Sunday, 14 July 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 5

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 5

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

वाक् श्रोत्र नेत्राङ्घ्रि विहीनजन्तोः वाक्श्रोत्रनेत्रांघ्रिसुखप्रदाय ।
कुष्ठादिसर्वोन्नतरोगहन्त्रे श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ५॥

வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்⁴ரிஸுக²ப்ரதா³ய ।
குஷ்டா²தி³ஸர்வோந்நதரோக³ஹந்த்ரே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 5॥

vāk śrotra netrāṅghri vihīnajantoḥ vākśrotranetrāṃghrisukhapradāya ।
kuṣṭhādisarvonnatarogahantre śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 5॥

वाक्-श्रोत्र-नेत्र-अङ्घ्रि विहीन-जन्तोः  -   வாக்-ஶ்ரோத்ர-நேத்ர-அங்க்⁴ரி விஹீன-ஜந்தோ꞉:  -  வாய் ( பேச்சு ), காது ( கேட்கை ), கண் ( பார்வை ), கால் ( நடமாட்டம் )  இல்லாதவர்களுக்கு, 

वाक्-श्रोत्र-नेत्र-अङ्घ्रि-सुख-प्रदाय   -   வாக்-ஶ்ரோத்ர-நேத்ர-அங்க்⁴ரி-ஸுக²-ப்ரதா³ய  -  வாய் ( பேச்சு ), காது ( கேட்கை ), கண் ( பார்வை ), கால் ( நடமாட்டம் ) முதலிய சுகங்களைத் தருபவருக்கு,

कुष्ठ-आदि-सर्व-उन्नत-रोग-हन्त्रे   -   குஷ்ட²-ஆதி³-ஸர்வ-உன்னத-ரோக³-ஹந்த்ரே  -  குஷ்டம் முதலான வலிய நோய்களை நீக்குபவர்க்கு,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

பொருள் :

வாய் ( பேச்சு ), காது ( கேட்கை ), கண் ( பார்வை ), கால் ( நடமாட்டம் )  இல்லாதவர்களுக்கு, வாய் ( பேச்சு ), காது ( கேட்கை ), கண் ( பார்வை ), கால் ( நடமாட்டம் ) முதலிய சுகங்களைத் தருபவரும், குஷ்டம் முதலான வலிய நோய்களை நீக்குபவரும்  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.   5

#  वाक्-श्रोत्र-नेत्र-अङ्घ्रि-सुख-प्रदाय   -   வாக்-ஶ்ரோத்ர-நேத்ர-அங்க்⁴ரி-ஸுக²-ப்ரதா³ய  -  வாய் அல்லது நாக்கு, காது, கண், கால் முதலிய அவயவங்களின் கோளாறுகள் அல்லது ஊமை, செவிடு, குருடு, முடம் முதலியவைகளை நீக்குபவர். மேலும் ' ஸுக²-ப்ரதா³ய ' என்று சொல்வதால், இவைகளின் செயல்பாடின்மையால் என்ன துக்கம் உண்டாகுமோ, அந்த துக்கத்தை நீக்கி ஸுகமளிக்கிறார். மேற்கூறிய அவயவங்கள் சரியாக செயல்படுவதால் பகவானைப் பற்றிக் கேட்டு, கோயிலுக்குச் சென்று, கண்ணாரக் கண்டு, அவன் புகழை வாயாரப் பாடுவதால் பக்தி வளர்தலாகிய ஸுகம் கிடைக்க வேண்டியது. அவயவங்கள் இல்லாதபோதும் வைத்தியநாதரை நினைத்த மாத்திரத்திலேயே பக்தியை நம்மிடத்தில் வளர்த்துவிடுகிறார் அதாவது ஸுகமளிக்கிறார் என்று கொள்க. ( அவரவரது பக்தியைப் பொருத்ததே அவயவங்கள் உண்டாவதோ அல்லது அவயவப் பிரயோஜனம் உண்டாவதோ தவிர பகவானுக்கு பலமில்லை என்றில்லை. )

#  குஷ்டம் முதலிய மஹாரோகங்கள் பெருங்கஷ்டம் தரக்கூடிய கொடுமையானவை. அவைகளையும் நீக்குபவர்.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who blesses those beings,
Who have lost their speech, hearing, sight and ability to walk,
With these abilities,
And who provides cure,
For devastating diseases like leprosy.   5

No comments:

Post a Comment