Sri Vaidyanaatha Ashtakam - Sloka 9 ( Final )
॥ श्री वैद्यनाथाष्टकम् ॥
॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥
॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥
बालाम्बिकेश वैद्येश भवरोगहरेति च ।
जपेन्नामत्रयं नित्यं महारोगनिवारणम् ॥ ९॥
பா³லாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோக³நிவாரணம் ॥ 9॥
bālāmbikeśa vaidyeśa bhavarogahareti ca ।
japennāmatrayaṃ nityaṃ mahāroganivāraṇam ॥ 9॥
बालाम्बिका-ईश – பா³லாம்பி³கா-ஈஶ – பாலாம்பிகை நாதா !
वैद्य-ईश – வைத்³ய-ஈஶ – வைத்யநாதா !
भव-रोग-हर इति च – ப⁴வ-ரோக³-ஹர இதி ச – ( அஞ்ஞானத்துடன் கூடிய ) உலக வாழ்க்கையை நீக்குபவரே ! இவ்வாறாகிய,
महा-रोग-निवारणम् – மஹா-ரோக³-நிவாரணம் – பெரும் ரோகங்களை நிவர்த்திக்கூடிய,
नाम-त्रयं – நாம-த்ரயம்ʼ – மூன்று நாமங்களை
नित्यं जपेत् – நித்யம்ʼ ஜபேத் – தினமும் ஜபிக்க வேண்டியது.
இந்த ச்லோகம் மேற்கண்ட எட்டு ச்லோகங்களுக்குப் பின் வாசிக்கப்படுகிறது.
பொருள் :
பாலாம்பிகை நாதா ! வைத்யநாதா ! ( அஞ்ஞானத்துடன் கூடிய ) உலக வாழ்க்கையை நீக்குபவரே ! இவ்வாறாகிய, பெரும் ரோகங்களை நிவர்த்திக்கூடிய மூன்று நாமங்களை தினமும் ஜபிக்க வேண்டியது. 9
இத்துடன் வைத்யநாத அஷ்டகம் நிறைவு பெறுகிறது.
# भव-रोग-हर – ப⁴வ-ரோக³-ஹர – பவ பதத்திற்கு மூலமான, மூல காரணம் என்றும் அர்த்தம் இருக்கிறது. பவ ரோக என்றால் அடிப்படையில் இருக்கின்ற ரோகம். நம் ஸ்வரூபத்தை அறியாமை. அதை நீக்குபவர்.
Meaning :
Those who recite this prayer,
Thrice a day with devotion,
And pray the Lord Vaidyanatha,
Who is with his consort Balambika,
And who removes the fear of birth and death,
Would get cured of all great diseases. 9
No comments:
Post a Comment