Friday, 29 November 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 25

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 25

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

सोहं राज्यात्परिभ्रष्टः शरणं त्वां प्रपन्नवान् ।
प्रणतश्च यथा मूर्ध्ना तव देवि सुरेश्वरि ।। 25 ।।

ஸோஹம்ʼ ராஜ்யாத்பரிப்⁴ரஷ்ட꞉: ஶரணம்ʼ த்வாம்ʼ ப்ரபன்னவான் ।
ப்ரணதஶ்ச யதா² மூர்த்⁴னா தவ தே³வி ஸுரேஶ்வரி ॥ 25 ॥

sohaṃ rājyātparibhraṣṭaḥ śaraṇaṃ tvāṃ prapannavān ।
praṇataśca yathā mūrdhnā tava devi sureśvari ।। 25 ।।

பொருள் :

ஹே தேவி !  தேவர்களுக்கெல்லாம் தலைவியே !  ராஜ்யத்தினின்று தவறியிருக்கின்ற அப்படிப்பட்ட நான், உன்னைச் சரணமடைந்தேன்; உன்னை முடியினால் வணங்கினேன்;   25

Meaning :

I, who have been deprived of my kingdom, seek thy protection. And as I bow to thee with bended head, O Supreme Goddess, ( grant me protection, )  25

Thursday, 28 November 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 15

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 15

यस्य ज्ञातं मतं तस्य मतं यस्य न वेद सः ।
अनन्यभावभावाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७१॥

யஸ்ய ஜ்ஞாதம் மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத³ ஸ: ।
அநந்யபா⁴வபா⁴வாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 71॥

yasya jñātaṃ mataṃ tasya mataṃ yasya na veda saḥ ।
ananyabhāvabhāvāya tasmai śrīgurave namaḥ ॥ 71॥

பொருள் :

15.  எவனுக்கு அறியப்பட்டது அவனுக்கு இஷ்டமுள்ளதாமோ, எவனுக்கு இஷ்டமானதை அவன் அறிகிறதில்லையோ, அந்நிய இருப்பு இல்லாதிருக்கும் அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   71

Wednesday, 27 November 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 4

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 4

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

निरहङ्कारिणः शान्ता ये रागद्वेषवर्जिताः ।
समलोष्टाश्मकनकास्तेषां ते हृदयं गृहम् ॥ ५७॥

நிரஹங்காரிண: ஶாந்தா யே ராக³த்³வேஷவர்ஜிதா: ।
ஸமலோஷ்டாஶ்மகநகாஸ்தேஷாம் தே ஹ்ருʼத³யம் க்³ருʼஹம் ॥ 57॥

nirahaṅkāriṇaḥ śāntā ye rāgadveṣavarjitāḥ ।
samaloṣṭāśmakanakāsteṣāṃ te hṛdayaṃ gṛham ॥ 57॥

பொருள் :

4.  ப்ரபோ !  ராகத்வேஷங்களும், அஹங்காரமும் இல்லாதவனும், தங்கத்தையும் மண்கட்டியையும் ஸமமாக நினைப்பதுமாகிய, சாந்த சீலர்களுடைய இதயமே, தங்களுடைய இருப்பிடம்.  57

#  ராகாதி குணங்கள் பதினாறில் ராகம், துவேஷம், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மர்ச்சரம், ஈரிஷை, அசூயை, டம்பம், தர்ப்பம், அஹங்காரம் இப்பதின் மூன்றும் தள்ளத் தக்கதெனவும்,  இச்சை, பக்தி, சிரத்தை இம்மூன்றும் ( அன்னபானாதி கிராஹ்யமும், மல மூத்ராதி விசர்ச்சனமும் பண்ணவேண்டும் என்று வருகிற சித்தவிருத்திக்கு இச்சை என்று பெயர். உம்மிடத்தில் பிரியம் வருகிற சித்தவிருத்திக்கு பக்தி என்று பெயர். குரு, வேதாந்த சாஸ்திரம் இவைகளில் விசுவாசம் வைக்கிற சித்தவிருத்திக்கு சிரத்தை என்று பெயர். )

Meaning :

4.  “Those whoare free from all sense of ‘I,” who are contented, who are free from attachment and aversion, who look upon & piece of gold and a piece of stone and clay with equal eye, even their heart is thy temple.   57

Friday, 22 November 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 24

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 24

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

नृणां च बन्धनं मोहं पुत्रनाशं धनक्षयम्।
व्याधिं मृत्युं भयं चैव पूजिता नाशयिष्यसि ।। 24 ।।

ந்ருʼணாம்ʼ ச ப³ந்த⁴னம்ʼ மோஹம்ʼ புத்ரனாஶம்ʼ த⁴னக்ஷயம்।
வ்யாதி⁴ம்ʼ ம்ருʼத்யும்ʼ ப⁴யம்ʼ சைவ பூஜிதா நாஶயிஷ்யஸி ॥ 24 ॥

nṛṇāṃ ca bandhanaṃ mohaṃ putranāśaṃ dhanakṣayam।
vyādhiṃ mṛtyuṃ bhayaṃ caiva pūjitā nāśayiṣyasi ।। 24 ।।

பொருள் :

நீ பூஜிக்கப்படுவையாகில் மனிதர்களுடைய பந்தத்தையும், மோஹத்தையும், புத்ரநாசத்தையும், தனக்ஷயத்தையும், வ்யாதியையும், ம்ருத்யுவையும், பயத்தையும் விலக்குவாய்.   24

Meaning :

Thou dispellest, worshipped by the devotees their fetters, ignorance, loss of children and loss of wealth, disease, death, and fear.   24

Thursday, 21 November 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 14

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 14

यस्य ज्ञानमिदं विश्वं न दृश्यं भिन्नभेदतः ।
सदैकरूपरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७०॥

யஸ்ய ஜ்ஞாநமித³ம் விஶ்வம் ந த்³ருʼஶ்யம் பி⁴ந்நபே⁴த³த: ।
ஸதை³கரூபரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 70॥

yasya jñānamidaṃ viśvaṃ na dṛśyaṃ bhinnabhedataḥ ।
sadaikarūparūpāya tasmai śrīgurave namaḥ ॥ 70॥

பொருள் :

14.  எவருடைய ஞானத்தில் இவ்வுலகு பிளவுபட்டு வெவ்வேறாகக் காணப்படாமலிருக்கிறதோ, எப்பொழுதும் ஒரே ரூபத்துடன் இருப்பவரான அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   70

Wednesday, 20 November 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 3

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 3

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

त्वन्मन्त्रजापको यस्तु त्वामेव शरणं गतः ।
निर्द्वन्द्वो निःस्पृहस्तस्य हृदयं ते सुमन्दिरम् ॥ ५६॥

த்வந்மந்த்ரஜாபகோ யஸ்து த்வாமேவ ஶரணம் க³த: ।
நிர்த்³வந்த்³வோ நி:ஸ்ப்ருʼஹஸ்தஸ்ய ஹ்ருʼத³யம் தே ஸுமந்தி³ரம் ॥ 56॥

tvanmantrajāpako yastu tvāmeva śaraṇaṃ gataḥ ।
nirdvandvo niḥspṛhastasya hṛdayaṃ te sumandiram ॥ 56॥

பொருள் :

3.  தங்களுடைய திவ்ய மந்திரத்தையை ஜபித்துக்கொண்டு, தங்களையே பயணமாக அடைந்து, எதிலும் ஆசையற்றவனாக, இரட்டைகளைக் கடந்தவனாக இருப்பவனுடைய உள்ளமே மிக மிக அழகான பவனம் ( ராமர் வஸிப்பதற்கு ).  56

Meaning :

3.  He who reciting thy mantra (holy name) was taken shelter in thee alone, who is free from all pairs of opposites, and who cherishes no Bvarice, even his heart is thy beautiful temple.   56

Friday, 15 November 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 23

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 23

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

त्वं कीर्तिः श्रीर्धृतिः सिद्धिर्ह्रीर्विद्या संततिर्मतिः।
संध्या रात्रिः प्रभा निद्रा ज्योत्स्ना कांतिःक्षमादया ।। 23 ।।

த்வம்ʼ கீர்தி꞉: ஶ்ரீர்த்⁴ருʼதி꞉: ஸித்³தி⁴ர்ஹ்ரீர்வித்³யா ஸந்ததிர்மதி꞉:।
ஸந்த்⁴யா ராத்ரி꞉: ப்ரபா⁴ நித்³ரா ஜ்யோத்ஸ்னா காந்தி꞉:க்ஷமாத³யா ॥ 23 ॥

tvaṃ kīrtiḥ śrīrdhṛtiḥ siddhirhrīrvidyā saṃtatirmatiḥ।
saṃdhyā rātriḥ prabhā nidrā jyotsnā kāṃtiḥkṣamādayā ।। 23 ।।

பொருள் :

நீயே கீர்த்தி; ஶ்ரீ தேவி; தைர்யலக்ஷ்மி; கார்யஸித்தி; ஹ்ரீ; கல்வி; ஸந்ததி; புத்தி; ஸந்த்யை; ராத்ரி; ஒளி; உறக்கம்; நிலவு; காந்தி; பொறுமை; தயை.   23

Meaning :

O great Goddess. Thou art Fame, thou art Prosperity, thou art Steadiness, thou art Success; thou art the Wife, thou art men's Offspring, thou art Knowledge, and thou art the Intellect. Thou art the two Twilights, the Night Sleep, Light--both solar and lunar, Beauty, Forgiveness, Mercy, and every other thing.   23

Thursday, 14 November 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 13

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 13

येनेदं दर्शितं तत्त्वं चित्तचैत्यादिकं तथा ।
जाग्रत्स्वप्नसुषुप्त्यादि तस्मै श्रीगुरवे नमः ॥ ६९॥

யேநேத³ம் த³ர்ஶிதம் தத்த்வம் சித்தசைத்யாதி³கம் ததா² ।
ஜாக்³ரத்ஸ்வப்நஸுஷுப்த்யாதி³ தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 69॥

yenedaṃ darśitaṃ tattvaṃ cittacaityādikaṃ tathā ।
jāgratsvapnasuṣuptyādi tasmai śrīgurave namaḥ ॥ 69॥

பொருள் :

13.  எவரால் இந்த சித்தமும், ஸங்கல்பிக்கப்படுவது முதலியதான தத்வமும், அவ்வாறே ஜாக்ரம், ஸ்வப்னம், ஸுஷுப்தி முதலியனவும் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).  69

Wednesday, 13 November 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 2

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 2

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

धर्माधर्मान् परित्यज्य त्वामेव भजतोऽनिशम् ।
सीतया सह ते राम तस्य हृत्सुखमन्दिरम् ॥ ५५॥

த⁴ர்மாத⁴ர்மாந் பரித்யஜ்ய த்வாமேவ ப⁴ஜதோঽநிஶம் ।
ஸீதயா ஸஹ தே ராம தஸ்ய ஹ்ருʼத்ஸுக²மந்தி³ரம் ॥ 55॥

dharmādharmān parityajya tvāmeva bhajato'niśam ।
sītayā saha te rāma tasya hṛtsukhamandiram ॥ 55॥

பொருள் :

2.  பகவன் !  எவன் தர்மம் அதர்மம் என்றவைகளை விட்டுவிட்டு இடைவிடாமல் தங்களையே பஜனம் செய்கின்றானோ அவனது‍ இதயக் கோவிலே, தாங்கள் ஸீதையுடன் ஸுகமாக வஸிப்பதற்குத் தகுந்த இடம்.   55

2.  He who having risen above both dharma and adharma what ought to be done and what ought not to be done, day and night, worship thee alone together with Sitá, even his heart is thy temple of peace.   55

Friday, 8 November 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 22

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 22

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

जलप्रतरणे चैव कान्तारेष्वटवीषु च।
ये स्मरन्ति महादेवि न च सीदन्ति ते नराः ।। 22 ।।

ஜலப்ரதரணே சைவ காந்தாரேஷ்வடவீஷு ச।
யே ஸ்மரந்தி மஹாதே³வி ந ச ஸீத³ந்தி தே நரா꞉: ॥ 22 ॥

jalaprataraṇe caiva kāntāreṣvaṭavīṣu ca।
ye smaranti mahādevi na ca sīdanti te narāḥ ।। 22 ।।

பொருள் :

ஹே மஹாதேவி ! ஜலத்தைத் தாண்டும் ஸமயத்திலும், அரண்யங்களிலும், ப்ரவேசிக்க முடியாத மலைக் காடுகளிலும், எந்த மனிதர்கள் உன்னை நினைக்கிறார்களோ அவர்கள் கஷ்டத்தை அடையார்கள்.   22

Meaning :

While afflicted in crossing streams and seas or in wilderness and; forests. Those men that remember thee are never prostrated, O great Goddess.   22

Thursday, 7 November 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 12

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 12

यस्मिन्स्थितमिदं सर्वं भाति यद्भानरूपतः ।
यत्प्रीत्या प्रियं पुत्रादि तस्मै श्रीगुरवे नमः ॥ ६८॥

யஸ்மிந்ஸ்தி²தமித³ம் ஸர்வம் பா⁴தி யத்³பா⁴நரூபத: ।
யத்ப்ரீத்யா ப்ரியம் புத்ராதி³ தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 68॥

yasminsthitamidaṃ sarvaṃ bhāti yadbhānarūpataḥ ।
yatprītyā priyaṃ putrādi tasmai śrīgurave namaḥ ॥ 68॥

यस्मिन् स्थितं इदं सर्वं  -  யஸ்மின் ஸ்தி²தம்ʼ இத³ம்ʼ ஸர்வம்ʼ  -  எவரிடம் இதுவெல்லாம் ( பிரபஞ்சம் ) நிலைபெற்றுளதோ,

यद्-भानरूपतः भाति  -  யத்³-பா⁴னரூபத꞉ பா⁴தி  -  எவருடைய பிரகாச வடிவத்தால் பிரகாசிக்கிறதோ,

यत्-प्रीत्या प्रियं पुत्रादि  -  யத்-ப்ரீத்யா ப்ரியம்ʼ புத்ராதி³  -  எவருடைய பிரியத்தால் புத்திரன் முதலியோர் பிரியமாகின்றனரோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

12.  எவரிடம் இதுவெல்லாம் ( பிரபஞ்சம் ) நிலைபெற்றுளதோ, எவருடைய பிரகாச வடிவத்தால் பிரகாசிக்கிறதோ, எவருடைய பிரியத்தால் புத்திரன் முதலியோர் பிரியமாகின்றனரோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   68.

Wednesday, 6 November 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 1

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 1

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

शान्तानां समदृष्टीनामद्वेष्टॄणां च जन्तुषु ।
त्वामेव भजतां नित्यं हृदयं तेऽधिमन्दिरम् ॥ ५४॥

ஶாந்தாநாம் ஸமத்³ருʼஷ்டீநாமத்³வேஷ்ட்ரூʼணாம் ச ஜந்துஷு ।
த்வாமேவ ப⁴ஜதாம் நித்யம் ஹ்ருʼத³யம் தேঽதி⁴மந் தி³ரம் ॥ 54॥

śāntānāṃ samadṛṣṭīnāmadveṣṭṝṇāṃ ca jantuṣu ।
tvāmeva bhajatāṃ nityaṃ hṛdayaṃ te'dhimandiram ॥ 54॥

பொருள் :

1.  எவர்கள் சாந்த குணமும் (அமைதி), ஸமத்ருஷ்டியும் (சமநோக்குப் பார்வை), ஸர்வ பிராணிகளிடமும் த்வேஷம் (வெறுப்பு) கொள்ளாத தன்மையும் , தங்களுடைய (ராம) நாம பஜனத்திலே ச்ரத்தையும் கொண்டவர்களாக இருக்கின்றார்களோ, அவர்களுடைய ஹ்ருதயமே தங்களுடைய வாசஸ்தலம் (வசிக்கத் தகுந்த சிறந்த இடம்).   54

Meaning :

1.  Those who are of a peaceful disposition, who look upon all with equal eye, who cherish no enmity toany creature, who always worship thee alone, their heart is thy temple.   54

Friday, 1 November 2019

Sri Durga Stuti by Yudhistirar - Sloka 21

Sri Durga Stuti by Yudhistirar  -  Sloka 21

॥  श्री दुर्गा स्तुतिः  ॥

|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||

||  ŚRĪ DURGĀ STUTIḤ  ||

दुर्गात्तारयसे दुर्गे तत्त्वं दुर्गा स्मृता जनैः ।
कान्तारेष्ववसन्नानां मग्रानां च महार्णवे।
दस्युभिर्वा निरुद्धानां त्वं गतिः परमा नृणाम् ।। 21 ।।

து³ர்கா³த்தாரயஸே து³ர்கே³ தத்த்வம்ʼ து³ர்கா³ ஸ்ம்ருʼதா ஜனை꞉: ।
காந்தாரேஷ்வவஸன்னானாம்ʼ மக்³ரானாம்ʼ ச மஹார்ணவே।
த³ஸ்யுபி⁴ர்வா நிருத்³தா⁴னாம்ʼ த்வம்ʼ க³தி꞉: பரமா ந்ருʼணாம் ॥ 21 ॥

durgāttārayase durge tattvaṃ durgā smṛtā janaiḥ ।
kāntāreṣvavasannānāṃ magrānāṃ ca mahārṇave।
dasyubhirvā niruddhānāṃ tvaṃ gatiḥ paramā nṛṇām ।। 21 ।।

பொருள் :

துர்கா தேவி !  நீ துர்க்கத்திலிருந்து ( கஷ்டங்கள் ) ஜீவன்களை கரையேற்றுவதினால் ஜனங்களால் துர்க்கை என்றெண்ணப்பட்டிருக்கிறாய். அரண்யங்களில் கஷ்டப்படுகிறவர்களும், மஹாசமுத்ரத்தில் மூழ்குகின்றவர்களும், திருடர்களால் வழிமறிக்கப்படுகிறவர்களுமான மனிதர்களுக்கு நீ உத்தம கதியாய் இருக்கிறாய்.   21

Meaning :

And because thou rescuest people from difficulties, it is for this that thou art called Durga by all.  Whether when they are afflicted in the wilderness, or sinking in the great ocean, thou art the sole refuge of men when attacked by robbers.   21