Tuesday, 25 December 2018

Vedasaara Shiva Stotram - Sloka 4

Vedasaara Shiva Stotram - Sloka 4

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

शिवाकान्त शंभो शशाङ्कार्धमौले
महेशान शूलिन् जटाजूटधारिन् ।
त्वमेको जगद्व्यापको विश्वरूपः
प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप ॥४॥

ஶிவாகாந்த ஶம்போ⁴ ஶஶாங்கார்த⁴மௌலே
மஹேஶான ஶூலின் ஜடாஜூடதா⁴ரின் |
த்வமேகோ ஜக³த்³வ்யாபகோ விஶ்வரூப​:
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ பூர்ணரூப || 4||

śivākānta śaṃbho śaśāṅkārdhamaule
maheśāna śūlin jaṭājūṭadhārin ।
tvameko jagadvyāpako viśvarūpaḥ
prasīda prasīda prabho pūrṇarūpa ॥4॥

Word by word meaning :

शिवा-कान्त -  ஶிவா-காந்த   -  பார்வதியின் நாயகனே,

शंभो  -  ஶம்போ⁴  -  சம்புவே,

शशाङ्क-अर्धमौले  -  ஶஶாங்க-அர்த⁴மௌலே  -  அர்த்த சந்திரனை சிரஸ்ஸில் தரித்திருப்பவரே,

महेशान  -  மஹேஶான  -  மஹேச்வரரே,

शूलिन्  -  ஶூலின்  -  சூலாயுதமுள்ளவரே,

जटा-जूट-धारिन्  -  ஜடா-ஜூட-தா⁴ரின்  -  ஜடாபந்தம்  தரித்தவரே,

त्वं एको  -  த்வம்ʼ ஏகோ  -  நீர் ஒருவரே

जगत‌् व्यापको  -  ஜக³த் வ்யாபகோ  -  உலகம் முழுவதும் பரவியிருப்பவர்.,

विश्वरूपः  -  விஶ்வரூப꞉  -  எல்லா வடிவமாகவும் இருப்பவர்.,

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஸ்வாமியே,

पूर्णरूप  -  பூர்ணரூப   -  நிறைந்த ஸ்வரூபமுள்ளவரே,

प्रसीद प्रसीद  -  ப்ரஸீத³ ப்ரஸீத³  -  அருள்புரியும்  அருள்புரியும்.

பொருள் :

பார்வதியின் மணாளனே !  மங்களங்களை அருள்பவனே !  அர்த்த சந்திரனை சிரஸ்ஸில் தரித்திருப்பவரே !  மஹேசரே !  சூலாயுதம் ஏந்தியவரே !  நீ ஒருவனே உலகம் முழுவதும் இருப்பவன். பலவித உருவம் கொண்டவன். எல்லாம் உன் ஸ்வரூபம். ப்ரபோ ! நிறைந்த ஸ்வரூபம் உள்ளவனே !  அருள் புரியும் அருள் புரியும்.   4

Meaning  :

O Śambhu, Who is the resplendence of Śivā, Who has the half-moon on the forehead, Who is the great Īśāna, Who holds a trident, and Who has matted-hair tress-locks! You are the only One pervading in this universe, manifesting as the world. O Lord, Who is complete! Please be happy. Be happy.   4

Sri Skanda Shatka Stotram - Sloka 5

Sri Skanda Shatka Stotram - Sloka 5

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

प्रलयस्थितिकर्तारं आदिकर्तारमीश्वरम् ।
भक्तप्रियं मदोन्मत्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ५॥

pralayasthitikartāraṃ ādikartāramīśvaram ।
bhaktapriyaṃ madonmattaṃ skandaṃ vande śivātmajam ॥ 5॥

ப்ரலயஸ்தி²திகர்தாரம் ஆதி³கர்தாரமீஶ்வரம் ।
ப⁴க்தப்ரியம் மதோ³ன்மத்தம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 5॥

प्रलय-स्थिति-कर्तारं   -  ப்ரலய-ஸ்தி²தி-கர்தாரம்ʼ  -  ப்ரளயம், ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரை,

आदि-कर्तारं  -  ஆதி³-கர்தாரம்ʼ  -  முதலில் உலகங்களைப் படைத்தவரை,

ईश्वरं  -  ஈஶ்வரம்ʼ  -  யாவருக்கும் தலைவனை,

भक्त-प्रियं  -  ப⁴க்த-ப்ரியம்ʼ  -  பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனை,

मद-उन्मत्तं   -  மத³-உன்மத்தம்ʼ  -  ஆனந்தத்தால் மதம் கொண்டவனை,

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

ப்ரளயம், ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும்,

முதலில் உலகங்களைப் படைத்தவரும்,

யாவருக்கும் தலைவனும்,

பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும்,

ஆனந்தத்தால் மதம் கொண்டவனும்,

சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   5

( மதோ³ன்மத்தம்  -  பக்தர்கள் செய்யும் பக்திரசமாகிய மது அருந்தியதால் ஏற்படும் லஹரியில் திளைப்பவர் என்று கொள்ளலாம்.

madonmattaṃ  -  This can be termed as the one who is intoxicated by taking the drink namely bhakti rasam., i.e., the devotion of the devotees. )

Meaning :

I salute Skanda , the son of Lord Shiva,

Who causes the final deluge ,

Who recreates the world,

Who is the God,

Who likes his devotees and

Who is greatly exuberant.   5

Saturday, 22 December 2018

Rama stotram by Parashurama - Sloka 5

Rama stotram by Parashurama - Sloka 5

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

यावद्देहमनःप्राणबुद्ध्यादिष्वभिमानवान् ।
तावत्कर्तृत्वभोक्तृत्वसुखदुःखादिभाग्भवेत् ॥ ३५॥

யாவத்³தே³ஹமன​:ப்ராணபு³த்³த்⁴யாதி³ஷ்வபி⁴மானவான் |
தாவத்கர்த்ருʼத்வபோ⁴க்த்ருʼத்வஸுக²து³​:கா²தி³பா⁴க்³ப⁴வேத் ||  35||

yāvaddehamanaḥprāṇabuddhyādiṣvabhimānavān ।
tāvatkartṛtvabhoktṛtvasukhaduḥkhādibhāgbhavet ॥ 35॥

பொருள் :

'தான்' என்ற பற்றுதல், உடல் -  மனம் - பிராணன் - புத்தி போன்றவைகளில் எதுவரையில் இருந்து வருமோ  அதுவரையில், ' நானே செய்கிறேன்; நானே அனுபவிக்கிறேன் ' என்பதான எண்ணமும், சுகதுக்கங்களில் ஒட்டுதலும் இருந்து கொண்டிருக்கும்.   35

Meaning :

As long as one feels the 'I-sense' in relation to the complex aggregate of body-mind, Prana, Buddhi, etc., so long one is subject to the experience of agency and enjoyership of happiness and misery.   35

Tuesday, 18 December 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 4

Sri Skanda Shatka Stotram - Sloka 4

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

कुमारं मुनिशार्दूलमानसानन्दगोचरम् ।
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ४॥

குமாரம் முனிஶார்தூ³லமானஸானந்த³கோ³சரம் ।
வல்லீகாந்தம் ஜக³த்³யோனிம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 4॥

kumāraṃ muniśārdūlamānasānandagocaram ।
vallīkāntaṃ jagadyoniṃ skandaṃ vande śivātmajam ॥ 4॥

कुमारं  -  குமாரம்ʼ  -  குமரக் கடவுளை ;

मुनि-शार्दूल-मानस-आनन्द-गोचरं  -  முனி-ஶார்தூ³ல-மானஸ-ஆனந்த³-கோ³சரம்ʼ  -  சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனை ;

वल्ली-कान्तं  -  வல்லீ-காந்தம்ʼ  -  வள்ளியின் கணவனை ;

जगत‌्-योनिं  -  ஜக³த்-யோனிம்ʼ  -  உலகங்களுக்கு காரணமானவனை ;

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

குமரக் கடவுளும் ;

சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் ;

வள்ளியின் கணவனும் ;

உலகங்களுக்கு காரணமானவனும் ;

சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   4

Meaning  :

I salute Skanda , the son of Lord Shiva,

Who is Kumara,

Who is a lad visible to great sages, as sacred joy in their mind,

Who is consort of Valli and

The progenitor of the world.   4

Sunday, 16 December 2018

Vedasaara Shiva Stotram - Sloka 3

Vedasaara Shiva Stotram - Sloka 3

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

गिरीशं गणेशं गले नीलवर्णं
गवेन्द्राधिरूढं गुणातीतरूपम् ।
भवं भास्वरं भस्मना भूषिताङ्गं
भवानीकलत्रं भजे पञ्चवक्त्रम् ॥३॥

கி³ரீஶம்ʼ க³ணேஶம்ʼ க³லே நீலவர்ணம்ʼ
க³வேந்த்³ராதி⁴ரூட⁴ம்ʼ கு³ணாதீதரூபம் |
ப⁴வம்ʼ பா⁴ஸ்வரம்ʼ ப⁴ஸ்மனா பூ⁴ஷிதாங்க³ம்ʼ
ப⁴வானீகலத்ரம்ʼ ப⁴ஜே பஞ்சவக்த்ரம் || 3||

girīśaṃ gaṇeśaṃ gale nīlavarṇaṃ
gavendrādhirūḍhaṃ guṇātītarūpam।
bhavaṃ bhāsvaraṃ bhasmanā bhūṣitāṅgaṃ bhavānīkalatraṃ bhaje pañcavaktram ॥3॥

Word by word meaning  :

गिरीशं  -  கி³ரீஶம்ʼ   -  கைலாச மலையின் ஈசனும்,

गणेशं  -  க³ணேஶம்ʼ  -  ப்ரமத கணங்களின் நாயகரும்,

गले नीलवर्णं  -  க³லே நீலவர்ணம்ʼ   -  கழுத்தில் நீலநிறமுள்ளவரும்,

गव-इन्द्र अधिरूढं   -  க³வ-இந்த்³ர அதி⁴ரூட⁴ம்ʼ   -  சிறந்த வ்ருஷபத்தில் ( நந்தி ) ஏறி அமர்ந்திருப்பவரும்,

गुण-अतीत-रूपं  -  கு³ண-அதீத-ரூபம்ʼ  -  குணங்களுக்கு அப்பாற்பட்ட ஸ்வரூபமுள்ளவரும்  (குணமற்றவரும்),

भवं  -  ப⁴வம்ʼ  -  காரணமாக இருப்பவரும்,

भास्वरं   -  பா⁴ஸ்வரம்ʼ  -  பிரகாசிக்கிறவரும்,

भस्मना भूषित-अङ्गं  -  ப⁴ஸ்மனா பூ⁴ஷித-அங்க³ம்ʼ  -  விபூதியால்  அலங்கரிக்கப்பட்ட சரீரமுள்ளவரும்,

भवानी-कलत्रं   -  ப⁴வானீ-கலத்ரம்ʼ   -  பார்வதியை மனைவியாகக் கொண்டவரும்,

पञ्चवक्त्रं  -  பஞ்சவக்த்ரம்ʼ  -  ஐந்து முகங்களுள்ளவருமான பரமசிவனை,

भजे -  bhaje  -  பஜிக்கிறேன்.

பொருள் :

கைலாசமலைக்கு அதிபதி , ப்ரமத கணங்களுக்குத் தலைவர், கழுத்தில் நீலநிறமுள்ளவர், சிறந்த வ்ருஷபத்தில் ஏறி ( நந்தி )  அமர்ந்திருப்பவர், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஸ்வரூபமுள்ளவர்.

காரணப்பொருள், ஒளியுடன் கூடியவர், உடலில் விபூதியை அணிந்தவர், பார்வதியை மனைவியாகக் கொண்டவர், ஐந்து முகமுள்ளவர்., இவ்விதமான மஹேச்வரனை பஜிக்கிறேன்.   3

Meaning  :

I adore Lord Śiva, Who is the Lord of the Himālaya, Who is the Leader of Gaṇa, Who has a blue-colored throat, Who sits on the best among bulls, Whose true nature is beyond the qualities, Who is the universe, Who is resplendent, Who is adorned with ashes, Who is the consort of Bhavānī, and Who has five-heads.   3

Saturday, 15 December 2018

Rama stotram by Parashurama - Sloka 4

Rama stotram by Parashurama - Sloka 4

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

अविद्याकृतदेहादिसङ्घाते प्रतिबिम्बिता ।
चिच्छक्तिर्जीवलोकेऽस्मिन् जीव इत्यभिधीयते ॥ ३४॥

அவித்³யாக்ருʼததே³ஹாதி³ஸங்கா⁴தே ப்ரதிபி³ம்பி³தா |
சிச்ச²க்திர்ஜீவலோகே(அ)ஸ்மின் ஜீவ இத்யபி⁴தீ⁴யதே ||  34||

avidyākṛtadehādisaṅghāte pratibimbitā ।
cicchaktirjīvaloke'smin jīva ityabhidhīyate ॥ 34॥

பொருள் :

அஞ்ஞானத்தால் தோன்றியுள்ள உறுப்புத் தொகுதியான உடல் முதலிய பல்வகை உருவங்களில் பிரதிபிம்பமாகக் காட்சி தரும் சித்சக்தி, உயிர்ப் பிராணிகள் வசிக்கும் இவ்வுலகில் ' ஜீவன் ' என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.   34

Meaning :

What is called Jeeva is the reflection of the power of Pure Consciousness ( chit-shakti ) in the complex aggregate of a body-mind generated by Ignorance ( Avidya ).  34

Tuesday, 11 December 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 3

Sri Skanda Shatka Stotram - Sloka 3

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम् ।
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ३॥

viśveśvarapriyaṃ devaṃ viśveśvaratanūdbhavam ।
kāmukaṃ kāmadaṃ kāntaṃ skandaṃ vande śivātmajam ॥ 3॥

விஶ்வேஶ்வரப்ரியம் தே³வம் விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம் ।
காமுகம் காமத³ம் காந்தம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 3॥

विश्वेश्वर-प्रियं  -  விஶ்வேஶ்வர-ப்ரியம்ʼ  -  எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரை,

विश्वेश्वर-तनु-उद्भवं  -  விஶ்வேஶ்வர-தனு-உத்³ப⁴வம்ʼ  -  ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரை,

कामुकं  -  காமுகம்ʼ  -  பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரை, 

कामदं   -   காமத³ம்ʼ  -  பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரை,

कान्तं  -  காந்தம்ʼ  -  மனதைக் கவருகின்றவரை,

देवं  -  தே³வம்ʼ  -  ( இப்படிப்பட்ட )  தெய்வத்தை,

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள்  :

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரும், ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரும், பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும், மனதைக் கவருகின்றவரும், ( இப்படிப்பட்ட )  தெய்வத்தை, ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   3

அல்லது

விச்வேச்வரர்
விச்வேச்வரருடைய ( உலகத்தைக் காப்பவர் )  ஸங்கல்பத்தால், [விஶ்வேஶ்வரப்ரியம்]

விச்வேச்வரரிடமே இருந்து தோன்றியதால், [விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம்]

விச்வத்தைக் காக்க விருப்பம் கொண்டு, [காமுகம்]

காப்பாற்றவும் செய்து,  [காமத³ம்]

எல்லாரையும் தன்பால் ஈர்த்து, [காந்தம்]

எல்லாரையும் சிவமயம் என்று உணரச் செய்விக்கும் [ஶிவாத்மஜம்]

தெய்வமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன். [வந்தே³ தே³வம் ஸ்கந்த³ம்].   3

Meaning :

I salute God Skanda, the son of Lord Shiva;

Who is the darling of Lord Shiva ( Lord of all worlds );

Who rose from the body of Lord Shiva,

Who loves his devotees; or Who is desirous to fulfill the longings of his devotees;

Who fulfills the longings of his devotees and

Who is Stealer of mind.   3

Monday, 10 December 2018

Vedasaara Shiva Stotram - Sloka 2

Vedasaara Shiva Stotram - Sloka 2

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

महेशं सुरेशं सुरारातिनाशं
विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषम्।
विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं
सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम् ॥२॥

மஹேஶம்ʼ ஸுரேஶம்ʼ ஸுராராதினாஶம்ʼ
விபு⁴ம்ʼ விஶ்வனாத²ம்ʼ விபூ⁴த்யங்க³பூ⁴ஷம்|
விரூபாக்ஷமிந்த்³வர்கவஹ்னித்ரினேத்ரம்ʼ
ஸதா³னந்த³மீடே³ ப்ரபு⁴ம்ʼ பஞ்சவக்த்ரம் || 2||

maheśaṃ sureśaṃ surārātināśaṃ
vibhuṃ viśvanāthaṃ vibhūtyaṅgabhūṣam।
virūpākṣamindvarkavahnitrinetraṃ
sadānandamīḍe prabhuṃ pañcavaktram ॥2॥

Word by word meaning. :

सुरेशं  -  ஸுரேஶம்ʼ  -  தேவர்களுக்கு ஈச்வரனை, 

सुर-अराति-नाशं  -  ஸுர-அராதி-நாஶம்ʼ  -  தேவர்களின் எதிரியான அஸுரர்களை அழிப்பவரை,

विभुं  -  விபு⁴ம்ʼ  -  எங்கும் உள்ளவரை,

विश्वनाथं  -   விஶ்வனாத²ம்ʼ  -  எல்லோரையும் காப்பாற்றுபவரை,

विभूति-अङ्गभूषं  -  விபூ⁴தி-அங்க³பூ⁴ஷம்ʼ  -  சரீரத்திற்கு அலங்காரமாக விபூதியை அணிந்தவரை,

विरूपाक्षं  -  விரூபாக்ஷம்ʼ  -  விரூபமான கண்களை உடையவரை, 

इन्दु-अर्क-वह्नि-त्रिनेत्रं  -  இந்து³-அர்க-வஹ்னி-த்ரினேத்ரம்ʼ  -  சந்திரன், சூரியன், அக்னி இவற்றைக் கண்களாகக் கொண்டவரை,

सदानन्दं  -   ஸதா³னந்த³ம்ʼ   -  ஆனந்தரூபியை,

प्रभुं  -  ப்ரபு⁴ம்ʼ  -  யஜமானரை,

पञ्चवक्त्रं  -  பஞ்சவக்த்ரம்ʼ  -  ஐந்து முகங்களுள்ளவரை,

महेशं  -  மஹேஶம்ʼ   -  மஹேச்வரனை,

ईडे  -  ஈடே³  -  துதிக்கிறேன்.

பொருள் :

தேவர்களுக்கும் ஈச்வரன், தேவர்களின் சத்ருக்களான அஸுரர்களை அழித்து அவர்களைக் காப்பாற்றுபவர்.,  எங்கும் நிறைந்தவர், எல்லோரையும் காப்பாற்றுபவர், விபூதியை அணிந்தவர்., ஸூர்யன், சந்த்ரன், அக்னி இம்மூவரையும் கண்களாகக் கொண்டவர், உலகில் காணாதபடி நெற்றியில் கண் இருப்பதால் லோகவிலக்ஷணமான நேத்ரங்கள் உள்ளவர்., எல்லோருக்கும் எஜமானர், இந்த மஹேச்வரனைத் துதிக்கிறேன்.   2

Meaning :

I praise Lord Śiva, Who is Maheśa, Who is the Lord of demi-gods, Who destroys the grief of demi-gods, Who is resplendent, Who is the Lord of the world, Who has abundant ornaments, Who has variegated (colorful) eyes, Who has the Sun, the Moon and the Fire as three eyes, Who is always blissful, and Who has five-heads.   2

Saturday, 8 December 2018

Rama stotram by Parashurama - Sloka 3

Rama stotram by Parashurama - Sloka 3

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

यावन्मायावृता लोकास्तावत्त्वां न विजानते ।
अविचारितसिद्धैषाऽविद्या विद्याविरोधिनी ॥ ३३॥

யாவன்மாயாவ்ருʼதா லோகாஸ்தாவத்த்வாம்ʼ ந விஜானதே |
அவிசாரிதஸித்³தை⁴ஷா(அ)வித்³யா வித்³யாவிரோதி⁴னீ ||  33||

yāvanmāyāvṛtā lokāstāvattvāṃ na vijānate ।
avicāritasiddhaiṣā'vidyā vidyāvirodhinī ॥ 33॥

பொருள் :

மாயையால் சூழப்பட்டிருக்கும் வரையில் மனிதர்கள் தங்களை அறிந்து கொள்வதில்லை. முழுமையான ஞானத்துக்கு எதிரான இந்த அவித்யை ( மாயை ), அது குறித்து ஆழ்ந்து ஆலோசிக்கும் வரையிலும் இருந்து கொண்டுதான் இருக்கும்.   33

Meaning :

As long as the Jivas are enshrouded in Maya, they do not know Thee. In the individual,  Maya functions as Avidya,  ignorance, obstructing Vidya or Enlightment. This Avidya or lgnorance, experienced as a positive entity opposed to Vidya,  is present in the absence of discriminative intelligence ( avicharitasiddha ).   33

Tuesday, 4 December 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 2

Sri Skanda Shatka Stotram - Sloka 2

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

तारकासुरहन्तारं मयूरासनसंस्थितम् ।
शक्तिपाणिं च देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ २॥

தாரகாஸுரஹந்தாரம்ʼ மயூராஸனஸம்ʼஸ்தி²தம் .
ஶக்திபாணிம்ʼ ச தே³வேஶம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் || 2||

tārakāsurahantāraṃ mayūrāsanasaṃsthitam ।
śaktipāṇiṃ ca deveśaṃ skandaṃ vande śivātmajam ॥ 2॥

तारकासुर-हन्तारं   -  தாரகாஸுர-ஹந்தாரம்ʼ  -  தாரகாஸூரனை வதம் செய்தவனை,

मयूर-आसन-संस्थितं  -  மயூர-ஆஸன-ஸம்ʼஸ்தி²தம்ʼ  -  மயில் மீது அமர்ந்தவனை, 

शक्ति-पाणिं  -  ஶக்தி-பாணிம்ʼ  -  ஞான வேலை கையில் தரித்தவனை, 

देव-ईशं च  -  தே³வ-ஈஶம்ʼ ச  -  தேவர்களுக்கெல்லாம் தலைவரை,

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

தாரகாஸுரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞானவேலைக் கையில் தரித்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும்,  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   2

Meaning :

I salute Skanda, the son of Lord Shiva,

Who killed the asura called Tharaka,

Who travels on his steed, the peacock,

Who is the God armed with Shakthi,

And who is commander of Deva.   2

Monday, 3 December 2018

Vedasaara Shiva Stotram - Sloka 1

Vedasaara Shiva Stotram - Sloka 1

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

पशूनां पतिं पापनाशं परेशं
     गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यम् ।
जटाजूटमध्ये स्फुरद्गाङ्गवारिं
     महादेवमेकं स्मरामि स्मरारिम् ॥ १॥

பஶூநாம் பதிம் பாபனாஶம் பரேஶம்

க³ஜேந்த்³ரஸ்ய க்ருʼத்திம் வஸானம் வரேண்யம் ।

ஜடாஜூடமத்⁴யே ஸ்பு²ரத்³கா³ங்க³வாரிம்

மஹாதே³வமேகம் ஸ்மராமி ஸ்மராரிம் ॥ 1॥

paśūnāṁ patiṁ pāpanāśaṁ parēśaṁ
gajēndrasya kr̥ttiṁ vasānaṁ varēṇyam ।

jaṭājūṭamadhyē sphuradgāṅgavāriṁ
mahādēvamēkaṁ smarāmi smarārim ॥ 1॥

Word by word meaning :

पशूनां  -  பஶூனாம்ʼ -  பசுக்களுக்கு  (ஜீவர்களுக்கு)

पतिं  -  பதிம்ʼ  -  தலைவரும்

पाप-नाशं  -  பாப-நாஶம்ʼ  -  பாபத்தை அழிப்பவரும்

पर-ईशं  -  பர-ஈஶம்ʼ  -  மேலான ஈஸ்வரரும்

गज-इन्द्रस्य  -  க³ஜ-இந்த்³ரஸ்ய  -  சிறந்த யானையின்

कृत्तिं  -  க்ருʼத்திம்ʼ  -  தோலை

वसानं  -  வஸானம்ʼ  -  அணிந்திருப்பவரும்

वरेण्यं  -  வரேண்யம்ʼ  -  துதிக்கத்தக்கவரும்

जटा-जूट-मध्ये  -  ஜடா-ஜூட-மத்⁴யே  -  ஜடா பந்தத்தின் நடுவில்

स्फुरद्-गाङ्ग-वारिं  -   ஸ்பு²ரத்³-கா³ங்க³-வாரிம்ʼ  -  விளங்கும் கங்கா தீர்த்தத்தை உடையவரும்

स्मरारिं  -  ஸ்மராரிம்ʼ   -  மன்மதனுக்கு விரோதியானவரான ( மன்மதனை எரித்தவருமான )

महादेवं-एकं  -  மஹாதே³வம்ʼ-ஏகம்ʼ   -  மஹாதேவன் ஒருவரையே

स्मरामि  -    ஸ்மராமி   -  நினைக்கிறேன்.

பொருள் :

ஜீவர்களுக்குத் தலைவர், பாபங்களை அழிப்பவர், எல்லோருக்கும் மேலான ஈச்வரன், யானைத் தோலை இடுப்பில் அணிந்திருப்பவர், போற்றத்தக்கவர்., இவருடைய ஜடாபாரத்தின் நடுவில் கங்கா தீர்த்தம் விளங்குகிறது. காமனை எரித்தவர். இவ்விதமான மஹாதேவர் ஒருவரையே நினைக்கிறேன்.

மாடுகளைக் கட்டவோ அவிழ்த்துவிடவோ அதன் யஜமானனால் தான் முடியும். சரீரத்தில் அபிமானம் கொண்டு அதைப் போஷிப்பதிலேயே ஈடுபடும் அவிவேகிகளான ஜீவர்களும் பசுக்கள் தான். நம்மை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிப்பவர் நமது யஜமானரான  பரமேச்வரர் தான். அவரை உபாஸித்தால் பாபம், காமம், ஆஸுர ஸ்வபாவம் எல்லாம் விலகி கங்கா தீர்த்தம் போல் தூய்மை பெறலாம்.   1

Meaning :

I remember the only Mahādeva, Who is the enemy of Smara (Kāmadeva), Who is the Lord of the animals for sacrifice, Who destroys the sins, Who is the Lord beyond everyone, Who has a cloth made from elephant-skin, Who is the best, and Who has a shaking stream of Gańgā in the midst of the matted-hair locks.   1