Sri Maha Ganesha Pancha Ratnam - Sloka 6 ( Final )
॥ श्री महागणेश पञ्चरत्नम् ॥
॥ ஶ்ரீ மஹாக³ணேஶ பஞ்சரத்னம் ॥
॥ ŚRĪ MAHĀGAṆEŚA PAÑCARATNAM ॥
फलश्रुतिः
महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहम्
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम्।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रताम्
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात्॥
॥इति श्रीमच्छङ्कराचार्यविरचितं श्रीमहागणेशपञ्चरत्नं सम्पूर्णम्॥
பலஶ்ருதி:
மஹாக³ணேஶபஞ்சரத்னமாத³ரேண யோ(அ)ன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபா⁴தகே ஹ்ருʼதி³ ஸ்மரன் க³ணேஶ்வரம்।
அரோக³தாமதோ³ஷதாம்ʼ ஸுஸாஹிதீம்ʼ ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூ⁴திமப்⁴யுபைதி ஸோ(அ)சிராத்॥
॥இதி ஶ்ரீமச்ச²ங்கராசார்யவிரசிதம்ʼ ஶ்ரீமஹாக³ணேஶபஞ்சரத்னம்ʼ ஸம்பூர்ணம்॥
phalaśrutiḥ
mahāgaṇeśapañcaratnamādareṇa yo'nvaham
prajalpati prabhātake hṛdi smaran gaṇeśvaram।
arogatāmadoṣatāṃ susāhitīṃ suputratām
samāhitāyuraṣṭabhūtimabhyupaiti so'cirāt॥
॥iti śrīmacchaṅkarācāryaviracitaṃ śrīmahāgaṇeśapañcaratnaṃ sampūrṇam॥
यः - ய: - எவன்,
अन्वहं - அன்வஹம்ʼ - தினந்தோறும்,
प्रभातके - ப்ரபா⁴தகே - காலையில்,
हृदि - ஹ்ருʼதி³ - மனதில்,
गणेश्वरं - க³ணேஶ்வரம்ʼ - கணபதியை,
स्मरन् - ஸ்மரன் - நினைத்துக்கொண்டு,
आदरेण - ஆத³ரேண - பக்தியுடன்,
महागणेश पञ्चरत्नं - மஹாக³ணேஶ பஞ்சரத்னம்ʼ - மஹாகணேஷ பஞ்சரத்நத்தை,
प्रजल्पति - ப்ரஜல்பதி - சொல்லுகிறானனோ,
सः - ஸ꞉: - அவன்,
अरोगतां - அரோக³தாம்ʼ - நோயற்ற தன்மையையும் ( ஆரோக்கியத்தையும் ),
अदोषतां - அதோ³ஷதாம்ʼ - குற்றமில்லாத தன்மையையும்,
सुसाहितीं - ஸுஸாஹிதீம்ʼ - நல்ல கவித்திறனையும்,
सुपुत्रतां - ஸுபுத்ரதாம்ʼ - நல்ல மக்கட்செல்வங்களையும்,
समाहितायुः - ஸமாஹிதாயு꞉: - நிறைந்த ஆயுளையும்,
अष्टभूतिं - அஷ்டபூ⁴திம்ʼ - அஷ்ட ஐச்வர்யங்களையும்,
अचिरात् - அசிராத் - விரைவில்,
अभ्युपैति - அப்⁴யுபைதி - அடைவான்.
பொருள் :
பலன் :-
எவன் தினந்தோறும் காலையில் மனதில் கணபதியை நினைத்துக்கொண்டு பக்தியுடன் மஹாகணேஷ பஞ்சரத்நத்தை ( ஸ்தோத்ரத்தை ) சொல்லுகிறானோ அவன், நோயற்ற தன்மையையும் ( ஆரோக்கியத்தையும் ), குற்றமில்லாத தன்மையையும், நல்ல கவித்திறனையும், நல்ல மக்கட்செல்வங்களையும், நிறைந்த ஆயுளையும், அஷ்ட ஐச்வர்யங்களையும் விரைவில் அடைவான். 6
இத்துடன் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்அருளிய ஸ்ரீ மஹாகணேச பஞ்சரத்ந ஸ்தோத்ரம் முற்றும்.
# प्रजल्पति - ப்ரஜல்பதி - ஜல்பனம் என்றால் பொதுவாக உளறுவது என்றாகும். இங்கு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவன், சம்ஸ்க்ருதம் தெரியாமலோ அரைகுறையாகத் தெரிந்தோ , சற்றே தப்பும் தவறுமாக உச்சரிப்புப் பிழையுடனும் படித்தாலும், அதாவது ப்ரஜல்பதி; பக்தி சிரத்தையுடன் ( ஆத³ரேண ) மனதில் விநாயகரை சிந்தித்து ( ஹ்ருʼதி³ ஸ்மரன் க³ணேஶ்வரம்ʼ )
சொல்லுவானாகில், மேற்கூறிய அனைத்தையும் ( பலன் ) விநாயகரது பரமக்ருபையால் அடைந்திடுவான் என்று கொள்க.
விளக்கவுரை :
இந்த கணேச பஞ்சரத்னம், அஞ்சு ஸ்லோகங்கள், ஒவ்வொண்ணும் ரத்னம்! இந்த பஞ்சரத்னத்துக்கு ஒரு பலஸ்ருதியும் இருக்கு,
महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥६॥
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்ட் பூதிமப்யுபைதி ஸோசிராத்
இந்த கணேசரை, ‘ஹ்ருதி ஸ்மரன்’ – மனசுல த்யானம் பண்ணிண்டு, இந்த பிள்ளையாரோட ரூபம், இருக்கறதுக்குள்ள easyயா மனசுல நிறுத்தக்கூடிய ஒரு ரூபம். அதுவும், இந்த ஸ்லோகத்தையும் படிச்சு, விநாயகர் அகவலையும் படிச்சா,
‘சீதக்களப செந்தாமரை பூம்பாதச்சிலம்பு பல இசை பாட’ ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து வரில, அந்த பிள்ளையாரோட உருவத்தை ரொம்ப அழகா ஔவைப் பாட்டி வரைஞ்சுருப்பா , அதை easyயா மனசுல நிறுத்திக்கலாம்.
அந்த கணேசரை மனத்தில் நிறுத்தி, ‘யஹ அன்வஹம்’ – எவனொருவன் தினமும் நிறுத்தி, ‘ப்ரபாதகே’ – விடியற்காலம்பர, இந்த மஹாகணேச பஞ்சரத்னத்தை, ‘ப்ரஜல்பதி’ – ஜபிக்கிறானோ, அவன் ‘அரோகாதாம்’ – அவனுக்கு உடம்புல எந்த வியாதியும் வராது! ‘அதோஷதாம்’ – அவனுடைய தோஷங்களெல்லாம் போய்டும்! ‘ஸுஸாஹிதீம்’ – ‘ஸுஸாஹிதீம்’ங்கறதுக்கு, நல்ல மனைவி அமைவாள் அல்லது நல்ல கணவன் அமைவான்னு அர்த்தம் போட்டிருக்கா, ‘ஸுபுத்ரதாம்’ – நல்ல குழந்தைகள் இருப்பா, ‘ஸமாஹித ஆயு:’ – தீர்க்காயுஸா இருப்பான், ‘அஷ்டபூதிம் அப்யுபைதி’ – எட்டு விபூதிகள்னு இருக்கு, அதாவது கண்ணுக்கு தெரியாம ஆறது, பெரிய உருவமாறது, ரொம்ப லேசாறது, ரொம்ப குண்டாறது, ஆகாசத்துல பறக்கறது, அந்த மாதிரி, அணிமா, கரிமா, லகிமா அப்படில்லாம் இருக்கு, அந்த மாதிரி விபூதிகளெல்லாம் ‘அப்யுபைதி ஸோசிராத்’ – அவனுக்கு வெகு விரைவில் கிடைக்கும் அப்படின்னு ஒரு பலஸ்ருதி சொல்லி இருக்கார்.
Meaning :
Benefits of chanting :
One who (yaH), remembers (smaran), Lord GaNesha (gaNeshvaraM), in the mind (hRdi), and recites (prajalpati) , this stotra ('mahA gaNesha pancharatnam') every day (anvahaM) in the morning time (prabhAtake), with devotion (AdareNa).,
he (saH) would get (abhyupaiti), health free of diseases (arogatAM), life without faults (adoShatAM), skills and expertise in education (susAhitIM), good children (suputratAM), long and complete life (samAhitAyuH) and the eight aishvaryas (aShTabhUtiM) soon/without delay (achirAt). 6
No comments:
Post a Comment