Wednesday, 31 July 2019

Sri Varadaraja Stotram - Sloka 3

Sri Varadaraja Stotram - Sloka 3

॥  श्री वरदराज स्तोत्रम्  ॥

|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||

||  ŚRĪ VARADARĀJA STOTRAM  ||

हरिर्हस्तिगिरीशानो हृतप्रणतदुष्कृतः ।
तत्त्वरूपस्त्वष्टृकृतकाञ्चीपुरवराश्रितः ॥ ३॥

ஹரிர்ஹஸ்திகி³ரீஶாநோ ஹ்ருʼதப்ரணதது³ஷ்க்ருʼத: ।
தத்த்வரூபஸ்த்வஷ்ட்ருʼக்ருʼதகாஞ்சீபுரவராஶ்ரித: ॥ 3॥

harirhastigirīśāno hṛtapraṇataduṣkṛtaḥ ।
tattvarūpastvaṣṭṛkṛtakāñcīpuravarāśritaḥ ॥ 3॥

பொருள் :

பாபங்களைப் போக்குகிறவரும், ஹஸ்திகிரி ( யானை மலைக்கு ) அதிபரும், நமஸ்கரித்தவர்களின் பாபத்தைப் போக்குகிறவரும், தத்துவ ஸ்வரூபியும், தேவதச்சனால் செய்யப்பட்ட சிறந்த காஞ்சீபுர க்ஷேத்திரத்தில் இருப்பவரும் ( இருப்பவருமான வரதராஜர் நம்மை ரக்ஷிக்கட்டும். )   3

Meaning :

Oh Hari  , oh owner of Hasthagiri mountain ,

Who destroys   the sins of those who salute you ,

Who has  the form of philosophy  

And who lives in the auspicious temple  made  by the carpenter  of heavens.   3

हरिः  -  ஹரி꞉:  -  பாபங்களை போக்குபவர்,

हस्तिगिरि-ईशानः  -  ஹஸ்திகி³ரி-ஈஶான꞉:  -  ஹஸ்திகிரி க்ஷேத்திரத்தை ஆளுபவர்,

हृत-प्रणत-दुष्कृतः  -  ஹ்ருʼத-ப்ரணத-து³ஷ்க்ருʼத꞉:  -  தன்னை வணங்குபவரின் பாபங்களை நீக்குபவர்,

तत्त्वरूपः  -  தத்த்வரூப꞉:  -  தத்துவ ரூபமானவர்,

त्वष्टृकृत काञ्चीपुर वराश्रितः  -  த்வஷ்ட்ருʼக்ருʼத காஞ்சீபுர வராஶ்ரித꞉:  -  தேவதச்சனால் அல்லது த்வஷ்ட்ரு எனும் தச்சனால் உருவாக்கப்பட்ட மேலான காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள  தெய்வம்.

Tuesday, 30 July 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Phalasruti ( Final )

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Phalasruti ( Final )

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

सुब्रह्मण्याष्टकं पुण्यं ये पठन्ति द्विजोत्तमाः ।
ते सर्वे मुक्तिमायान्ति सुब्रह्मण्यप्रसादतः ॥

सुब्रह्मण्याष्टकमिदं प्रातरुत्थाय यः पठेत् ।
कोटिजन्मकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥

॥ इति श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम‌् ॥

ஸுப்³ரஹ்மண்யாஷ்டகம்ʼ புண்யம்ʼ யே பட²ந்தி த்³விஜோத்தமா꞉: ।
தே ஸர்வே முக்திமாயாந்தி ஸுப்³ரஹ்மண்யப்ரஸாத³த꞉: ॥

ஸுப்³ரஹ்மண்யாஷ்டகமித³ம்ʼ ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
கோடிஜன்மக்ருʼதம்ʼ பாபம்ʼ தத்க்ஷணாதே³வ நஶ்யதி ॥

॥ இதி ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

subrahmaṇyāṣṭakaṃ puṇyaṃ ye paṭhanti dvijottamāḥ ।
te sarve muktimāyānti subrahmaṇyaprasādataḥ ॥

subrahmaṇyāṣṭakamidaṃ prātarutthāya yaḥ paṭhet ।
koṭijanmakṛtaṃ pāpaṃ tatkṣaṇādeva naśyati ॥

॥ iti śrī subrahmaṇya karāvalamba stotram ॥

பொருள் :

பலன் :

எந்த பிராம்மணர்கள் புண்ணியம் மிகுந்த இந்த ஸுப்ரஹ்மண்ய அஷ்டகத்தைப் படிக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் முருகப்பெருமானின் கருணையினால் முக்தியை அடைவார்கள்.

யார் இந்த ஸுப்ரஹ்மண்ய அஷ்டகத்தை, காலையில் எழுந்து படிக்கிறார்களோ, அவர்களது கோடி ஜென்ம பாபங்கள் அந்த க்ஷணத்திலேயே தொலைகின்றது.  

இத்துடன் ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

Meaning :

Benefits :

The twice born who reads this octet on Subrahmanya,
Would attain salvation by the grace of Lord Subrahmanya,
And for him who reads this octet on Subrahmanya, as soon as,
He gets up in the morning, the sins committed in billons,
Of previous births will vanish in a second.

Thus ends Sri Subrahmanya Karavalamba Stotram.

Sunday, 28 July 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 7

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 7

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

स्वतीर्थमृद्भस्मभृताङ्गभाजां पिशाचदुःखार्तिभयापहाय ।
आत्मस्वरूपाय शरीरभाजां श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ७॥

ஸ்வதீர்த²ம்ருʼத்³ப⁴ஸ்மப்⁴ருʼதாங்க³பா⁴ஜாம் பிஶாசது:³கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம் ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 7॥

svatīrthamṛdbhasmabhṛtāṅgabhājāṃ piśācaduḥkhārtibhayāpahāya ।
ātmasvarūpāya śarīrabhājāṃ śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 7॥

स्व-तीर्थ-मृद्-भस्म-भृत‌-अङ्ग-भाजां  -  ஸ்வ-தீர்த²-ம்ருʼத்³-ப⁴ஸ்ம-ப்⁴ருʼத-அங்க³-பா⁴ஜாம்ʼ   -   தன் ( குளத்தில் ) தீர்த்த ஸ்நானம், ( புற்று ) மண் ( பிரஸாதம் ), விபூதி பூசிக் கொண்டவர்களது,

पिशाच-दुःख-आर्ति-भय-अपहाय   -  பிஶாச-து³꞉:க²-ஆர்தி-ப⁴ய-அபஹாய  -  பிசாசு, துன்பங்கள், மனவேதனைகள், பயம் இவைகளைப் போக்குபவருக்கு,

शरीर-भाजां   -  ஶரீர-பா⁴ஜாம்ʼ  -  உடலை உடையவரது,

आत्म-स्वरूपाय  -  ஆத்ம-ஸ்வரூபாய  -  தன்னுணர்வாக இருப்பவருக்கு,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

தன் ( குளத்தில் ) தீர்த்த ஸ்நானம், ( புற்று ) மண் ( பிரஸாதம் ), விபூதி பூசிக் கொண்டவர்களது பிசாசு, துன்பங்கள், மனவேதனைகள், பயம் இவைகளைப் போக்குபவரும், உடலை உடையவரது தன்னுணர்வாக இருப்பவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.   7

#  स्व-तीर्थ-मृद्-भस्म-भृत‌-अङ्ग-भाजां  -  ஸ்வ-தீர்த²-ம்ருʼத்³-ப⁴ஸ்ம-ப்⁴ருʼத-அங்க³-பா⁴ஜாம்ʼ   -    ஸ்வ என்பதற்கு தன்னுடைய எனப் பொருள்.    என்றால் தன்னுடைய தனக்குச் சொந்தமான, தனது அருள்மிகு எந்த தீர்த்தத்தையும், எப்பிரதேசத்து மண்ணையும், விபூதியையும் குறிக்கலாம். பக்திபாவத்துடன் இருந்தாலே போதும். அப்பேற்பட்ட பக்தியிருப்பின் வீட்டு மண் கூட பிரசாதம் போன்று புனிதத்தோடு விளங்கும், பகவான் எங்கும் வியாபித்திருப்பதால்.  இங்கு 'ஸ்வ' என்பது வைத்தியநாத க்ஷேத்திரத்தைச் சார்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டியது.

#  पिशाच-दुःख-आर्ति-भय-अपहाय   -  பிஶாச-து³꞉:க²-ஆர்தி-ப⁴ய-அபஹாய  -    வைத்தீச்வரன் கோவிலைச் சார்ந்த   சித்தாமிர்த குளமத்தில் தீர்த்த ஸ்நானம் செய்து, பிரஸாதமாகக் கிடைக்கின்ற மண், விபூதி இவைகளைத் தரித்தவரை, வைத்தியநாதர்,  பிசாசுகள் முதலானவைகளால் உண்டாகும் இன்னல்கள்; உடல் மனம் இவைகளுக்கு ஏற்படும் துன்பங்கள்; எல்லாவிதமான பயத்தையும் போக்குகிறார் என்றாகிறது.

#  शरीर-भाजां   -  ஶரீர-பா⁴ஜாம்ʼ  -  உடலை உடையவரது. அதாவது மேற்கூறிய துன்பங்கள் எல்லாமே, உடலையும் அதனுடன் கூடிய மனம் இவைகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் ஆத்மாவைப் பொருத்தவரை, உடலே ஒரு பெரும் வியாதி, துன்பம் எனலாம். அந்த உடலை உடையவரது என்று கொள்க.

#  आत्म-स्वरूपाय  -  ஆத்ம-ஸ்வரூபாய  -  தன்னுணர்வாக இருப்பவருக்கு. தன்னுணர்வு என்றால் நாம் நம்மிலுள்ள எதை நாம் என்று அறிகிறோமோ, அதுவேயாகும். நான் எனும் உணர்வு, உணர்வின் ஊற்று. அது பகவான் தான். அதாவது  உடலை தான் என்றும் உடலுக்கு வருவதைத் தனக்கு வருவதாக எண்ணுகிற, அறிகிற மயக்கத்தைத் தெளிவித்து, தான் என்பது எதுவென்று உள்ளதை உள்ளபடி விளக்குபவருக்கு என்று கொள்க.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who removes all suferings,
Caused by bad spirits, sorrows and fears,
By dip in his holy tank,
By the holy ash in the temple,
And by the mud below the neem tree of the temple,
And who is the personification of soul,
Occupying human body.   7

Sri Maha Ganesha Pancha Ratnam - Sloka 4

Sri Maha Ganesha Pancha Ratnam  -  Sloka 4

॥ श्री महागणेश पञ्चरत्नम् ॥

॥ ஶ்ரீ மஹாக³ணேஶ பஞ்சரத்னம் ॥

॥ ŚRĪ MAHĀGAṆEŚA PAÑCARATNAM ॥

अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनम्
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम्॥४॥

அகிஞ்சனார்திமார்ஜனம்ʼ சிரந்தனோக்திபா⁴ஜனம்
புராரிபூர்வனந்த³னம்ʼ ஸுராரிக³ர்வசர்வணம்।
ப்ரபஞ்சனாஶபீ⁴ஷணம்ʼ த⁴னஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³னவாரணம்ʼ ப⁴ஜே புராணவாரணம்॥4॥

akiñcanārtimārjanaṃ cirantanoktibhājanam
purāripūrvanandanaṃ surārigarvacarvaṇam।
prapañcanāśabhīṣaṇaṃ dhanañjayādibhūṣaṇam
kapoladānavāraṇaṃ bhaje purāṇavāraṇam॥4॥

अकिञ्चन-आर्ति-मार्जनं   -  அகிஞ்சன-ஆர்தி-மார்ஜனம்ʼ  -  ஏதும் இல்லாதவர்களுடைய ( ஏழைகளின் ) துன்பங்களைத் துடைப்பவரை,

चिरन्तन-उक्ति-भाजनं  -  சிரந்தன-உக்தி-பா⁴ஜனம்ʼ  -  பழமைச் சொல்லான வேதத்தால் போற்றப்படுபவரை,

पुरारि-पूर्व-नन्दनं  -  புராரி-பூர்வ-நந்த³னம்ʼ  -  புராரியின் ( முப்புரங்களை அழித்த சிவபெருமான் ) மூத்த குமாரரை,

सुर-अरि-गर्व-चर्वणं  -  ஸுர-அரி-க³ர்வ-சர்வணம்ʼ  -  தேவர்களுடைய எதிரிகளின் ( அஸுரர்கள் )  கர்வத்தை அழிப்பவரை ( மென்று தின்பதைப் போல ),

प्रपञ्च-नाश-भीषणं   -  ப்ரபஞ்ச-நாஶ-பீ⁴ஷணம்ʼ  -  உலகு  அழியும் பிரளய காலத்தில் உக்கிரமான ரூபம் கொள்பவரை,

धनञ्जय-आदि-भूषणं  -  த⁴னஞ்ஜய-ஆதி³-பூ⁴ஷணம்ʼ  -  தனஞ்ஜயன் முதலான நாகங்களை  அணிகலன்களாக அணிந்தவரை,

कपोल-दान-वारणं   -  கபோல-தா³ன-வாரணம்ʼ  -  கன்னத்தில் மதஜலப்பெருக்கை உடையவரை,

पुराण-वारणं भजे  -  புராண-வாரணம்ʼ ப⁴ஜே  -  எல்லோருக்கும் முந்தையவரான யானைமுக விநாயகரை வழிபடுகிறேன்.

பொருள் :

ஏதும் இல்லாதவர்களுடைய ( ஏழைகளின் ) துன்பங்களைத் துடைப்பவரும், பழமைச் சொல்லான வேதத்தால் போற்றப்படுபவரும், புராரியின் ( முப்புரங்களை அழித்த சிவபெருமான் ) மூத்த குமாரரும், தேவர்களுடைய எதிரிகளின் ( அஸுரர்கள் )  கர்வத்தை அழிப்பவரும் ( மென்று தின்பதைப் போல ), உலகு  அழியும் பிரளய காலத்தில் உக்கிரமான ரூபம் கொள்பவரும், தனஞ்ஜயன் முதலான நாகங்களை  அணிகலன்களாக அணிந்தவரும்,
கன்னத்தில் மதஜலப்பெருக்கை உடையவரும், எல்லோருக்கும் முந்தையவரான யானைமுக விநாயகரை வழிபடுகிறேன்.   4

*  அகிஞ்சனர்கள் என்றால் தனக்கென்று சங்கல்பம் ஒன்றுமில்லாத சரணாகதர்கள் என்றும் கொள்ளலாம்.

விளக்கவுரை :

கணேச பஞ்சரத்னத்ல அடுத்த ஸ்லோகம்,

अकिंचनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनंजयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥४॥

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ  நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

‘அகிஞ்சன:’ அப்படின்னா ஏழைகள், ஒரு பைசாஇல்லாதவா. அந்த ஏழ்மையின் கொடுமையை, ‘அகிஞ்சன ஆர்த்தி மார்ஜனம்‘ – போக்குபவர்.

வறியவர்களின் துன்பத்தை துடைப்பவர், அப்படிபிள்ளையாரை வேண்டிண்டா ஏழ்மை போகும். இங்கே திருவல்லிக்கேணில பெரியதெருல ஒருஅரசடி கற்பகவிநாயகர் இருக்கார். ஸ்வாமிகளுக்குரொம்ப இஷ்டமான பிள்ளையார். ரொம்பவரங்களைத் தருபவர். முதல்ல, Triplicane ல தான்நிறைய வந்து பிராமணா Settle ஆனா. அதுக்கப்புறம், இப்போ சென்னை முழுக்க இருக்கா, உலகம் முழுக்கஇருக்கா. எல்லாருக்கும் அந்த, திருவல்லிக்கேணிகாறாளுக்கு எல்லாம் அந்தபிள்ளையார்ட்ட ஒரு பக்தியும், ப்ரியமும் இருக்கும். எங்களை வாழ வெச்சார். குடும்பத்தை வாழ வெச்சார். தலைதூக்கினோம். அதே மாதிரி ஒவ்வொருஊர்லயும் இருக்கும். மைலாபூர்ல போனா,கபாலீஸ்வரர் கோவில்ல இருக்குறபிள்ளையாராகட்டும், Luz வரசித்தி விநாயகராகட்டும், ஒவ்வொரு பேட்டையும், திருச்சில மலைக்கோட்டைபிள்ளையார், மாணிக்க விநாயகர் அப்படின்னு, அந்தபிள்ளையார்ட்ட வேண்டிண்டு நன்னாஇருக்கோம்ன்னு நிறையபேர் சொல்வா.

‘சிரந்தனோக்தி பாஜனம்’ – அப்படின்னா, ‘சிரம்’எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ‘உக்தி’ – வசனங்கள். அதாவது, வேத வசனங்களால்துதிக்கப்படுபவர் அப்படின்னு ஒரு அர்த்தம். இன்னொண்ணு, என்னைக்கும் இருக்கக்கூடிய ஒருவார்த்தை அப்படின்னா அது பிரணவம். அந்தநிர்குணபிரம்மம், ஸகுனமா மாற்றதுக்கு, நாதஸ்வரூபாமா வந்தது அந்த பிரணவம். அந்தபிரணவப் பொருளே பிள்ளையார் தான்.

‘புராரி பூர்வ நந்தனம்’ – ‘புராரி’ன்னா முப்புரங்களைஎரித்த பரமேஸ்வரன். அவருடைய ‘பூர்வ நந்தனம்’அப்படின்னா மூத்த பிள்ளைன்னு அர்த்தம். இந்தகணேச பஞ்சரத்னத்ல முருகப்பெருமானை பத்திDirect reference இல்லை. ஆனா பரமேஸ்வரனுடையமூத்த பிள்ளை சொன்னதுனால, அவருக்கு ஒருஇளையப் பிள்ளை இருக்கார் அப்படின்னுஆறதில்லையா! ‘ஸ்கந்த பூர்வஜ:’ அப்படின்னு நம்மபிள்ளையாருக்கு அர்ச்சனை பண்றோம். முருகனுக்குஅண்ணா. முருகனுக்கு வள்ளியை கல்யாணம்பண்ணி வைச்சவரே பிள்ளையார்தானே. அப்படி, பரமேஸ்வரனுடைய மூத்த பிள்ளை.

‘ஸுராரி கர்வ சர்வணம்’ – ‘ஸுரர்’கள்ன்னா தேவர்கள். தேவர்களுடைய எதிரிகளான அசுரர்களுடையகர்வத்தை பொடிப்பொடியாக்கினவரும்.

‘ப்ரபஞ்ச நாஶ பீஷணம்’ – ப்ரபஞ்சத்தையேஅழிக்கக்கூடிய ஊழி காலத்துப் ப்ரளயத்தை போலஉக்ராமானவரும் அப்படின்னு அர்த்தம். அந்தஉக்ரமான ருத்ர ஸ்வரூபமும் பிள்ளையார்தான். குழந்தை ஸ்வரூபமும் பிள்ளையார்தான்.

‘தனஞ்ஜயாதி பூஷணம்’ – தனஞ்ஜயன் முதலானபாம்புகளை அணிந்து கொண்டிருப்பவர். இடுப்புலஇவரை சுத்தி, ஒரு பாம்பை ஆபரணமாஅணிஞ்சிண்டு இருக்கார் இல்லையா. அந்த மாதிரிஒரு அர்த்தம். ‘தனஞ்ஜயன்’னா குடை. இந்த குடையைவெச்சுண்டு அலங்காரம் பண்ணி பிள்ளையார்சதுர்த்தி கொண்டாடறது சென்னைல ரொம்பவிசேஷமா பண்றா. ஸ்வாமிகள், ‘நான் திருச்சிலகூடபார்க்கலை! சென்னைலதான் பார்த்தேன்!’அப்படின்னு சொல்வார்.

‘கபோல தானவாரணம்’ – ‘கபோலம்’னா கன்னம், கன்னத்துலேர்ந்து அந்த மதஜலம் ஒழுகறது. அந்தயானைகளுடைய வீர்யத்தை காமிக்கற அடையாளம்அது. அப்படிப்பட்ட ‘பஜே புராண வாரணம்’ – ஆதியானை வடிவமாக விளங்கும் அந்த பரம்பொருளைபஜிக்கிறேன் அப்படின்னு அர்த்தம்.

இதுல இந்த ‘ப்ரபஞ்ச நாஶ பீஷணம்‘ அப்படிங்கறதுக்கு இந்த ஐம்பூதங்களினாலானப்ரபஞ்சத்தை நாசனம் பண்றது அப்படின்னா, மனோநாசனம் பண்ணி ஞானத்தை அநுக்கிரஹம் பண்றார். அதுக்கு, அந்த  ‘கபோல தானவாரணம்‘னாகன்னத்துலேர்ந்து மதஜலம் கொட்டறமாதிரிஅவருடையை கருணை கொட்டறது. அதுமூலமா, பக்தர்களுடைய அஞ்ஞானத்தைப் போக்கி, கருணையினால ஞானத்தை கொடுக்கிறார்.

இந்த ‘தனஞ்ஜயாதி பூஷணம்‘ங்கறதுக்கும்குண்டலினி சர்ப்பம், மூலாதாரம், அப்படி எல்லாம்யோகமான அர்த்தங்களெல்லாம் போட்டுருக்கா. இந்தஇடத்துல எனக்கு மஹாபெரியவா சொன்னதுஞாபகம் வர்றது. ‘அந்த ஔவைப் பாட்டி விநாயகர்அகவல் பண்ணியிருக்கா. அந்த விநாயகர் அகவல்யோகா சூத்திரமா இருக்கு. நமக்குபுரியலைன்னாலும், நாம படிச்சுண்டே வந்தாபிள்ளையார் ஞானத்தை கொடுத்துடுவார்!’ அப்படின்னு பெரியவா சொல்றா. அதை நாம follow பண்ணுவோம். இது நாலாவது ஸ்லோகம்.

சித்தி விநாயக மூர்த்திக்கி… ஜெய்

Meaning :

I adore (bhaje) ancient, primordial elephant (purANa vAraNam) who :

21) does wiping away (mArjanaM) of the afflictions (Arti) of the destitute (akinchana) ;

22) is the representative/abode of (bhAjanaM) the divine word [ukta (AUM)];

23) exists from ancient times (chiranta);

24) is the son (nandanaM), of the One who destroyed the tripura--triple cities (purAri) in former times (pUrva) ;

25) destroys [charvaNa (as if by chewing away)], the pride and arrogance (garva), 
of the enemy of the Devas (surAri), that is, the Asuras;

26) is the Terrible One (bhIShaNaM) at the time of dissolution of the Universe (prapancha-nAshanam);

27) has Dhananjaya and other serpants (dhanaMjaya Adi) as decorations (bhUShaNaM) ;

28) is the elephant (vAraNam) who is filled with the rut-fluid in the cheeks (kapoladAna). 4

Saturday, 27 July 2019

Sri Varadaraja Stotram - Sloka 2

Sri Varadaraja Stotram - Sloka 2

॥  श्री वरदराज स्तोत्रम्  ॥

|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||

||  ŚRĪ VARADARĀJA STOTRAM  ||

सत्यव्रतक्षेत्रवासी सत्यवज्जनपोषकः ।
सर्गस्थित्युपसंहारकारी सुगुणवारिधिः ॥ २॥

ஸத்யவ்ரதக்ஷேத்ரவாஸீ ஸத்யவஜ்ஜநபோஷக: ।
ஸர்க³ஸ்தி²த்யுபஸம்ஹாரகாரீ ஸுகு³ணவாரிதி:⁴ ॥ 2॥

satyavratakṣetravāsī satyavajjanapoṣakaḥ ।
sargasthityupasaṃhārakārī suguṇavāridhiḥ ॥ 2॥

பொருள் :

சத்தியவிரதம் என்னும் காஞ்சீபுர க்ஷேத்ரத்தில் வசிப்பவரும், சாது ஜனங்களை வளர்ப்பவரும், படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்கின்றவரும், கல்யாண குணங்களுக்கு சமுத்திரம்போல் இருப்பவரும் ( நம்மைக் காக்கட்டும். )   2

Meaning :

Oh Lord who lives in SAthyavrutha (Kanchipuram) temple, who nurtures truly  good people ,

Who does the acts  of creation, upkeep and destruction and who is ocean of good characters.   2

सत्यव्रत-क्षेत्र-वासी   -   ஸத்யவ்ரத-க்ஷேத்ர-வாஸீ  -  ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் ( காஞ்சி ) வஸிப்பவர்.

सत्यवत‌्-जन-पोषकः  -  ஸத்யவத்-ஜன-போஷக꞉:  -  ஸத்யத்தைப் பின்பற்றுகிற ( ஸாது ) ஜனங்களைப் போஷிப்பவர்.

सर्ग-स्थिति-उपसंहार-कारी   -  ஸர்க³-ஸ்தி²தி-உபஸம்ʼஹார-காரீ  -  படைத்தல், காத்தல், அழித்தல்  இவைகளைச் செய்பவர்.

सुगुण-वारिधिः  -  ஸுகு³ண-வாரிதி⁴꞉:  -  நற்குணங்கள் நிரம்பிய கடல்.

Wednesday, 24 July 2019

Sri Varadaraja Stotram - Sloka 1

Sri Varadaraja Stotram - Sloka 1

॥  श्री वरदराज स्तोत्रम्  ॥

|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||

||  ŚRĪ VARADARĀJA STOTRAM  ||

श्रीमद्वरदराजेन्द्रः श्रीवत्साङ्कः शुभप्रदः ।
तुण्डीरमण्डलोल्लासी तापत्रयनिवारकः ॥ १॥

ஶ்ரீமத்³வரத³ராஜேந்த்³ர: ஶ்ரீவத்ஸாங்க: ஶுப⁴ப்ரத:³ ।
துண்டீ³ரமண்ட³லோல்லாஸீ தாபத்ரயநிவாரக: ॥ 1॥

śrīmadvaradarājendraḥ śrīvatsāṅkaḥ śubhapradaḥ ।
tuṇḍīramaṇḍalollāsī tāpatrayanivārakaḥ ॥ 1॥

பொருள் :

மங்களத்தை அளிப்பவரும், தொண்டைமண்டலத்தில் சந்தோஷமாக இருப்பவரும், மூன்றுவித தாபத்தைப் போக்குகிறவரும், ஸ்ரீமானும், ஸ்ரீவத்ஸத்தை மார்பில் தரிக்கிறவருமான மஹிமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜன் ( நம்மை காக்க வேண்டும்.)   1

Meaning :

1.Oh  Lord Varadaraja  , who has Sri vathsa  on his body, Who grants  auspiciousness,

Who enjoyed staying in Thondai mandalam and who  removes  three  types of sufferings,.  1

श्रीमद्-वरद-राजेन्द्रः  -  ஶ்ரீமத்³-வரத³-ராஜேந்த்³ர𑌃:  -  திருமகளுடன் கூடிய ஸ்ரீ வரதராஜர்,

श्रीवत्स-अङ्कः  -  ஶ்ரீவத்ஸ-அங்க𑌃: -  ஸ்ரீவத்ஸம் எனும் வடுவைத் தாங்கியவர்,

शुभ-प्रदः  -  ஶுப⁴-ப்ரத:³𑌃  -  மங்களங்களைத் தருபவர்,

तुण्डीर-मण्डल-उल्लासी  -. துண்டீ³ர-மண்ட³ல-உல்லாஸீ  -. 0 தொண்டைமண்டலத்தில் சந்தோஷமாக இருப்பவர்,

ताप-त्रय-निवारकः   -  தாப-த்ரய-நிவாரக𑌃:  -   மூன்று வித தாபங்களைப் நீக்குபவர்.

Tuesday, 23 July 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 8

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 8

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

श्रीकार्तिकेय करुणामृतपूर्णदृष्ट्या
    कामादिरोगकलुषीकृतदुष्टचित्तम् ।
सिक्त्वा तु मामव कलाधरकान्तिकान्त्या
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ८॥

ஶ்ரீகார்திகேய கருணாம்ருʼதபூர்ணத்³ருʼஷ்ட்யா
காமாதி³ரோக³கலுஷீக்ருʼதது³ஷ்டசித்தம் ।
ஸிக்த்வா து மாமவ கலாத⁴ரகாந்திகாந்த்யா
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 8॥

śrīkārtikeya karuṇāmṛtapūrṇadṛṣṭyā
    kāmādirogakaluṣīkṛtaduṣṭacittam ।
siktvā tu māmava kalādharakāntikāntyā
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 8॥

பொருள் :

கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த பாலனே, உந்தன் பரிபூரண அருள் கிடைப்பது என்பது கருணைக் கடலில் மூழ்கிக் குளிப்பது போன்ற மகிமை பொருந்தியது அல்லவா! என்னிடமுள்ள காமம், க்ரோதம், கோபம் முதலான நோய்களை தங்கள் அருள் எனும் மருந்தால் நீங்கச் செய்து என்னை உய்விப்பீர்களாக. பிறையணிந்த பரமசிவன், பார்வதியின் பேரன்பிற்குப் பாத்திரமானவனே, வள்ளி மணாளனே, என்னைக் கைவிடாது காத்து அருள்வீராக.   8

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who is known as Karthikeya, who with his,
Fully nectar like looks of mercy cures, 
Passion, diseases and mind which has made been dirty 
Who is the treasure house of arts and 
Who shines like billions of suns.   8

Sunday, 21 July 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 6

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 6

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

वेदान्तवेद्याय जगन्मयाय योगीश्वरद्येय पदाम्बुजाय ।
त्रिमूर्तिरूपाय सहस्रनाम्ने श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ६॥

வேதா³ந்தவேத்³யாய ஜக³ந்மயாய யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 6॥

vedāntavedyāya jaganmayāya yogīśvaradyeya padāmbujāya ।
trimūrtirūpāya sahasranāmne śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 6॥

वेद-अन्त-वेद्याय   -   வேத³-அந்த-வேத்³யாய  -   வேதங்கள் அறுதியிடும் முடிவான பொருளானவருக்கு,

जगत‌्-मयाय   -   ஜக³த்-மயாய   -   நமக்கு தெரிகின்ற உலகமயமாக இருப்பவருக்கு,

योगीश्वर-ध्येय पद-अम्बुजाय   -   யோகீ³ஶ்வர-த்⁴யேய பத³-அம்பு³ஜாய   -   யோகத்தில் கரைகண்டவர்களால் தியானிக்கப்படுகின்ற பாதகமலங்களை உடையவருக்கு,

त्रिमूर्ति-रूपाय   -   த்ரிமூர்தி-ரூபாய   -   மும்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ) ரூபமாய் விளங்குபவருக்கு,

सहस्र-नाम्ने   -   ஸஹஸ்ர-நாம்னே   -   ஆயிரம் நாமங்களை உடையவருக்கு,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

வேதங்கள் அறுதியிடும் முடிவான பொருளானவருக்கு, நமக்கு தெரிகின்ற உலகமயமாக இருப்பவருக்கு, ஈசா வாஸ்யம் இதம் ஜகத் என்றறிகிறதான யோகத்தில் கரைகண்டவர்களால் தியானிக்கப்படுகின்ற பாதகமலங்களை உடையவருக்கு, மும்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ) ரூபமாய் விளங்குபவருக்கு, ஆயிரம் நாமங்களை உடையவருக்கு, ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.    6

#  वेद-अन्त-वेद्याय   -   வேத³-அந்த-வேத்³யாய  -     பரம்பொருள் ஒன்றே. இத்தகைய முடிவை வேதங்களின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டும். நம் புலன்களால் அறிந்தோ, புத்தியால் யூகித்தோ அறிவது பிழை. வேதங்கள் அறுதியிட்டுக் கூறுவதை புரிந்துகொள்வதற்கு புலனறிவோ, அனுமானங்களோ உதவியாக இருக்கலாம். வேதங்களைக் கடைந்து, அதனினும் ஸாரமாகிய உபநிடதங்களால் கிடைக்கப்பெறுகின்ற ஸாரதமமான முடிவு, பரம்பொருளே ( அநாமம், அரூபம் ). அதுவே இங்கு வைத்தியநாதர் ( நாமம், ரூபம் ) எனும் பெயர் கொண்டுள்ளது.

#  जगत‌्-मयाय   -   ஜக³த்-மயாய   -   சரி. அப்படியானல் தெரிகின்ற பலதரப்பட்டதான இவ்வுலகம்.?! அதுவும் பரம்பொருளே. எனவே தான் பல நாமரூப பேதங்களுடன் கடவளைக் கொண்டாடி அனுபவிக்க முடிகிறது. நான் புளியோதரை சாப்பிட்டேன், நான் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன், நான் மோர் அருந்தினேன், நான் நீர் அருந்தினேன் என்று பலப்பல பதார்த்தங்களை, பல வகைகளில் உட்கொண்டாலும் , அப்பதார்த்தங்களிலிருந்து கிடைத்த அனுபவத்தை அனுபவித்தது நான் தான். எல்லோருள்ளும் இந்த நான் பொதுவாக இருக்கிறது. அந்த நான் என்ற அனுபவம் ஒன்றே. இவ்வாறே பரம்பொருள் ஒன்றே, உலகமயமாக இருக்கிறார் என்பது எளிமையாக விளக்குவதாகக் கொள்ளலாம்.

#  योगीश्वर-ध्येय पद-अम्बुजाय   -   யோகீ³ஶ்வர-த்⁴யேய பத³-அம்பு³ஜாய   -   இத்தகைய குழப்பக்கூடிய விஷயங்களை, " ஈசா வாஸ்யம் இதம் ஜகத் " என்று அவன் அருளாலே அறிந்து புரிந்து இயைந்து, அதிலிருந்து பிறழாமல் வசித்துக் கொண்டிருப்பவனை யோகி எனலாம். இந்த யோகத்தில் கரைகண்டவரான யோகீச்வரர்களால் ஸதா நினைக்கப்படுகின்ற பாத கமலங்களை உடையவருக்கு என்று கொள்ளலாம்.

#  सहस्र-नाम्ने   -   ஸஹஸ்ர-நாம்னே   -   ஆயிரம் நாமங்கள் மட்டும் என்றல்ல. ஆயிரமாயிரமாய் நாமங்கள் கணக்கிட இயலாதவை.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who can be known through vedantha,
Who is spread through out the universe,
Who has a lotus feet ,
That is meditated upon by great sages,
Who is of the form of the holy trinity,
And who has thousand names.   6