Sunday, 4 April 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 4

Vinaayaka Leelaa Stuti - sloka 4 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


वेदान्तवेद्यं जगतामधीशं देवादिवन्द्यं सुकृतैकगम्यम् । 
स्तम्बेरमास्यं नवचन्द्रचूडं विनायकं तं शरणं प्रपद्ये ॥ ४॥ * 

வேதா³ந்தவேத்³யம்ʼ ஜக³தாமதீ⁴ஶம்ʼ தே³வாதி³வந்த்³யம்ʼ ஸுக்ருʼதைகக³ம்யம் | ஸ்தம்பே³ரமாஸ்யம்ʼ நவசந்த்³ரசூட³ம்ʼ வினாயகம்ʼ தம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே || 4|| 

vedāntavedyaṃ jagatāmadhīśaṃ devādivandyaṃ sukṛtaikagamyam । stamberamāsyaṃ navacandracūḍaṃ vināyakaṃ taṃ śaraṇaṃ prapadye ॥ 4॥ 


वेद-अन्त-वेद्यं - வேத³-அந்த-வேத்³யம்ʼ - வேதாந்தத்தால் ( உபநிஷத்தால் ) அறியப்படுபவரை, 

जगतां-अधीशं - ஜக³தாம்ʼ-அதீ⁴ஶம்ʼ - உலகையும் நடத்துபவரை, 

देव-आदि-वन्द्यं - தே³வ-ஆதி³-வந்த்³யம்ʼ - தேவர் முதலானோரால் வணங்கப்படுபவரை, 

सुकृत-एक-गम्यम् - ஸுக்ருʼத-ஏக-க³ம்யம் - புண்யத்தால் மட்டும் உணரத்தக்கவரை, 

स्तम्बेरम-आस्यं - ஸ்தம்பே³ரம-ஆஸ்யம்ʼ - யானை முகத்தவரை, 

नव-चन्द्र-चूडं - நவ-சந்த்³ர-சூட³ம்ʼ - புதிய சந்த்ரனைச் சிரசில் அணிந்தவரை, 

तं विनायकं - தம்ʼ வினாயகம்ʼ - அந்த விநாயகரை, 

शरणं प्रपद्ये - ஶரணம்ʼ ப்ரபத்³யே - சரணடைகிறேன். 


பொருள் :

 வேதாந்தத்தால் ( உபநிஷத்தால் ) அறியப்படுபவரை ( ப்ரம்மம் ), ( மாய ) உலகையும் நடத்துபவரை, தேவர் முதலானோரால் வணங்கப்படுபவரை, புண்யத்தால் மட்டும் உணரத்தக்கவரை, யானை முகத்தவரை, புதிய சந்த்ரனைச் சிரசில் அணிந்தவரை, தனக்கு மேல் நாயகனற்ற அந்த ( நாயகரை ) விநாயகரைச் சரணடைகிறேன். 4 


# முதல் பதம் 'வேதா³ந்தவேத்³யம்ʼ ' என்று சொல்லி ப்ரஹ்மம் என்று கூறி விட்டுவிடாமல், அடுத்த பதம் ' ஜக³தாம்ʼ-அதீ⁴ஶம்ʼ ' என்று கூறி தோற்றப்பிழை என்று கருதப்படும் இந்த உலகத்தையும் நடத்துபவர் என்பதையும் விளக்குகிறது. ( ப்³ரஹ்ம ஸத்யம்ʼ ஜக³ன்மித்²யா ). 

# தே³வாதி³ - வந்த்³யம்ʼ - தேவர் முதலிய கந்தவர், கின்னரர், மனிதர், பிராம்மணர், எழுத்தாளர் , அந்தக் கடைக்காரர், இந்தக் கடைக்காரர், நீங்கள் , நாங்கள் என்று பட்டியல் நீளும்.... தே³வ- ஆதி³ வந்த்³யம்ʼ - தேவர்களாலும் எடுத்த எடுப்பில் முதலில் வணங்கப்படுபவர். 

# ஸுக்ருʼத-ஏக-க³ம்யம் - ஒரே ஒரு நற்செயல் செய்துவிட்டாலும் அதனால் அடையப்பட்டக் கூடியவர் என்றும் கொள்ளலாம். ஸுக்ருʼத - நற்செயல் / புண்யம், ஏக - ஒன்று / அதனால் மட்டும் , க³ம்யம் - சென்றடையத் தக்கவர் ( உணரத்தக்கவர் ). 


# நவ-சந்த்³ர: - புதிய சந்திரன் - விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து , சாபம் அடைந்து , பின் தவம் செய்து , அவர் அனுகிரகத்தால் சாபம் தீர்ந்து, இந்நிலையில் இப்பொழுது பணிவுடன் ஒளிவீசும் புதிய சந்திரன். 

* பாட பேதம் -- नव > ननु , நவ > நநு.

No comments:

Post a Comment