Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 6
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
पाण्डवप्रियमित्राय पाञ्चालीमानरक्षिणे ।
पार्थानुग्रहकाराय पार्थसारथये नमः ॥ ६॥
பாண்ட³வப்ரியமித்ராய பாஞ்சாலீமாநரக்ஷிணே ।
பார்தா²நுக்³ரஹகாராய பார்த²ஸாரத²யே நம: ॥ 6॥
pāṇḍavapriyamitrāya pāñcālīmānarakṣiṇe ।
pārthānugrahakārāya pārthasārathaye namaḥ ॥ 6॥
पाण्डव-प्रिय-मित्राय - பாண்ட³வ-ப்ரிய-மித்ராய - பாண்டவர்களுக்குப் பிரியமான தோழருக்கு,
पाञ्चाली-मान-रक्षिणे - பாஞ்சாலீ-மான-ரக்ஷிணே - பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவருக்கு,
पार्थ-अनुग्रहकाराय - பார்த²-அனுக்³ரஹகாராய - பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவருக்கு,
पार्थ-सारथये - பார்த²-ஸாரத²யே - பார்த்தஸாரதிக்கு,
नमः - நம: - நமஸ்காரம்.
பொருள் :
பாண்டவர்களுக்குப் பிரியமான தோழரும், பாஞ்சாலியின் மானத்தை ரக்ஷித்தவரும், பார்த்தனுக்கு அனுகிரஹம் செய்தவரும், பார்த்தஸாரதியுமான ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம். 6
# பார்த்தன் - அர்ஜுனன். நாராயண சேனையை துர்யோதனனுக்குத் தந்துவிட்டு, தன்னையே பார்த்தனுக்குத் தந்து அனுகிரஹம் செய்தார். பார்த்தஸாரதி ஆனார்.
No comments:
Post a Comment