Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 3
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
गोपिकानन्दलीलाय नवनीतप्रियाय च ।
वेणुगानाभिलोलाय राधाकृष्णाय ते नमः ॥ ३॥
கோ³பிகாநந்த³லீலாய நவநீதப்ரியாய ச ।
வேணுகா³நாபி⁴லோலாய ராதா⁴க்ருʼஷ்ணாய தே நம: ॥ 3॥
gopikānandalīlāya navanītapriyāya ca ।
veṇugānābhilolāya rādhākṛṣṇāya te namaḥ ॥ 3॥
गोपिका-नन्द-लीलाय - கோ³பிகா-நந்த³-லீலாய - கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவருக்கு,
नवनीत-प्रियाय च - நவனீத-ப்ரியாய ச - வெண்ணெயின் மீது நாட்டம் உடையவருக்கு,
वेणु-गान-अभि-लोलाय - வேணு-கா³ன-அபி⁴-லோலாய - வேணுகானம் செய்தவாறு ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவருக்கு,
राधाकृष्णाय - ராதா⁴க்ருʼஷ்ணாய - ராதையினுடைய கிருஷ்ணனுக்கு,
ते नमः - தே நம: - உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ) நமஸ்காரம்.
பொருள் :
கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவரும்,
வெண்ணெயின் மீது நாட்டம் உடையவரும், வேணுகானம் செய்தவாறு ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவரும், ராதையினுடைய கிருஷ்ணனுமான உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணருக்கு ) நமஸ்காரம். 3
# கோபிகைகள் போல் மற்ற விஷய ஸ்மரனை நீங்கி, பகவத் ஸ்மரனை ஏற்படட்டும்.
# தூய்மையான, ஸாத்வீகமான, கருணையினால் நெகிழும் தன்மையதான, கண்ணனை ஸ்மரித்தவுடன் உருகுவதான மனங்கள் கண்ணனால் வெண்ணெயென திருடப்படட்டும்.
# வெற்றிடமாக உள்ள புல்லாங்குழல் போல தனக்கென்று ஸங்கல்பங்கள் ஏதுமில்லாதவர்கள் கண்ணனால் கருவிகளாக இயக்கப்படட்டும்.
No comments:
Post a Comment