Sri Maha Ganesha Pancha Ratnam - Sloka 4
॥ श्री महागणेश पञ्चरत्नम् ॥
॥ ஶ்ரீ மஹாக³ணேஶ பஞ்சரத்னம் ॥
॥ ŚRĪ MAHĀGAṆEŚA PAÑCARATNAM ॥
अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनम्
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम्॥४॥
அகிஞ்சனார்திமார்ஜனம்ʼ சிரந்தனோக்திபா⁴ஜனம்
புராரிபூர்வனந்த³னம்ʼ ஸுராரிக³ர்வசர்வணம்।
ப்ரபஞ்சனாஶபீ⁴ஷணம்ʼ த⁴னஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³னவாரணம்ʼ ப⁴ஜே புராணவாரணம்॥4॥
akiñcanārtimārjanaṃ cirantanoktibhājanam
purāripūrvanandanaṃ surārigarvacarvaṇam।
prapañcanāśabhīṣaṇaṃ dhanañjayādibhūṣaṇam
kapoladānavāraṇaṃ bhaje purāṇavāraṇam॥4॥
अकिञ्चन-आर्ति-मार्जनं - அகிஞ்சன-ஆர்தி-மார்ஜனம்ʼ - ஏதும் இல்லாதவர்களுடைய ( ஏழைகளின் ) துன்பங்களைத் துடைப்பவரை,
चिरन्तन-उक्ति-भाजनं - சிரந்தன-உக்தி-பா⁴ஜனம்ʼ - பழமைச் சொல்லான வேதத்தால் போற்றப்படுபவரை,
पुरारि-पूर्व-नन्दनं - புராரி-பூர்வ-நந்த³னம்ʼ - புராரியின் ( முப்புரங்களை அழித்த சிவபெருமான் ) மூத்த குமாரரை,
सुर-अरि-गर्व-चर्वणं - ஸுர-அரி-க³ர்வ-சர்வணம்ʼ - தேவர்களுடைய எதிரிகளின் ( அஸுரர்கள் ) கர்வத்தை அழிப்பவரை ( மென்று தின்பதைப் போல ),
प्रपञ्च-नाश-भीषणं - ப்ரபஞ்ச-நாஶ-பீ⁴ஷணம்ʼ - உலகு அழியும் பிரளய காலத்தில் உக்கிரமான ரூபம் கொள்பவரை,
धनञ्जय-आदि-भूषणं - த⁴னஞ்ஜய-ஆதி³-பூ⁴ஷணம்ʼ - தனஞ்ஜயன் முதலான நாகங்களை அணிகலன்களாக அணிந்தவரை,
कपोल-दान-वारणं - கபோல-தா³ன-வாரணம்ʼ - கன்னத்தில் மதஜலப்பெருக்கை உடையவரை,
पुराण-वारणं भजे - புராண-வாரணம்ʼ ப⁴ஜே - எல்லோருக்கும் முந்தையவரான யானைமுக விநாயகரை வழிபடுகிறேன்.
பொருள் :
ஏதும் இல்லாதவர்களுடைய ( ஏழைகளின் ) துன்பங்களைத் துடைப்பவரும், பழமைச் சொல்லான வேதத்தால் போற்றப்படுபவரும், புராரியின் ( முப்புரங்களை அழித்த சிவபெருமான் ) மூத்த குமாரரும், தேவர்களுடைய எதிரிகளின் ( அஸுரர்கள் ) கர்வத்தை அழிப்பவரும் ( மென்று தின்பதைப் போல ), உலகு அழியும் பிரளய காலத்தில் உக்கிரமான ரூபம் கொள்பவரும், தனஞ்ஜயன் முதலான நாகங்களை அணிகலன்களாக அணிந்தவரும்,
கன்னத்தில் மதஜலப்பெருக்கை உடையவரும், எல்லோருக்கும் முந்தையவரான யானைமுக விநாயகரை வழிபடுகிறேன். 4
* அகிஞ்சனர்கள் என்றால் தனக்கென்று சங்கல்பம் ஒன்றுமில்லாத சரணாகதர்கள் என்றும் கொள்ளலாம்.
விளக்கவுரை :
கணேச பஞ்சரத்னத்ல அடுத்த ஸ்லோகம்,
अकिंचनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनंजयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥४॥
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
‘அகிஞ்சன:’ அப்படின்னா ஏழைகள், ஒரு பைசாஇல்லாதவா. அந்த ஏழ்மையின் கொடுமையை, ‘அகிஞ்சன ஆர்த்தி மார்ஜனம்‘ – போக்குபவர்.
வறியவர்களின் துன்பத்தை துடைப்பவர், அப்படிபிள்ளையாரை வேண்டிண்டா ஏழ்மை போகும். இங்கே திருவல்லிக்கேணில பெரியதெருல ஒருஅரசடி கற்பகவிநாயகர் இருக்கார். ஸ்வாமிகளுக்குரொம்ப இஷ்டமான பிள்ளையார். ரொம்பவரங்களைத் தருபவர். முதல்ல, Triplicane ல தான்நிறைய வந்து பிராமணா Settle ஆனா. அதுக்கப்புறம், இப்போ சென்னை முழுக்க இருக்கா, உலகம் முழுக்கஇருக்கா. எல்லாருக்கும் அந்த, திருவல்லிக்கேணிகாறாளுக்கு எல்லாம் அந்தபிள்ளையார்ட்ட ஒரு பக்தியும், ப்ரியமும் இருக்கும். எங்களை வாழ வெச்சார். குடும்பத்தை வாழ வெச்சார். தலைதூக்கினோம். அதே மாதிரி ஒவ்வொருஊர்லயும் இருக்கும். மைலாபூர்ல போனா,கபாலீஸ்வரர் கோவில்ல இருக்குறபிள்ளையாராகட்டும், Luz வரசித்தி விநாயகராகட்டும், ஒவ்வொரு பேட்டையும், திருச்சில மலைக்கோட்டைபிள்ளையார், மாணிக்க விநாயகர் அப்படின்னு, அந்தபிள்ளையார்ட்ட வேண்டிண்டு நன்னாஇருக்கோம்ன்னு நிறையபேர் சொல்வா.
‘சிரந்தனோக்தி பாஜனம்’ – அப்படின்னா, ‘சிரம்’எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ‘உக்தி’ – வசனங்கள். அதாவது, வேத வசனங்களால்துதிக்கப்படுபவர் அப்படின்னு ஒரு அர்த்தம். இன்னொண்ணு, என்னைக்கும் இருக்கக்கூடிய ஒருவார்த்தை அப்படின்னா அது பிரணவம். அந்தநிர்குணபிரம்மம், ஸகுனமா மாற்றதுக்கு, நாதஸ்வரூபாமா வந்தது அந்த பிரணவம். அந்தபிரணவப் பொருளே பிள்ளையார் தான்.
‘புராரி பூர்வ நந்தனம்’ – ‘புராரி’ன்னா முப்புரங்களைஎரித்த பரமேஸ்வரன். அவருடைய ‘பூர்வ நந்தனம்’அப்படின்னா மூத்த பிள்ளைன்னு அர்த்தம். இந்தகணேச பஞ்சரத்னத்ல முருகப்பெருமானை பத்திDirect reference இல்லை. ஆனா பரமேஸ்வரனுடையமூத்த பிள்ளை சொன்னதுனால, அவருக்கு ஒருஇளையப் பிள்ளை இருக்கார் அப்படின்னுஆறதில்லையா! ‘ஸ்கந்த பூர்வஜ:’ அப்படின்னு நம்மபிள்ளையாருக்கு அர்ச்சனை பண்றோம். முருகனுக்குஅண்ணா. முருகனுக்கு வள்ளியை கல்யாணம்பண்ணி வைச்சவரே பிள்ளையார்தானே. அப்படி, பரமேஸ்வரனுடைய மூத்த பிள்ளை.
‘ஸுராரி கர்வ சர்வணம்’ – ‘ஸுரர்’கள்ன்னா தேவர்கள். தேவர்களுடைய எதிரிகளான அசுரர்களுடையகர்வத்தை பொடிப்பொடியாக்கினவரும்.
‘ப்ரபஞ்ச நாஶ பீஷணம்’ – ப்ரபஞ்சத்தையேஅழிக்கக்கூடிய ஊழி காலத்துப் ப்ரளயத்தை போலஉக்ராமானவரும் அப்படின்னு அர்த்தம். அந்தஉக்ரமான ருத்ர ஸ்வரூபமும் பிள்ளையார்தான். குழந்தை ஸ்வரூபமும் பிள்ளையார்தான்.
‘தனஞ்ஜயாதி பூஷணம்’ – தனஞ்ஜயன் முதலானபாம்புகளை அணிந்து கொண்டிருப்பவர். இடுப்புலஇவரை சுத்தி, ஒரு பாம்பை ஆபரணமாஅணிஞ்சிண்டு இருக்கார் இல்லையா. அந்த மாதிரிஒரு அர்த்தம். ‘தனஞ்ஜயன்’னா குடை. இந்த குடையைவெச்சுண்டு அலங்காரம் பண்ணி பிள்ளையார்சதுர்த்தி கொண்டாடறது சென்னைல ரொம்பவிசேஷமா பண்றா. ஸ்வாமிகள், ‘நான் திருச்சிலகூடபார்க்கலை! சென்னைலதான் பார்த்தேன்!’அப்படின்னு சொல்வார்.
‘கபோல தானவாரணம்’ – ‘கபோலம்’னா கன்னம், கன்னத்துலேர்ந்து அந்த மதஜலம் ஒழுகறது. அந்தயானைகளுடைய வீர்யத்தை காமிக்கற அடையாளம்அது. அப்படிப்பட்ட ‘பஜே புராண வாரணம்’ – ஆதியானை வடிவமாக விளங்கும் அந்த பரம்பொருளைபஜிக்கிறேன் அப்படின்னு அர்த்தம்.
இதுல இந்த ‘ப்ரபஞ்ச நாஶ பீஷணம்‘ அப்படிங்கறதுக்கு இந்த ஐம்பூதங்களினாலானப்ரபஞ்சத்தை நாசனம் பண்றது அப்படின்னா, மனோநாசனம் பண்ணி ஞானத்தை அநுக்கிரஹம் பண்றார். அதுக்கு, அந்த ‘கபோல தானவாரணம்‘னாகன்னத்துலேர்ந்து மதஜலம் கொட்டறமாதிரிஅவருடையை கருணை கொட்டறது. அதுமூலமா, பக்தர்களுடைய அஞ்ஞானத்தைப் போக்கி, கருணையினால ஞானத்தை கொடுக்கிறார்.
இந்த ‘தனஞ்ஜயாதி பூஷணம்‘ங்கறதுக்கும்குண்டலினி சர்ப்பம், மூலாதாரம், அப்படி எல்லாம்யோகமான அர்த்தங்களெல்லாம் போட்டுருக்கா. இந்தஇடத்துல எனக்கு மஹாபெரியவா சொன்னதுஞாபகம் வர்றது. ‘அந்த ஔவைப் பாட்டி விநாயகர்அகவல் பண்ணியிருக்கா. அந்த விநாயகர் அகவல்யோகா சூத்திரமா இருக்கு. நமக்குபுரியலைன்னாலும், நாம படிச்சுண்டே வந்தாபிள்ளையார் ஞானத்தை கொடுத்துடுவார்!’ அப்படின்னு பெரியவா சொல்றா. அதை நாம follow பண்ணுவோம். இது நாலாவது ஸ்லோகம்.
சித்தி விநாயக மூர்த்திக்கி… ஜெய்
Meaning :
I adore (bhaje) ancient, primordial elephant (purANa vAraNam) who :
21) does wiping away (mArjanaM) of the afflictions (Arti) of the destitute (akinchana) ;
22) is the representative/abode of (bhAjanaM) the divine word [ukta (AUM)];
23) exists from ancient times (chiranta);
24) is the son (nandanaM), of the One who destroyed the tripura--triple cities (purAri) in former times (pUrva) ;
25) destroys [charvaNa (as if by chewing away)], the pride and arrogance (garva),
of the enemy of the Devas (surAri), that is, the Asuras;
26) is the Terrible One (bhIShaNaM) at the time of dissolution of the Universe (prapancha-nAshanam);
27) has Dhananjaya and other serpants (dhanaMjaya Adi) as decorations (bhUShaNaM) ;
28) is the elephant (vAraNam) who is filled with the rut-fluid in the cheeks (kapoladAna). 4
No comments:
Post a Comment