Friday, 31 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 7

Śrī Devyaṣṭakam - Sloka 7

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


त्रिनेत्रां शङ्करीं गौरीं भोगमोक्षप्रदां शिवाम् ।
महामायां जगद्बीजां वन्दे त्वां जगदीश्वरीम् ॥ ७॥

த்ரிநேத்ராம்ʼ ஶங்கரீம்ʼ கௌ³ரீம்ʼ போ⁴க³மோக்ஷப்ரதா³ம்ʼ ஶிவாம் ।
மஹாமாயாம்ʼ ஜக³த்³பீ³ஜாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜக³தீ³ஶ்வரீம் ॥ 7॥

trinetrāṃ śaṅkarīṃ gaurīṃ bhogamokṣapradāṃ śivām ।
mahāmāyāṃ jagadbījāṃ vande tvāṃ jagadīśvarīm ॥ 7॥



त्रिनेत्रां - த்ரிநேத்ராம்ʼ - மூன்று கண்களை உடையவளை, 

शङ्करीं - ஶங்கரீம்ʼ - பக்தர்களுக்கு ஸுகங்களை அருள்பவளை, 

गौरीं - கௌ³ரீம்ʼ - தங்க வர்ணமாய் இருப்பவளை, 

भोग-मोक्ष-प्रदां - போ⁴க³-மோக்ஷ-ப்ரதா³ம்ʼ - (இஹலோக) போகங்களையும், (பரலோக) மோக்ஷத்தையும் கொடுப்பவளை,  

महामायां - மஹாமாயாம்ʼ - (பிரம்மாதிகளுக்குக்கூட மோஹத்தைத் தரும்) மஹா மாயா ஸ்வரூபிணியாக இருப்பவளை, 

शिवां - ஶிவாம்ʼ - ஜகமானது லயமாகிற இடமாக இருப்பவளை, 

जगद्बीजां - ஜக³த்³பீ³ஜாம்ʼ - ஜகத்திற்குத் தோற்றுவாயாக இருப்பவளை, 

जगदीश्वरीं - ஜக³தீ³ஶ்வரீம்ʼ - ஜகத்தை நிர்வஹிப்பவளை  

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

மூன்று கண்களை உடையவளும், பக்தர்களுக்கு ஸுகங்களை அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும், (இஹலோக) போகங்களையும், (பரலோக) மோக்ஷத்தையும் கொடுப்பவளும், (பிரம்மாதிகளுக்குக்கூட மோஹத்தைத் தரும்) மஹா மாயா ஸ்வரூபிணியாக இருப்பவளும், ஜகமானது லயமாகிற இடமாக இருப்பவளும், ஜகத்திற்குத் தோற்றுவாயாக இருப்பவளும், ஜகத்தை நிர்வஹிப்பவளுமான தங்களை வணங்குகிறேன். 7


Meaning :

Oh three eyed one, Oh Sankari , Oh Gowri Oh Goddess who grants pleasure and salvation , Oh consort of Lord Shiva,
Oh great illusion , Oh seed of the world , I salute you who is the goddess of the world. 7



# அனைத்தும் இவளிடத்தில் லயிக்கிறபடியால் 'சிவா' என்றழைக்கப்படுகிறாள். மேலும் சிவபெருமானுடைய பத்தினி என்றும், மங்களங்களை அருள்பவள் என்றும் பொருள்படும்.

# மஹாமாயாவாக இருப்பதனால் பிரம்மாதிகளையும் மாயைக்கு உட்படுத்தி ஜகத் சிருஷ்டி (ஜகத் பீஸா), நிர்வாஹம் (ஜகதீச்வரீ), ஸம்ஹாரம்/லயம் (சிவா) முதலியவைகளைத் திறம்படச் செய்கிறாள்.

Monday, 27 December 2021

Sri Somasundara Stuti - Sloka 5

Sri Somasundara Stuti - Sloka 5

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||



देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥

தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥

devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥



यं देवदेवं - யம்ʼ தே³வதே³வம்ʼ - எந்த தேவதேவரை

आराध्य - ஆராத்⁴ய - ஆராதித்து

मृकण्डु-तनयः मुनिः  - ம்ருʼகண்டு³-தனய꞉ முனி꞉ - மிருகண்டுவினுடைய புதல்வரான முனிவர் ( மார்க்கண்டேய முனிவர் )

सद्यः नित्यत्वम‌् अगमत् - ஸத்³ய꞉ நித்யத்வம் அக³மத் - உடன் நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, 

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

எந்த தேவதேவரை ஆராதித்து,
மிருகண்டுவினுடைய புதல்வரான மார்க்கண்டேய முனிவர், ஆங்கு அப்பொழுதே நிலைப்புத்தன்மையை அடைந்தாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன்.  5


Meaning :

I adore that Somasundarar, after worshiping Whom, Rishi Markandeya, son of Rishi Mrkandu on the spot attained eternity. 5


#  நிலைப்புத்தன்மை - மூப்படையாமலும், மரணம் ஏற்படாமலும் ஆரோக்கியமாக  இருக்கும் தன்மை.



ரிஷி மார்க்கண்டேயர் :

தவத்தின் மேன்மையை விளங்கச் செய்யும் அநேக தவசீலர்கள் நம் பாரத மண்ணில் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஒருவர் மிருகண்டு முனிவர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் மிருகங்கள் இவரது உடலில் அரிப்பு தீர உரசிக்கொள்ளுமாம். இதனால் மிருகண்டு என்ற பெயர் ஏற்பட்டது. மிருகசிருங்கர் - சுவிருத்தா முனி தம்பதிக்கு பிறந்தவர். மிருகண்டு முனிவர் சிறந்த சிவபக்தர், வேதவிற்பன்னர், தேஜஸ்வி. தக்க காலத்தில் அவருக்கு முத்கல முனிவரின் கன்னிகையான மருத்வதியுடன் விவாஹம் ஏற்பட்டது. இருவரும் ஆசார அனுஷ்டானங்கள் தவறாமல் வாழ்ந்து வந்தனர். புத்திரப்பேறு மட்டும் வாய்க்கவில்லை. 
புத்திரப்பேறு வேண்டி காசிக்குச் சென்று பரமேச்வரரைக் குறித்து தவம் செய்தனர்.
 தவத்திற்கு மெச்சி சிவபெருமான் தோன்றினார். முனி தம்பதியர் சங்கரனாரிடம் புத்திர வரம் வேண்ட, சங்கரனார் குணவானாக அல்லாத நீண்ட ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா அல்லது ஸகலகுணங்களுடன் கூடிய, ஸர்வஞனான பதினாறே ஆண்டுகள் ஆயுளுடைய பிள்ளை வேண்டுமா என்று கேட்டார். குறைந்த ஆயுளானாலும் நிறைந்த ஞானமுடைய பிள்ளையே வேண்டுமெனக் கேட்டார் முனிவர். இறைவனும் வரமளித்து மறைந்தார்.

பின் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மிருகண்டுவினுடைய  புத்திரனானதால் மார்க்கண்டேயர் எனப் பெயர் பெற்றது. பதினாறு ஆண்டுகள் நன்றாகக் கழிந்தன. பதினாறாவது ஆண்டு முடியும் தருவாயில், மார்க்கண்டேயரை எண்ணி முனி தம்பதியர் கலக்கமுற்றனர். இதனை கவனித்த மார்க்கண்டேயர் விவரம் கேட்டறிந்தார். பின் தான் சிவக்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வதாகவும், விரதங்களையும். ஸ்தோத்திரங்களையும் அனுஷ்டித்து சிவபெருமான் பிரீதியடையும்படி செய்து வருவதாகவும் கூறிச் சென்றார்.

தன் ஆயுள் முடியும் தருவாயில், புராணங்களின் படி காசி க்ஷேத்திரம் என்றும், தலபுராணத்தின்படி திருக்கடவூர் வந்து சேர்ந்ததாகவும் சொல்வர். 

உயிரை எடுத்துச் செல்ல யம கிங்கரர்கள் வந்த போது மார்க்கண்டேயர் வர மறுத்துவிட்டார். அவரது தேஜஸின் முன் அவர்களால் ஏதும் செய்ய முடியாமல் போகவே திரும்பி யமனிடம் சென்று கூறினர். 

யமனும் மார்க்கண்டேயரிடம் வந்தார். அப்போதும் மார்க்கண்டேயர் வர மறுத்து தான் செய்யும் ஸ்தோத்திர படனத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று வேண்டினார். 

இதைக் கேட்ட யமன் சரீரத்தின் நிலையற்ற தன்மையையும் , ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மத்திற்கு அனுசரித்து மரணம் எய்தும் என்பதையும், உரிய காலத்திற்கு முன் ஜீவன் போகாது, காலம் வந்தபோது ஜீவன் நில்லாது என்றும், தானும் ஈச்வர ஆஞ்ஞைப்படியே தன் கடமையை செய்வதாகவும், இவையெல்லாம் நீ அறியாயோ என்று கூறினார்.

மார்க்கண்டேயர் கூறினார், எவ்வாறு குடிமக்களை ஆளுவது அரசனோ, அவ்வாறு சிவபக்தாளை ஆளுவது அந்த பரமேச்வரரே. பக்தர்களிடம் உனது ஆணை செல்லுபடியாகாது. சிவாயநம என்றிருக்கும் பக்தர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பதையெல்லாம் தாங்கள் அறியமாட்டீர்களோ.

இதனால் கோபமுற்ற யமன் தன் பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயரும் சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.

பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் படர, அதை யமன் இழுத்தபோது, பரமேச்வரர் தோன்றி, தன் இடது திருவடியால் யமனை உதைக்க, அவன் தூதரே சென்று விழுந்து மாண்டான். மார்க்கண்டேயருக்கு 'என்றும் பதினாறு' எனும்படி அனுக்கிரகம் செய்தார், பரமேச்வரர்.  

அந்த பரமேச்வரரே மதுரையில் சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.

Sunday, 19 December 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 11

Vinaayaka Leelaa Stuti - sloka 11
॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


विश्वेशमौलिस्थितजह्नुकन्याजलं गृहीत्वा निजपुष्करेण ।
हरं सलीलं पितरं स्वकीयं प्रपूजयन् हस्तिमुखः स पायात् ॥ ११॥

விஶ்வேஶமௌலிஸ்தி²தஜஹ்நுகந்யாஜலம் க்³ருʼஹீத்வா நிஜபுஷ்கரேண ।
ஹரம் ஸலீலம் பிதரம் ஸ்வகீயம் ப்ரபூஜயன் ஹஸ்திமுக:² ஸ பாயாத் ॥ 11॥

viśveśamaulisthitajahnukanyājalaṃ gṛhītvā nijapuṣkareṇa ।
haraṃ salīlaṃ pitaraṃ svakīyaṃ prapūjayan hastimukhaḥ sa pāyāt ॥ 11॥


विश्वेश-मौलि-स्थित - விஶ்வேஶ-மௌலி-ஸ்தி²த - சிவபெருமானின் தலையிலுள்ள ,

जह्नु-कन्या-जलं - ஜஹ்னு-கன்யா-ஜலம்ʼ - கங்கை ( ஜஹ்னுவின் மகள் ) நீரை,

गृहीत्वा - க்³ருʼஹீத்வா - எடுத்து ,

निज-पुष्करेण - நிஜ-புஷ்கரேண - தன் துதிக்கை கொண்டு,

स्वकीयं - ஸ்வகீயம்ʼ - தன்னுடைய ,

पितरं हरं - பிதரம்ʼ ஹரம்ʼ - தந்தையாரான ஹரனை ( சிவபெருமானை ),

सलीलं प्रपूजयन् - ஸலீலம்ʼ ப்ரபூஜயன் - விளையாட்டாக பூஜை / அபிஷேகம் செய்கின்ற ,

सः हस्तिमुखः - ஸ: ஹஸ்திமுக²: - அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),

पायात् - பாயாத் - காக்க.


பொருள் :

சிவபெருமானின் தலையிலுள்ள கங்கை ( ஜஹ்னுவின் மகள் ) நீரை எடுத்துத் தன் துதிக்கை கொண்டு, தன்னுடைய தந்தையாரான ஹரனை ( சிவபெருமானை ) விளையாட்டாக பூஜை / அபிஷேகம் செய்கின்ற அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) காக்க. 11


# புஷ்கரேண - தாமரை கொண்டு என்றும் கொள்ளலாம்.

Friday, 17 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 6


Śrī Devyaṣṭakam - Sloka 6

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


देवदुःखहरामम्बां सदा देवसहायकाम् ।
मुनिदेवैः सदासेव्यां वन्दे त्वां देवपूजिताम् ॥ ६॥

தே³வது³꞉க²ஹராமம்பா³ம்ʼ ஸதா³ தே³வஸஹாயகாம் ।
முனிதே³வை꞉ ஸதா³ஸேவ்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ தே³வபூஜிதாம் ॥ 6॥

devaduḥkhaharāmambāṃ sadā devasahāyakām ।
munidevaiḥ sadāsevyāṃ vande tvāṃ devapūjitām ॥ 6॥


देव-दुःख-हरां - தே³வ-து³꞉க²-ஹராம்ʼ - தேவர்களின் துயரங்களைப் போக்குபவளை, 

सदा देव-सहायकां - ஸதா³ தே³வ-ஸஹாயகாம்ʼ - எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிபவளை, 

मुनिदेवैः सदा-सेव्यां - முனிதே³வை꞉ ஸதா³-ஸேவ்யாம்ʼ - மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கப்படுபவளை, 

देवपूजितां - தே³வபூஜிதாம்ʼ - தேவர்களால் பூஜிக்கப்படுபவளை,

अम्बां - அம்பா³ம்ʼ - லோகமாதாவை,  

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.  


பொருள் :

தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிபவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கப்படுபவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், லோகமாதாவுமாகிய தங்களை வணங்குகிறேன். 6


Meaning :

Oh Mother who puts an end to sorrows of devas, Oh helper of devas,
Oh Goddess always served by sages and devas, I salute you the Mother who is worshipped by devas. 6

Monday, 13 December 2021

Sri Somasundara Stuti - Sloka 4

Sri Somasundara Stuti - Sloka 4

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


यं विदित्वा बुधास्सर्वे कर्मबन्धविवर्जिताः ।
लभन्ते परमां मुक्तिं तं वन्दे सोमसुन्दरम् ॥ ४ ॥

யம்ʼ விதி³த்வா பு³தா⁴ஸ்ஸர்வே கர்மப³ந்த⁴விவர்ஜிதா꞉ ।
லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 4 ॥

yaṃ viditvā budhāssarve karmabandhavivarjitāḥ ।
labhante paramāṃ muktiṃ taṃ vande somasundaram ॥ 4 ॥



यं विदित्वा - யம்ʼ விதி³த்வா - எவரை அறிந்தபின்,

सर्वे बुधाः - ஸர்வே பு³தா⁴꞉ - எல்லா அறிஞர்களும்,

कर्म-बन्ध-विवर्जिताः - கர்ம-ப³ந்த⁴-விவர்ஜிதா꞉ - கர்மத்தளையினின்றும் விடுபட்டவர்களாகி,

लभन्ते परमां मुक्तिं - லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ - மேலான வீடுபேற்றை அடைகின்றார்களோ,

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

எவரை அறிந்தபின், எல்லா அறிஞர்களும், கர்மத்தளையினின்றும் விடுபட்டவர்களாகி, மேலான வீடுபேற்றை அடைகின்றார்களோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 4

Meaning :

I adore that Somasundarar, after knowing whom all the scholars get freed from the bondage of deeds and attains higher liberation. 4

Thursday, 9 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 5

Śrī Devyaṣṭakam - Sloka 5

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


जगत्कर्त्रीं जगद्धात्रीं जगत्संहारकारिणीम् ।
मुनिभिः संस्तुतां भद्रां वन्दे त्वां मोक्षदायिनीम् ॥ ५॥

ஜக³த்கர்த்ரீம்ʼ ஜக³த்³தா⁴த்ரீம்ʼ ஜக³த்ஸம்ʼஹாரகாரிணீம் ।
முனிபி⁴꞉ ஸம்ʼஸ்துதாம்ʼ ப⁴த்³ராம்ʼ வந்தே³ த்வாம்ʼ மோக்ஷதா³யினீம் ॥ 5॥

jagatkartrīṃ jagaddhātrīṃ jagatsaṃhārakāriṇīm ।
munibhiḥ saṃstutāṃ bhadrāṃ vande tvāṃ mokṣadāyinīm ॥ 5॥



जगत् कर्त्रीं - ஜக³த் கர்த்ரீம்ʼ - ஜகத்தை உண்டு பண்ணுகிறவளை, 

जगत् धात्रीं - ஜக³த் தா⁴த்ரீம்ʼ - ஜகத்தை ரக்ஷிப்பவளை, 

जगत् संहार-कारिणीं - ஜக³த் ஸம்ʼஹார-காரிணீம்ʼ - ஜகத்தை சம்ஹரிப்பவளை, 

मुनिभिः संस्तुतां - முனிபி⁴꞉ ஸம்ʼஸ்துதாம்ʼ - மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்படுபவளை, 

भद्रां - ப⁴த்³ராம்ʼ - பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளை, 

मोक्ष-दायिनीं - மோக்ஷ-தா³யினீம்ʼ - மோக்ஷத்தைக் கொடுப்பவளை‍‌,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும், ஜகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும், மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்படுபவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன். 5


Meaning :

Oh cause of the world, Oh mother of the world, Oh destroyer of the world,
Oh Goddess prayed by sages, Oh gentle lady, I salute you who grants salvation. 5

Monday, 6 December 2021

Sri Somasundara Stuti - Sloka 3

Sri Somasundara Stuti - Sloka 3

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः । 
ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥

அஶ்வமேதா⁴தி³யஜ்ஞைஶ்ச யஸ்ஸமாராத்⁴யதே த்³விஜை꞉ । 
த³தா³தி ச ப²லம்ʼ தேஷாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 3 ॥

aśvamedhādiyajñaiśca yassamārādhyate dvijaiḥ । 
dadāti ca phalaṃ teṣāṃ taṃ vande somasundaram ॥ 3 ॥


द्विजैः - த்³விஜை꞉ - ப்ராஹ்மணர்களால்

अश्वमेध-आदि यज्ञैः च - அஶ்வமேத⁴-ஆதி³ யஜ்ஞை꞉ ச - அச்வமேதம் முதலான யஜ்ஞங்களால்

समाराध्यते - ஸமாராத்⁴யதே - ஆராதிக்கப்படுபவர் (எவரோ)

तेषां फलं ददाति च - தேஷாம்ʼ ப²லம்ʼ த³தா³தி ச - அந்த ஆராதனைக்குப் பலன் அளிக்கிறவர் (எவரோ)

यः - ய꞉ - எவரோ

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

பிராம்மணர்களால் அச்வமேதம் முதலான யஜ்ஞங்களின் மூலமாக ஆராதிக்கப்படுகிறவரும், அவ்வாராதனைக்குப் பலனளிக்கிறவரும் 
எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 3


Meaning :

I adore that Somasundarar Who worshiped by Brahmins through Yajnas such as Ashwamedham and Who gives benefits for that worship. 3

Friday, 3 December 2021

Śrī Devyaṣṭakam - Sloka 4

Śrī Devyaṣṭakam - Sloka 4

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


कालरात्रिं महारात्रिं मोहरात्रिं जनेश्वरीम् ।
शिवकान्तां शम्भुशक्तिं वन्दे त्वां जननीमुमाम् ॥ ४॥

காலராத்ரிம்ʼ மஹாராத்ரிம்ʼ மோஹராத்ரிம்ʼ ஜனேஶ்வரீம் ।
ஶிவகாந்தாம்ʼ ஶம்பு⁴ஶக்திம்ʼ வந்தே³ த்வாம்ʼ ஜனனீமுமாம் ॥ 4॥

kālarātriṃ mahārātriṃ moharātriṃ janeśvarīm ।
śivakāntāṃ śambhuśaktiṃ vande tvāṃ jananīmumām ॥ 4॥


कालरात्रिं - காலராத்ரிம்ʼ - பிரளயகால ராத்திரியாகவும்,

महारात्रिं - மஹாராத்ரிம்ʼ - மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), 

मोहरात्रिं - மோஹராத்ரிம்ʼ - மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும்,

जन-ईश्वरीं - ஜன-ஈஶ்வரீம்ʼ - தோன்றிய அனைத்தையும் ஆள்பவளை,

शिवकान्तां - ஶிவகாந்தாம்ʼ - சிவபெருமானை ஈர்ப்பவளை,

शम्भुशक्तिं - ஶம்பு⁴ஶக்திம்ʼ - சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளை, 

जननीं - ஜனனீம்ʼ - ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயை,

उमां - உமாம்ʼ - பிரணவத்தின் பொருளானவளை (உமாதேவியை),

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

பிரளயகால ராத்திரியாகவும், மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவராத்திரி முதலான பெருமை வாய்ந்த புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், தோன்றிய அனைத்தையும் ஆள்பவளும், சிவபெருமானை ஈர்ப்பவளும், சம்புவினுடைய (பரமசிவனுடைய) சக்தியாய் இருப்பவளும், ஸகல பிரபஞ்சத்தையும் தோற்றுவிக்கின்ற தாயும், பிரணவத்தின் பொருளுமான (உமாதேவியாகிய), தங்களை வணங்குகிறேன். 4


Meaning :

Oh Black night, Oh great night, Oh night of passion, Oh goddess of wisdom, Oh Consort of Shiva, Oh power of Shiva, I salute you who is mother Uma. 4


காலராத்ரி - பிரளயத்தின்போது இருக்கும் காரிருள்.

மோஹராத்ரி - தமோகுண பிரதானமான இரவுப்பொழுது. 
ஜீவனானது ஞானமெனும் திவாகரனால் தன்னை அறியும் முன், அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியிருக்கிற நிலை.