Sri Maha Ganesha Pancha Ratnam - Sloka 2
॥ श्री महागणेश पञ्चरत्नम् ॥
॥ ஶ்ரீ மஹாக³ணேஶ பஞ்சரத்னம் ॥
॥ ŚRĪ MAHĀGAṆEŚA PAÑCARATNAM ॥
नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरम्
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम्।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरम्
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम्॥२॥
நதேதராதிபீ⁴கரம்ʼ நவோதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரினிர்ஜரம்ʼ நதாதி⁴காபது³த்³த⁴ரம்।
ஸுரேஶ்வரம்ʼ நிதீ⁴ஶ்வரம்ʼ க³ஜேஶ்வரம்ʼ க³ணேஶ்வரம்
மஹேஶ்வரம்ʼ தமாஶ்ரயே பராத்பரம்ʼ நிரந்தரம்॥2॥
natetarātibhīkaraṃ navoditārkabhāsvaram
namatsurārinirjaraṃ natādhikāpaduddharam।
sureśvaraṃ nidhīśvaraṃ gajeśvaraṃ gaṇeśvaram
maheśvaraṃ tamāśraye parātparaṃ nirantaram॥2॥
नत-इतर-अति-भीकरं - நத-இதர-அதி-பீ⁴கரம்ʼ - ( தன்னை ) வணங்கியோரைத் தவிர மற்றவர்க்கு ( வணங்காதவர்களுக்கு ) அதிகபயத்தைத் தருபவரை,
नव-उदित-अर्क-भास्वरम् - நவ-உதி³த-அர்க-பா⁴ஸ்வரம் - அப்போது உதித்த சூரியனைப் போன்ற ஒளி ( காந்தி ) படைத்தவரை,
नमत् सुर-अरि निर्जरं - நமத் ஸுர-அரி நிர்ஜரம்ʼ - அஸுரர்களாலும் தேவர்களாலும் வணங்கப்படுபவரை,
नत-अधिक-आपत्-उद्धरम् - நத-அதி⁴க-ஆபத்-உத்³த⁴ரம் -. ( தன்னை ) வணங்குபவரைப் பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கச் செய்பவரை,
सुर-ईश्वरं - ஸுர-ஈஶ்வரம்ʼ - தேவர்களுக்கெல்லாம் தலைவரை,
निधि-ईश्वरं - நிதி⁴-ஈஶ்வரம்ʼ - எல்லா செல்வங்களுக்கும் தலைவரை,
गज-ईश्वरं - க³ஜ-ஈஶ்வரம்ʼ - யானைகளுக்குத் தலைவரை,
महा-ईश्वरं - மஹா-ஈஶ்வரம்ʼ - தலைவர்க்கெல்லாம் பெருந்தலைவரை,
परात् परं - பராத் பரம்ʼ - மேலானதற்கும் மேலானவரை,
तं गणेश्वरं - தம்ʼ க³ணேஶ்வரம்ʼ - அந்த கணேச்வரரை,
निरन्तरं आश्रये - நிரந்தரம்ʼ ஆஶ்ரயே - என்றைக்கும் ஆச்ரயிக்கிறேன்.
பொருள் :
( தன்னை )வணங்கியோரைத் தவிர மற்றவர்க்கு ( வணங்காதவர்களுக்கு ) அதிகபயத்தைத் தருபவரும், அப்போது உதித்த சூரியனைப் போன்ற ஒளி ( காந்தி ) படைத்தவரும், அஸுரர்களாலும் தேவர்களாலும் வணங்கப்படுபவரும், ( தன்னை ) வணங்குபவரைப் பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கச் செய்பவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், எல்லா செல்வங்களுக்கும் தலைவரும், யானைகளுக்குத் தலைவரும், தலைவர்க்கெல்லாம் பெருந்தலைவரும், மேலானதற்கும் மேலானவருமான அந்த கணேச்வரரை ( விநாயகரை ) என்றைக்கும் ஆச்ரயிக்கிறேன். 2
விளக்கவுரை :
அடுத்த ஸ்லோகத்தைப் பார்க்கலாம்,
नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥२॥
நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேச்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரன்தரம் || 2 ||
”நதேதராதீ பீகரம்” – ‘நத இதர அதி பீகரம்’, தன்னை வணங்காதவர்களுக்கு அதிகமாக விக்னங்களை கொடுத்து பயமுறுத்துபவர்னு அர்த்தம்.
அப்புறம் அவரை நமஸ்காரம் பண்ணா அந்த விக்னங்களைப் போக்குபவரும் அவர்தான்.‘பயக்ருத் பயநாசன:’ ன்னு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலயும் வர்றது. நமக்கு பயங்களை கொடுப்பவனும் பகவான்தான்! பயங்களைப்போக்குபவரும்பகவான்தான்! இதை வந்து ஸ்வாமிகள் நிறைய பேருக்கு ஏதாவது பயப்பட்டுண்டு வந்தா, ‘பயப்பட வேண்டாம். எதோ பயத்தைக் கொடுப்பார். அதாவது அம்மா குழந்தை நெருப்பை தொட்டுடப் போறதேன்னு பூனை மாதிரி கத்துவா! உடனே வந்து அம்மா காலை கட்டிண்டிடும் குழந்தை. அது மாதிரி நாம வேற எந்த ஆபத்துலேயும் போயி மாட்டிக்க கூடாதேங்கறதுக்காக பகவான் நமக்கு பயத்தை கொடுக்கறார். நாம பகவானையே நெருங்கணும் எங்கிறதுக்காக தான். நீங்க இந்த பஜனை பண்ணுங்கோ. உங்க பயம் நிவர்த்தி ஆயிடும்!’னு ஸ்வாமிகள் சொல்வார்.நான் இதை நிறைய பார்த்திருக்கேன். அங்க உட்கார்ந்திருக்கும்போது.
கௌதா லலித் மனோகர்னு ஒருத்தர், அவருடைய மகாபெரியவா experience ரொம்ப அழகா இருக்கும். படிச்சவர். அது கேட்க வேண்டியது. அதுல பெரியவா அவருடைய press ல தங்கிண்டிருக்கா. அந்த இடத்துல பெரியவா வந்தா தங்கிக்கலாமான்னு கேட்டு, அவருக்கு மடத்தைப் பத்தியோ, பெரியவாளைப் பத்தியோ தெரியாது. அங்க வந்து கேட்டவாளோட ஹோதா அவருக்குப் பிடிக்கலை (முதல்ல வந்து கேட்டவளோட). இல்ல வசதி இல்லேன்னு சொல்றார். நான் எங்க போவேன். இது என் சொந்த வீடுன்னு சொல்லிடறார். பெரியவாளோட சொந்த தம்பி,சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள் வந்து, ‘நீங்க அங்கேயே இருக்கலாம். உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. உங்களோட outhouse ல இருக்கிற கோயில்ல, பெரியவாஅதுக்குப் பக்கத்துல ஒரு கொட்டகை போட்டு அங்க பூஜை பண்ணிப்பா’ன்னு சொல்லி அழகா பேசின உடனே,‘ஆஹா!’ன்னு சொல்லிட்டு 10 நாள் தங்கலாம்னு போன பெரியவா ரெண்டு மாசம் இருந்து நவராத்திரி எல்லாம் கொண்டாடிட்டுவரா.அப்புறம் திரும்பவும் வரா அங்க சங்கர ஜெயந்தி கொண்டாட. அந்த மாதிரி பிரியமா இருக்கா. அப்படி பெரியவா இருக்கும் போது அவருக்கு ஒரு குழந்தை பொறக்கறது. அந்த குழந்தைக்கு,‘cleftlip’னு சொல்லிட்டு உதடு மடிஞ்சு இருக்கு. அப்ப பெரியவா ‘பயக்ருத் பய நாசன:’ ன்னு சொல்லி, ‘நீ கவலைப்படாதே!’ அந்த காலத்துல எல்லாம் plastic surgeryலாம் ஒண்ணுமே கிடையாது. யாரோ ஒரு ரஷ்யன் plastic surgeon எதேச்சையா அங்க வந்து ‘அவர் என்ன பண்ணப் போறார்?அவரை என்னை வந்து பார்க்க சொல்லு’ன்னு, அவர்கிட்ட பெரியவா எல்லா detail லாம் கேட்டுண்டு அதை allow பண்ணி, அந்த குழந்தைக்கு அது சரியாயிடறது. ‘பயக்ருத் பயநாசன:’ ன்னு ‘நத இதர அதி பீகரம்’ – நமஸ்காரம் பண்றவாளுக்கு பயமுறுத்துவார். நமஸ்காரம் பண்றவாளுடைய,‘நத சுப ஆசு நாசகம்’ – அதுவும் அவரே தான்.
‘நவோதி தார்க்க பாஸ்வரம்’-‘அர்க்கம்’னா சூரியன். ‘அர்க்க பாஸ்வரம்’ –‘சூரிய ஒளி போல. எந்த சூரிய ஒளி?’ன்னா,‘நவ உதித’ -அப்பொழுது தான் உதயமான சூரிய ஒளியைப் போல ஒளியோடு விளங்குபவர்.
‘நமத் ஸுராரி நிர்ஜரம்’ – ‘ஸுரஅரி’ன்னா தேவர்களுடைய எதிரிகள், அதாவது அசுரர்கள். ‘நிர்ஜரம்’ – ‘ஜரா’ன்னா வயசு. வயசே ஆகாதவர்கள்ன்னா- தேவர்கள். தேவர்களும் அசுரர்களும் எல்லோரும் வணங்குபவர்கள் பிள்ளையார்.
‘நதாதிகாபதுத்தரம்’ –‘நத’ – நமஸ்காரம் பண்றவாளுடைய,‘அதிக ஆப துத்தரம்’ -பெரிய ஆபத்துகளையும் போக்கி விடுபவர். துன்பங்களைத் துடைப்பவர்.
‘ஸுரேச்வரம்’ -தேவர்களுக்கெல்லாம் தலைவர்.‘நிதீஸ்வரம்’ -எல்லா செல்வங்களுக்கும் தலைவர். ‘கஜேஸ்வரம்’ -யானைகளுக்கெல்லாம் தலைவர்னு வெச்சுக்கலாம். ஏன்னா, அவர் யானைகளுக்கு ராஜா மாதிரி தான். ஆனா,‘யானை தெய்வம்’ அப்படீன்னு தான் இங்க அர்த்தம். இன்னொன்னு, அந்த யானை வடிவில இருக்கிற அந்த தெய்வத்தை பெரியவாளே கூட சொல்லியிருக்கா,‘இங்க இருந்து ஆரம்பிச்சு இப்படி பார்த்தா ஓங்கார வடிவம் தெரியும்!’ அப்படீன்னு. அப்படி ஓங்கார வடிவமானவர், ‘கணேஸ்வரம்’ -பூத கணங்களுக்கெல்லாம் தலைவர். அதனால தான் கணேஸ்வரம்னு பேரு.
‘மகேஸ்வரம்’ -பெரிய தெய்வம். ‘பெரிய கடவுள் காக்க வேண்டும்!’,அப்படீங்கறார் பாரதி. எல்லாருக்கும் மேலான பெரிய கடவுள்.
‘தம்ஆஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்’ -அந்த தெய்வத்தை நான் நிரந்தரமாக ஆஸ்ரயிக்கிறேன். அந்த தெய்வம் என்னன்னா, ‘பராத்பரம்’ –‘உயர்ந்த வஸ்துக்கள் எல்லாத்தைக் காட்டிலும் உயர்ந்தது! உயர்ந்தவர்! மேன்மையானவர்!’ இந்த கணபதி. அவரை நான் ஆஸ்ரயிக்கிறேன்னு ரெண்டாவது ஸ்லோகம்.
Meaning :
I pray (namat) to the destroyer (nirjaram) of the enemies (ari) of the Gods (sura) who:
9) induces fear (bhIkaram) into everything (itarAdi) that is crooked (nata)
10) is resplendent (bhAsvaram) as the newly (nava) risen (udita) sun (arka).
11) is like a rope-ladder (duddharam) that offers a means of escape from the rising (adhika) waters (Apa) of the bhavasAgara
12) is the leader (ISvara) of the gods (sura), wealth (nidhi) and Siva gaNas
13) is the elephant-faced (gaja) lord (ISvara)
14) offers protection (ASrayE) like (sama) Siva (mahESvara) himself
15) is always the superlative (parAtparam) and eternal (nirantaram) one. 2
No comments:
Post a Comment