Sri Vaidyanaatha Ashtakam - Sloka 4
॥ श्री वैद्यनाथाष्टकम् ॥
॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥
॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥
प्रभूतवातादि समस्तरोग प्रनाशकर्त्रे मुनिवन्दिताय ।
प्रभाकरेन्द्वग्नि विलोचनाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ४॥
ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³ ப்ரநாஶகர்த்ரே முநிவந்தி³தாய ।
ப்ரபா⁴கரேந்த்³வக்³நி விலோசநாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 4॥
prabhūtavātādi samastaroga pranāśakartre munivanditāya ।
prabhākarendvagni vilocanāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 4॥
प्रभूत-वात-आदि समस्त रोग प्रनाश कर्त्रे - ப்ரபூ⁴த-வாத-ஆதி³ ஸமஸ்த ரோக³ ப்ரனாஶ கர்த்ரே - மிகைப்பட்ட வாதம் முதலியவைகளால் உண்டாகக்கூடிய அனைத்து ரோகங்களையும், முற்றிலும் நீங்கும்படி செய்பவருக்கு,
मुनि-वन्दिताय - முனி-வந்தி³தாய - முனிவர்களால் வணங்கப்படுபவருக்கு,
प्रभाकर-इन्दु-अग्नि विलोचनाय - ப்ரபா⁴கர-இந்து³-அக்³னி விலோசனாய - சூரியன், சந்திரன், அக்னி இவைகளைக் கண்களாகக் கொண்டவருக்கு,
श्री वैद्य-नाथाय नमःशिवाय - ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய - ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
பொருள் :
மிகைப்பட்ட வாதம் முதலியவைகளால் உண்டாகக்கூடிய அனைத்து ரோகங்களையும், முற்றிலும் நீங்கும்படி செய்பவரும்,
முனிவர்களால் வணங்கப்படுபவரும்,
சூரியன், சந்திரன், அக்னி இவைகளைக் கண்களாகக் கொண்டவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 4
# ஸமஸ்த ரோக³ ப்ரனாஶ கர்த்ரே - என்பதற்கு முற்றிலும் அனைத்து ரோகங்களையும் அதாவது சொல்லப்பட்ட சொல்லப்படாத, தெரிந்த தெரியாத, புரிந்த புரியாத யாதொரு நோயாகயிருப்பினும் அதை நீக்குபவர் என்றும்; உடலுக்கு ஏற்படும் நோய், உடல் எனும் நோய், ஸம்ஸாரம் எனும் நோய்.... முற்றிலும் ரோகங்களை நீக்குவது என்றால் - மீதமின்றி பின்னாளில் மீண்டும் ஏற்பட்டுவிடாவண்ணம் நீக்குவது. அதாவது அனைத்து ரோகங்களுக்கும் காரணமாகக் கொள்ளப்படுவது அவரவரது கர்மவினையையே. அந்த கர்மங்களை மீதமில்லாமல் நீக்குவது. மேலும் கர்மங்களுக்கும் காரணம் அவரவரது ஸ்வரூபத்தை அறியாதிருத்தலே எனக்கொண்டால், அதையும் மீதமில்லாமல் நீக்குவது = ஆத்ம ஸாக்ஷாத்காரம். இதையே அனைத்து ரோகங்களையும், முற்றிலும் நீங்கும்படி செய்பவருக்கு என்று கொள்ளலாம்.
# मुनि-वन्दिताय - முனி-வந்தி³தாய - மருத்துவம், ஜோதிடம், வேதாந்தம் என்று பல பிரிவுகளில், பல நூல்களை இயற்றி, என்றைக்கும் பயன்படும்படி தந்த அகத்தியர், ஆத்ரேயர் முதலிய பல முனிவர்களால் வணங்கப்படுபவருக்கு என்று கொள்ளலாம்.
Meaning :
I salute that God Shiva,
Who is the king among physicians,
Who cures all great diseases,
Like rheumatism and arthritis,
Who is saluted by great sages,
And to whom, the sun god,
Moon and God of fire are eyes. 4
No comments:
Post a Comment