Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 4
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
गोविन्दाय मुकुन्दाय कंसादिरिपुदारिणे ।
मातापितृसुनन्दाय द्वारकापतये नमः ॥ ४॥
கோ³விந்தா³ய முகுந்தா³ய கம்ஸாதி³ரிபுதா³ரிணே ।
மாதாபித்ருʼஸுநந்தா³ய த்³வாரகாபதயே நம: ॥ 4॥
govindāya mukundāya kaṃsādiripudāriṇe ।
mātāpitṛsunandāya dvārakāpataye namaḥ ॥ 4॥
गोविन्दाय - கோ³விந்தா³ய - பசுக்களைக் காப்பவருக்கு,
मुकुन्दाय - முகுந்தா³ய - முக்தியை அளிப்பவருக்கு,
कंसादि-रिपु-दारिणे - கம்ʼஸாதி³-ரிபு-தா³ரிணே - கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவருக்கு,
माता-पितृ-सुनन्दाय - மாதா-பித்ருʼ-ஸுனந்தா³ய - அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவருக்கு,
द्वारकापतये - த்³வாரகாபதயே - துவாரகையின் தலைவருக்கு,
नमः - நம: - நமஸ்காரம்.
பொருள் :
பசுக்களைக் காப்பவரும், முக்தியை அளிப்பவரும், கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவரும்; அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவரும், துவாரகையின் தலைவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம். 4
# கோவிந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. பசுக்களைக் காப்பவன், பூமியை மீட்டவன், வேதங்களால் அறியப்படுபவன்.
# கண்ணபிரான் கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டும், வெண்ணெய் திருடிக்கொண்டும் மேலும் பலலீலைகளைச் செய்தவண்ணம் இருந்தார்.
# தன்னுடைய இந்த லீலைகளால் கோகுலத்தில் இருந்த அனைத்து ஜீவன்களுக்கும், மற்ற விஷய ஸ்மரனையிலிருந்து முக்தியளித்து தன்னையே ஸ்மரிக்கும்படி அருளினான்.
# அதைப் பொறுக்காத அரக்கர்கள், தாங்களும் முக்தியடைந்திட, பூதனை முதலாக வரிசையாக வந்தனர். கண்ணனும் யாரையும் ஏமாற்றாமல் மீதமின்றி வந்த அனைவருக்கும் முக்தியளித்தான்.
# கம்சனுக்கு முக்தியளித்த பின், தன்னைப் பெற்ற அன்னை தேவகியையும், தந்தை வஸுதேவரையும் சிறையிலிந்து விடுவித்து ஆனந்தமளித்தான்.
No comments:
Post a Comment