Sri Ganesha Bhujangam - Sloka 7
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
यमेकाक्षरं निर्मलं निर्विकल्पं गुणातीतमानन्दमाकारशून्यम् ।
परं पारमोङ्कारमाम्नायगर्भं वदन्ति प्रगल्भं पुराणं तमीडे ॥ ७॥
யமேகாக்ஷரம்ʼ நிர்மலம்ʼ நிர்விகல்பம்ʼ கு³ணாதீதமானந்த³மாகாரஶூன்யம் |
பரம்ʼ பாரமோங்காரமாம்னாயக³ர்ப⁴ம்ʼ வத³ந்தி ப்ரக³ல்ப⁴ம்ʼ புராணம்ʼ தமீடே³ || 7||
yamekākṣaraṃ nirmalaṃ nirvikalpaṃ guṇātītamānandamākāraśūnyam |
paraṃ pāramoṅkāramāmnāyagarbhaṃ vadanti pragalbhaṃ purāṇaṃ tamīḍe || 7||
यं - யம்ʼ - எவரை,
एक-अक्षरं - ஏக-அக்ஷரம்ʼ - ஒன்றாயும் அழிவற்றதாயும்,
निर्मलं - நிர்மலம்ʼ - மாசற்றதாயும்,
निर्विकल्पं - நிர்விகல்பம்ʼ - சந்தேகமற்றதாயும்,
गुण-अतीतं - கு³ண-அதீதம்ʼ - ( ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற ) முக்குணங்களுக்கும் அப்பால் உள்ளதாயும்,
आनन्दं - ஆனந்த³ம்ʼ - ஆனந்தரூபியாயும்,
आकार-शून्यम् - ஆகார-ஶூன்யம் - உருவம் அற்றதாயும்,
परं पारं - பரம்ʼ பாரம்ʼ - ( ஸம்ஸாரக் கடலின் ) மற்றொரு கரையாயும்,
ओङ्कारं - ஓங்காரம்ʼ - பிரணவ ரூபமாயும்,
आम्नाय-गर्भं - ஆம்னாய-க³ர்ப⁴ம்ʼ - வேதங்களைத் தன்னுள் கொண்டதாயும்,
प्रगल्भं - ப்ரக³ல்ப⁴ம்ʼ - ஸாமர்த்யம் உள்ளதாயும்,
पुराणं - புராணம்ʼ - பழமை வாய்ந்ததாயும்,
वदन्ति - வத³ந்தி - கூறுகின்றனரோ,
तं - தம்ʼ - அவரை ( அந்த விநாயகரை ),
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
எவரை ஒன்றாயும் அழிவற்றதாயும், மாசற்றதாயும், சந்தேகமற்றதாயும், ( ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற ) முக்குணங்களுக்கும் அப்பால் உள்ளதாயும், ஆனந்தரூபியாயும், உருவம் அற்றதாயும், பிரணவ ரூபமாயும், வேதங்களைத் தன்னுள் கொண்டதாயும், ஸாமர்த்யம் உள்ளதாயும், பழமை வாய்ந்ததாயும் கூறுகின்றனரோ அவரை ( அந்த விநாயகரை ) துதிக்கின்றேன். 7
Meaning :
I praise the creator of illusions and very ancient ,
Who is the start of universe, pure and not altered by anything,
Who is above characters, cheerful and without any form,
Who is divine, the divine Om and one having Vedas within him. 7
No comments:
Post a Comment