Saturday, 23 February 2019

Rama stotram by Parashurama - Sloka 13

Rama stotram by Parashurama - Sloka 13

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

लोके त्वद्भक्तिनिरतास्त्वद्धर्मामृतवर्षिणः ।
पुनन्ति लोकमखिलं किं पुनः स्वकुलोद्भवान् ॥ ४३॥

லோகே த்வத்³ப⁴க்தினிரதாஸ்த்வத்³த⁴ர்மாம்ருʼதவர்ஷிண​: |
புனந்தி லோகமகி²லம்ʼ கிம்ʼ புன​: ஸ்வகுலோத்³ப⁴வான் ||  43||

loke tvadbhaktiniratāstvaddharmāmṛtavarṣiṇaḥ ।
punanti lokamakhilaṃ kiṃ punaḥ svakulodbhavān ॥ 43॥

பொருள் :

ரகுவீர !  இவ்வுலகத்திலே தங்களிடம் அனன்யமான பக்தி கொண்டுள்ள பக்த சிரோமணிகளே பகவத் தர்மமாகின்ற, அம்ருத வர்ஷத்தை வர்ஷிக்கின்ற ஸாதுக்களே ஸகல லோகங்களையும் பரிசுத்தப்படுத்துகின்றார்கள். மேலும், அவர்கள் தங்கள் குலத்திலே பிறந்தவர்களையும்கூட புனிதம் செய்துவிடுகின்றார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமா?  43

Meaning :

Men who have true devotion to Thee, and who by their life and words propagate the path of devotion, purify the whole world. What then to speak of the redeeming effect of their life on their own kith and kin, including their ancestors !  43

Rama stotram by Parashurama - Sloka 12

Rama stotram by Parashurama - Sloka 12

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

अतस्त्वत्पादयुगले भक्तिर्मे जन्मजन्मनि ।
स्यात्त्वद्भक्तिमतां सङ्गोऽविद्या याभ्यां विनश्यति ॥ ४२॥

அதஸ்த்வத்பாத³யுக³லே ப⁴க்திர்மே ஜன்மஜன்மனி |
ஸ்யாத்த்வத்³ப⁴க்திமதாம்ʼ ஸங்கோ³(அ)வித்³யா யாப்⁴யாம்ʼ வினஶ்யதி ||  42||

atastvatpādayugale bhaktirme janmajanmani ।
syāttvadbhaktimatāṃ saṅgo'vidyā yābhyāṃ vinaśyati ॥ 42॥

பொருள் :

ஆகையினாலே, ஹே ! ப்ரபோ ! நான் எத்தனை எத்தனை பிறவிகளை எடுத்த போதிலும், எனக்குத் தங்கள் சரணயுகளங்களில் நிலையான பக்தி ஏற்பட அருள்புரிய வேண்டுகின்றேன். மேலும் தங்களுடைய பக்தர்களின் கூட்டுறவும் கிடைக்க அருள் செய்ய வேண்டும்.  ஏனென்றால், ஸத்ஸங்கமும், பக்தி நிஷ்டையுமே அஞ்ஞானத்தை நாசம் செய்யக்கூடியதாக இருக்கின்றது, அல்லவா ?   42

Meaning :

Therefore bless me, so that in life after life I am born with devotion to Thee and with opportunities for association with Thy devotees; for, that is the only means for the  dispelling of Ignorance.   42

Monday, 11 February 2019

Vedasaara Shiva Stotram - Sloka 10

Vedasaara Shiva Stotram - Sloka 10

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

शंभो महेश करुणामय शूलपाणे
गौरीपते पशुपते पशुपाशनाशिन् ।
काशीपते करुणया जगदेतदेकस्त्वं
हंसि पासि विदधासि महेश्वरोऽसि ॥१०॥

ஶம்போ⁴ மஹேஶ கருணாமய ஶூலபாணே
கௌ³ரீபதே பஶுபதே பஶுபாஶனாஶின் |
காஶீபதே கருணயா ஜக³தே³ததே³கஸ்த்வம்ʼ
ஹம்ʼஸி பாஸி வித³தா⁴ஸி மஹேஶ்வரோ(அ)ஸி || 10||

śaṃbho maheśa karuṇāmaya śūlapāṇe
gaurīpate paśupate paśupāśanāśin ।
kāśīpate karuṇayā jagadetadekastvaṃ
haṃsi pāsi vidadhāsi maheśvaro'si ॥10॥

Word by word meaning :

शम्भो  -  ஶம்போ⁴  -  சம்புவே

महेश  -  மஹேஶ  -  மஹேச்வரா

करुणामय  -  கருணாமய  -  கருணையின் உருவமே

शूलपाणे  -  ஶூலபாணே  -  கையில் சூலத்தை தரித்தவரே

गौरीपते  -  கௌ³ரீபதே  -  கௌரியின் நாயகனே

पशुपते  -  பஶுபதே  -  பசுக்களின் ( பிராணிகளின் ) ஸ்வாமியே

पशुपाशनाशिन्  -  பஶுபாஶனாஶின்  -  பசுக்களின் ( ஜீவர்களின் ) பாசத்தை ஒழிப்பவரே

काशीपते  -  காஶீபதே  -  காசீ நகரத் தலைவனே

त्वं   -  த்வம்ʼ  -  நீர்

एकः  -  ஏக꞉  -  ஒருவனாக இருந்துகொண்டு

करुणया  -  கருணயா  -  கருணயினால்

एतत् जगत्  -  ஏதத் ஜக³த்  -  இந்தப் பிரபஞ்சத்தை

विदधासि  -  வித³தா⁴ஸி  -  சிருஷ்டிக்கிறீர்

पासि  -  பாஸி  -  காப்பாற்றுகிறீர்

हंसि  -  ஹம்ʼஸி  -  அழிக்கிறீர்

महेश्वरः  -  மஹேஶ்வர꞉  -  ( அதனால் )  மஹேச்வரனாக

असि  -  அஸி  -  இருக்கிறீர்.

பொருள் :

சம்போ, மஹேசா, கருணாவடிவமே, சூலத்தைக் கையில் ஏந்தியவரே, கௌரியின் நாயகரே, ஜீவர்களின் யஜமானரே, பிராணிகளின் பந்தத்தை ஒழிப்பவரே, காசீ நகராதிபதியே, நீ ஒருவனே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, காப்பாற்றி, அழிக்கிறாய். ஜீவர்களின் பேரிலுள்ள கருணையால் தான் இவற்றைச் செய்கிறாய்.

சரீரத்தையும் போகங்களையும் கொடுத்து துன்பங்களை விலக்கி முடிவில் பேரின்பத்தையும் தருகிறாய். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் சக்தி என்னும் ஐச்வர்யம் உன்னிடமே இருப்பதால் நீயே மஹேச்வரன்.   10

Meaning  :

O Śambhu, Who is Maheśa, Who is full of compassion, Who holds a trident, Who is the Lord of Gaurī, Who is the Lord of sacrificed animals, Who destroys the shackles of animals, Who is the Lord of Kāśī! Only You are with compassion in this world. You are the great Lord, Who destroys, protects, and holds the world.   10

Saturday, 9 February 2019

Rama stotram by Parashurama - Sloka 11

Rama stotram by Parashurama - Sloka 11

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

तस्मात्त्वद्भक्तिहीनानां कल्पकोटिशतैरपि ।
न मुक्तिशङ्का विज्ञानशङ्का नैव सुखं तथा ॥ ४१॥

தஸ்மாத்த்வத்³ப⁴க்திஹீனானாம்ʼ கல்பகோடிஶதைரபி |
ந முக்திஶங்கா விஜ்ஞானஶங்கா நைவ ஸுக²ம்ʼ ததா² ||  41||

tasmāttvadbhaktihīnānāṃ kalpakoṭiśatairapi ।
na muktiśaṅkā vijñānaśaṅkā naiva sukhaṃ tathā ॥ 41॥

பொருள் :

ஆகவே தங்களிடம் பக்தி இல்லாதவர்களுக்கு, நூறுகோடி கல்பகாலம் கடந்தபோதிலும் முக்தியும் கிடைப்பதில்லை. ப்ரஹ்ம ஞானமும் உண்டாவதில்லை. அதன் காரணமாக அவன் உண்மையான ஸுகத்தையும் அடைவதில்லை.   41

Meaning :

Therefore for those who have no devotion to Thee, there is not the slightest chance, even in the course of a myriad cosmic cycles, of gaining enlightenment and liberation. Thus he will not have happiness even in life.   41

Monday, 4 February 2019

Vedasaara Shiva Stotram - Sloka 9

Vedasaara Shiva Stotram - Sloka 9

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

प्रभो शूलपाणे विभो विश्वनाथ
महादेव शंभो महेश त्रिनेत्र ।
शिवाकान्त शान्त स्मरारे पुरारे
त्वदन्यो वरेण्यो न मान्यो न गण्यः ॥९॥

ப்ரபோ⁴ ஶூலபாணே விபோ⁴ விஶ்வநாத²
மஹாதே³வ ஶம்போ⁴ மஹேஶ த்ரிநேத்ர |
ஶிவாகாந்த ஶாந்த ஸ்மராரே புராரே
த்வத³ன்யோ வரேண்யோ ந மான்யோ ந க³ண்ய​: || 9||

prabho śūlapāṇe vibho viśvanātha
mahādeva śaṃbho maheśa trinetra ।
śivākānta śānta smarāre purāre
tvadanyo vareṇyo na mānyo na gaṇyaḥ ॥9॥

Word by word meaning  :

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஸ்வாமியே

शूलपाणे  -  ஶூலபாணே  -  சூலாயுதத்தைக் கையில் கொண்டவரே

विभो  -  விபோ⁴  -  எங்கும் உள்ளவரே

विश्वनाथ  -  விஶ்வனாத²  -  விச்வநாதரே

महादेव  -  மஹாதே³வ  -  மஹாதேவா

शम्भो  -  ஶம்போ⁴  -  சம்புவே

महेश  -  மஹேஶ  -  மஹேச்வரனே

त्रिनेत्र  -  த்ரினேத்ர  -  முக்கண்ணனே

शिवाकान्त  -  ஶிவாகாந்த  -  பார்வதியின் நாயகனே

शान्त  -  ஶாந்த  -  அமைதியாய் இருப்பவரே

स्मरारे  -  ஸ்மராரே  -  மன்மதனின் சத்ருவே

पुरारे  -  புராரே  -  த்ரிபுரர்களின் எதிரியே

त्वदन्यः  -  த்வத³ன்ய꞉  -  உம்மைக் காட்டிலும் வேறு

वरेण्यः  -  வரேண்ய꞉  -  போற்றத்தக்கவர்

मान्यः  -  மான்ய꞉  -  மதிக்கத்தக்கவர்

न  -  ந  -  இல்லை

गण्यः  -  க³ண்ய꞉  -  எண்ணத்தக்கவர்

न  -  ந  -  இல்லை.

பொருள் :

ப்ரபோ ! சூலத்தைக் கையில் தருத்தவரே !  வ்யாபகரே ! விச்வநாதா ! மஹாதேவா !  சம்போ !  மஹேசா !  முக்கண்ணனே !  பார்வதியின் காந்தனே ! அமைதியுள்ளவரே !  மன்மதனுக்கு எதிரியே !  த்ரிபுரர்களின் சத்ருவே !  நீர்தான் போற்றத் தக்கவர் , மதிக்கத்தக்கவரும் எண்ணத்தக்கவரும் நீரே, வேறு ஒருவருமல்ல.   9

Meaning  :

O Lord, Who holds a trident in hands, Who is the resplendent Lord of the world, Who is Mahādeva, Who is Śambhu, Who is the great Lord, Who has three eyes, Who is the resplendence of Śivā, Who is serene, Who slayed Smara (Kāma), and Who slayed Pura! There is nothing better or different from You which is countable or respectable.   9

Saturday, 2 February 2019

Rama stotram by Parashurama - Sloka 10

Rama stotram by Parashurama - Sloka 10

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

ततस्त्वज्ज्ञानसम्पन्नः सद्गुरुस्तेन लभ्यते ।
वाक्यज्ञानं गुरोर्लब्ध्वा त्वत्प्रसादाद्विमुच्यते ॥ ४०॥

ததஸ்த்வஜ்ஜ்ஞானஸம்பன்ன​: ஸத்³கு³ருஸ்தேன லப்⁴யதே |
வாக்யஜ்ஞானம்ʼ கு³ரோர்லப்³த்⁴வா த்வத்ப்ரஸாதா³த்³விமுச்யதே ||  40||

tatastvajjñānasampannaḥ sadgurustena labhyate ।
vākyajñānaṃ gurorlabdhvā tvatprasādādvimucyate ॥ 40॥

பொருள் :

அதேசமயம் அந்த பக்திஸாதகனுக்குத் தங்களுடைய ஸ்வரூபஞானம் நிறைந்த, ஆத்மஞான ஸம்பன்னராகிய ஸத்குருவின் தரிசனம் கிடைக்கின்றது. அந்த சிறந்த குருதேவரிடமிருந்து மஹாவாக்கிய  உபதேசம் பெற்று ( அவைகளின் உட்பொருளை ஆழமாகச் சிந்தித்து ) தங்கள் பேரருளினால் முக்திநிலையைப் பெறுகின்றான்.   40

Meaning :

When this state of mental purity is attained, an aspirant will get an authentic teacher who is endowed with knowledge derived from the realisation of Thee. Gaining through such a teacher, the knowledge of the true meaning of the scriptural dicta, he will attain liberation by Thy grace.   40