Sri Vaidyanaatha Ashtakam - Sloka 7
॥ श्री वैद्यनाथाष्टकम् ॥
॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥
॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥
स्वतीर्थमृद्भस्मभृताङ्गभाजां पिशाचदुःखार्तिभयापहाय ।
आत्मस्वरूपाय शरीरभाजां श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ७॥
ஸ்வதீர்த²ம்ருʼத்³ப⁴ஸ்மப்⁴ருʼதாங்க³பா⁴ஜாம் பிஶாசது:³கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம் ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 7॥
svatīrthamṛdbhasmabhṛtāṅgabhājāṃ piśācaduḥkhārtibhayāpahāya ।
ātmasvarūpāya śarīrabhājāṃ śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 7॥
स्व-तीर्थ-मृद्-भस्म-भृत-अङ्ग-भाजां - ஸ்வ-தீர்த²-ம்ருʼத்³-ப⁴ஸ்ம-ப்⁴ருʼத-அங்க³-பா⁴ஜாம்ʼ - தன் ( குளத்தில் ) தீர்த்த ஸ்நானம், ( புற்று ) மண் ( பிரஸாதம் ), விபூதி பூசிக் கொண்டவர்களது,
पिशाच-दुःख-आर्ति-भय-अपहाय - பிஶாச-து³꞉:க²-ஆர்தி-ப⁴ய-அபஹாய - பிசாசு, துன்பங்கள், மனவேதனைகள், பயம் இவைகளைப் போக்குபவருக்கு,
शरीर-भाजां - ஶரீர-பா⁴ஜாம்ʼ - உடலை உடையவரது,
आत्म-स्वरूपाय - ஆத்ம-ஸ்வரூபாய - தன்னுணர்வாக இருப்பவருக்கு,
श्री वैद्य-नाथाय नमःशिवाय - ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய - ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
பொருள் :
தன் ( குளத்தில் ) தீர்த்த ஸ்நானம், ( புற்று ) மண் ( பிரஸாதம் ), விபூதி பூசிக் கொண்டவர்களது பிசாசு, துன்பங்கள், மனவேதனைகள், பயம் இவைகளைப் போக்குபவரும், உடலை உடையவரது தன்னுணர்வாக இருப்பவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 7
# स्व-तीर्थ-मृद्-भस्म-भृत-अङ्ग-भाजां - ஸ்வ-தீர்த²-ம்ருʼத்³-ப⁴ஸ்ம-ப்⁴ருʼத-அங்க³-பா⁴ஜாம்ʼ - ஸ்வ என்பதற்கு தன்னுடைய எனப் பொருள். என்றால் தன்னுடைய தனக்குச் சொந்தமான, தனது அருள்மிகு எந்த தீர்த்தத்தையும், எப்பிரதேசத்து மண்ணையும், விபூதியையும் குறிக்கலாம். பக்திபாவத்துடன் இருந்தாலே போதும். அப்பேற்பட்ட பக்தியிருப்பின் வீட்டு மண் கூட பிரசாதம் போன்று புனிதத்தோடு விளங்கும், பகவான் எங்கும் வியாபித்திருப்பதால். இங்கு 'ஸ்வ' என்பது வைத்தியநாத க்ஷேத்திரத்தைச் சார்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டியது.
# पिशाच-दुःख-आर्ति-भय-अपहाय - பிஶாச-து³꞉:க²-ஆர்தி-ப⁴ய-அபஹாய - வைத்தீச்வரன் கோவிலைச் சார்ந்த சித்தாமிர்த குளமத்தில் தீர்த்த ஸ்நானம் செய்து, பிரஸாதமாகக் கிடைக்கின்ற மண், விபூதி இவைகளைத் தரித்தவரை, வைத்தியநாதர், பிசாசுகள் முதலானவைகளால் உண்டாகும் இன்னல்கள்; உடல் மனம் இவைகளுக்கு ஏற்படும் துன்பங்கள்; எல்லாவிதமான பயத்தையும் போக்குகிறார் என்றாகிறது.
# शरीर-भाजां - ஶரீர-பா⁴ஜாம்ʼ - உடலை உடையவரது. அதாவது மேற்கூறிய துன்பங்கள் எல்லாமே, உடலையும் அதனுடன் கூடிய மனம் இவைகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் ஆத்மாவைப் பொருத்தவரை, உடலே ஒரு பெரும் வியாதி, துன்பம் எனலாம். அந்த உடலை உடையவரது என்று கொள்க.
# आत्म-स्वरूपाय - ஆத்ம-ஸ்வரூபாய - தன்னுணர்வாக இருப்பவருக்கு. தன்னுணர்வு என்றால் நாம் நம்மிலுள்ள எதை நாம் என்று அறிகிறோமோ, அதுவேயாகும். நான் எனும் உணர்வு, உணர்வின் ஊற்று. அது பகவான் தான். அதாவது உடலை தான் என்றும் உடலுக்கு வருவதைத் தனக்கு வருவதாக எண்ணுகிற, அறிகிற மயக்கத்தைத் தெளிவித்து, தான் என்பது எதுவென்று உள்ளதை உள்ளபடி விளக்குபவருக்கு என்று கொள்க.
Meaning :
I salute that God Shiva,
Who is the king among physicians,
Who removes all suferings,
Caused by bad spirits, sorrows and fears,
By dip in his holy tank,
By the holy ash in the temple,
And by the mud below the neem tree of the temple,
And who is the personification of soul,
Occupying human body. 7
No comments:
Post a Comment