Monday, 1 March 2021

Shiva Astakam - Sloka 4

Shiva Astakam - Sloka 4

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


वटाधोनिवासं महाट्टाट्टहासं महापापनाशं सदासुप्रकाशम् ।
गिरीशं गणेशं महेशं सुरेशं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ४॥

வடாதோ⁴நிவாஸம்ʼ மஹாட்டாட்டஹாஸம்ʼ மஹாபாபநாஶம்ʼ ஸதா³ஸுப்ரகாஶம் .
கி³ரீஶம்ʼ க³ணேஶம்ʼ மஹேஶம்ʼ ஸுரேஶம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 4..

vaṭādhonivāsaṃ mahāṭṭāṭṭahāsaṃ mahāpāpanāśaṃ sadāsuprakāśam .
girīśaṃ gaṇeśaṃ maheśaṃ sureśaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 4..


वट-अधो-निवासं - வட-அதோ⁴-நிவாஸம்ʼ - ஆலமரத்தினடியில் வசிப்பவரை, 

महा-अट्ट-अट्टहासं - மஹா-அட்ட-அட்டஹாஸம்ʼ - மிகவும் அச்சுறுத்தும் சிரிப்பை (அட்டஹாஸம்) உடையவரை, 

महापाप-नाशं - மஹாபாப-நாஶம்ʼ - பெரும் பாவங்களை அழிப்பவரை, 

सदा-सुप्रकाशं - ஸதா³-ஸுப்ரகாஶம்ʼ - எப்பொழுதும் நன்கு ஒளிர்பவரை, 

गिरीशं - கி³ரீஶம்ʼ - மலைகளுக்கரசரை, 

गणेशं - க³ணேஶம்ʼ - கணங்களுக்குத் தலைவரை, 

सुरेशं - ஸுரேஶம்ʼ - தேவர்களுக்கு அதிபரை, 

महेशं - மஹேஶம்ʼ - அகில உலகங்களையும் வழிநடத்தும் பெருஞ்தலைவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

ஆலமரத்தினடியில் வசிப்பவரும், மிகவும் அச்சுறுத்தும் சிரிப்பை (அட்டஹாஸம்) உடையவரும், பெரும் பாவங்களை அழிப்பவரும், எப்பொழுதும் நன்கு ஒளிர்பவரும், மலைகளுக்கரசரும், கணங்களுக்குத் தலைவரும், தேவர்களுக்கு அதிபரும், அகில உலகங்களையும் வழிநடத்தும் பெருஞ்தலைவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரைத் (சிவபிரானை) துதிக்கின்றேன். 4


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who resides below a Vaṭa (Banyan) tree, Who possesses an immense laughter, Who destroys the greatest sins, Who is always resplendent, Who is the Lord of Himālaya, various tormentor-groups (Gaṇa) and the demi-gods, Who is the great Lord, and Who is the Lord of everyone. 4

பாடபேதம் -

तट-अधो-निवासं -  
தட-அதோ⁴-நிவாஸம்ʼ - ‘தடம்’ என்னும் சொல்லிற்கு மலைச் சரிவு, ஆகாயம், கரை முதலிய பொருள்கள் உண்டு. சிவனார் கைலாயத்தில் வசிப்பவராதலாலும் கைலாசம் வானளாவி நிற்பதாலும் வானத்தின் முகட்டில் கைலையில் வசிப்பவர் என்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment