரியும் பொழுது கிடைப்பதற்கரியது எது?   9

இத்துடன் ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

Meaning :

Those men who get up early morning and with devotion,

Read this prayer would get fulfillment of all their desires,

Due to the grace of Ganesa , they would get speaking skill,

And there is nothing that is impossible to get from a pleased Lord Ganesa.  9

Thus ends ŚRĪ GAṆEŚA BHUJAṄGA STOTRAM.

Sri Ganesha Bhujangam - Sloka 8

Sri Ganesha Bhujangam - Sloka 8

॥ श्री गणेश भुजङ्गम् ॥

||  ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் || 

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

चिदानन्दसान्द्राय शान्ताय तुभ्यं नमो विश्वकर्त्रे च हर्त्रे च तुभ्यम् ।
नमोऽनन्तलीलाय कैवल्यभासे नमो विश्वबीज प्रसीदेशसूनो ॥ ८॥

சிதா³னந்த³ஸாந்த்³ராய ஶாந்தாய துப்⁴யம்ʼ நமோ விஶ்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்⁴யம் | 
நமோ(அ)நந்தலீலாய கைவல்யபா⁴ஸே நமோ விஶ்வபீ³ஜ ப்ரஸீதே³ஶஸூனோ ||  8||

cidānandasāndrāya śāntāya tubhyaṃ namo viśvakartre ca hartre ca tubhyam ।
namo'nantalīlāya kaivalyabhāse namo viśvabīja prasīdeśasūno ॥ 8॥

चिद्-आनन्द सान्द्राय  -  சித்³-ஆனந்த³ ஸாந்த்³ராய  -  ஞானானந்த ஸ்வரூபியாயும்,

शान्ताय  -  ஶாந்தாய  -  அமைதி நிறைந்தவராயும் உள்ள,

तुभ्यं नमः  -  துப்⁴யம்ʼ நம​:  -  உமக்கு நமஸ்காரம்,

विश्वकर्त्रे च   -  விஶ்வகர்த்ரே ச  -  உலகைப் படைப்பவராயும்,

हर्त्रे च  -  ஹர்த்ரே ச  -  உலகை அழிப்பவராயும் உள்ள,

तुभ्यम् नमः  -  துப்⁴யம் நம​:  -  உமக்கு நமஸ்காரம்,

अनन्त-लीलाय  -  அனந்த-லீலாய  -  எல்லையற்ற திருவிளையாடல்களை உடையவரும்,

कैवल्य-भासे  -  கைவல்ய-பா⁴ஸே  -  ( உண்மையில் ) தாம் ஒருவராகவே விளங்குபவருமானவருக்கு,

नमः  -  நம​:  -  ( உமக்கு ) நமஸ்காரம்,

विश्वबीज  -  விஶ்வபீ³ஜ  -  உலகின் மூலகாரணமே!

ईशसूनो  -  ஈஶஸூனோ  -  ஈச்வர குமாரனே!

प्रसीद  -  ப்ரஸீத³  -  அருள்வீராக.

பொருள் :

ஞானானந்த ஸ்வரூபியாயும், அமைதி நிறைந்தவராயும் உள்ள, உமக்கு நமஸ்காரம், உலகைப் படைப்பவராயும், உலகை அழிப்பவராயும் உள்ள, உமக்கு நமஸ்காரம், எல்லையற்ற திருவிளையாடல்களை உடையவரும், ( உண்மையில் ) தாம் ஒருவராகவே விளங்குபவருமானவருக்கு நமஸ்காரம். உலகின் மூலகாரணமே ! ஈச்வர குமாரனே ! அருள்வீராக.   8

Meaning :

You are the peaceful one who is  the dense divine bliss,

You are the creator of the world and also the destroyer,

Salutations to the one with endless sports gives salvation and shines,

Salutations to the  seed of the world, Oh God , be pleased with me.   8