Sri Ganesha Bhujangam - Sloka 2
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
ध्वनिध्वंसवीणालयोल्लासिवक्त्रं स्फुरच्छुण्डदण्डोल्लसद्बीजपूरम् ।
गलद्दर्पसौगन्ध्यलोलालिमालं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ २॥
த்⁴வனித்⁴வம்ʼஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்ʼ ஸ்பு²ரச்சு²ண்ட³த³ண்டோ³ல்லஸத்³பீ³ஜபூரம் |
க³லத்³த³ர்பஸௌக³ந்த்⁴யலோலாலிமாலம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ || 2||
dhvanidhvaṃsavīṇālayollāsivaktraṃ sphuracchuṇḍadaṇḍollasadbījapūram ।
galaddarpasaugandhyalolālimālaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 2॥
ध्वनि-ध्वंस-वीणा-लय-उल्लासि-वक्त्रं - த்⁴வனி-த்⁴வம்ʼஸ-வீணா-லய-உல்லாஸி-வக்த்ரம்ʼ - வீணையின் ஒலியை மிஞ்சும் தன்னுடைய இனிய ஒலியில் (கானத்தில்), லயமடைந்ததால் முகத்தில் மகிழ்ச்சி உண்டாக்கினவரை,
स्फुरत्-शुण्ड-दण्ड-उल्लसद्-बीजपूरम् - ஸ்பு²ரத்-ஶுண்ட³-த³ண்ட³-உல்லஸத்³-பீ³ஜபூரம் - அசைகின்ற தன் துதிக்கையில் அழகாகத் திகழும் மாதுளம்பழத்தை உடையவரை,
गलद्-दर्प-सौगन्ध्य-लोल-अलि-मालं - க³லத்³-த³ர்ப-ஸௌக³ந்த்⁴ய-லோல-அலி-மாலம்ʼ - கசிகின்ற மதஜலத்தின் இனிய வாசனையால் கவரப்பட்ட வண்டினங்களையே மாலை எனக் கொண்டவரை,
तं गणाधीशं - தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ - அந்த கணாதீசரை ( விநாயகரை ),
ईशान-सूनुं - ஈஶான-ஸூனும்ʼ - ஈச்வரரின் புத்ரரை,
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
வீணையின் ஒலியை மிஞ்சும் தன்னுடைய இனிய ஒலியில் (கானத்தில்), லயமடைந்ததால் முகத்தில் மகிழ்ச்சி உண்டாக்கினவரை, அசைகின்ற தன் துதிக்கையில் அழகாகத் திகழும் மாதுளம்பழத்தை உடையவரை, கசிகின்ற மதஜலத்தின் இனிய வாசனையால் கவரப்பட்ட வண்டினங்களையே மாலை* எனக் கொண்டவரை, அந்த கணாதீசரை ( விநாயகரை ), ஈச்வரரின் புத்ரரைத் துதிக்கின்றேன். 2
* வண்டினங்கள் விநாகருடைய மதஜலத்தின் வாசனையில் மயங்கி விநாயகரைச் சுற்றியே ரீங்காரமிடுகின்றன. விநாயகர் ஆடும் போது அவைகளும் கோர்வையாக வரிசையிலமைந்து ரீங்கரிப்பதைப் பார்க்க , மாலை அசைந்தாடுவதைப் போல் காட்சியளிக்கிறது.
Meaning :
I praise the leader of the Ganas who is the son of Lord Shiva,
Whose face appears joyful hearing the musical sound of Veena,
Who has a shining broken trunk and a temple,
And who is wearing a garland of scented flowers with proud bees flying around. 2
No comments:
Post a Comment