ராம மந்திரம் - Rama Mandiram - Introduction
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாகிய பகவான் எல்லா இடங்களிலும் வசிக்கின்றார். இறைவன் வசிப்பதற்கு உகந்த இடங்கள் எவை/யார் என்பதைப்பற்றி இந்த ஸ்தோத்திரம் இயம்புகிறது. இது வால்மீகி முனிவர், இராமருக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. வேத வியாசர் இயற்றியதான அத்யாத்ம ராமாயணத்தில், அயோத்யா காண்டத்தில், ஆறாவது சர்க்கமாக அமையப் பெற்றுள்ளது.
மந்திரம் என்பது வஸிப்பிடம் என்று பொருளாகிறது.
இராமபிரான் காட்டிற்கு ஏகியபோது பரத்வாஜ முனிவரைக் கண்டு, பின் சித்ரகூடம் செல்லும் வழியில் அடர்ந்த வ்ருக்ஷங்கள்
நிறைந்ததும், பலவித புஷ்பச்செடிகளால் ரம்யமாகக் காணப்படுவதும், ரிஷிகணங்களால் சூழப்பட்டதுமான வால்மீகி முனிவருடைய ஆசிரமத்தை கண்டார். அங்கு அமர்ந்திருந்த தேஜஸ்வியான வால்மீகி முனிவரைக் கண்டு ராமனும், சீதையும், லக்ஷ்மணரும் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்.
மன்மதனைப் போன்ற ஸுந்தர வடிவத்துடன் கமலக் கண்களில் கனிவு பொங்க ஜடா மகுடதாரியாக எதிரே வந்து சீதா சமேதராக நிற்கின்ற ராமனைப், பார்த்து வால்மீகி முனிவர், ஆச்சர்யத்தில் திகைத்தவராகக் கண்ணிமைக்காமல் பார்த்தார். பிறகு சட்டென்று எழுந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, பரமானந்தத்துடன் ராமனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஜக பூஜ்யராகிய பகவான் ஸ்ரீ ராமசந்திர ப்ரபுவை அர்க்யம், பாத்யம், முதலானவைகளால் முறைப்படி பூஜித்து, மதுரமான பழங்களைச் சாப்பிட செய்து, பக்தியுடன் லாலனம் செய்து மகிழ்ந்தார்.
அப்போது ராமன் மிக்க வினையத்துடன் கைகூப்பியபடியே வால்மீகி முனிவரைப் பார்த்துக் கூறினார். "பகவன் நாங்கள், பிதாவினுடைய ஆக்ஞையின் படியே தண்டாகாரண்யம் வந்திருக்கின்றோம். தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள். நாங்கள் கூற வேண்டிய அவசியமே இல்லையல்லாவா? இங்கே
வஸிப்பதற்கு ஸுகமான ஸ்தானம் எது என்பதை எங்களுக்குக்
கூறியருள வேண்டும். தாங்கள் கூறுகின்ற இடத்திலே, நான்
சீதையுடன் கூடச் சில காலம் தங்கி இருக்கலாமென நினைக்கின்றேன் ' என்ற ஸ்ரீ ராமனுடைய பணிவான சொற்களைக்கேட்டு, வால்மீகி முனிவர் தனக்குத்தானே மெதுவாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறலானார்.
ஹே! ரகுவீர !ஸர்வலோகங்களுக்கும், தாங்களே உத்தமவாஸஸ்தலமாக இருக்கின்றீர். மேலும் ஸகல ஜீவராசிகளும், தங்களுக்கு வஸிக்கும் இல்லமாக இருக்கின்றன. இவைகள் மிகவும் சாதாரணமானவைகளே. ஆனால் ஸீதாதேவியுடன் ஸுகமாக வஸிப்பதற்கு ச்ரேஷ்டமான ஸ்தானம் வேண்டுமென்று கேட்டீர்களல்லவா? முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டுள்ள அந்த இருப்பிடத்தை இப்போது கூறுகின்றேன் கேளுங்கள்.
இதன் பின்னர் ஸ்தோத்திரம் தொடங்குகிறது.
॥ राम मन्दिरम् ॥
शान्तानां समदृष्टीनामद्वेष्टॄणां च जन्तुषु ।
त्वामेव भजतां नित्यं हृदयं तेऽधिमन्दिरम् ॥ ५४॥
धर्माधर्मान् परित्यज्य त्वामेव भजतोऽनिशम् ।
सीतया सह ते राम तस्य हृत्सुखमन्दिरम् ॥ ५५॥
त्वन्मन्त्रजापको यस्तु त्वामेव शरणं गतः ।
निर्द्वन्द्वो निःस्पृहस्तस्य हृदयं ते सुमन्दिरम् ॥ ५६॥
निरहङ्कारिणः शान्ता ये रागद्वेषवर्जिताः ।
समलोष्टाश्मकनकास्तेषां ते हृदयं गृहम् ॥ ५७॥
त्वयि दत्तमनोबुद्धिर्यः सन्तुष्टः सदा भवेत् ।
त्वयि सन्त्यक्तकर्मा यस्तन्मनस्ते शुभं गृहम् ॥ ५८॥
यो न द्वेष्ट्यप्रियं प्राप्य प्रियं प्राप्य न हृष्यति ।
सर्वं मायेति निश्चित्य त्वां भजेत्तन्मनो गृहम् ॥ ५९॥
षड्भावादिविकारान् यो देहे पश्यति नात्मनि ।
क्षुत्तृट् सुखं भयं दुःखं प्राणबुद्ध्योर्निरीक्षते ॥ ६०॥
संसारधर्मैर्निर्मुक्तस्तस्य ते मानसं गृहम् ॥ ६१॥
पश्यन्ति ये सर्वगुहाशयस्थं
त्वां चिद्घनं सत्यमनन्तमेकम् ।
अलेपकं सर्वगतं वरेण्यं
तेषां हृदब्जे सह सीतया वस ॥ ६२॥
निरन्तराभ्यासदृढीकृतात्मनां
त्वत्पादसेवापरिनिष्ठितानाम् ।
त्वन्नामकीर्त्या हतकल्मषाणां
सीतासमेतस्य गृहं हृदब्जे ॥ ६३॥
॥ ராம மந்தி³ரம் ॥
ஶாந்தாநாம் ஸமத்³ருʼஷ்டீநாமத்³வேஷ்ட்ரூʼணாம் ச ஜந்துஷு ।
த்வாமேவ ப⁴ஜதாம் நித்யம் ஹ்ருʼத³யம் தேঽதி⁴மந்தி³ரம் ॥ 54॥
த⁴ர்மாத⁴ர்மாந் பரித்யஜ்ய த்வாமேவ ப⁴ஜதோঽநிஶம் ।
ஸீதயா ஸஹ தே ராம தஸ்ய ஹ்ருʼத்ஸுக²மந்தி³ரம் ॥ 55॥
த்வந்மந்த்ரஜாபகோ யஸ்து த்வாமேவ ஶரணம் க³த: ।
நிர்த்³வந்த்³வோ நி:ஸ்ப்ருʼஹஸ்தஸ்ய ஹ்ருʼத³யம் தே ஸுமந்தி³ரம் ॥ 56॥
நிரஹங்காரிண: ஶாந்தா யே ராக³த்³வேஷவர்ஜிதா: ।
ஸமலோஷ்டாஶ்மகநகாஸ்தேஷாம் தே ஹ்ருʼத³யம் க்³ருʼஹம் ॥ 57॥
த்வயி த³த்தமநோபு³த்³தி⁴ர்ய: ஸந்துஷ்ட: ஸதா³ ப⁴வேத் ।
த்வயி ஸந்த்யக்தகர்மா யஸ்தந்மநஸ்தே ஶுப⁴ம் க்³ருʼஹம் ॥ 58॥
யோ ந த்³வேஷ்ட்யப்ரியம் ப்ராப்ய ப்ரியம் ப்ராப்ய ந ஹ்ருʼஷ்யதி ।
ஸர்வம் மாயேதி நிஶ்சித்ய த்வாம் ப⁴ஜேத்தந்மநோ க்³ருʼஹம் ॥ 59॥
ஷட்³பா⁴வாதி³விகாராந் யோ தே³ஹே பஶ்யதி நாத்மநி ।
க்ஷுத்த்ருʼட் ஸுக²ம் ப⁴யம் து:³க²ம் ப்ராணபு³த்³த்⁴யோர்நிரீக்ஷதே ॥ 60॥
ஸம்ஸாரத⁴ர்மைர்நிர்முக்தஸ்தஸ்ய தே மாநஸம் க்³ருʼஹம் ॥ 61॥
பஶ்யந்தி யே ஸர்வகு³ஹாஶயஸ்த²ம்
த்வாம் சித்³க⁴நம் ஸத்யமநந்தமேகம் ।
அலேபகம் ஸர்வக³தம் வரேண்யம்
தேஷாம் ஹ்ருʼத³ப்³ஜே ஸஹ ஸீதயா வஸ ॥ 62॥
நிரந்தராப்⁴யாஸத்³ருʼடீ⁴க்ருʼதாத்மநாம்
த்வத்பாத³ஸேவாபரிநிஷ்டி²தாநாம் ।
த்வந்நாமகீர்த்யா ஹதகல்மஷாணாம்
ஸீதாஸமேதஸ்ய க்³ருʼஹம் ஹ்ருʼத³ப்³ஜே ॥ 63॥
॥ RĀMA MANDIRAM ॥
śāntānāṃ samadṛṣṭīnāmadveṣṭṝṇāṃ ca jantuṣu ।
tvāmeva bhajatāṃ nityaṃ hṛdayaṃ te'dhimandiram ॥ 54॥
dharmādharmān parityajya tvāmeva bhajato'niśam ।
sītayā saha te rāma tasya hṛtsukhamandiram ॥ 55॥
tvanmantrajāpako yastu tvāmeva śaraṇaṃ gataḥ ।
nirdvandvo niḥspṛhastasya hṛdayaṃ te sumandiram ॥ 56॥
nirahaṅkāriṇaḥ śāntā ye rāgadveṣavarjitāḥ ।
samaloṣṭāśmakanakāsteṣāṃ te hṛdayaṃ gṛham ॥ 57॥
tvayi dattamanobuddhiryaḥ santuṣṭaḥ sadā bhavet ।
tvayi santyaktakarmā yastanmanaste śubhaṃ gṛham ॥ 58॥
yo na dveṣṭyapriyaṃ prāpya priyaṃ prāpya na hṛṣyati ।
sarvaṃ māyeti niścitya tvāṃ bhajettanmano gṛham ॥ 59॥
ṣaḍbhāvādivikārān yo dehe paśyati nātmani ।
kṣuttṛṭ sukhaṃ bhayaṃ duḥkhaṃ prāṇabuddhyornirīkṣate ॥ 60॥
saṃsāradharmairnirmuktastasya te mānasaṃ gṛham ॥ 61॥
paśyanti ye sarvaguhāśayasthaṃ
tvāṃ cidghanaṃ satyamanantamekam ।
alepakaṃ sarvagataṃ vareṇyaṃ
teṣāṃ hṛdabje saha sītayā vasa ॥ 62॥
nirantarābhyāsadṛḍhīkṛtātmanāṃ
tvatpādasevāpariniṣṭhitānām ।
tvannāmakīrtyā hatakalmaṣāṇāṃ
sītāsametasya gṛhaṃ hṛdabje ॥ 63॥
No comments:
Post a Comment