Sunday, 4 August 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 8

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 8

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

श्रीनीलकण्ठाय वृषध्वजाय स्रक्गन्ध भस्माद्यभिशोभिताय ।
सुपुत्रदारादि सुभाग्यदाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ८॥

ஶ்ரீநீலகண்டா²ய வ்ருʼஷத்⁴வஜாய ஸ்ரக்க³ந்த⁴ ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 8॥

śrīnīlakaṇṭhāya vṛṣadhvajāya srakgandha bhasmādyabhiśobhitāya ।
suputradārādi subhāgyadāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 8॥

श्री-नील-कण्ठाय  -  ஶ்ரீ-நீல-கண்டா²ய  -  திருநீலகண்டருக்கு ( நீலநிற கழுத்தை உடையவருக்கு ),

वृष-ध्वजाय  -  வ்ருʼஷ-த்⁴வஜாய  -  விருஷபத்தை ( காளை ) கொடியாக உடையவருக்கு,

स्रक्-गन्ध-भस्माद् अभि-शोभिताय  -  ஸ்ரக்-க³ந்த⁴-ப⁴ஸ்மாத்³ அபி⁴-ஶோபி⁴தாய  -   பூமாலை, அரைத்த சந்தனம்,  விபூதி இவைகளால் மேலும் பிரகாசிப்பவருக்கு,

सुपुत्र-दार-आदि सुभाग्यदाय  -  ஸுபுத்ர-தா³ர-ஆதி³ ஸுபா⁴க்³யதா³ய  -  நற்புத்திரர், மனைவி முதலான ஸௌபாக்கியங்களை அளிப்பவருக்கு,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

திருநீலகண்டரும் ( நீலநிற கழுத்தை உடையவரும் ); விருஷபத்தை ( காளை ) கொடியாக உடையவரும்; பூமாலை, அரைத்த சந்தனம், விபூதி இவைகளால் மேலும் பிரகாசிப்பவரும்; நற்புத்திரர், மனைவி முதலான ஸௌபாக்கியங்களை அளிப்பவரும்;  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.  8

#  श्री-नील-कण्ठाय  -  ஶ்ரீ-நீல-கண்டா²ய  -  திரு என்றால் செல்வம், லக்ஷ்மி, நற்குணம் என்று பல பொருள் கிடைக்கும். இங்கு நீல நிறமாக தெரிகின்ற கழுத்து, ஒரு நீலமணியை அணிந்தது போன்று அழகாக இருக்கிறது. ஆகவே திருநீலகண்டர். இன்னும் விசாரம் செய்தால், கழுத்து நீலமானதற்குக் காரணம் விழுங்கிய விஷம் கழுத்திலே நிறுத்தப்பட்டதால். விஷத்தை விழுங்கக் காரணம், அந்த விஷம் பரவி தேவர், அஸுரர், மானிடர் முதலான எல்லா ஜீவன்களையும் பாதிக்குமே என்று,  உயிர்களின் மீதான பரமகருணையினால் அருந்தினார். அந்த கருணைக்கு இணையான செல்வம், அழகு உண்டோ. ஆகவே திருநீலகண்டர். நிற்க. இதென்ன கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது. அவர் பகவான்! ஈச்வரர்! சிவபெருமான்! திருப்பதம் அவர்க்கல்லவா தகும்.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who has a blue neck,
Who has the the bull on his flag,
Who shines by flowers, sacred ash and sandal,
Who grants good children and good wife,
And who blesses us with all good luck.   8

No comments:

Post a Comment