Vedasaara Shiva Stotram - Sloka 10
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
शंभो महेश करुणामय शूलपाणे
गौरीपते पशुपते पशुपाशनाशिन् ।
काशीपते करुणया जगदेतदेकस्त्वं
हंसि पासि विदधासि महेश्वरोऽसि ॥१०॥
ஶம்போ⁴ மஹேஶ கருணாமய ஶூலபாணே
கௌ³ரீபதே பஶுபதே பஶுபாஶனாஶின் |
காஶீபதே கருணயா ஜக³தே³ததே³கஸ்த்வம்ʼ
ஹம்ʼஸி பாஸி வித³தா⁴ஸி மஹேஶ்வரோ(அ)ஸி || 10||
śaṃbho maheśa karuṇāmaya śūlapāṇe
gaurīpate paśupate paśupāśanāśin ।
kāśīpate karuṇayā jagadetadekastvaṃ
haṃsi pāsi vidadhāsi maheśvaro'si ॥10॥
Word by word meaning :
शम्भो - ஶம்போ⁴ - சம்புவே
महेश - மஹேஶ - மஹேச்வரா
करुणामय - கருணாமய - கருணையின் உருவமே
शूलपाणे - ஶூலபாணே - கையில் சூலத்தை தரித்தவரே
गौरीपते - கௌ³ரீபதே - கௌரியின் நாயகனே
पशुपते - பஶுபதே - பசுக்களின் ( பிராணிகளின் ) ஸ்வாமியே
पशुपाशनाशिन् - பஶுபாஶனாஶின் - பசுக்களின் ( ஜீவர்களின் ) பாசத்தை ஒழிப்பவரே
काशीपते - காஶீபதே - காசீ நகரத் தலைவனே
त्वं - த்வம்ʼ - நீர்
एकः - ஏக꞉ - ஒருவனாக இருந்துகொண்டு
करुणया - கருணயா - கருணயினால்
एतत् जगत् - ஏதத் ஜக³த் - இந்தப் பிரபஞ்சத்தை
विदधासि - வித³தா⁴ஸி - சிருஷ்டிக்கிறீர்
पासि - பாஸி - காப்பாற்றுகிறீர்
हंसि - ஹம்ʼஸி - அழிக்கிறீர்
महेश्वरः - மஹேஶ்வர꞉ - ( அதனால் ) மஹேச்வரனாக
असि - அஸி - இருக்கிறீர்.
பொருள் :
சம்போ, மஹேசா, கருணாவடிவமே, சூலத்தைக் கையில் ஏந்தியவரே, கௌரியின் நாயகரே, ஜீவர்களின் யஜமானரே, பிராணிகளின் பந்தத்தை ஒழிப்பவரே, காசீ நகராதிபதியே, நீ ஒருவனே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, காப்பாற்றி, அழிக்கிறாய். ஜீவர்களின் பேரிலுள்ள கருணையால் தான் இவற்றைச் செய்கிறாய்.
சரீரத்தையும் போகங்களையும் கொடுத்து துன்பங்களை விலக்கி முடிவில் பேரின்பத்தையும் தருகிறாய். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் சக்தி என்னும் ஐச்வர்யம் உன்னிடமே இருப்பதால் நீயே மஹேச்வரன். 10
Meaning :
O Śambhu, Who is Maheśa, Who is full of compassion, Who holds a trident, Who is the Lord of Gaurī, Who is the Lord of sacrificed animals, Who destroys the shackles of animals, Who is the Lord of Kāśī! Only You are with compassion in this world. You are the great Lord, Who destroys, protects, and holds the world. 10
No comments:
Post a Comment