Sunday, 29 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 18

Vinaayaka Leelaa Stuti - sloka 18 

॥ विनायक लीला स्तुतिः ॥

॥ விநாயக லீலா ஸ்துதி​: ॥

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


क्रीडाप्रवृत्ते जलधाविभास्ये वेलाजलेऽथाम्बुपतिः प्रभीतः । 
विचिन्त्य कस्येति सुरास्तदा तं विश्वेश्वरं वाग्भिरभिष्टुवन्ति ॥ १८॥

க்ரீடா³ப்ரவ்ருʼத்தே ஜலதா⁴விபா⁴ஸ்யே வேலாஜலே(அ)தா²ம்பு³பதி​: ப்ரபீ⁴த​: | 
விசிந்த்ய கஸ்யேதி ஸுராஸ்ததா³ தம்ʼ விஶ்வேஶ்வரம்ʼ வாக்³பி⁴ரபி⁴ஷ்டுவந்தி 18 

krīḍāpravṛtte jaladhāvibhāsye velājale'thāmbupatiḥ prabhītaḥ । 
vicintya kasyeti surāstadā taṃ viśveśvaraṃ vāgbhirabhiṣṭuvanti ॥ 18॥


जलधौ क्रीडा-प्रवृत्ते - ஜலதௌ⁴ க்ரீடா³-ப்ரவ்ருʼத்தே - ( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, 

वेला-जले अथ - வேலா-ஜலே அத² - கடலில் ( பெரிய ) அலை உண்டான போது,

कस्य इति विचिन्त्य - கஸ்ய இதி விசிந்த்ய - ( இது ) யாரால் என்று சிந்தித்து,

अम्बु-पतिः सुराः प्रभीतः - அம்பு³-பதி​: ஸுரா​: ப்ரபீ⁴த​: - கடலரசனும் தேவர்களும் பயந்தனர்,

तदा - ததா³ - பின்,

इभ-आस्ये - இப⁴-ஆஸ்யே - ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ),

तं विश्व-ईश्वरं - தம்ʼ விஶ்வ-ஈஶ்வரம்ʼ - அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ),

वाग्भिः-अभि-स्तुवन्ति - 
வாக்³பி⁴​:-அபி⁴-ஸ்துவந்தி - ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர்.


பொருள் :

( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, கடலில் ( பெரிய ) அலை உண்டான போது, ( இது ) யாரால் என்று சிந்தித்து, கடலரசனும் தேவர்களும் பயந்தனர்., பின் ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ), அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ), ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர். 18

Sunday, 22 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 17

Vinaayaka Leelaa Stuti - sloka 17  

॥ विनायक लीला स्तुतिः ॥ 

॥ விநாயக லீலா ஸ்துதி: ॥ 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


द्वैपायनोक्तं सुविचार्य येन स्वदन्तकोट्या निखिलं लिखित्वा । 
दत्तं पुराणं सुतमिन्दुमौलेः तमग्र्यरूपं मनसा स्मरामि ॥ १७ ॥ 

த்³வைபாயனோக்தம்ʼ ஸுவிசார்ய யேன ஸ்வத³ந்தகோட்யா நிகி²லம்ʼ லிகி²த்வா |  
த³த்தம்ʼ புராணம்ʼ ஸுதமிந்து³மௌலே: தமக்³ர்யரூபம்ʼ மனஸா ஸ்மராமி  17   

dvaipāyanoktaṃ suvicārya yena svadantakoṭyā nikhilaṃ likhitvā । 
dattaṃ purāṇaṃ sutamindumauleḥ tamagryarūpaṃ manasā smarāmi ॥ 17 ॥ 


द्वैपायन-उक्तं पुराणं - த்³வைபாயன-உக்தம்ʼ புராணம்ʼ - த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ), 

सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து,  

येन स्व-दन्त-कोट्या - யேன ஸ்வ-த³ந்த-கோட்யா - தன் தந்தநுனியாகியதினால், 

निखिलं लिखित्वा - நிகி²லம்ʼ லிகி²த்வா - முழுவதும் எழுதி, 

दत्तं तं - த³த்தம்ʼ தம்ʼ - தந்தவரான அவரை, 

अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - மேலான ரூபம் உடையவரை, 

इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை , 

मनसा स्मरामि - மனஸா ஸ்மராமி - மனத்தால் நினைக்கிறேன். 


பொருள் : 

த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ) நன்கு ஆலோசித்து, தன் தந்தநுனியாகியதினால், முழுவதும் எழுதி தந்தவரான அவரை, மேலான ரூபம் உடையவரை, தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை ( விநாயகரை ) மனத்தால் நினைக்கிறேன். 17 


# सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து. மஹாபாரதத்தை எழுத ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு கையில் எதுவும் கொண்டு வரவில்லை, வ்யாஸரும் தரவில்லை. எழுத உட்கார்ந்தாகிவிட்டது. ஆகவே எதனால் எழுதலாம் என்று நன்கு ஆலோசித்து, பின் தன் தந்தத்தையே ஒடித்து அதன் நுனியால் எழுதினார். ( அல்லது ) 
எழுத ஆரம்பிக்கும் போது , ச்லோகத்தின் பொருளை நன்கு உணர்ந்தபின் தான் எழுத வேண்டும் என்று வ்யாஸர் கூறியிருந்தார். ஆகவே நன்கு ச்லோகங்களின் பொருளைப் பற்றி ஆலோசித்தார்., என்றும் கொள்ளலாம். 

# अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - தன் அழகை இழந்தாவது, பிறர்க்குப் பயன்படுவதான கிரந்தத்தைக் காக்க வேண்டும் என்கிற தியாக எண்ணத்தால் , அவரதுதன் தந்தத்தில் ஒன்றையே ஒடித்துவிட்டார். அவரது தியாக உள்ளத்தின் மேன்மையைக் காட்டுகின்ற ரூபமாம் இது.  

# इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - சரி. இதை யாரிடமிருந்து கற்றிருப்பார் என்று யோசிக்க, தன் கண்டம் நீலநிறமானாலும் பரவாயில்லை , மக்களைக் காக்க வேண்டும் என்று விஷத்தைப் பருகிய பரமசிவனாரிடமிருந்து கற்றிருப்பார் என்று தெரிகிறது. 


மகாபாரதம் எழுதிய விநாயகர் : 

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடை படும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.  

விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார். விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.  

வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார். பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார்.  
இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும்பொழுது பலப்பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.  

இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது. 15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

Saturday, 21 January 2023

Sri Sitarama Stotram - Sloka 1

Sri Sitarama Stotram - Sloka 1

॥ श्री सीताराम स्तोत्रम् ॥

|| ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ||

|| ŚRĪ SĪTĀRĀMA STOTRAM ||


अयोध्यापुर-नेतारं मिथिलापुर-नायिकाम् ।
राघवाणामलङ्कारं वैदेहानामलङ्क्रियाम् ॥ १॥

அயோத்⁴யாபுர-நேதாரம்ʼ மிதி²லாபுர-நாயிகாம் ।
ராக⁴வாணாமலங்காரம்ʼ வைதே³ஹாநாமலங்க்ரியாம் ॥ 1॥

ayodhyāpura-netāraṃ mithilāpura-nāyikām ।
rāghavāṇāmalaṅkāraṃ vaidehānāmalaṅkriyām ॥ 1॥


பொருள் :

அயோத்தியா பட்டிணத்துக்கு நாயகனும், ரகு வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அலங்காரமும் (ஆகிய இராமனையும்); மிதிலா பட்டிணத்துக்கு நாயகியும், விதேஹ வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அலங்காரமும் (ஆகிய சீதையையும், ஆக இவ்விருவரையும் நான் வணங்குகிறேன்.) 1


Meaning :

[ I adore the Dual (Rama and Sita),] He (rāma) who is the hero of Ayodhya and adornment to Raghu clan and She (sītā) who is the heroine of Mithila and adornment to Videha clan. 1

Sunday, 8 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 16

Vinaayaka Leelaa Stuti - sloka 16 

॥ विनायक लीला स्तुतिः ॥

 விநாயக லீலா ஸ்துதி: 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


हेरम्ब उद्यद्रविकोटिकान्तः पञ्चाननेनाप्यवलम्बितांसः ।
मुनीन्सुरान्भक्तजनांश्च सर्वान्स पातु रथ्यासु सदा गजास्यः ॥ १६॥

ஹேரம்ப³ உத்³யத்³ரவிகோடிகாந்த: பஞ்சானனேனாப்யவலம்பி³தாம்ʼஸ: | 
முனீன்ஸுரான்ப⁴க்தஜனாம்ʼஶ்ச ஸர்வான்ஸ பாது ரத்²யாஸு ஸதா³ க³ஜாஸ்ய:  16 

heramba udyadravikoṭikāntaḥ pañcānanenāpyavalambitāṃsaḥ ।
munīnsurānbhaktajanāṃśca sarvānsa pātu rathyāsu sadā gajāsyaḥ ॥ 16॥


हेरम्बः - ஹேரம்ப³: - அழகிய பிளிறல் உள்ளவர்,

उद्यद्-रवि-कोटि-कान्तः - உத்³யத்³-ரவி-கோடி-காந்த: - உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், 

पञ्च-आननेन-अपि-अवलम्बित-अंसः - பஞ்ச-ஆனனேன-அபி-அவலம்பி³த-அம்ʼஸ: - ஐந்து முகங்களைக் கொண்டவரால் ( பரமசிவனாரால் ) தோளில் தாங்கப்பட்டவர், 

मुनीन् सुरान् भक्तजनान् च सर्वान् - முனீன் ஸுரான் ப⁴க்தஜனான் ச ஸர்வான் - முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும்,

रथ्यासु - ரத்²யாஸு - பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ), 

सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),

सदा पातु - ஸதா³ பாது - எப்பொழுதும் காக்கட்டும்.


பொருள் :

அழகிய பிளிறல் உள்ளவர், உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், ( ஐந்து முகங்களைக் கொண்டவரால் ) பரமசிவனாரால் தோளில் தாங்கப்பட்டவர், முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும், பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ) அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்பொழுதும் காக்கட்டும். 16


# ஹேரம்ப³: - உரக்கப் பிளிறுபவர் என்றும் கொள்ளலாம்.

# ரத்²யாஸு - பயணத்தில் என்பது வாழ்க்கைப் பயணத்தில் என்றும் கொள்ளலாம்.


* பாடபேதம் -- अवलम्बित-अंसः > विचुम्बित-आस्यः ; அவலம்பி³த-அம்ʼஸ: > விசும்பி³த-ஆஸ்ய: - முகத்தில் முத்தமிடப்பட்டவர்.

Saturday, 21 May 2022

Sri Sitarama Stotram - Introduction

Sri Sitarama Stotram - Introduction


ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் :

ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டு ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், ஹனுமார், ராமன் ஸீதை இருவரையும் (மாறி மாறி) ஸ்தோத்ரம் செய்கிறார்.

இந்த ஸ்தோத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ச்லோகங்களின், முதலாவது மற்றும் மூன்றாவது பாதங்கள் இராமரைப் பற்றியும்; இரண்டாவது மற்றும் நான்காவது பாதங்கள் ஸீதையைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

ராமரும் ஸீதையும் உள்ளத்தளவில் ஒருமித்த கருத்தை உடையவர்கள். கட்டினால் கண்டநாள் முதல் அன்பில் ஆழ்ந்தவர்கள்; அவர்கள் வாழ்ந்த விதம், அன்புசெலுத்தியவிதம், அக்கறை காட்டியவிதம், மரியாதையுடன் நடந்து கொண்டவிதம் இவைகளால் அவர்களுக்குள் இருந்த அன்யோன்யம் நன்றாக விளங்குகின்றது. 

ஸீதாராமரைப் போன்ற பொருத்தமான மிதுனத்தைக் காண்பதும் அரிதே.


ஸீதாப்பிராட்டியை அசோகவனத்தில் ஆஞ்ஜனேயர் கண்டவுடன், ஸீதா - ராமரை ஒப்புநோக்குகிறார். அப்போது கீழ்க்காணும் கருத்தைக் கூறுகிறார்.

तुल्यशीलवयोवृत्तां तुल्याभिजनलक्षणाम् । 
राघवोऽर्हति वैदेहीं तं चेयमसितेक्षणा ॥

துல்யஶீலவயோவ்ருʼத்தாம்ʼ துல்யாபி⁴ஜனலக்ஷணாம் ।
ராக⁴வோ(அ)ர்ஹதி வைதே³ஹீம்ʼ தம்ʼ சேயமஸிதேக்ஷணா ॥
    – வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், 16.5.

'இராமனுக்கு இணையான ஒழுக்கம், வயது, நடத்தை உடையவளும், இணையான உயர்குலம், லட்சணம் உடையவளுமான சீதைக்கு இராமன் ஏற்றவர்; அவருக்குக் கருங்கண்ணாளான இவர் ஏற்றவர்'.

மேலும், ஸீதா-ராமரது ஒத்த சிந்தனையை வால்மீகி ராமாயணம் காண்பிக்கிறது.

ஸீதை கூறுவது –

अनन्या राघवेणाहं भास्करेन प्रभा यथा।

அனன்யா ராக⁴வேணாஹம்ʼ பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।

ஸூரியனை விட்டுப் பிரியாத பிரபை போல, இராகவனிடமிருந்து நான் (ஸீதை) பிரிக்க முடியாதவள்.

வால்மீகி ராமாயணம், ஸுந்தர காண்டம், 21.16.


ராமர் கூறுவது –

अनन्या हि मया सीता भास्करेन प्रभा यथा।

அனன்யா ஹி மயா ஸீதா பா⁴ஸ்கரேன ப்ரபா⁴ யதா²।

ஸூரியனிடமிருந்து பிரிக்க முடியாத ஒளியைப் போல, இவள் (ஸீதை) என்னிடமிருந்து பிரிக்க முடியாதவள்.

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 118.19.

ஆகவே தான் ஸீதா-ராமர்கள் திவ்ய-தம்பதிகள் என்றழைக்கப்படுகின்றனர். 

இப்படிப்பட்ட திவ்ய-தம்பதிகளை ஒரே அரியணையில் பார்த்ததும் ஆஞ்ஜனேயர் இருவரையும் குறித்து ஸ்தோத்திரம் செய்வதாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்ரம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.


॥ श्री सीताराम स्तोत्रम्  ॥

अयोध्यापुर-नेतारं मिथिलापुर-नायिकाम् ।
राघवाणामलङ्कारं वैदेहानामलङ्क्रियाम् ॥ १॥

रघूणां कुलदीपं च निमीनां कुलदीपिकाम् ।
सूर्यवंश-समुद्भूतं सोमवंश-समुद्भवाम् ॥ २॥

पुत्रं दशरथस्याद्यं पुत्रीं जनकभूपतेः ।
वशिष्ठानुमताचारं शतानन्दमतानुगाम् ॥ ३॥

कौसल्यागर्भ-सम्भूतं वेदिगर्भोदितां स्वयम् ।
पुण्डरीक-विशालाक्षं स्फुरदिन्दीवरेक्षणाम् ॥ ४॥

चन्द्रकान्ताननाम्भोजं चन्द्रबिम्बोपमाननाम् ।
मत्त-मातङ्ग-गमनं मत्त-हंस-वधू-गताम् ॥ ५॥

चन्दनार्द्र-भुजामध्यं कुङ्कुमार्द्र-कुचस्थलीम् ।
चापालङ्कृत-हस्ताब्जं पद्मालङ्कृत-पाणिकाम् ॥ ६॥

शरणागत-गोप्तारं प्रणिपाद-प्रसादिकाम् ।
कालमेघनिभं रामं कार्तस्वर-सम-प्रभाम् ॥ ७॥

दिव्य-सिंहासनासीनं दिव्य-स्रग्वस्त्र-भूषणाम् ।
अनुक्षणं कटाक्षाभ्यां अन्योन्येक्षण-काङ्क्षिणौ ॥ ८॥

अन्योन्य-सदृशाकारौ त्रैलोक्यगृहदम्पती।
इमौ युवां प्रणम्याहं भजाम्यद्य कृतार्थताम् ॥ ९॥

अनेन स्तौति यः स्तुत्यं रामं सीतां च भक्तितः ।
तस्य तौ तनुतां पुण्यास्सम्पदः सकलार्थदाः ॥ १०॥

एवं श्रीरामचन्द्रस्य जानक्याश्च विशेषतः ।
कृतं हनूमता पुण्यं स्तोत्रं सद्यो विमुक्तिदम् ।
यः पठेत्प्रातरुत्थाय सर्वान् कामानवाप्नुयात् ॥ ११॥

इति हनूमत्कृत श्री सीताराम स्तोत्रं सम्पूर्णम् ॥


॥ ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்  ॥

அயோத்⁴யாபுர-நேதாரம்ʼ மிதி²லாபுர-நாயிகாம் ।
ராக⁴வாணாமலங்காரம்ʼ வைதே³ஹாநாமலங்க்ரியாம் ॥ 1॥

ரகூ⁴ணாம்ʼ குலதீ³பம்ʼ ச நிமீனாம்ʼ குலதீ³பிகாம் ।
ஸூர்யவம்ʼஶ-ஸமுத்³பூ⁴தம்ʼ ஸோமவம்ʼஶ-ஸமுத்³ப⁴வாம் ॥ 2॥

புத்ரம்ʼ த³ஶரத²ஸ்யாத்³யம்ʼ புத்ரீம்ʼ ஜனகபூ⁴பதே꞉ ।
வஶிஷ்டா²னுமதாசாரம்ʼ ஶதானந்த³மதானுகா³ம் ॥ 3॥

கௌஸல்யாக³ர்ப⁴-ஸம்பூ⁴தம்ʼ வேதி³க³ர்போ⁴தி³தாம்ʼ ஸ்வயம் ।
புண்ட³ரீக-விஶாலாக்ஷம்ʼ ஸ்பு²ரதி³ந்தீ³வரேக்ஷணாம் ॥ 4॥

சந்த்³ரகாந்தானனாம்போ⁴ஜம்ʼ சந்த்³ரபி³ம்போ³பமானனாம் ।
மத்த-மாதங்க³-க³மனம்ʼ மத்த-ஹம்ʼஸ-வதூ⁴-க³தாம் ॥ 5॥

சந்த³னார்த்³ர-பு⁴ஜாமத்⁴யம்ʼ குங்குமார்த்³ர-குசஸ்த²லீம் ।
சாபாலங்க்ருʼத-ஹஸ்தாப்³ஜம்ʼ பத்³மாலங்க்ருʼத-பாணிகாம் ॥ 6॥

ஶரணாக³த-கோ³ப்தாரம்ʼ ப்ரணிபாத³-ப்ரஸாதி³காம் ।
காலமேக⁴னிப⁴ம்ʼ ராமம்ʼ கார்தஸ்வர-ஸம-ப்ரபா⁴ம் ॥ 7॥

தி³வ்ய-ஸிம்ʼஹாஸனாஸீனம்ʼ தி³வ்ய-ஸ்ரக்³வஸ்த்ர-பூ⁴ஷணாம் ।
அனுக்ஷணம்ʼ கடாக்ஷாப்⁴யாம்ʼ அன்யோன்யேக்ஷண-காங்க்ஷிணௌ ॥ 8॥

அன்யோன்ய-ஸத்³ருʼஶாகாரௌ த்ரைலோக்யக்³ருʼஹத³ம்பதீ।
இமௌ யுவாம்ʼ ப்ரணம்யாஹம்ʼ ப⁴ஜாம்யத்³ய க்ருʼதார்த²தாம் ॥ 9॥

அனேன ஸ்தௌதி ய꞉ ஸ்துத்யம்ʼ ராமம்ʼ ஸீதாம்ʼ ச ப⁴க்தித꞉ ।
தஸ்ய தௌ தனுதாம்ʼ புண்யாஸ்ஸம்பத³꞉ ஸகலார்த²தா³꞉ ॥ 10॥

ஏவம்ʼ ஶ்ரீராமசந்த்³ரஸ்ய ஜானக்யாஶ்ச விஶேஷத꞉ ।
க்ருʼதம்ʼ ஹனூமதா புண்யம்ʼ ஸ்தோத்ரம்ʼ ஸத்³யோ விமுக்தித³ம் ।
ய꞉ படே²த்ப்ராதருத்தா²ய ஸர்வான் காமானவாப்னுயாத் ॥ 11॥

இதி ஹனூமத்க்ருʼத ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ॥


॥ ŚRĪ SĪTĀRĀMA STOTRAM  ॥

ayodhyāpura-netāraṃ mithilāpura-nāyikām ।
rāghavāṇāmalaṅkāraṃ vaidehānāmalaṅkriyām ॥ 1॥

raghūṇāṃ kuladīpaṃ ca nimīnāṃ kuladīpikām ।
sūryavaṃśa-samudbhūtaṃ somavaṃśa-samudbhavām ॥ 2॥

putraṃ daśarathasyādyaṃ putrīṃ janakabhūpateḥ ।
vaśiṣṭhānumatācāraṃ śatānandamatānugām ॥ 3॥

kausalyāgarbha-sambhūtaṃ vedigarbhoditāṃ svayam ।
puṇḍarīka-viśālākṣaṃ sphuradindīvarekṣaṇām ॥ 4॥

candrakāntānanāmbhojaṃ candrabimbopamānanām ।
matta-mātaṅga-gamanaṃ matta-haṃsa-vadhū-gatām ॥ 5॥

candanārdra-bhujāmadhyaṃ kuṅkumārdra-kucasthalīm ।
cāpālaṅkṛta-hastābjaṃ padmālaṅkṛta-pāṇikām ॥ 6॥

śaraṇāgata-goptāraṃ praṇipāda-prasādikām ।
kālameghanibhaṃ rāmaṃ kārtasvara-sama-prabhām ॥ 7॥

divya-siṃhāsanāsīnaṃ divya-sragvastra-bhūṣaṇām ।
anukṣaṇaṃ kaṭākṣābhyāṃ anyonyekṣaṇa-kāṅkṣiṇau ॥ 8॥

anyonya-sadṛśākārau trailokyagṛhadampatī।
imau yuvāṃ praṇamyāhaṃ bhajāmyadya kṛtārthatām ॥ 9॥

anena stauti yaḥ stutyaṃ rāmaṃ sītāṃ ca bhaktitaḥ ।
tasya tau tanutāṃ puṇyāssampadaḥ sakalārthadāḥ ॥ 10॥

evaṃ śrīrāmacandrasya jānakyāśca viśeṣataḥ ।
kṛtaṃ hanūmatā puṇyaṃ stotraṃ sadyo vimuktidam ।
yaḥ paṭhetprātarutthāya sarvān kāmānavāpnuyāt ॥ 11॥

iti hanūmatkṛta śrī sītārāma stotraṃ sampūrṇam ॥

Sunday, 10 April 2022

ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்

ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் :


பாத்ம புராணத்தின் படி, பரமேச்வரர், பார்வதி தேவிக்கு பகவான் ஶ்ரீ ஹரியினது பெருமைகளையும், வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியும் கூறுகிறார். அதைக் கேட்ட பின், பார்வதி தேவியும் பெருமாளின் மீது பக்தி கொண்டு ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஸ்தோத்திரம் செய்து பின்னரே உணவருந்துவது என்று கொண்டிருந்தார்.

ஒரு சமயம் பரமேச்வரர் உணவருந்த வந்தபோது தேவியையும் அழைத்தார். தேவி கூறினாள், ' நாதா ! நான் ஸஹஸ்ரநாமம் பாடம் செய்த பின்னரே உணவருந்துவேன். அதற்குள்ளாக தாங்கள் உணவருந்தலாமே ' என்று. அதற்கு பரமேச்வரரும், ' மிகுந்த புண்ணியம் செய்தோருக்கல்லவா ஹரிபக்தி உண்டாகும்.

யாமும் ராம ! ராம ! ராம ! என்று ராம நாமத்திலேயே மனம் ரமித்தபடி இருக்கிறேன். ராம நாமம் ஆயிரம் நாமங்களுக்கும் சமமானது. நீயும் ராம நாமத்தை உச்சரித்து என்னுடன் உணவருந்தலாமே ! ' என்றார். இதைக் கேட்ட தேவியும் அவ்வாறே செய்தாள். பின் ராமரது ஏனைய பிற நாமங்களையும் பற்றிக் கூறுமாறு பரமேச்வரரிடம் வேண்டினாள். அப்போது பரமேச்வரர் ராமரது நூற்றியெட்டு நாமங்களைப் பற்றிக் கூறினார். அதுவே இந்த ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்.

இது பத்ம புராணத்தில், உத்தர காண்டத்தில், 254 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.


॥ श्री रामाष्टोत्तरशतनाम स्तोत्रम्  ॥

ध्यानम् -
श्रीराघवं दशरथात्मजमप्रमेयं
       सीतापतिं रघुकुलान्वयरत्नदीपम् ।
आजानुबाहुमरविन्ददलायताक्षं
       रामं निशाचरविनाशकरं नमामि ॥

वैदेहीसहितं सुरद्रुमतले हैमे महामण्डपे
       मध्ये पुष्पकमासने मणिमये वीरासने सुस्थितम् ।
अग्रे वाचयति प्रभञ्जनसुते तत्त्वं मुनिभ्यः परं
       व्याख्यान्तं भरतादिभिः परिवृतं रामं भजे श्यामलम् ॥

रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे ।
रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥


ॐ श्रीरामो रामभद्रश्च रामचन्द्रश्च शाश्वतः ।
राजीवलोचनः श्रीमान् राजेन्द्रो रघुपुङ्गवः ॥ १॥

जानकीवल्लभो जैत्रो जितामित्रो जनार्दनः ।
विश्वामित्रप्रियो दान्तः शत्रुजिच्छत्रुतापनः ॥ २॥

वालिप्रमथनो वाग्मी सत्यवाक् सत्यविक्रमः ।
सत्यव्रतो व्रतधरः सदा हनुमदाश्रितः ॥ ३॥

कौसलेयः खरध्वंसी विराधवधपण्डितः ।
विभीषणपरित्राता हरकोदण्डखण्डनः ॥ ४॥

सप्ततालप्रभेत्ता च दशग्रीवशिरोहरः ।
जामदग्न्यमहादर्पदलनस्ताटकान्तकः ॥ ५॥

वेदान्तसारो वेदात्मा भवरोगस्य भेषजम् ।
दूषणत्रिशिरो हन्ता त्रिमूर्तिस्त्रिगुणात्मकः ॥ ६॥

त्रिविक्रमस्त्रिलोकात्मा पुण्यचारित्रकीर्तनः ।
त्रिलोकरक्षको धन्वी दण्डकारण्यपावनः ॥ ७॥

अहल्याशापशमनः पितृभक्तो वरप्रदः ।
जितेन्द्रियो जितक्रोधो जितामित्रो जगद्गुरुः ॥ ८॥

ऋक्षवानरसंघाती चित्रकूटसमाश्रयः ।
जयन्तत्राणवरदः सुमित्रापुत्रसेवितः ॥ ९॥

सर्वदेवादिदेवश्च मृतवानरजीवनः ।
मायामारीचहन्ता च महादेवो महाभुजः ॥ १०॥

सर्वदेवस्तुतः सौम्यो ब्रह्मण्यो मुनिसंस्तुतः ।
महायोगी महोदारः सुग्रीवेप्सितराज्यदः ॥ ११॥

सर्वपुण्याधिकफलः स्मृतसर्वाघनाशनः ।
आदिदेवो महादेवो महापूरुष एव च ॥ १२॥

पुण्योदयो दयासारः पुराणपुरुषोत्तमः ।
स्मितवक्त्रो मिताभाषी पूर्वभाषी च राघवः ॥ १३॥

अनन्तगुणगम्भीरो धीरोदात्तगुणोत्तमः ।
मायामानुषचारित्रो महादेवादिपूजितः ॥ १४॥

सेतुकृज्जितवारीशः सर्वतीर्थमयो हरिः ।
श्यामाङ्गः सुन्दरः शूरः पीतवासा धनुर्धरः ॥ १५॥

सर्वयज्ञाधिपो यज्वा जरामरणवर्जितः ।
शिवलिङ्गप्रतिष्ठाता सर्वावगुणवर्जितः ॥ १६॥

परमात्मा परं ब्रह्म सच्चिदानन्दविग्रहः ।
परं ज्योतिः परंधाम पराकाशः परात्परः ॥ १७॥

परेशः पारगः पारः सर्वदेवात्मकः परः ॥

॥ इति श्रीरामाष्टोत्तरशतनामस्तोत्रं सम्पूर्णम् ॥


॥ ஶ்ரீ ராமாஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம் ॥

த்⁴யானம் -
ஶ்ரீராக⁴வம்ʼ த³ஶரதா²த்மஜமப்ரமேயம்ʼ
       ஸீதாபதிம்ʼ ரகு⁴குலான்வயரத்நதீ³பம் ।
ஆஜானுபா³ஹுமரவிந்த³த³லாயதாக்ஷம்ʼ
       ராமம்ʼ நிஶாசரவிநாஶகரம்ʼ நமாமி ॥

வைதே³ஹீஸஹிதம்ʼ ஸுரத்³ருமதலே ஹைமே மஹாமண்ட³பே
       மத்⁴யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்தி²தம் ।
அக்³ரே வாசயதி ப்ரப⁴ஞ்ஜனஸுதே தத்த்வம்ʼ முனிப்⁴ய꞉ பரம்ʼ
       வ்யாக்²யாந்தம்ʼ ப⁴ரதாதி³பி⁴꞉ பரிவ்ருʼதம்ʼ ராமம்ʼ ப⁴ஜே ஶ்யாமலம் ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ ॥


ௐ ஶ்ரீராமோ ராமப⁴த்³ரஶ்ச ராமசந்த்³ரஶ்ச ஶாஶ்வத꞉ ।
ராஜீவலோசன꞉ ஶ்ரீமான் ராஜேந்த்³ரோ ரகு⁴புங்க³வ꞉ ॥ 1॥

ஜானகீவல்லபோ⁴ ஜைத்ரோ ஜிதாமித்ரோ ஜனார்த³ன꞉ ।
விஶ்வாமித்ரப்ரியோ தா³ந்த꞉ ஶத்ருஜிச்ச²த்ருதாபன꞉ ॥ 2॥

வாலிப்ரமத²னோ வாக்³மீ ஸத்யவாக் ஸத்யவிக்ரம꞉ ।
ஸத்யவ்ரதோ வ்ரதத⁴ர꞉ ஸதா³ ஹனுமதா³ஶ்ரித꞉ ॥ 3॥

கௌஸலேய꞉ க²ரத்⁴வம்ʼஸீ விராத⁴வத⁴பண்டி³த꞉ ।
விபீ⁴ஷணபரித்ராதா ஹரகோத³ண்ட³க²ண்ட³ன꞉ ॥ 4॥

ஸப்ததாலப்ரபே⁴த்தா ச த³ஶக்³ரீவஶிரோஹர꞉ ।
ஜாமத³க்³ன்யமஹாத³ர்பத³லனஸ்தாடகாந்தக꞉ ॥ 5॥

வேதா³ந்தஸாரோ வேதா³த்மா ப⁴வரோக³ஸ்ய பே⁴ஷஜம் ।
தூ³ஷணத்ரிஶிரோ ஹந்தா த்ரிமூர்திஸ்த்ரிகு³ணாத்மக꞉ ॥ 6॥

த்ரிவிக்ரமஸ்த்ரிலோகாத்மா புண்யசாரித்ரகீர்தன꞉ ।
த்ரிலோகரக்ஷகோ த⁴ன்வீ த³ண்ட³காரண்யபாவன꞉ ॥ 7॥

அஹல்யாஶாபஶமன꞉ பித்ருʼப⁴க்தோ வரப்ரத³꞉ ।
ஜிதேந்த்³ரியோ ஜிதக்ரோதோ⁴ ஜிதாமித்ரோ ஜக³த்³கு³ரு꞉ ॥ 8॥

ருʼக்ஷவானரஸங்கா⁴தீ சித்ரகூடஸமாஶ்ரய꞉ ।
ஜயந்தத்ராணவரத³꞉ ஸுமித்ராபுத்ரஸேவித꞉ ॥ 9॥

ஸர்வதே³வாதி³தே³வஶ்ச ம்ருʼதவானரஜீவன꞉ ।
மாயாமாரீசஹந்தா ச மஹாதே³வோ மஹாபு⁴ஜ꞉ ॥ 10॥

ஸர்வதே³வஸ்துத꞉ ஸௌம்யோ ப்³ரஹ்மண்யோ முநிஸம்ʼஸ்துத꞉ ।
மஹாயோகீ³ மஹோதா³ர꞉ ஸுக்³ரீவேப்ஸிதராஜ்யத³꞉ ॥ 11॥

ஸர்வபுண்யாதி⁴கப²ல꞉ ஸ்ம்ருʼதஸர்வாக⁴நாஶன꞉ ।
ஆதி³தே³வோ மஹாதே³வோ மஹாபூருஷ ஏவ ச ॥ 12॥

புண்யோத³யோ த³யாஸார꞉ புராணபுருஷோத்தம꞉ ।
ஸ்மிதவக்த்ரோ மிதாபா⁴ஷீ பூர்வபா⁴ஷீ ச ராக⁴வ꞉ ॥ 13॥

அனந்தகு³ணக³ம்பீ⁴ரோ தீ⁴ரோதா³த்தகு³ணோத்தம꞉ ।
மாயாமானுஷசாரித்ரோ மஹாதே³வாதி³பூஜித꞉ ॥ 14॥

ஸேதுக்ருʼஜ்ஜிதவாரீஶ꞉ ஸர்வதீர்த²மயோ ஹரி꞉ ।
ஶ்யாமாங்க³꞉ ஸுந்த³ர꞉ ஶூர꞉ பீதவாஸா த⁴னுர்த⁴ர꞉ ॥ 15॥

ஸர்வயஜ்ஞாதி⁴போ யஜ்வா ஜராமரணவர்ஜித꞉ ।
ஶிவலிங்க³ப்ரதிஷ்டா²தா ஸர்வாவகு³ணவர்ஜித꞉ ॥ 16॥

பரமாத்மா பரம்ʼ ப்³ரஹ்ம ஸச்சிதா³னந்த³விக்³ரஹ꞉ ।
பரம்ʼ ஜ்யோதி꞉ பரந்தா⁴ம பராகாஶ꞉ பராத்பர꞉ ॥ 17॥

பரேஶ꞉ பாரக³꞉ பார꞉ ஸர்வதே³வாத்மக꞉ பர꞉ ॥

॥ இதி ஶ்ரீராமாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ॥


॥ Śrī Rāmāṣṭottaraśatanāma Stotram  ॥

dhyānam -
śrīrāghavaṃ daśarathātmajamaprameyaṃ
       sītāpatiṃ raghukulānvayaratnadīpam ।
ājānubāhumaravindadalāyatākṣaṃ
       rāmaṃ niśācaravināśakaraṃ namāmi ॥

vaidehīsahitaṃ suradrumatale haime mahāmaṇḍape
       madhye puṣpakamāsane maṇimaye vīrāsane susthitam ।
agre vācayati prabhañjanasute tattvaṃ munibhyaḥ paraṃ
       vyākhyāntaṃ bharatādibhiḥ parivṛtaṃ rāmaṃ bhaje śyāmalam ॥

rāmāya rāmabhadrāya rāmacandrāya vedhase ।
raghunāthāya nāthāya sītāyāḥ pataye namaḥ ॥


oṃ śrīrāmo rāmabhadraśca rāmacandraśca śāśvataḥ ।
rājīvalocanaḥ śrīmān rājendro raghupuṅgavaḥ ॥ 1॥

jānakīvallabho jaitro jitāmitro janārdanaḥ ।
viśvāmitrapriyo dāntaḥ śatrujicchatrutāpanaḥ ॥ 2॥

vālipramathano vāgmī satyavāk satyavikramaḥ ।
satyavrato vratadharaḥ sadā hanumadāśritaḥ ॥ 3॥

kausaleyaḥ kharadhvaṃsī virādhavadhapaṇḍitaḥ ।
vibhīṣaṇaparitrātā harakodaṇḍakhaṇḍanaḥ ॥ 4॥

saptatālaprabhettā ca daśagrīvaśiroharaḥ ।
jāmadagnyamahādarpadalanastāṭakāntakaḥ ॥ 5॥

vedāntasāro vedātmā bhavarogasya bheṣajam ।
dūṣaṇatriśiro hantā trimūrtistriguṇātmakaḥ ॥ 6॥

trivikramastrilokātmā puṇyacāritrakīrtanaḥ ।
trilokarakṣako dhanvī daṇḍakāraṇyapāvanaḥ ॥ 7॥

ahalyāśāpaśamanaḥ pitṛbhakto varapradaḥ ।
jitendriyo jitakrodho jitāmitro jagadguruḥ ॥ 8॥

ṛkṣavānarasaṃghātī citrakūṭasamāśrayaḥ ।
jayantatrāṇavaradaḥ sumitrāputrasevitaḥ ॥ 9॥

sarvadevādidevaśca mṛtavānarajīvanaḥ ।
māyāmārīcahantā ca mahādevo mahābhujaḥ ॥ 10॥

sarvadevastutaḥ saumyo brahmaṇyo munisaṃstutaḥ ।
mahāyogī mahodāraḥ sugrīvepsitarājyadaḥ ॥ 11॥

sarvapuṇyādhikaphalaḥ smṛtasarvāghanāśanaḥ ।
ādidevo mahādevo mahāpūruṣa eva ca ॥ 12॥

puṇyodayo dayāsāraḥ purāṇapuruṣottamaḥ ।
smitavaktro mitābhāṣī pūrvabhāṣī ca rāghavaḥ ॥ 13॥

anantaguṇagambhīro dhīrodāttaguṇottamaḥ ।
māyāmānuṣacāritro mahādevādipūjitaḥ ॥ 14॥

setukṛjjitavārīśaḥ sarvatīrthamayo hariḥ ।
śyāmāṅgaḥ sundaraḥ śūraḥ pītavāsā dhanurdharaḥ ॥ 15॥

sarvayajñādhipo yajvā jarāmaraṇavarjitaḥ ।
śivaliṅgapratiṣṭhātā sarvāvaguṇavarjitaḥ ॥ 16॥

paramātmā paraṃ brahma saccidānandavigrahaḥ ।
paraṃ jyotiḥ paraṃdhāma parākāśaḥ parātparaḥ ॥ 17॥

pareśaḥ pāragaḥ pāraḥ sarvadevātmakaḥ paraḥ ॥

॥ iti śrīrāmāṣṭottaraśatanāmastotraṃ sampūrṇam ॥


இந்த ஸ்தோத்திரத்தை பாடம் செய்து படிப்பதால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இவையே ஶ்ரீ ராமச்சந்திரரது நூற்றியெட்டு நாமங்களாகும். 

இரகசியத்திலும் இரகசியமான இதனை, தேவி ! உன் மீதுள்ள பிரியத்தின் காரணமாக கூறப்பட்டது.
பக்தி உள்ளத்துடன் யார் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, நூறுகல்பகோடி காலங்களாக ஏற்பட்ட எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனுக்கு நீரும் நிலமாகிவிடுகிறது; சத்ருக்கள் மித்ரர்களாகவும், அரசர்கள் தாசர்களாகவும், எரிநெருப்பு இதமாகவும் மாறிவிடுகின்றன. 
பூதங்கள் அனுகூலமாகவும், நில்லாத செல்வங்கள் நீங்காதமையவும் செய்கின்றன. 

பக்தி பாவனையுடன் படிக்குமவர்க்கு கிரஹங்கள் அனுகிரஹம் செய்கின்றன, உபத்திரவங்கள் தீர்வடைகின்றன.

பரமபக்தியுடன் படிக்குமவர்க்கு மூவுலகும் வசமாகும். அவர்க்கு என்னென்ன இச்சைகள் தோன்றுகின்றனவோ அவ்வனைத்தும் நிறைவேறும்.

கீர்த்தனை செய்வோருக்கு, முன் பத்து தலைமுறையினரும்,
பின் பத்து தலைமுறையினரும், ஆயிரம் கோடி கல்பகாலத்துக்கும் நூறுகோடி கல்பகாலத்துக்கும் வைகுண்டத்தில் பகவானை அனுபவிப்பர்.

ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரத்தை படித்து பகவானது அருள் பெறுவோம்.

Friday, 11 March 2022

Śrī Devyaṣṭakam - Sloka 9 ( phalaśruti - Final )

Śrī Devyaṣṭakam - Sloka 9 ( phalaśruti - Final )

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


देव्यष्टकमिदं पुण्यं योगानन्देन निर्मितम् ।
यः पठेद्भक्तिभावेन लभते स परं सुखम् ॥ ९॥

इति योगानन्दविरचितं श्रीदेव्यष्टकं सम्पूर्णम् ॥


தே³வ்யஷ்டகமித³ம்ʼ புண்யம்ʼ யோகா³னந்தே³ன நிர்மிதம் ।
ய꞉ படே²த்³ப⁴க்திபா⁴வேன லப⁴தே ஸ பரம்ʼ ஸுக²ம் ॥ 9॥

இதி யோகா³னந்த³விரசிதம்ʼ ஶ்ரீதே³வ்யஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ॥


devyaṣṭakamidaṃ puṇyaṃ yogānandena nirmitam ।
yaḥ paṭhedbhaktibhāvena labhate sa paraṃ sukham ॥ 9॥

iti yogānandaviracitaṃ śrīdevyaṣṭakaṃ sampūrṇam ॥



பொருள் :

யோகானந்தரால் இயற்றப்பட்டதான இந்த தேவி அஷ்டகத்தை, யார் பக்திபாவத்துடன் படிக்கிறாரோ, அவர் மேலான புண்ணியத்தையும், பேரின்பத்தையும் அடைவர். 9


இத்துடன் யோகானந்தரால் இயற்றப்பட்ட தேவி அஷ்டகம் நிறைவு பெறுகிறது.


Meaning :

If this octet on the Goddess written by Yogananda ,
Is read with devotion ,by any one, he would get pleasure as well as divinity. 9

Thus the Devi Astakam written by Yogananda.