Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 1
॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥
सरागिलोकदुर्लभं विरागिलोकपूजितं
सुरासुरैर्नमस्कृतं जरापमृत्युनाशकम् ।
गिरा गुरुं श्रिया हरिं जयन्ति यत्पदार्चकाः
नमामि तं गणाधिपं कृपापयः पयोनिधिम् ॥ १॥
ஸராகி³லோகது³ர்லப⁴ம் விராகி³லோகபூஜிதம்
ஸுராஸுரைர்நமஸ்க்ருʼதம் ஜராபம்ருʼத்யுநாஶகம் ।
கி³ரா கு³ரும் ஶ்ரியா ஹரிம் ஜயந்தி யத்பதா³ர்சகா:
நமாமி தம் க³ணாதி⁴பம் க்ருʼபாபய: பயோநிதி⁴ம் ॥ 1॥
sarāgilokadurlabhaṃ virāgilokapūjitaṃ
surāsurairnamaskṛtaṃ jarāpamṛtyunāśakam ।
girā guruṃ śriyā hariṃ jayanti yatpadārcakāḥ
namāmi taṃ gaṇādhipaṃ kṛpāpayaḥ payonidhim ॥ 1॥
सरागिलोक-दुर्लभं - ஸராகி³லோக-து³ர்லப⁴ம்ʼ - ( உலக விஷயங்களில் ) பற்று மிக்கவர்க்கு அரியவரை,
विरागिलोक-पूजितं - விராகி³லோக-பூஜிதம்ʼ - ( உலக விஷயங்களில் ) பற்றற்றவரால் வழிபடப் பெறுபவரை,
सुर-असुरैः नमस्कृतं - ஸுர-அஸுரை: நமஸ்க்ருʼதம்ʼ - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் பெறுபவரை,
जर-अपमृत्यु-नाशकं - ஜர-அபம்ருʼத்யு-நாஶகம்ʼ - மூப்பையும் அகால மரணத்தையும் அகற்றுபவரை,
गिरा गुरुं श्रिया हरिं जयन्ति यत्-पद-अर्चकाः - கி³ரா கு³ரும்ʼ ஶ்ரியா ஹரிம்ʼ ஜயந்தி யத்-பத³-அர்சகா: - திருவடி தொழுபவரைப் பேச்சால் ப்ருஹஸ்பதியையும், செல்வத்தால் ஹரியையும் வெல்லச் செய்பவரை,
कृपापयः पयोनिधिं - க்ருʼபாபய: பயோனிதி⁴ம்ʼ - கருணைக்கடலானவருமான
तं गणाधिपं - தம்ʼ க³ணாதி⁴பம்ʼ - அந்த கணாதிபரை ( விநாயகரை )
नमामि - நமாமி - வணங்குகிறேன்.
பொருள் :
( உலக விஷயங்களில் ) பற்று மிக்கவர்க்கு அரியவரும், ( உலக விஷயங்களில் ) பற்றற்றவரால் வழிபடப் பெறுபவரும், தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் பெறுபவரும், மூப்பையும் அகால மரணத்தையும் அகற்றுபவரும், திருவடி தொழுபவரைப் பேச்சால் ப்ருஹஸ்பதியையும், செல்வத்தால் ஹரியையும் வெல்லச் செய்பவரும், கருணைக்கடலானவருமான அந்த கணாதிபரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 1
Meaning :
I worship the lord Ganadhipa (Vinayaka), who is the ocean of sympathy, who is difficult to be approached by the men of worldly desires, who is praised by the men who had renounced the material pleasures, who is worshipped by both the gods and the demons and by singing in praise of whom the devotees excel their preceptor in oratory and the lord Hari in wealth. 1
No comments:
Post a Comment