Friday, 3 August 2018

Sri Ganesha Bhujangam - Sloka 4

Sri Ganesha Bhujangam - Sloka 4

॥ श्री गणेश भुजङ्गम् ॥

||  ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் || 

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

विचित्रस्फुरद्रत्नमालाकिरीटं किरीटोल्लसच्चन्द्ररेखाविभूषम् ।
विभूषैकभूषं भवध्वंसहेतुं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ४॥

விசித்ரஸ்பு²ரத்³ரத்னமாலாகிரீடம்ʼ கிரீடோல்லஸச்சந்த்³ரரேகா²விபூ⁴ஷம் | 
விபூ⁴ஷைகபூ⁴ஷம்ʼ ப⁴வத்⁴வம்ʼஸஹேதும்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  4||

vicitrasphuradratnamālākirīṭaṃ kirīṭollasaccandrarekhāvibhūṣam ।
vibhūṣaikabhūṣaṃ bhavadhvaṃsahetuṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 4॥

विचित्र-स्फुरद्-रत्न-माला-किरीटं   -  விசித்ர-ஸ்பு²ரத்³-ரத்ன-மாலா-கிரீடம்ʼ   -   பல வர்ணங்களுடன் பிரகாசிக்கின்ற ரத்னங்கள் வரிசையாக அமைந்த கிரீடத்தை அணிந்தவரை,

किरीट-उल्लसत‌्-चन्द्र-रेखा-विभूषम्   -   கிரீட-உல்லஸத்-சந்த்³ர-ரேகா²-விபூ⁴ஷம்   -   கிரீடத்தில் பிரகாசிக்கின்ற சந்திர கலையை உடையவரை,

विभूष-एक-भूषं   -   விபூ⁴ஷ-ஏக-பூ⁴ஷம்ʼ   -   அணிகலன்களுக்கு ( அழகு சேர்க்கும் ) அணிகலனாகத் திகழ்பவரை,

भव-ध्वंस-हेतुं   -   ப⁴வ-த்⁴வம்ʼஸ-ஹேதும்ʼ   -   ஸம்ஸாரத்தை நாசம் செய்யும் காரணமானவரை,

तं गणाधीशं  -  தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ  -  அந்த கணாதீசரை ( விநாயகரை ),

ईशान-सूनुं  -  ஈஶான-ஸூனும்ʼ  -  ஈச்வரரின் புத்ரரை,

ईडे  -  ஈடே³  -  துதிக்கின்றேன்.

பொருள் :

பல வர்ணங்களுடன் பிரகாசிக்கின்ற ரத்னங்கள் வரிசையாக அமைந்த கிரீடத்தை அணிந்தவரும், கிரீடத்தில் பிரகாசிக்கின்ற சந்திர கலையை உடையவரும், அணிகலன்களுக்கு ( அழகு சேர்க்கும் ) அணிகலனாகத்* திகழ்பவரும்,
ஸம்ஸாரத்தை நாசம் செய்யும் காரணமானவருமான அந்த கணாதீசரை ( விநாயகரை ) ஈச்வரரின் புத்ரரை துதிக்கின்றேன்.   4

* அணிகலன்கள் ஒருவரது அழகை  மேலும் விசேஷமாகக் காட்டுவதற்கு அணியப்படுகிறது. இங்கு விநாயகர் விஷயத்தில், அவரணிந்த அணிகலன்களால் அவருக்கு அழகு கூடியது என்பதைவிட , அணிகலண்களுக்கே அவரது திவ்ய மங்கள விக்ரஹம் அழகூட்டுகிறது என்று கொள்ளலாம். எனவே அணிகலன்களுக்கு ஒரு அணிகலனானவர் என்று கூற்று.

Meaning :

I praise   the leader of the Ganas   who is the son of Lord Shiva,

Who is wearing  shining gem studded garland and crown,

Whose forehead  being decorated by the streaks of  shining moon,

Who is the decoration to the decorations and

Who is the cause of destruction of the world ( samsaaram ).   4

No comments:

Post a Comment