Sri Skanda Shatka Stotram - Sloka 3
॥ श्री स्कन्द षट्कम् ॥
|| ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||
॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥
विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम् ।
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ३॥
viśveśvarapriyaṃ devaṃ viśveśvaratanūdbhavam ।
kāmukaṃ kāmadaṃ kāntaṃ skandaṃ vande śivātmajam ॥ 3॥
விஶ்வேஶ்வரப்ரியம் தே³வம் விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம் ।
காமுகம் காமத³ம் காந்தம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 3॥
विश्वेश्वर-प्रियं - விஶ்வேஶ்வர-ப்ரியம்ʼ - எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரை,
विश्वेश्वर-तनु-उद्भवं - விஶ்வேஶ்வர-தனு-உத்³ப⁴வம்ʼ - ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரை,
कामुकं - காமுகம்ʼ - பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரை,
कामदं - காமத³ம்ʼ - பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரை,
कान्तं - காந்தம்ʼ - மனதைக் கவருகின்றவரை,
देवं - தே³வம்ʼ - ( இப்படிப்பட்ட ) தெய்வத்தை,
शिवात्मजं स्कन्दं - ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ - சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
वन्दे - வந்தே³ - நமஸ்கரிக்கின்றேன்.
பொருள் :
எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவரும், ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரரும், பக்தர்களை மிக்க விரும்புபவரும், அல்லது
பக்தர்களின் விருப்பங்களை நிறவேற்ற விரும்புபவரும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும், மனதைக் கவருகின்றவரும், ( இப்படிப்பட்ட ) தெய்வத்தை, ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன். 3
அல்லது
விச்வேச்வரர்
விச்வேச்வரருடைய ( உலகத்தைக் காப்பவர் ) ஸங்கல்பத்தால், [விஶ்வேஶ்வரப்ரியம்]
விச்வேச்வரரிடமே இருந்து தோன்றியதால், [விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம்]
விச்வத்தைக் காக்க விருப்பம் கொண்டு, [காமுகம்]
காப்பாற்றவும் செய்து, [காமத³ம்]
எல்லாரையும் தன்பால் ஈர்த்து, [காந்தம்]
எல்லாரையும் சிவமயம் என்று உணரச் செய்விக்கும் [ஶிவாத்மஜம்]
தெய்வமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன். [வந்தே³ தே³வம் ஸ்கந்த³ம்]. 3
Meaning :
I salute God Skanda, the son of Lord Shiva;
Who is the darling of Lord Shiva ( Lord of all worlds );
Who rose from the body of Lord Shiva,
Who loves his devotees; or Who is desirous to fulfill the longings of his devotees;
Who fulfills the longings of his devotees and
Who is Stealer of mind. 3
No comments:
Post a Comment