॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥
॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥
|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||
इन्द्र उवाच –
एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् ।
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥
இந்த்³ர உவாச –
ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் ।
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥
indra uvāca –
ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam ।
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥
इन्द्र उवाच - இந்த்³ர உவாச - இந்திரன் கூறினார்.
एकम् - ஏகம் - ஏகன் (ஒன்றானவன்),
ब्रह्म - ப்³ரஹ்ம - ப்ரஹ்மன் (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது),
अद्वितीयम् - அத்³விதீயம் - அத்விதீயன் (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது)
परिपूर्ण - பரிபூர்ண - பரிபூர்ணன் (நீக்கமற நிறைந்தது)
परात्परम् - பராத்பரம் - பராத்பரன் (சிறந்ததிலெல்லாம் சிறந்தது)
च इति वेदैः गीयते - ச இதி வேதை³꞉ கீ³யதே - என்றெல்லாம் வேதங்களால் போற்றப்பெறுபவர்,
यः - ய꞉ - எவரோ,
तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
இந்திரன் கூறினார் -
'ஏகன்' (ஒன்றானவன்), 'ப்ரஹ்மன்' (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது), 'அத்விதீயன்' (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது), 'பரிபூர்ணன்' (நீக்கமற நிறைந்தது), 'பராத்பரன்' (சிறந்ததிலெல்லாம் சிறந்தது) - என்றெல்லாம் வேதங்களால் போற்றப்பெறுபவர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 1
Meaning :
Indra said -
I worship Somasundaram (Lord Shiva), who is always praised by the Vedas as 'Eka', 'Brahma', 'Adviteeya', 'Paripoorna', 'Paraatpara'. 1
* ஏகன் - ஒன்றானவன் - தன்னைப் போல் ஸஜாதீயமாகவோ விஜாதீயமாகவோ மற்றொன்று இல்லாதது. இரண்டு மான்கள், நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், மானின் லக்ஷணங்களுடன் கூடிய இன்னொன்று என்றாகிறது. நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், நான்கு கால்கள் உடைய ஆனால் வேறு வேறு லக்ஷணங்களுடன் கூடிய பல பிராணிகள் (மான், பசு, புலி, சிங்கம், யானை, முயல் இத்யாதிகள்) என்று கொள்ளலாம். பிரம்மத்தைப் பொருத்தவரை அதைப் போன்ற இன்னொன்று இல்லை. இரண்டாவது பிரம்மம் என்று இல்லாமல் ஒன்றே ஆனது.
* ப்ரஹ்மன் - எவன் பெரியவனோ, பெரியதாகச் செய்பவனோ அவன். தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது.
"எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்."
"எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்." - ஆத்மபோதத்திலிருந்து.
* அத்விதீயன் - இரண்டற்றது (ஒன்றானவன்) - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது.
* பரிபூர்ணன் - நீக்கமற நிறைந்தது.
No comments:
Post a Comment