Thursday, 19 July 2018

Sri Krishna Astakam  -  Sloka - 1

Sri Krishna Astakam  -  Sloka - 1

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् ।
देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ १॥

வஸுதே³வஸுதம்ʼ தே³வம்ʼ கம்ʼஸசாணூரமர்த³னம் |
தே³வகீபரமானந்த³ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  1||

vasudevasutaṃ devaṃ kaṃsacāṇūramardanam ।
devakīparamānandaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 1॥

वसुदेव-सुतं  -  வஸுதே³வ-ஸுதம்ʼ -  வசுதேவரின் குமாரரை,

देवं  -  தே³வம்ʼ -  விளையாட்டாக லீலைகளைச் செய்பவரை,

कंस-चाणूर-मर्दनम्  -  கம்ʼஸ-சாணூர-மர்த³னம்  -  கம்சன், சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவரை,

देवकी-परम-आनन्दं  -   தே³வகீ-பரம-ஆனந்த³ம்ʼ  -  தேவகிக்கு பரம ஆனந்தத்தை அளித்தவரை,

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும் க்ருʼஷ்ணம்ʼ  -  உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -  வணங்குகிறேன்.

பொருள் :

வசுதேவரின் குமாரரும், விளையாட்டாக லீலைகளைச் செய்பவரும், கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவரும், தேவகிக்குப் பரம ஆனந்தமளித்தவரும், உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   1

Meaning :

vasudeva-sutaṃ  = son of vasudeva,

devaṃ = the divine,

kaṃsa-cāṇūra-mardanam = killer of kamsa and chaaNoora ,

devakī-parama-ānandaṃ = One who gives great joy to Devaki,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   1

Tuesday, 3 July 2018

Sri Ganesha Bhujangam - Sloka 2

Sri Ganesha Bhujangam - Sloka 2

॥ श्री गणेश भुजङ्गम् ॥

||  ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் || 

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

ध्वनिध्वंसवीणालयोल्लासिवक्त्रं स्फुरच्छुण्डदण्डोल्लसद्बीजपूरम् ।
गलद्दर्पसौगन्ध्यलोलालिमालं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ २॥

த்⁴வனித்⁴வம்ʼஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்ʼ ஸ்பு²ரச்சு²ண்ட³த³ண்டோ³ல்லஸத்³பீ³ஜபூரம் |
க³லத்³த³ர்பஸௌக³ந்த்⁴யலோலாலிமாலம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  2|| 

dhvanidhvaṃsavīṇālayollāsivaktraṃ sphuracchuṇḍadaṇḍollasadbījapūram ।
galaddarpasaugandhyalolālimālaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 2॥

ध्वनि-ध्वंस-वीणा-लय-उल्लासि-वक्त्रं   -  த்⁴வனி-த்⁴வம்ʼஸ-வீணா-லய-உல்லாஸி-வக்த்ரம்ʼ  -  வீணையின் ஒலியை மிஞ்சும் தன்னுடைய இனிய ஒலியில் (கானத்தில்), லயமடைந்ததால் முகத்தில் மகிழ்ச்சி உண்டாக்கினவரை,

स्फुरत‌्-शुण्ड-दण्ड-उल्लसद्-बीजपूरम्   -  ஸ்பு²ரத்-ஶுண்ட³-த³ண்ட³-உல்லஸத்³-பீ³ஜபூரம்  -   அசைகின்ற தன் துதிக்கையில் அழகாகத் திகழும் மாதுளம்பழத்தை உடையவரை,

गलद्-दर्प-सौगन्ध्य-लोल-अलि-मालं  -  க³லத்³-த³ர்ப-ஸௌக³ந்த்⁴ய-லோல-அலி-மாலம்ʼ  -   கசிகின்ற மதஜலத்தின் இனிய வாசனையால் கவரப்பட்ட வண்டினங்களையே மாலை எனக் கொண்டவரை,

तं गणाधीशं  -  தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ  -   அந்த கணாதீசரை ( விநாயகரை ),

ईशान-सूनुं  -  ஈஶான-ஸூனும்ʼ  -   ஈச்வரரின் புத்ரரை,

ईडे  -  ஈடே³  -  துதிக்கின்றேன்.

பொருள் :

வீணையின் ஒலியை மிஞ்சும் தன்னுடைய இனிய ஒலியில் (கானத்தில்), லயமடைந்ததால் முகத்தில் மகிழ்ச்சி உண்டாக்கினவரை, அசைகின்ற தன் துதிக்கையில் அழகாகத் திகழும் மாதுளம்பழத்தை உடையவரை, கசிகின்ற மதஜலத்தின் இனிய வாசனையால் கவரப்பட்ட வண்டினங்களையே மாலை* எனக் கொண்டவரை, அந்த கணாதீசரை ( விநாயகரை ), ஈச்வரரின் புத்ரரைத் துதிக்கின்றேன்.   2

* வண்டினங்கள் விநாகருடைய மதஜலத்தின் வாசனையில் மயங்கி விநாயகரைச் சுற்றியே ரீங்காரமிடுகின்றன. விநாயகர் ஆடும் போது அவைகளும் கோர்வையாக வரிசையிலமைந்து ரீங்கரிப்பதைப் பார்க்க , மாலை அசைந்தாடுவதைப் போல் காட்சியளிக்கிறது.

Meaning :

I praise the leader of the Ganas   who is the son of Lord Shiva,

Whose face appears joyful hearing   the musical sound of Veena,

Who has a shining broken trunk   and a temple,

And who is wearing a  garland of scented flowers with proud bees  flying around.   2

Sri Ganesha Bhujangam - Sloka 1

Sri Ganesha Bhujangam - Sloka 1

॥ श्री गणेश भुजङ्गम् ॥

||  ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் || 

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

रणत्क्षुद्रघण्टानिनादाभिरामं चलत्ताण्डवोद्दण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्दिलाङ्गोपरिव्यालहारं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ १॥

ரணத்க்ஷுத்³ரக⁴ண்டானினாதா³பி⁴ராமம்ʼ சலத்தாண்ட³வோத்³த³ண்ட³வத்பத்³மதாலம் |
லஸத்துந்தி³லாங்கோ³பரிவ்யாலஹாரம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  1||

raṇatkṣudraghaṇṭāninādābhirāmaṃ calattāṇḍavoddaṇḍavatpadmatālam ।
lasattundilāṅgoparivyālahāraṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 1॥

रणत्-क्षुद्र-घण्टा-निनाद-अभिरामं  -  ரணத்-க்ஷுத்³ர-க⁴ண்டா-நினாத³-அபி⁴ராமம்ʼ  -  (தான் ஆடும்போது ) சிறுமணிகளின் அசைவினால் உண்டாகின்ற ஓசையினால் மகிழ்பவரை,

चलत‌् ताण्डव-उद्दण्डव‌त‌्-पद्म-तालम्   -  சலத்-தாண்ட³வ-உத்³த³ண்ட³வ‌த்-பத்³ம-தாலம்  -  தாமரை போன்ற பாதங்களைத் தூக்கி வைத்து ஆடுவதிலேயே தாளம் இடுபவரை,

लसत‌्-तुन्दिल-अ‌‌ङ्ग-उपरि-व्याल-हारं  -  லஸத்-துந்தி³ல-அ‌‌ங்க³-உபரி-வ்யால-ஹாரம்ʼ  -  மிளிர்கின்ற தன் பெருத்த வயிற்றின்மேல் பாம்புகளை ( அணிகலனாக ) அணிந்தவரை,

तं गणाधीशं  -  தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ  -  அந்த கணாதீசரை ( விநாயகரை ),

ईशान-सूनुं  -  ஈஶான-ஸூனும்ʼ  -  ஈச்வரரின் புத்ரரை,

ईडे  -  ஈடே³  -  துதிக்கின்றேன்.

பொருள் :

(தான் ஆடும்போது ) சிறுமணிகளின் அசைவினால் உண்டாகின்ற ஓசையினால் மகிழ்பவரை, தாமரை போன்ற பாதங்களைத் தூக்கி வைத்து ஆடுவதிலேயே தாளம் * இடுபவரை, மிளிர்கின்ற தன் பெருத்த வயிற்றின்மேல் பாம்புகளை ( அணிகலனாக ) அணிந்தவரை, அந்த கணாதீசரை ( விநாயகரை ), ஈச்வரரின் புத்ரரை துதிக்கின்றேன்.   1

* தாமரையிதழ் போன்ற தன் காதுகளை ஆட்டுவதிலேயே தாளமிடுபவரை என்றும் கொள்ளலாம்.

Meaning :

I praise the leader of the Ganas ( Lord Ganesha ) who is the son of Lord Shiva,

Who gets pleased with the sound  of bells all around his body,

Whose lotus like feet  is moving  the male dance according to the beats,

And who has a shining garland of snake around his belly.   1

Sri Ganesha Bhujangam - Introduction

Sri Ganesha Bhujangam - Introduction

ஸ்ரீ கணேச புஜங்க ஸ்தோத்ரம் ஸ்ரீ  சங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்டது. கணேசரைப் பற்றி, புஜங்கம் என்னும் விருத்தத்தில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெறுகிறது.

॥ श्री गणेश भुजङ्गम् ॥

रणत्क्षुद्रघण्टानिनादाभिरामं चलत्ताण्डवोद्दण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्दिलाङ्गोपरिव्यालहारं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ १॥

ध्वनिध्वंसवीणालयोल्लासिवक्त्रं स्फुरच्छुण्डदण्डोल्लसद्बीजपूरम् ।
गलद्दर्पसौगन्ध्यलोलालिमालं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ २॥

प्रकाशज्जपारक्तरन्तप्रसून- प्रवालप्रभातारुणज्योतिरेकम् ।
प्रलम्बोदरं वक्रतुण्डैकदन्तं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ३॥

विचित्रस्फुरद्रत्नमालाकिरीटं किरीटोल्लसच्चन्द्ररेखाविभूषम् ।
विभूषैकभूशं भवध्वंसहेतुं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ४॥

उदञ्चद्भुजावल्लरीदृश्यमूलो- च्चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् ।
मरुत्सुन्दरीचामरैः सेव्यमानं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ५॥

स्फुरन्निष्ठुरालोलपिङ्गाक्षितारं कृपाकोमलोदारलीलावतारम् ।
कलाबिन्दुगं गीयते योगिवर्यै- र्गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ६॥

यमेकाक्षरं निर्मलं निर्विकल्पं गुणातीतमानन्दमाकारशून्यम् ।
परं परमोङ्कारमान्मायगर्भं वदन्ति प्रगल्भं पुराणं तमीडे ॥ ७॥

चिदानन्दसान्द्राय शान्ताय तुभ्यं नमो विश्वकर्त्रे च हर्त्रे च तुभ्यम् ।
नमोऽनन्तलीलाय कैवल्यभासे नमो विश्वबीज प्रसीदेशसूनो ॥ ८॥

इमं संस्तवं प्रातरुत्थाय भक्त्या पठेद्यस्तु मर्त्यो लभेत्सर्वकामान् ।
गणेशप्रसादेन सिध्यन्ति वाचो गणेशे विभौ दुर्लभं किं प्रसन्ने ॥ ९॥

इति श्रीमच्छङ्कराचार्यकृतं गणेशभुजङ्गप्रयातस्तोत्रं सम्पूर्णम् ॥

||  ஶ்ரீக³ணேஶபு⁴ஜங்க³ம் || 

ரணத்க்ஷுத்³ரக⁴ண்டானினாதா³பி⁴ராமம்ʼ சலத்தாண்ட³வோத்³த³ண்ட³வத்பத்³மதாலம் | 
லஸத்துந்தி³லாங்கோ³பரிவ்யாலஹாரம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  1|| 

த்⁴வனித்⁴வம்ʼஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்ʼ ஸ்பு²ரச்சு²ண்ட³த³ண்டோ³ல்லஸத்³பீ³ஜபூரம் | 
க³லத்³த³ர்பஸௌக³ந்த்⁴யலோலாலிமாலம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  2|| 

ப்ரகாஶஜ்ஜபாரக்தரந்தப்ரஸூன- ப்ரவாலப்ரபா⁴தாருணஜ்யோதிரேகம் | 
ப்ரலம்போ³த³ரம்ʼ வக்ரதுண்டை³கத³ந்தம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  3|| 

விசித்ரஸ்பு²ரத்³ரத்னமாலாகிரீடம்ʼ கிரீடோல்லஸச்சந்த்³ரரேகா²விபூ⁴ஷம் | 
விபூ⁴ஷைகபூ⁴ஶம்ʼ ப⁴வத்⁴வம்ʼஸஹேதும்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  4|| 

உத³ஞ்சத்³பு⁴ஜாவல்லரீத்³ருʼஶ்யமூலோ- ச்சலத்³ப்⁴ரூலதாவிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் | 
மருத்ஸுந்த³ரீசாமரை​: ஸேவ்யமானம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  5|| 

ஸ்பு²ரன்னிஷ்டு²ராலோலபிங்கா³க்ஷிதாரம்ʼ க்ருʼபாகோமலோதா³ரலீலாவதாரம் | 
கலாபி³ந்து³க³ம்ʼ கீ³யதே யோகி³வர்யை- ர்க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ ||  6|| 

யமேகாக்ஷரம்ʼ நிர்மலம்ʼ நிர்விகல்பம்ʼ கு³ணாதீதமானந்த³மாகாரஶூன்யம் | 
பரம்ʼ பரமோங்காரமான்மாயக³ர்ப⁴ம்ʼ வத³ந்தி ப்ரக³ல்ப⁴ம்ʼ புராணம்ʼ தமீடே³ ||  7|| 

சிதா³னந்த³ஸாந்த்³ராய ஶாந்தாய துப்⁴யம்ʼ நமோ விஶ்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்⁴யம் | 
நமோ(அ)நந்தலீலாய கைவல்யபா⁴ஸே நமோ விஶ்வபீ³ஜ ப்ரஸீதே³ஶஸூனோ ||  8|| 

இமம்ʼ ஸம்ʼஸ்தவம்ʼ ப்ராதருத்தா²ய ப⁴க்த்யா படே²த்³யஸ்து மர்த்யோ லபே⁴த்ஸர்வகாமான் | 
க³ணேஶப்ரஸாதே³ன ஸித்⁴யந்தி வாசோ க³ணேஶே விபௌ⁴ து³ர்லப⁴ம்ʼ கிம்ʼ ப்ரஸன்னே ||  9||

இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ க³ணேஶபு⁴ஜங்க³ப்ரயாதஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥

raṇatkṣudraghaṇṭāninādābhirāmaṃ calattāṇḍavoddaṇḍavatpadmatālam ।
lasattundilāṅgoparivyālahāraṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 1॥

dhvanidhvaṃsavīṇālayollāsivaktraṃ sphuracchuṇḍadaṇḍollasadbījapūram ।
galaddarpasaugandhyalolālimālaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 2॥

prakāśajjapāraktarantaprasūna- pravālaprabhātāruṇajyotirekam ।
pralambodaraṃ vakratuṇḍaikadantaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 3॥

vicitrasphuradratnamālākirīṭaṃ kirīṭollasaccandrarekhāvibhūṣam ।
vibhūṣaikabhūśaṃ bhavadhvaṃsahetuṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 4॥

udañcadbhujāvallarīdṛśyamūlo- ccaladbhrūlatāvibhramabhrājadakṣam ।
marutsundarīcāmaraiḥ sevyamānaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 5॥

sphuranniṣṭhurālolapiṅgākṣitāraṃ kṛpākomalodāralīlāvatāram ।
kalābindugaṃ gīyate yogivaryai- rgaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 6॥

yamekākṣaraṃ nirmalaṃ nirvikalpaṃ guṇātītamānandamākāraśūnyam ।
paraṃ paramoṅkāramānmāyagarbhaṃ vadanti pragalbhaṃ purāṇaṃ tamīḍe ॥ 7॥

cidānandasāndrāya śāntāya tubhyaṃ namo viśvakartre ca hartre ca tubhyam ।
namo'nantalīlāya kaivalyabhāse namo viśvabīja prasīdeśasūno ॥ 8॥

imaṃ saṃstavaṃ prātarutthāya bhaktyā paṭhedyastu martyo labhetsarvakāmān ।
gaṇeśaprasādena sidhyanti vāco gaṇeśe vibhau durlabhaṃ kiṃ prasanne ॥ 9॥

iti śrīmacchaṅkarācāryakṛtaṃ gaṇeśabhujaṅgaprayātastotraṃ sampūrṇam ॥

கடவுள் கோபித்துக் கொள்வாரா?

கடவுள் கோபித்துக் கொள்வாரா?

துறவி ஒருவரிடம் சிஷ்யன் கேட்டான். ''குருவே! கடவுளை
வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா? அதற்கு
துறவி, ''சிஷ்யா! ரயிலில் தொலைதூரப் பயணம் மேற்
கொண்டிருக்கிறாய். உனக்கு எதிரில் அமர்ந்து ஒருவர்
பயணம் செய்கிறார். அவருடன் நீ பேசாவிட்டால், அவருக்கு
ஒன்றும் ஆகிவிடாது. அனுபவம்மிக்க அவரிடம் பேசினால்,
'ரயில் எங்கே நிற்கும், அங்கே உணவு கிடைக்குமா? நீ போக
வேண்டிய ஊருக்கு எப்போது போய்ச் சேரலாம்?' இப்படிச்
சில செய்திகளை நீ தெரிந்து கொள்வதால், உனக்குத்தானே பயன்!
கடவுள் என்பவர் உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன்
பயணம் செய்யும் ஓர் அனுபவ சாலி. அவரிடம் நீ பல
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே? அவரை வணங்குவதால்
அமைதி, நிம்மதி, இன்பம் ஆகியவை கிடைக்கின்றன. கடவுளை
வழிபடுவது உன் நன்மைக்கு தானே தவிர, நீ வணங்குவதாலோ
அவருக்கு எந்தப் பலனும் இல்லை... அதனால் தன்னை
வணங்காதவர்களை கடவுள் ஒருபோதும் கோபித்துக்
கொள்வதில்லை!