ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 4
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६०॥
அக²ண்ட³மண்ட³லாகாரம் வ்யாப்தம் யேந சராசரம் ।
தத்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 60॥
akhaṇḍamaṇḍalākāraṃ vyāptaṃ yena carācaram ।
tatpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 60॥
अखण्ड-मण्डल-आकारं - அக²ண்ட³-மண்ட³ல-ஆகாரம்ʼ - அகண்டமண்டலாகாரமான,
चराचरं - சராசரம்ʼ - சராசரம்,
येन व्याप्तं - யேன வ்யாப்தம்ʼ - எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,
तत् पदं - தத் பத³ம்ʼ - அந்த " தத் " பதம்,
येन दर्शितं - யேன த³ர்ஶிதம்ʼ - எவரால் காட்டப்பட்டதோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
4. அகண்டமண்டலாகாரமான சராசரம் எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்த "தத்" பதம் எவரால் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 60
# அத்விதீயமான ( தன்னைத் தவிர வேறொன்றல்லாத ); ஆதியும் அந்தமும் இல்லாததான; அசைகின்ற, அசையாதவைகளையும் கொண்டுள்ள இந்த சராசரம் முழுமையும் வியாபித்தும் இருக்கின்றதான எதுவோ ( தத் - 'தத் த்வமஸி' எனும் மஹாவாக்யத்திலுள்ள தத். )
# அந்த தத் யினுடைய தன்னிலையை எவர் அடையாளம் காட்டி நாம் அறியும்படி செய்கிறாரோ, அந்த குருவை வணங்குகிறேன்.
No comments:
Post a Comment