Sunday, 14 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 2

Vinaayaka Leelaa Stuti - sloka 2

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

|| VINĀYAKA LĪLĀ STUTIḤ ||


केयूरिणं हारकिरीटजुष्टं चतुर्भुजं पाशवराभयानि।
सृणिं वहन्तं गणपं त्रिनेत्रं सचामरस्त्रीयुगलेन युक्तम्॥२॥ *

கேயூரிணம்ʼ ஹாரகிரீடஜுஷ்டம்ʼ சதுர்பு⁴ஜம்ʼ பாஶவராப⁴யானி|
ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ க³ணபம்ʼ த்ரினேத்ரம்ʼ ஸசாமரஸ்த்ரீயுக³லேன யுக்தம்|| 2||

keyūriṇaṃ hārakirīṭajuṣṭaṃ caturbhujaṃ pāśavarābhayāni।
sṛṇiṃ vahantaṃ gaṇapaṃ trinetraṃ sacāmarastrīyugalena yuktam॥2॥


केयूरिणं हार-किरीट-जुष्टं - கேயூரிணம்ʼ ஹார-கிரீட-ஜுஷ்டம்ʼ - தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும்,

चतुर्भुजं - சதுர்பு⁴ஜம்ʼ - நான்கு கைகளை உடையவரும்,

पाश-वर-अभयानि सृणिं वहन्तं - பாஶ-வர-அப⁴யானி ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ - (அவைகளில்) பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும்,

त्रिनेत्रं - த்ரிநேத்ரம் - மூன்று கண்களை உடையவரும்,

सचामर-स्त्री-युगलेन युक्तम् - ஸசாமர-ஸ்த்ரீ-யுக³லேன யுக்தம் - இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவரும் ( ஆகிய )

गणपं - க³ணபம்ʼ - கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை )

{ नमामि - நமாமி - வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் )
அல்லது

शरणं प्रपद्ये - ஶரணம் ப்ரபத்³யே - சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). }


பொருள் :

தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும், நான்கு கைகளை உடையவரும், அவைகளில் பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும், இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவருமாகிய கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை ) வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் ) அல்லது சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). 2


* பாட பேதம் -- 
वहन्तं > च हस्तं , வஹந்தம்ʼ > ச ஹஸ்தம்ʼ

No comments:

Post a Comment